.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 6 October 2013

நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை!!

காய்கறி சாகுபடி என்றாலலே மூட்டைக் கணக்கில் ரசாயன உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் கிடைக்கும் என்று விவசாயிகள் பலரும் எண்ணி வருகின்றனர். அதிலும் பந்தல் காய்கறிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ‘அதுக்கெல்லாம் யாரு பண்டுதம்  பார்க்கறது”  என்று ஒதுங்கிப் போகும் விவசாயிகள்தான் அதிகம். இந்நிலையில் இயற்கை இடுபொருட்களைக்கூட தயாரித்து உபயோகப்படுத்தாமல் எரு, கடலைக்கொடி, கொளுஞ்சி ஆகியவற்றை மட்டுமெ பயன்படுத்தி புடலை சாகுபடி செய்து மனம் நிறைவான மகசூலை எடுத்து வருகிறார். மயிலாடு துறைக்கு அருகே உள்ள சிங்கான் ஒடையைச் சேர்ந்த பாஸ்கரன். “ ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன். அதுல பெருசா வருமானம்...

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி!

நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி  நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும்  ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.  குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது.  ஏனெனில்...

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!

    ஆனந்த ரயில்கள் உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....   ஆனந்த ரயில்கள்   ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக...

சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது. பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன. இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது. அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது. சிங்கம்...

மோடி vs ராகுல்!

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், திக்விஜய் சிங் உட்பட காங்கிரசின் மூத்த தலைவர்கள் ராகுலின் தலைமையில் பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பற்றிய அலசல்மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கட்சிகளும் அதற்குள் வரிந்து கட்டிக்கொண்டு தயாராகத் தொடங்கி விட்டன.  பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட்டது.  அத்வானி உட்பட சில பா.ஜ.க. தலைவர்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது பகிரங்கமாகவே மோடியை ஆதரித்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ்...

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated!!

        வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.  தமிழ் மென்பொருள் கருவி. இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது.  9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..) இலவசமாக பெற உள் நுழைக      2. HEART  இது...

மின்னலில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் – பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை!

மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து கேட்ட போது,”நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம். முதலாவது மின்மாற்றியின் மூலமாக மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்த வேண்டும். அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம்.இதன் மூலமாக இயற்கை சக்திகளை...

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!

இப்போதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் . இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில், ”ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது… எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்…  தாங்கள்...

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.

பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து “உடையும் செய்தி’யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் பட்டியலை விரைவிலேயே வெளியிட்டு விட்டது. மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற குற்றங்கள், சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் பட்டியல், காவல்துறை அவற்றை...

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவது 2 ஆண்டு தாமதம் ஆகும்!

 அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் நிதி நெருக்கடியால் செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ450 கோடி செலவில் நாசாவின் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதலின்படி  அக்டோபர் 28ம் தேதி மாலை 4.15 மணிக்கு விண்ணில் செவ்வாய்க்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் அமெக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள நாசா ஊழியர்கள் 18 ஆயிரம் பேரில் 97 சதவீதம் பேர் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஏவுவதில் தாமதம் ஏற்படும்...

ரஜினி அரசியலுக்கு வருவாரா? கருத்து தெரிவிக்க கமல் மறுப்பு!

ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்று கருத்து கூற நடிகர் கமல்ஹாசன் மறுத்து விட்டார். பெங்களூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த கூறியதாவது: கர்நாடகத்தில் சினிமா தயாரிப்பதற்கான அனைத்து அம்சங்களும் காணப்படுகின்றன. பெங்களூர், மைசூரில் இதற்கு ஏற்ற பல்வேறு இடங்கள் உள்ளன. எனவே, அடுத்து புதிய தமிழ் படத்தை கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. முழுக்க கர்நாடகாவில் ஷூட்டிங் செய்யப்பட உள்ள தமிழ் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நான் இதில் நடிக்க உள்ளேன். விஸ்வரூபம் படம் திரையிடும் போது மறக்க முடியாத அனுபவம்...

காலணியும் ஒரு கருவிதான்! தொழில்நுட்பம்!

ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் காலணியைக் கொண்டு தங்களை காத்துக்கொள்ளும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் பள்ளி  மாணவிகள். தானே மராத்தி மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் நால்வரின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த காலணி ஆயுதம். வழக்கமாக பெண்கள்  அணியும் காலணியின் அடிப்பாகத்தில் சில கருவிகளை இணைத்துள்ளனர். விஷம எண்ணத்துடன் அருகில் நெருங்கும் ஆண்களின் காலை இந்த காலணி அணிந்திருக்கும் பெண்கள் வேகமாக மிதித்தால் போதும்... அந்த நபர்  மயக்கமடையும் அளவுக்கு மின்சாரம் அவர் உடலில் பாய்ச்சப்படும். அல்லது ஆபத்து அருகே வரும் போது காலணியை வேகமாக தரையில்  மிதிக்கலாம். அதன்பிறகு பெண்ணின் கைப்பை அல்லது பர்ஸில் இணைக்கப்பட்டுள்ள...

தீக்காயத்தின் முதலுதவி என்ன?

தீவிர காயம் : சிகிச்சை முறை10 நிமிடங்களுக்கு நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள்.நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.சிறிய காயங்கள்: சிகிச்சை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.துணிகளில்...

மஞ்சள் காமாலை வருவது ஏன்?

மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு  மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக  மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான  கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத்திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை  உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும்....

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்!

உலகெங்கிலும் வீட்டு வைத்திய முறைகள் கையாளப்படுகின்றன. சில பகுதிகளில் மரபு வழி வைத்திய முறைகள் தலைமுறை தலைமுறையாகப் பலநூறு ஆண்டுகளாகப் புழகத்தில் இருந்து வந்திருக்கின்றன. வீட்டு வைத்திய முறைகளில் பல, அதிக அளவில் பலன் தருகின்றன; வேறு சில, குறைந்த அளவில் பலன் தருகின்றன. வீட்டு வைத்திய முறைகளில் சில ஆபத் தான வையாகவும், தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். நவீன மருந்துகளைப் போலவே வீட்டு மருத்துகளையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். பலன் தரும் வீட்டு மருந்துகள்  : பல நோய் களுக்குக் காலம் காலமாகப் பயன்படுத்திப் பலன் கண்ட வீட்டு மருந்துகள் நவீன மருந்துகளுக்கிணையாக அல்லது அவற்றுக்கும் மேலாகக்கூடப் பலன் தருகின்றன. பெரும்பாலானவை நவீன மருந்துகளைவிடச்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top