
ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது:-
வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சொந்த ஊரில் சதம் அடித்தார்,மேலும் பிராட் ஹாடின் பேட்டிங்கில் இங்கிலாந்து தள்ளாடுகிறது.கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் போர்த்விக், ரேங்கின், பிளான்ஸ் ஆகிய 3 பேர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் கூக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர் 16 ரன்னிலும், ரோஜர்ஸ் 11 ரன்னிலும் போல்டு ஆகி வெளியேறினர். கேப்டன் கிளார்க் 10 ரன்னில் அவுட் ஆனார். வாட்சன் 43 ரன்களில்...