.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label விவசாயம் - வேளாண்மை. Show all posts
Showing posts with label விவசாயம் - வேளாண்மை. Show all posts

Sunday, 5 January 2014

''இந்தியாவின் பெருமை’' ஜாதவ் பயேங் !

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!!அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும்...

Monday, 25 November 2013

மயிர் முளைச்சான்' தெரியுமா?

இதைப் படித்தவுடனே சிலருக்கு ''என்ன தீயச்சொல் எல்லாம் பேசுகிறீர்கள்?'' எனக் கேட்க தோன்றும். இல்லை, இது தீயச்சொல் அல்ல. 'மயிர் முளைச்சான்' என்பது ஒருவகை பழமாகும்.  இப்பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைத் தாயிடமாகக் கொண்டுள்ள பழமாகும். தென்கிழக்கு ஆசியாவில், இப்பழம் மிகவும் பெயர்ப்போனது. காய் பருவத்தில் பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும். பழுத்தப் பழத்தின் வெளிப்புறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலான தோலைக் கொண்டு அமைந்திருக்கும். இப்பழத்தின் தோல் முழுக்க முழுக்க மயிரால் சூழப்பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உட்புறத்தில் வெண்ணிற சுளை இருக்கும். இனிப்பான சுவையைக் கொண்ட இப்பழத்தை 'Rambutan' என்பார்கள். அச்சொல் மலாய் மொழியில் இருந்து...

Thursday, 21 November 2013

விவசாயத்தின் மீதான அக்கறை - பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு..!

காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.வயல்களில் கைகளை கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது. பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன் (வயது 13) வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி,...

Friday, 15 November 2013

குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!குளிர்காலம் வரப்போகிறது. இக்காலத்தில் தோட்டத்தில் குளிர்காலத்தில் வளரக்கூடிய பல்வேறு செடிகளை விதைத்தால், தோட்டம் அழகாக பச்சை பசேலென்று இருப்பதோடு, சமைப்பதற்கு காய்கறிகளையும் தோட்டத்திலேயே பெறலாம். இதனால் காய்கறிகளுக்காக செய்யும் பணச்செலவு குறைவதோடு, நம் கண்முன்பே ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல் இக்காலத்தில் வளரக்கூடிய காய்கறிகளுக்கு அதிகமான கவனிப்பு வேண்டும் என்பதில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை குளிர்காலத்தில் வளரக்கூடிய சில காய்கறிகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து, பணத்தை மிச்சப்படுத்துங்கள்.தக்காளிஅன்றாட சமையலில் சேர்க்கப்படும் தக்காளியின் விலை தற்போது அதிகமாக இருப்பதால், அத்தகைய தக்காளியை வீட்டிலேயே இக்காலத்தில் பயிரிட்டால், தக்காளியானது...

Monday, 28 October 2013

தொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை அழிக்க சில டிப்ஸ்...

பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். இந்த கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை. பெரும்பாலும் இந்த பூச்சிகள் தோட்டத்தில் அதிகம் உருவாவதோடு, அவை வீட்டின் உள்ளே எளிதில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஆகவே இவற்றை எளிதில் அழிக்க சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மேற்கொண்டு, கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடுங்கள். சோப்புத் தண்ணீர் கம்பளிப்பூச்சியை எளிதில் அழிக்க வேண்டுமெனில், அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்து,...

Saturday, 26 October 2013

ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்துவது எப்படி?

      மலர்களின் அரசி என அழைக்கப்படும் ரோஜா வீட்டுத் தோட்டங்களிலும், பசுமைக்குடில்களிலும் மட்டுமல்லாது கொய் மலராகவும் பணப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இத்தகைய ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் மகசூல் இழப்பைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமானது. ரோஜாவை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி மற்றும் இலைப்பேன் ஆகியவை மட்டுமே மகசூலை குறைப்பதில் முக்கிய காரணியாக உள்ளன. இலைப் பேன்: இளம் மற்றும் வளர்ச்சியடைந்த இலைப்பேன்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் அடியில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி பின்னர் சாற்றை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளின்...

கத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி?

    ஆண்டில் டிசம்பர் - ஜனவரி, மே - ஜூன் மாதங்களில்தான் கத்தரி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகக் கருத்தப்படுகிறது. இந்த மாதங்களில் கத்தரி சாகுபடி செய்தால் அதிக மகசூலைப் பெறலாம். கத்தரி சாகுபடிக்கு கோ1, கோ2, எம்டியு1, பிகேஎம்1, பிஎல்ஆர்1, கேகேஎம்1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 400 கிராம் விதையே போதுமானது. ஆனால், இந்தக் கத்தரி சாகுபடியைப் பூச்சி மற்றும் நோய்களிலிருந்து காக்க என்ன வழி என்பது பற்றி வேளாண் துறை அதிகாரிகள் கூறியது: "கத்தரி நடவு செய்த 15-20 நாள்களில் கத்திரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்த தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் தண்டு மற்றும் காய்த்துளைப்பான்...

Wednesday, 23 October 2013

காய்கறி வாங்குவது எப்படி?

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம் 6.தக்காளி :  தக்காளி வாங்குவது புளிப்பு சுவைக்காக, ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும்...

