.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 25 October 2013

நான் ஈ இயக்குனரின் ‘மகாபலி’

ராஜமௌலி இயக்கி வரும் தெலுங்கு படத்திற்கு தமிழில் ‘மகாபலி’ என்று பெயர் வைத்துள்ளனர். நான் ஈ பட இயக்குனர் ராஜமௌலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ்தான் கதையின் நாயகன். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ...

சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் ராம் லீலா!

மொராக்கோவின் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைக்கிறது ‘ராம் லீலா’. ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13வது மராக்கெஷ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவில் இருந்து பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச திரைப்பட விழா இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில், விழாவின் தொடக்கமாக ராம் லீலா படம் இடம்பெறுகிறது. இதன்மூலம் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ராம் லீலா பெறுகிறது. திரைப்பட விழாவில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க...

'அத்தரின்டிக்கி தாரெடி' ரீமேக்கில் விஜய்!

தெலுங்கில் ஹிட்டான 'அத்தரின்டிக்கி தாரெடி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்தோடு வசூல் சாதனையும் படைத்த படம் 'அத்தரின்டிக்கி தாரெடி'. இதில் நாயகன், நாயகியாக பவன் கல்யாண், சமந்தா நடித்திருந்திருந்தனர். தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்டதாம். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் தமிழிலும் அவரே நடிக்க உள்ளார். இதன்மூலம் அவர் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. விஜய்...

அண்ணனுக்காக உடல் எடையை குறைக்கும் தம்பி!

ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார். தற்போது ஜெயம் ரவி பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'பூலோகம்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர், தனது உடல் எடையை அதிகரித்து ஜிம் பாய் தோற்றத்துக்கு மாறினார். இதே தோற்றத்துடன் அவர் 'நிமிர்ந்து நில்' படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக ரொமான்டிக் காட்சிகளும் இருப்பதால் ஜெயரம் ரவியிடம் எடையை குறைக்குமாறு...

அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

  'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார்.  இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். ஆந்திராவில் வேறு மொழி பட படப்பிடிப்பு...

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04

புதியகற்காலத்தை அடுத்து வந்த காலம் உலோககாலம்.  உலோக காலம் இந்தியாவில் கி.மு 3300 ஆண்டு வாக்கில் தொடங்கியது. உலோக காலத்தை செம்பு-கற்காலம், இரும்பு காலம் என இரண்டாக வகைபடுத்தலாம். செம்பு கற்காலம்:                கல் ஆயுதங்களுக்கு பதிலாக செம்பு, வெண்கலம் போன்ற பல வகையான உலோகங்களை உருக்கி கருவிகளை செய்தனர்.  உலோகங்களின் வருகையால் பொருளாதாரம், நாகரிகம் சற்று வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. சில நுண் கற்கருவிகளும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. உலோகங்களின் பயன்களை அறிந்த மக்கள் உலோகங்களை தேடி நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர். தென்இந்தியாவில் கோதாவரி, காவிரி, துங்கபத்ரா,...

‘விஸ்வரூபம்’ வெறும் குழந்தை : டெக்னீஷியன் கருத்து

‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் முன் முதல்பாகம் வெறும் குழந்தைதான் என்று அதில் பணியாற்றும் டெக்னீஷியன் கூறினார். ‘விஸ்வரூபம் 2ம் பாகம்‘ இயக்கி நடித்து வருகிறார் கமல். ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டிரைலரை 2வது கட்டமாக வெளியிட்டுள்ளார் கமல். ஆக்ஷன் பகுதிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக  டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட்...

நாயகன் வேடம் வேண்டாம்!

‘ரகளபுரம்‘ படத்தில் கருணாசுடன் சேர்ந்து மற்றொரு ஹீரோவாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறும்போது, ‘தமிழில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். இந்த படத்தை பார்த்துதான் ‘ரகளபுரம்‘ படத்தில் கருணாஸ் எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு தந்தார்.   அடுத்து சுந்தரபாண்டியன் இயக்கும் ‘இது கதிர்வேலன் காதல்‘, ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தயாரிக்கும் படம், ‘சேட்டை‘ இயக்குனர் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன். ஐதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை டாக்டராக பணிபுரிந்தாலும் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. குணசித்திரம் உள்ளிட்ட வேடங்களே போதும். நடிப்புக்காக டாக்டர்...

