அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் நிதி நெருக்கடியால் செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ450 கோடி செலவில் நாசாவின் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதலின்படி அக்டோபர் 28ம் தேதி மாலை 4.15 மணிக்கு விண்ணில் செவ்வாய்க்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள நாசா ஊழியர்கள் 18 ஆயிரம் பேரில் 97 சதவீதம் பேர் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஏவுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இரண்டு ஆண்டுகள் தாமதமாகும்: இஸ்ரோவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும் செயற்கைக்கோள் அக்டோபர் 28ம் தேதியில் இருந்து நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படவில்லை என்றால் அதன் பின்னர் விண்ணில் செலுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.
நாசா மையத்தை தற்போது தொடர்புகொள்ள இயலாது என்ற பதிவு செய்யப்பட்ட தகவல் தான் ஒலிக்கிறது.
இதுகுறித்து தேசிய நிபுணர் குழு தலைவர் யு.ஆர்.ராவ் கூறுகையில், முடிந்தவரை நவம்பர் 19ம் தேதிக்குள் செயற்கை கோளை விண்ணில் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய தருணத்தை தவறவிட்டால் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் செயற்கை கோள் ஏவப்படுவது தவிர்க்கப்படும். அந்த நேரத்தில் கடலில் புயல் அபாய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றார்.
இந்நிலையில் இஸ்ரோ அதிகாரி தேவி பிரசாத் கார்னிக், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எவ்வித கால தாமதமும் இன்றி திட்ட மிட்டபடி அக்டோபர் 28ம் தேதி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றார்.
0 comments: