.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 26 October 2013

தாயார் பெயரில் தியேட்டர்! ஒரு கோடி தந்த சூர்யா!!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டிலும் கொண்டாடி கலை உலகமே மகிழ்ந்திருக்கும் நேரம் இது. இதற்கான பெருமை எல்லாம் தமிழக அரசையும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையையுமே சேரும்.மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்கள் இலவசமாக கொடுத்த நிலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய புதிய கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயங்கி வருகிறது.  இந்த வளாகத்தை கட்ட அனுமதி தந்து அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர். அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தவர் இன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா. இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஒரு பகுதியில் மினி சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது. அது இடிக்கப்பட்டு அங்கேயும் பிரம்மாண்ட கட்டிடம் இப்போது கட்டப்பட்டு...

Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன!

சம்சுங் நிறுவனமனது அண்மையில் Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிட்டிருந்தது. இக்கைப்பேசி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்தும் தற்போது Samsung Galaxy S5 கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் உற்பத்தி தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக தெரியவருவதுடன், இக்கைப்பேசி பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இதில் 64-bit Exynos 5430 Processor - இனை கொண்டுள்ளது எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரியவருகின்றது. ...

எப்படியெல்லாம் பேசக்கூடாது?

மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.மனதை தகர்க்கும் பேச்சு: குழந்தைகள்...

ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்துவது எப்படி?

      மலர்களின் அரசி என அழைக்கப்படும் ரோஜா வீட்டுத் தோட்டங்களிலும், பசுமைக்குடில்களிலும் மட்டுமல்லாது கொய் மலராகவும் பணப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இத்தகைய ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் மகசூல் இழப்பைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமானது. ரோஜாவை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி மற்றும் இலைப்பேன் ஆகியவை மட்டுமே மகசூலை குறைப்பதில் முக்கிய காரணியாக உள்ளன. இலைப் பேன்: இளம் மற்றும் வளர்ச்சியடைந்த இலைப்பேன்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் அடியில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி பின்னர் சாற்றை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளின்...

கத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி?

    ஆண்டில் டிசம்பர் - ஜனவரி, மே - ஜூன் மாதங்களில்தான் கத்தரி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகக் கருத்தப்படுகிறது. இந்த மாதங்களில் கத்தரி சாகுபடி செய்தால் அதிக மகசூலைப் பெறலாம். கத்தரி சாகுபடிக்கு கோ1, கோ2, எம்டியு1, பிகேஎம்1, பிஎல்ஆர்1, கேகேஎம்1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 400 கிராம் விதையே போதுமானது. ஆனால், இந்தக் கத்தரி சாகுபடியைப் பூச்சி மற்றும் நோய்களிலிருந்து காக்க என்ன வழி என்பது பற்றி வேளாண் துறை அதிகாரிகள் கூறியது: "கத்தரி நடவு செய்த 15-20 நாள்களில் கத்திரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்த தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் தண்டு மற்றும் காய்த்துளைப்பான்...

அரிசி வகைகளும், அதன் பயன்களும்!

தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் தான் எத்தனை எத்தனை வகைகள். அரிசி உணவில் மட்டும் அல்ல அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக நன்மைகளும் உள்ளன. பொதுவாக தமிழர்கள் புழுங்கல் மற்றும் பச்சரிசியை மட்டுமே உணவுக்கு பயன்படுத்துவார்கள். அதையும் தாண்டி, பிரியாணிக்கு என பாஸ்மதி அரிசி பயன்படுத்தப்படுகிறது. இப்போது, ஒவ்வொரு அரிசிக்கும் உள்ள குண நலன்களைப் பற்றி பார்க்கலாம்.  புழுங்கல் அரிசிதற்போது நாம் சாப்பிடும் புழுங்கல் அரிசி பாலிஷ் செய்வதாகக் கூறி அதில் உள்ள ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் நீக்கப்பட்டுவிடுகிறது. அதையும் நாம் சில முறை தண்ணீரில் கழுவி, நன்கு வேக வைத்து கஞ்சியை வடித்துவிட்டு வெறும் சக்கையாக சாப்பிட்டு வருகிறோம். எனவே, பாலிஷ் செய்யப்படாத அரிசியே உடலுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.  புழுங்கல் அரிசியில் உள்ள நன்மைகள் புழுங்கல்...