நோக்கியா லூமியா 1320 பேப்லட் அறிமுகம்

மைகேரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு  இப்போது முதன்முறையாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. நோக்கியா லூமியா 1320 என்ற பெயர் கொண்ட இந்த பேப்லட், 6 இன்ச் நீளம் கொண்ட டிஸ்பிளே உடையது. மேலும், மொபைலில் அதிகம் ஸ்கேரட்ச்(scratch) ஆகாமல் இருக்க கொரில்லா கிளாஸ் இதில் உள்ளது. 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது, இது மற்ற பிராஸஸர்களை விட மிக வேகமாக செயல்படக்கூடியதாகும்.மேலும் இதில் 1GB ரேம், விண்டோஸ் 8 OS, மற்றும் 5MP கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் கிடைக்கிறது. இதில் 8GB க்கு இன்டர்நெல் மெமரியும் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இந்த பேப்லட்டில் உள்ளது. இந்த பேப்லட் வாங்கும் நபர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் 7GB க்கு...

எல்ஜி Fireweb, பயர்பாக்ஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

                                             எல்ஜி நிறுவனம் பயர்பாக்ஸ் ஓஎஸ் இல் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் Fireweb என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த சாதனம் பயர்பாக்ஸ் OS 1.1 இயங்குதளத்தில் இயங்குகின்றது. Fireweb ஸ்மார்ட்போன் பிரேசில் முதல் நாட்டில் ரூ. 12,700 விலையில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. பயர்பாக்ஸ் OS 1.1 அடிப்படையாக கொண்டு எல்ஜி Fireweb வருகிறது, 4 இன்ச் HVGA (320x480) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 1GHz...

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை அனுப்பலாம். 2. பேபாலில் பணம் வந்தாலோ அல்லது பணம் எடுக்க 7 – 10 நாட்கள் ஆகும் ஏன் என்றால் பேபால் பணத்தை வங்கியில் தான் நேரடியாய் செலுத்தும். அது வரை நமக்கு ஸ்டக் ஆகிவிடும். இப்போது பணத்தை வித்டிரா செய்யலாம் எப்படி –...

ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும்.உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன. டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றவை. அவை சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல்மட்டத்திற்கு வந்து `டைவ்’ அடித்துவிட்டுச் செல்லும். ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கும்.அத்துடன் டால்பின்கள் `எகோலொகேசன்’ எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கிறது. மொத்தத்தில் மிகவும்...

ஈரோடு மாவட்டத்தின் வரலாறு!

தந்தை பெரியார் பிறந்த மண். 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தில் மையத்திலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் 'ஈரோடு...

வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!

      வா..வா..என்றழைக்கும் கோவா ரசிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும் தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம். இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன. கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.  போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில்...

கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர். இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில்...

நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)

  ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது. அதனால் தனித்து அதற்கான உணவைத் தேடமுடியவில்லை. அது தனக்கான உணவு தன்னை நாடி வர வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தியைப் பரப்பி..தன் குகையிலேயே இருந்தது.அதன் நலன் விசாரிக்க வரும் மிருகங்களை குகைக்குள்ளேயே அடித்துக் கொன்று உண்டு வந்தது. ஒரு நாள் நரி ஒன்று சிங்கத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க வந்தது.அது குகையின் வாயிலில் நின்று, 'சிங்க ராஜாவே! எப்படியிருக்கிறீர்கள்?" என வினவியது. இந்த நரிதான் இன்றைய என் உணவு என்று தீர்மானித்த சிங்கம்,'நரியாரே!..என்னால் எழக் கூட முடியவில்லை..நீங்கள் குகைக்குள் வாருங்கள்' என்றது. அதற்கு புத்திசாலியான...

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-03

                    இந்தியாவில் மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்த காலத்தை பற்றி எழுத்து வடிவிலான சான்றுகள் ஏதும் இல்லை. கல்வெட்டுக்களோ, குறிப்புக்களோ எழுதும் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கொண்டு ஓரளவுக்கு வரலாற்றை படைத்துள்ளனர் தொல்லியல் நிபுணர்கள். இந்தியாவில் சொல்லிகொல்லும்படியாக முதன் முதலில் தோன்றியது சிந்துசமவெளி நாகரிகம். உலகில் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் மெசபடோமியா மற்றும் எகிப்திய கலாசாரத்திற்கு இணையானது நமது சிந்து சமவெளி நாகரிகம். ஆனால் மேசபடோமியர்கள் போல் சிந்து சமவெளி நாகரிகத்தினர் வரலாற்றுக்கு எந்த ஒரு...

என்ன கொடுமை சார்!

 ’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்’” ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்! பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம். ‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர் ஆகும். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top