Friday, 11 October 2013

வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

“மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும் நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதையாகின்றன. குறிப்பாக உணவு   உற்பத்தி  முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க வேண்டிய - உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு,  இர வுப்பணி, ஒரே இடத்தில்  அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற்பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தா மல் இருப்பது, ரசாயன பூச்சிக்கொல்லிகளின்  பயன்பாடு போன்றவை பிரச்னைகளின் காரணிகள். சில சாதாரண விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினாலே பல நோய்களை தவிர்க்க முடியும். இக்கவனம் இல்லாமல் போனதால்  எதிர்ப்பு சக்தியை  இழந்து, பல நோய்களை நாமே வரவழைக்கிறோம். சில நோய்களை எளிமையாக மூலிகைகள்...

Sunday, 6 October 2013

நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை!!

காய்கறி சாகுபடி என்றாலலே மூட்டைக் கணக்கில் ரசாயன உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் கிடைக்கும் என்று விவசாயிகள் பலரும் எண்ணி வருகின்றனர். அதிலும் பந்தல் காய்கறிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ‘அதுக்கெல்லாம் யாரு பண்டுதம்  பார்க்கறது”  என்று ஒதுங்கிப் போகும் விவசாயிகள்தான் அதிகம். இந்நிலையில் இயற்கை இடுபொருட்களைக்கூட தயாரித்து உபயோகப்படுத்தாமல் எரு, கடலைக்கொடி, கொளுஞ்சி ஆகியவற்றை மட்டுமெ பயன்படுத்தி புடலை சாகுபடி செய்து மனம் நிறைவான மகசூலை எடுத்து வருகிறார். மயிலாடு துறைக்கு அருகே உள்ள சிங்கான் ஒடையைச் சேர்ந்த பாஸ்கரன். “ ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன். அதுல பெருசா வருமானம்...

Monday, 30 September 2013

புரட்டாசிப் பட்டம் - என்ன விதைக்கலாம்? எவ்வளவு அறுக்கலாம்?

தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை  சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ... பருத்தி: வெள்ளைத் தங்கம் புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி. 2, எஸ்.பி.வி.ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த  120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது...

Sunday, 22 September 2013

வளர்ச்சிக்கு வழிகாட்டிய வண்ணத்துப் பூச்சிகள்!

  வடிவழகன்              குறிப்பிட்ட வகைப் பூக்களிடம் மகரந்தச் சேர்க்கை விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம்.   கேயாஸ் கோட்பாடு கேள்விப்பட்டி ருப்போம். ஏறத்தாழ அப்படியான ஓர் கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் இளம் ஆராய்ச்சியாளரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முனைவருமான வடிவழகன். வண்ணத்துப்...

Saturday, 21 September 2013

ஜீவார்மித கரைசலில் ஜொலிக்குது "பப்பாளி, திராட்சை'

ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தோட்டத்திலேயே கிடைமாடுகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி, அவற்றின் சாணத்தை சேகரிக்கிறேன். மாடுகளுக்காக சிறிய குளம் அமைத்துள்ளேன். மலைப்பகுதியில் மேய்ச்சல் முடிந்து, இரவில் இங்கே இளைப்பாறும். மாட்டுச்சாணம்,...

Friday, 20 September 2013

குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!

தென்னையில், நெட்டை ரகம் தேங்காய்களுக்காகவும், குட்டை ரகம் இளநீருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, குட்டை தென்னை ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய காலத்திலேயே மகசூல், எளிய பராமரிப்பு, இளநீருக்கு ஏற்பட்டுள்ள மவுசு, நிலையான கொள்முதல் விலை போன்ற காரணங்களால், தமிழகத்தில் குட்டை தென்னந்தோப்புகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த அந்தோணிச்சாமி, 4 ஹெக்டேர் பரப்பளவில், குட்டை தென்னை மரங்களைப் பயிரிட்டு, நல்ல லாபமடைந்து வருகிறார். அவரது வழிகாட்டல்கள் இங்கே... சமீப காலமாக, கார்பானிக் அமில குளிர்பானங்களை விட, இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் விரும்பி அருந்தத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் காலத்தில் இளநீர் பானத்திற்கு உள்ள கிராக்கி மேலும் அதிகரிக்கும் என்பதால், வணிக ரீதியாக குட்டை ரக தென்னை மரங்களைப் பயிரிடத் தொடங்கினேன். பச்சை,...

கிணற்று நீரை இறைக்கும் சோலார்!

நான் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கத்திரி, வெண்டை, கீரை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை, மின்சாரத்தை நம்பியும் பயிர் செய்ய முடியாத சூழல். மின்சாரம் விட்டு விட்டு வருவதனால் தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி அழிந்தன. டீசல் மூலமாக என்ஜினை இயக்கினால் டீசல் விலை உயர்வால் முதலுக்கே மோசம் வரும் நிலை உருவானது.   விவசாயத்தை மட்டுமே நம்பி நான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே நித்தம் காவிரியையும், கரண்ட்டையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும், வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது கவனம் சோலார் மின்சாரத்தை நோக்கித் திரும்பியது. கருகிக்கொண்டிருந்த பயிர்களைக் கண்டு வருந்தினேன். கடன் வாங்கியாவது சோலார் மின்சாரம் அமைப்பது...

புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!

தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும். தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது கருந்தலைப்புழு தாக்குதலின் அறிகுறிகளாகும். கருந்தலைப் புழுக்கள், தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் நூலாம்படையினை உருவாக்கி, அதனுள் இருந்துகொண்டே, பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். மரத்தின் கொண்டை மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர, மற்ற ஓலைகள்...

பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கையின் கொடை வேம்பு!

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.                 இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்....

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top