சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும்.
ஆனால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர் இயக்கத்தில் வெளிவந்த Sonu Ke Titu Ki Sweety என்ற படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
முன்னணி நடிகர்கள் படங்களே பாக்ஸ் ஆபிஸில் தடுமாற, இப்படி புதுமுகங்கள் நடித்த படம் வசூல் சாதனை படைப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.
மேலும், இதற்கு முன் சிறுபட்ஜெட் படங்களில் சாய்ரட் என்ற படம் ரூ 100 கோடிகள் வரை வசூல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதன் மூலம் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பிரச்சனை இல்லை, நல்ல கதை என்றால் படம் வசூலை வாரிகுவிக்கும் என்ற எண்ணத்தை Sonu Ke Titu Ki Sweety படம் விதைத்துள்ளத...
Tuesday, 20 March 2018
ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!
தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.
நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி...
குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?
பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர்...
அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்

அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.
'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே...
கண்ணீரும் கதைசொல்லும்.......!

கண்ணீரும் கதைசொல்லும்!
அழுங்கள்! உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம்மால் நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே அறிவியல் உண்மையாகவும் இருக்கிறது. அழுவதால் உடலுக்கு நன்மைகளே அதிகம். மாறாக அழுகையை அடக்கிவைத்தல், உணர்ச்சிகளை அழுகையின் மூலம் வெளிக்காட்டாது மறைத்தல் போன்ற செயல்களால் உடலுக்கு நேரும் தீங்குகள் ஏராளம்.
துன்பங்கள் நேர்கையில் நம் கண்ணீர், கண்களிலிருந்து ஆறாக ஓடாமல் தடுக்கப்படும்போது நம் உடலானது கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது ஏராளமான நச்சு ஹோர்மோன்களைத்(மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பது) தோற்றுவிக்கிறது. இதனால் உடல் நோய்வாய்ப்படுதல், உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
கண்ணீரின்...
ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத...
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?
அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள...
பாஸ்வேர்டு குறித்த சில விளக்கங்கள்….!

இன்று வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள்.
மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம். தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை...
பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.
எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.
எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?
மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.
அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.
இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள்...
விஞ்ஞானிகளாக பிரத்யேக படிப்பு - திறன்மிக்கவரின் வாழ்வில் பூரிப்பு ...!!!

விஞ்ஞானியாகும் லட்சியம் கொண்டவர்களுக்கான பிரத்யேக படிப்பாக பி.எஸ்-எம்.எஸ். ஐந்தாண்டு படிப்பு உள்ளது. டூயல் டிகிரி புரோகிராமான இப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதி சேரலாம். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐ.ஐ.எஸ்.இ.ஆர். (இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்) கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. போபால், கொல்கத்தா, மஹாலி, பூனே, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து பெரு நகரங்களில், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். இயங்கி வருகிறது.
இக் கல்வி நிறுவனத்தில் சாதாரணமாக சேர்ந்து விட முடியாது. அதி புத்திசாலித்தனம், படிப்பில் திறமை மிக்கவர்களை பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சோதித்து, சேர்த்துக்...