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம். இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் கோப்புகள், ஒலி வடிவிலான கோப்புகள் , புகைப்பட கோப்புகள் என பலவகையான கோப்புகளை டவுண்லோடு செய்ய முயலும் போது இத்தகைய சோதனையான அனுபவம் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் எல்லாம்...

"உண்மையான சம்பளம் என்ன?’’ சினிமா படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு!

ரசிகர்களின் கைதட்டல்தான் நடிகர்களின் உண்மையான சம்பளம் என்று கமல்ஹாசன் கூறினார். சினிமா படவிழா தமிழ் குமரன், டாக்டர் வி.ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து, ஜீவா, திரிஷா, ஆன்ட்ரியா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில்  இரவு நடந்தது. பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக் கொண்டார். விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:– அன்புக்காக... ‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர இயலாத அளவுக்கு எல்லா இடையூறுகளும் இருந்தன. விடாபிடியாக வற்புறுத்தி அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன். படத்தையும் இப்படி அடம்பிடித்து சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்....

ஜமைக்காவும், கீரிப்பிள்ளையும்...

நாம் கீரிப்பிள்ளை என்று சொல்லும் உயிரினம் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் இல்லை. கீரிக்கும் பாம்புக்கும் ஒத்துவராது என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு சமயம் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் ‘‘பெரிதிலேன்ஸ்’’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்புகள் அதிகம் இருந்தன. அவற்றால் கடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பெருகி வந்த அந்த பாம்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று அங்கு வசித்தவர்கள் தவித்தனர். அப்போதுதான் இந்தியாவில் கீரிப்பிள்ளை என்ற உரியினம் இருப்பதும், அதற்கு பாம்புகள்தான் பிடித்தமான உணவு என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இந்தியாவை தொடர்பு கொண்டார்கள். இங்கிருந்து நூற்றுக்கணக்கான...

அவ்வையின் நையாண்டி !

நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம். எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,மட்டில் பெரியம்மை வாகனமே,  முட்டமேல்கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,ஆரையடா சொன்னாயடா! இதில் முதல் வரியில் வரும் “ எட்டேகால்“ என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4  என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா? அடுத்த வரி, எமனேறும் பரியே...

இடது பக்க போக்குவரத்து!

இந்தியாவின் சாலை போக்குவரத்தில், வாகனங்கள் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும், ஒரு சில நாடுகளைத் தவிர சாலைப் போக்குவரத்து இடது புறமாகவே உள்ளது. இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போக வேண்டும். இங்கிலாந்தின் முதல் விக்டோரியா மகாராணி காலத்தில் இந்த பழக்கம் வந்தது. அப்போது அரச குடும்பத்தினரும், நிலச்சுவான்தாரர்களும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் போவது வழக்கம். இந்த வண்டிகளில் குதிரை ஓட்டுபவர் வண்டியின் வலது புறம் உட்கார்ந்திருப்பார். இது குதிரைகளை கையாளுவதற்கு வசதியாகவும், சுலபமாகவும் இருந்தது. மேலும் அதுவே ஒரு பாரம்பரிய மரபாகவும்...

ஆயுர்வேதம் கற்றுத்தரும் பாடம்!

மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை வேகம் என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்மந்தமாகவோ அல்லது மனம் சம்மந்தமாகவோ இருக்கலாம். வேகத்தை தாரணீய வேகம் என்றும் அதாரணீய வேகம் என்றும் பிரிக்கிறார்கள். தாரணீய வேகம் என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்றுபொருள். உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. அதாரணீய வேகம் என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், அபான வாயு, மலம், சிறுநீர், இருமல், தூக்கம், மேல்மூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, சுக்லம் ஆகியவையாகும். அபான வாயுவையும், மலத்தையும் அடக்கினால்...

பாலைவனங்கள்!

