வாழ வழிகாட்டும் வள்ளலார்!
தமிழ்நாட்டில்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோ மீட்டர்
தொலைவில், கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் மருதூர் என்னும் சிறிய கிராமம்
.
அந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம்
சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர்
சின்னம்மையார்,திருவள்ளூர் மாவட்டத்தில் போன்னேரிக்கு அருகில் உள்ள
சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்தவர் .
இராமையாவுக்கு
ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் .முன் திருமணம் செய்த
ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே
இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார் .
இராமையா மனைவி
சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற
ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து,
ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54
மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர்
சூட்டினர்.
சிதம்பர தரிசனம் !
பிறந்த
குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால
வழக்கம் .அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமையா தன் மனைவி
மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில்
நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி
தரிசனம் காட்டப் பெற்றது .அனைவரும் தரிசித்தனர் .அந்த சமயம் ,
கைக்
குழைந்தையாகிய இராமலிங்கமும் தரிசித்தார் .அனைவருக்கும் இரகசியமாய் இருந்த
சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று சிரித்தது..அதைக்
கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த
அப்பையா தீஷ்சதர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு
ஆச்சரியப்பட்டு போயினர் .பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப்
பார்க்கிறேன் பல குடும்பங்கள் குழைந்தைகளுடன் தரிசனம் பார்க்க
வந்துள்ளார்கள் .இப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி
,இராமையாவிடம் ,இக்குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும்
என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு,இராமையா
குடும்பத்துடன் சென்றார் .
குருக்கள் வீட்டில் நடந்தது !
அப்பையா
தீஷ்சதர் குழைந்தையை பெற்று கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து
குழைந்தை இராமலிங்கத்தை வணங்கினார் .அதைப் பார்த்த இராமையா குடும்பத்தினர் .................
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....