.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 23 November 2013

தீபங்களால் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்ற சில டிப்ஸ்...


 தீபங்களில் உள்ள எண்ணெய் தரையில் சிந்தாமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக சிந்தும் வாய்ப்புகள் அதிகம். நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சரி எண்ணெய் சிந்துவதற்கான வாய்ப்புகள் அதிகமே. தீபங்கள் எரிய எரிய எண்ணெய் மெதுவாக தரையில் படரும். இதுவே தரையில் கறையை ஏற்படுத்திவிடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பல வழிகள் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் அமிலங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவைகளை பயன்படுத்தி கரைகளை சுலபமாக நீக்கினாலும் கூட, அது தரையை பாழாக்கி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.
ஆகவே பாதுகாப்பான முறையில் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்றுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பூனை கூட உங்களுக்கு உதவலாம்

பூனையை போலவே அதன் சிறுநீரும் கூட உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எண்ணெய் சிந்தி சிறிது நேரம் தான் ஆனது என்றால், உங்கள் பூனையின் சிறுநீரை அதன் மீது தெளியுங்கள். ஒரு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, மறுநாள் கழுவி விடுங்கள். கறையை நீக்க இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
 
மரத்தூளும் பெயிண்ட் தின்னரும் கூட கை கொடுக்கும்

பெயிண்ட் தின்னர் மற்றும் மரத்தூளை ஒன்றாக கலந்து கறை படிந்த இடத்தில் தடவவும். அதனை எண்ணெய் கறையின் மீது ஒரு 20 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இந்த கலவையை தடவலாம். தீபங்களினால் ஏற்படும் கறையை நீக்க இது ஒரு சுலபமான வழியாக தோன்றுகிறதா?

பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்

பேக்கிங் சோடாவை சமையலுக்கு எப்படி பயன்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியும். அதை எண்ணெய் கறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கார்த்திகை தீபத்தன்று தீபங்களால் ஏற்பட்டுள்ள எண்ணெய் கறையை எப்படி நீக்குவது என்ற கவலை ஏற்படுகிறதா? ஒன்றே ஒன்றை செய்யுங்கள். கடைக்கு செல்லும் போது கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் கறையின் மீது கொஞ்சம் பேக்கிங் சோடாவை தெளித்து பின் வெந்நீரில் அந்த இடத்தை கழுவுங்கள்.

பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட்


தீபங்களினால் ஏற்படும் எண்ணெய் கறையை நீக்க மற்றொரு சுலபமான வழியாக விளங்குகிறது பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட். அதனை கறை படிந்த இடத்தில் தூவி கொஞ்ச நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அந்த நேரத்தில் கொஞ்சம் நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்த பின் கறை படிந்த இடத்தில் அதனை ஊற்றி நன்றாக கழுவவும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top