.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 1 September 2013

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது. தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக காரில் கமெராக்கள், ரேடார்கள் மற்றும் கணனி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது. இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும். இதற்கான பணிகள் முடிவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம்...

சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்!

நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். கிவி கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். செர்ரி செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். கொய்யா கொய்யாப்பழம் நீரிழிவு...

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Hindi Translator காலியிடங்கள்: 62   சம்பளம்: ரூ.9,300 – 34,800வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ESI Fund Account...

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!

கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார்.   இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் பேசும் போது,”தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய எங்கள் நிறுவனத்தின் தென்மண்டலத்தில்...

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!!

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார்.   அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர். ஆன்லைனில் வெளியாகும் நேரடியான கருத்துக்கணிப்பு என்பதால்,...

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஐபோனை ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை புதிய ஐபோன் வாங்குவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.   செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை வெளியிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் ஆப்பிள் அறிவித்துள்ள இந்த சலுகை விரைவில் ஐபோன்கள் வரும் என்பதை உறுதி செய்கிறது. பழைய ஐபோன்களுக்கு US மார்கெட் மற்றும் உலக அளவில் உள்ள மார்கெட்களில்...

வேர்க்கடலையின் மகத்துவம்.

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். !! பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார். தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து… வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்? வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top