.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 12 September 2013

கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி பற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது என்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள். வழிமுறைகள்: * ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம். * இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம். * Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள் இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும் கூடவே வருகின்றது. *  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். *  கடவுச்சொல்...

கோபம் கொண்டால்? - குறுங்கதை!

             ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான்.          அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி...

இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்!

உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் `சி' கண்ணிற்கு நல்லது, ஓமேகா3 இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்து, மனதுக்கும், உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது. எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலே, ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே, இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரி, இப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போமா! 1.ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி : மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது....

கேரட்- பீட்ரூட் சூப்!

  தேவையானவை: பீட்ரூட்  –2 கேரட்  – 2 வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று சீரகம் – ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.வெண்ணெய் - தாளிக்க செய்முறை: • கேரட், பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். • வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். • காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். • இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும்....

ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!

சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும். பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும். பலன்கள் : இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும். ...

அபானாசனம்! செய்முறை!

  செய்முறை : முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும். பலன்கள்:  வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும். ...

காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு!

  சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகம் 200 இடங்களில் தொடங்கப்பட்டு குறைந்த விலை யில் உணவு வழங்கி வரு கிறது. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம். தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு...

நடப்பது யாவும் நல்லதற்கே..........குட்டிக்கதை

ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில் மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.பின் வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில் சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க...

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி!

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது.   உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன....

இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்!

பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம். “ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல...

ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!

ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.  கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இருவரும் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். தமன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்டாக உருவாகி வருகிறது.மேலும் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார்.  கதையில் பிரபுவுக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். இதில் இளவயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார்....

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு!

இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது.   10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.முன்னதாக வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரதா மரூன்ஸ்(இலங்கை) ஆகிய அணிகளுடன்...

ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்!

ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 24–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர்.அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர்.   பூனம்குமாரி நரிக்குஞ்சன் கிராமத்தில் 5–வது வகுப்பு படிக்கிறார். மகா தலித் இனத்தை சேர்ந்தவர். குழந்தையாக இருந்த போதே உறவினர் ஒருவர் இவரை திருமணம் செய்ய விரும்பினார். அதை எதிர்த்து போராடி கல்வி பயின்று வருகிறார். பெண்கள் கல்வி பயில வேண்டும். குழந்தை தொழிலாளர்களை...

'கெட்ட சகவாசம்'.........குட்டிக்கதை

அருண் நன்கு படிக்கும் மாணவன்.ஆனால் கடந்த சில மாதங்களாக தேர்வில் அவன் எதிபார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை.இது அவனது தந்தையை வேதனை அடையச் செய்தது.அவனின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று அவன் தந்தை...சில ஆசிரியர்களை வினவ ..ஒரு ஆசிரியர்..'சமீபகாலமாக அவன் நண்பர்கள் சரியில்லை...அவர்கள் படிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்று சொன்னார்.அது கேட்டு அவன் தந்தை அருணைக் கூப்பிட்டு நயமாக..கெட்ட சகவாசத்தை விடச் சொன்னார்...அருணோ அதற்கு இசையவில்லை....தன் நண்பர்களால் தன்னை மாற்ற முடியாது என்றான்.அப்போது ..அவன் தந்தை ஒரு கூடையில் சில ஆப்பிள்களைக் கொண்டு வந்தார்...அருணிடம் ..ஒரு அழுகிய ஆப்பிளைக் கொடுத்து கூடையில் இருந்த மற்ற ஆப்பிள்களுடன் வைக்கச்...

'தன் கையே தனக்கு உதவி'..........குட்டிக்கதை

வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான்...

ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை

ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.அந்த...

தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!

தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ...

ரஜினி பட தலைப்பில் கார்த்தி!! ரஞ்சித் இயக்குகிறார்!

 சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்கு பிறகு கார்த்தி ரொம்ப நிதானமாகவும், படத்தின் கதையை நன்றாக கேட்டும் அடுத்த படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தற்போது வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்திலும், ராஜேஷின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்தபடியாக ஒரு படத்தில் கார்த்தி நடிக்கிறார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தான் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார். வழக்கம் போல் கார்த்தி, சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் அறிமுகமாகிறார். ரஜினி நடித்த...

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம் வரும்!

"பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,'' என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட...

அக்., 21க்கு பின்னர் செவ்வாய்க்கு செயற்கை கோள் : இஸ்ரோ

ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக தயாரி்க்கப்பட்டுள்ள‌ ‌செயற்கை கோள் விண்ணில் ஏவ தாயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோவின் செவ்வாய் திட்ட இயக்குனர் அருணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: முதல் செயற்கைகோள்: இந்தியாவில் இருந்து ஏற்கனவே பூமியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் சநதிரன் போன்றவற்றிற்கு செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நீண்ட தொலைவில் உள்ள வேறு கிரகம் ஒன்றிற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் முதல் செயற்கை கோள் இதுவாகும். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் உத‌வியுடன் இதனை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 340 கிலோ ‌எடை கொண்ட செயற்கை கோளில் சுமார் 5 அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கருவிகளின் மொத்த எடை1 5 கிலோ வாகும். இவை செவ்வாய் கிரகத்தி்ல் உள்ள மீத்தேன், கனிம வளம், கிரகத்தின் அமைப்பு , போன்றவை குறித்த...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top