.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label அரசியல்!. Show all posts
Showing posts with label அரசியல்!. Show all posts

Thursday, 16 January 2014

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்....

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர் ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார். 1987–ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ராஜீவ்காந்திக்கு சிங்கள ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படடது. அப்போது 22 வயது சிங்கள வீரர் திடீர்.... தொடர்ந்து இங்கே படிக்கலாம்.... ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்.....

Saturday, 4 January 2014

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!

“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்ட விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத்...

Thursday, 2 January 2014

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!!!

டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று, தமது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார், ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 36 வாக்குகள் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் 28 உறுப்பினர்களும், காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். பாஜகவின் 31 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்...

Tuesday, 31 December 2013

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி..!

பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது.நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான்(56) கராச்சியில் உள்ள இந்த நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.கடந்த...

Monday, 16 December 2013

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஏன் இந்த பிடிவாதம்?

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சஸ்பெண்ட் செய்யப்பட்டு சரியாக ஓராண்டைக் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான பிரச்சினை இன்னுக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. சவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள்கள் இந்த பிரச்சினை ஓடும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் எப்போது நீக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களோ நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்கள். காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பது உள்ளிட்ட...

Sunday, 15 December 2013

பா.ஜ.வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அவ்வாறு கட்சியில் சேர்ந்தால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதாகவும் அக்கட்சி, கங்குலியிடம் தெரிவித்துள்ளது. இதனிடையே மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கங்குலியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமக்கு பா.ஜ.வில் சேருமாறு அழைப்பு வந்துள்ளது உண்மைதான் என்றும், ஆனால் தாம் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் இது குறித்த தனது முடிவை தாம் தெரிவிப்பதாகவும்...

Sunday, 8 December 2013

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!

மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து...

Friday, 29 November 2013

குஜராத்தில் போலீசார் கண்காணித்த இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியானதால் பரபரப்பு!

  குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி, கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர், போலீஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சரும் அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல்களும் வெளியானது. இதை அந்த பெண்ணின் தந்தை மறுத்தார். இந்நிலையில், போலீஸ் அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமித் ஷாவை மட்டுமன்றி 2005ம் ஆண்டு முதல் நரேந்திர மோடியுடனும் அந்த பெண்ணுக்கு அறிமுகம் உள்ளதாக புலனாய்வு இணையதளம்...

Thursday, 28 November 2013

மோடி அமர்ந்த நாற்காலி ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது!

  மோடி எங்கி போனாலும் சர்ச்சைக்கு பந்ஜ்சமில்லை .ஆனால் இந்த முறை அவரது பேச்சால் மட்டுமின்றி அவர் உட்கார்ந்து சென்ற நாற்காலியால் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் பா.ஜ. பேரணி நடந்தது. இதில், கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், மோடி அமர்வதற்காக ஆக்ரா நகராட்சி மன்ற பாஜ கவுன்சிலர், வித்தியாசமான நாற்காலியை உருவாக்கினார்.கூட்டம் முடிந்ததும் மோடி அமர்ந்த நாற்காலியை ஏலம் விடும்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜ நிர்வாகிகள் சிலர் கூறினர். ஒருவர் ஸி2 ஆயிரம் ஏலம் கொடுப்பதாக கூறியதும் போட்டி ஏற்பட்டது. மற்ற பாஜ.வினரும் அதை போட்டிப் போட்டு ஏலம் கேட்க, அன்றைய தினமே ஸி1.25...

Monday, 25 November 2013

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன? இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? இதனை பற்றி ஜனாதிபதி மாளிகையின் வட்டாரத்தில் விசாரித்தால் இந்த கோப்புகள் வெளியானால் இந்தியாவின் நட்புறவு பல நாடுகளை பாதிக்கும் என சில குற்றச்சாட்டுகாளை முன் வைக்கின்றனர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி. அதில்...

Saturday, 23 November 2013

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:

சுருக்கமாக: அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார்.அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும்.கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது.ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது. அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன். உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார்.இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து...

Wednesday, 20 November 2013

மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!

  குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மதசுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கலவரம் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் பலியானார்கள்....

Tuesday, 19 November 2013

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

 ஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை இயக்கும் செலவு அப்போதைய ர்ஷிய பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டதன் காரணம் தான், பின்பு இது கடலோர குப்பையாய் இருந்த இதை பல ஆண்டு பேசி ஒரு வழியாய் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வாங்கப்பட்டது. அதாவது டீல் எப்படி – கப்பல் இலவசம். அதை 800 மில்லியன் பராமரிப்பு செலவை இந்தியா ரஷியாவுக்கு கொடுக்க வேண்டும். அது போக 1 பில்லியன் – 100 கோடி டாலர்கள் புது விமானமும் ரேடார்கள் மற்றூம் ரன்வே பராமரிப்புக்காக ஒதுக்கபட்டு...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்!

இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஜெய பாசிஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.இவர் அனுப்பிய புகார் கடிதத்தில் , “காங்கிரஸ் கட்சியால்...

Tuesday, 12 November 2013

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.                                    நவீன இந்தியாவை...

Saturday, 9 November 2013

காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஆனால், இந்த மாநாட்டில்...

Thursday, 7 November 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்…..இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது.(அந்த சயின்களிடம் என்ன கருத்து கேட்க வேண்டியுள்ளது) இந்த நிலையில் மத்திய உளவு நிறுவன உயர் அதிகாரிகள், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், தலைமை செயலக அதிகாரிகளுக்கும் நெருக்கடி...

“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல்!

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது ஒப்புக்கொண்டு எங்கள் கேள்விகளை சச்சின் போல எதிர்கொண்டார். அப்பேட்டியிலிருந்து சில பகுதிகள் கமல் பிறந்தநாளை ஒட்டி இங்கே வெளியிடப்படுகின்றன.பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் கமல்! எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள்?...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top