
மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம்
பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு
மாறலாமா..? வேண்டாமா..? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல்
இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல்
மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர்.
மைக்ரோசாப்ட்
நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின்
இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே
தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில்,
தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன்...