
பொதுவாக பயணங்கள் என்றாலே முறையான திட்டமிடல் இருந்தால்தான் இனிமையானதாக அமையும். அதுவும் சிறு குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் அவசியம். எல்லா விஷயங்களிலும் சிறப்பாக திட்டமிடும் ஆற்றலுடைய பெண்களுக்கு சில சிறிய முன்னெற்பாடுகளை செய்து கொண்டால் குழந்தைகளுடன் மேற்கொள்ளும் பயணமும் குதூகலமானதாக அமையும்.அதற்கு சில ஆலோசனைகள்…1. நீங்கள் செல்லவிருக்கும் இடத்தின் காலநிலைக்கு ஏற்றாற்போல், குழந்தைகளுக்கு ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பமான பகுதி என்றால் பருத்தி ஆடைகளையும், குளிர் பகுதி என்றால் அதற்கு ஏற்ற உடைகளும் அவசியம்.2. கோடை விடுமுறைப் பயணம் என்றால், முன்னதாகவே டாக்டருடன் ஆலோசித்து குழந்தைகளுக்கான தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.3....