.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, 22 March 2018

பழமொழியில் ரீமிக்ஸ்!! ரீமிக்ஸ்!!

பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம். ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’. பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்  புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்  பழசு: இளங்கன்று பயமறியாது  புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது  பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்  புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்  பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு  புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு  பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்  புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா,...

Tuesday, 20 March 2018

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்

  அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார். 'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே...

Thursday, 16 January 2014

இன்று ஒரு தகவல் -- அறிஞர் அண்ணா ...!!

அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் .அப்பொழுது தான் ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் பல எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறிய சமயம். அண்ணா அவர்கள் டில்லியில் ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் . அந்த கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்த பிறகு அண்ணா அவர்கள் சென்றார் .அந்த இடத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்க பட்டிருந்தன . அண்ணா பேசும்போது ,அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் நீங்கள் பேசுவதை காட்டிலும் எங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார் . அப்பொழுது அந்த...

Tuesday, 7 January 2014

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!

*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்." இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "" என்ன சொல்றே?நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.அப்பா...என்னம்மா... யார் இந்த பையன்இவர்தாம்பா அவர்அவர்...

Monday, 6 January 2014

அன்புள்ள கணவருக்கு...

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.. ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து...

Wednesday, 1 January 2014

வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!!

நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலன்னா, சினிமாவுல இந்த அமெரிக்க மாப்பிள்ளைங்க தொல்ல அதுக்கும் மேல. ஹீரோ கையில மிக்சர் சாப்பிடவே, அமெரிக்காவுல இருந்து பிசினஸ் க்ளாஸ்ல ஃப்ளைட் ஏறி வாரானுங்க இந்த பூம்பழம் ஃபேஸ்காரனுங்க. 7ஓ க்ளாக் பிளேடுல ஷேவ் பண்ணி, ஐஸ்ல வச்ச ஆப்பிள் மாதிரி இருந்தாலும், இந்த ஸ்லீவ்லெஸ் சிங்காரிஸ், அழுகுன அன்னாசி பழம் மாதிரி இருக்குற ஹீரோ மூஞ்சைத்தான் லவ் பண்ணும்னு பைக் பாஸ் போடுறவர்ல இருந்து உள்ள பாப்கார்ன் விக்கிறவர் வரை எல்லோருக்கும் தெரியும்.ஆனாலும், ஓவர் டைம் பார்த்து சம்பாதிச்ச டாலர்ல இவனுங்க, ஹீரோயினுக்கு டாலர் வச்ச நெக்லஸ் வாங்கிக்கொடுத்து மனச தேத்துறானுங்க. ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்ல செட் தோசை வாங்கிக் கொடுத்து...

Monday, 30 December 2013

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன...?

1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.8. கோலா பானங்கள் அனைத்துமே...

Sunday, 29 December 2013

உண்மைய சொன்னேன் ..

உண்மைய சொன்னேன் ..1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்..5.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, மயங்கி கீழே கிடப்பவனுக்கு கிடைப்பதில்லை..6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்...8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ...

Thursday, 19 December 2013

10 ரூபாய்க்கு சாப்பாடு - நகைச்சுவை!

தம்பி என்னப்பா அந்த ஓட்டல்ல ஒரே கூட்டமா இருக்கு, அங்க 10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களாம், என்னது...10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களா.. அதுசரி வரும்போது ஏன் எல்லாம் மூஞ்சில ரத்தத்தோடு வராங்க, அவங்க 10 ரூபாய்க்கு  செவுத்துல முட்டவெச்சி  சாப்பாடு போடுறாங்களாம...

Wednesday, 18 December 2013

புதுக்குறள்.....?

                                            ******புதுக்குறள் ******* 1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்கமூஞ்சியில் குத்தி விடல்...3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கியல்பு...4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு.5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்..6.ரன்...

Monday, 16 December 2013

புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம்?

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்... ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன். பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் ! பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா? திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்....

Tuesday, 10 December 2013

தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!

- “நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர்  சொன்னா  கோபப்படுறியே   ஏன்?” - அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு  கேலி பண்ணுவாங்கடா…!! - - “தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா “யாரு   இவர்?” - டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!! - - நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம  விட்டு வெச்சிருக்கே?” - “சார்! அது வாயில்லா பிராணி சார்!.” - - “நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு  பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி  கேட்டாங்க?” - “ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!! ” புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் நஷ்டமா  போச்சா…ஏண்டி? - ” கை ரொம்ப நீளமா இருந்த நான்  பூ வியாபாரம்  செஞ்சு தொலைச்சிட்டேன்…...

“மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!

1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…-டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே!--2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”-“”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும் இல்ல… அதுதான் தகராறு..!--3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில பிளேடு வெச்சுருக்கார்?-சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!-4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?”-“”ஒரு மலை வேணும் சார்!”-5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?-மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!-6. “”பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!”-“”ஏண்டா அப்படிச் சொல்றே?”-“”பின்னே! அவன் அப்பா ஆபீஸிலிருந்து முழு பென்சில் கொண்டு வந்து அவனுக்குத் தர்றாரு. நீ துண்டுப் பென்சில்களையே தூக்கிக்கிட்டு வர்றே...

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....? 1 ஏங்க எங்க போறீங்க?2 யார்கூடப் போறீங்க?3 ஏன் போறீங்க?4 எப்படி போறீங்க?5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?8 நானும் உங்ககூட வரட்டுமா?9 எப்ப திரும்ப வருவீங்க?10 எங்க சாப்பிடுவீஙக?11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?14 பதில் சொல்லுங்க ஏன்?15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?17 நான் அனி திரும்ப வரமாடடேன்18 ஏன் பேசாம இருக்கீங்க ?19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?22 இப்ப பதில் சொல்றீங்களா...

Monday, 9 December 2013

விவசாயி ; படிச்சவன் - நகைச்சுவை!

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு.. அவனுக்கு ஆச்சரியமா இருக்கு.., பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்… படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!படிச்சவன்: ? ? ? ?...

Sunday, 8 December 2013

தொழில்நுட்ப காதல்..!

பெண் அப்பா நான் லவ் பண்றேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ... அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க... ONLINEல ஜாலியா இருங்க... E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க... G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு... எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்.... பெண் : ?????????...

Saturday, 7 December 2013

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு  நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச  விரும்புகிறேன்…” இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?” அவள் : “இல்லை” இவன் : “கீதா ?” அவள் : “இல்லை” இவன் : “உமா ?” அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு  ஆசிரியை...!...

Thursday, 5 December 2013

பகிர்ந்துகொள்ள !! - 5

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றா...

பகிர்ந்துகொள்ள !! - 3

மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார். "உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?" மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்" "வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?" "3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல். அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?" அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?" நேர்முகம் செய்தவர் ??...

பகிர்ந்துகொள்ள !! - 1

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்."என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்....

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top