செடிகளோ, உயிரினங்களோ வளர முடியாத பாலைவனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் வருவது வெப்பப் பாலைவனங்கள். இவை வெப்ப மண்டலத்தில் காணப்படும். ஆப்பிரிக்காவில் அரேபியன், நமீப், காலஹாரி போன்ற பாலைவனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இரண்டாவதாக குளிர் பாலைவனங்கள். இவை கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பவை. மலைத்தொடர்களின் அடிவாரங்களில் உருவாகும் இதுபோன்ற பாலைவனங்களில் பகலில் அதிக வெப்பம் காணப்பட்டாலும், இரவில் கடும் குளிர் வாட்டும். ஆண்டுக்கு 25 செ.மீ. மழை பெய்யும். இந்த காலநிலை காரணமாக ஏராளமான செடி, கொடிகள் இங்கே வளர்கின்றன. மத்திய ஆசியாவில் சோபி, தென்அமெரிக்காவில் பட்டகோனியன் போன்றவை சில குளிர் பாலைவனங்கள். துருவப்...

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு!

  திரைப்படம் ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில்...

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்!

கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக...

நோபல் பரிசு!

டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு  தினமான டிசம்பர் 10-ஆம்  தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ. 7 கோடியே 75 லட்சம் வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு  பிரிட்டனைச் சேர்ந்த பீ ட்டர் ஹிக்ஸ் (84 வயது), பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிராங்கா எங்க்லர்ட் (80 வயது) ஆகியோர் இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17-ஆவதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும்...

களைப்பில்லாமல் களையெடுக்கலாம்!

சூரிய ஒளியில் இயங்கக் கூடிய களை எடுக்கும் இயந்திரம் ஒன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிப்பின் பெயர்: சோலார் ட்ரில்லர் கண்டுபிடிப்பாளரின் பெயர்: எல்.முகேஷ் நாராயணன் படிக்கும் பள்ளி: ஆத்மாலயா பள்ளி, கீழகாசாக்குடி,காரைக்கால் கண்டுபிடிப்பின் பயன்: தற்போது பெரும்பாலான விவசாயிகள் களை எடுப்பதற்கு கோனோ வீடர் என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். வயலில் தள்ளிச் செல்லும் அமைப்புள்ள  இந்தக் கருவி, சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப களைகளை நீக்கும். ஆனால் கோனோவீடரை அதிக நேரம் கையாளும்போது விவசாயிகள் களைப்படைகின்றனர். இதற்கு முற்றிலும் மாற்றாக இந்த சோலார் ட்ரில்லர் கருவி செயல்படுகிறது.இதில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த இயந்திரத்தை எளிதாக விவசாயிகள் கையாள முடியும். களைகளை துல்லியமாகவும் அகற்ற முடியும். மேலும் இந்த ட்ரில்லரை  சிறிய அளவிலான விவசாய நிலங்களை...

போய் வா தலைவா!

24 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற நட்சத்திரமாக ஒளிர்ந்த  சச்சின் தெண்டுல்கர், விரைவில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்.  அவரது பயணத்தின் சில தடங்கள் துவங்கியது டென்னிஸ் பந்தில் மும்பையின் முன்னணி கோச்  அச்ரேக்கரிடம் கிரிக்கெட் பயிற்சியில் குட்டிப்பையன்  சச்சினை சேர்த்துவிட அழைத்துச்சென்றார் அண்ணன் அஜித். பவ்யமாக கையைக் கட்டிக்கொண்டு பம்மிப் பம்மி நின்ற சச்சினிடம் அச்ரேக்கர் கேட்ட முதல் கேள்வி. ‘நீ கிரிக்கெட் பால்ல விளையாடிருக்கியா பையா?’ ‘விளையாடியதில்லை சார். டென்னிஸ் பந்தில் மட்டும்தான் தெருவோரம் விளையாடியிருக்கேன்’ என்றான் குட்டிப்பையன். அவ்வளவுதான் போச்சு என அண்ணன் உள்ளுக்குள் உதறிக் கொண்டிருக்க ‘அப்படீனா நாளைலருந்து பயிற்சிக்கு வந்துடு’ என்றார் அச்ரேக்கர். அடுத்த நாள்... அச்ரேக்கரை அசத்த வேண்டும், அதற்கு  எப்படியெல்லாம் ஷாட்கள் அடிக்க...

அன்ரோய்ட்களுக்கான யூ டியூப் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி!

தற்போது மியூசிக் பிரியர்கள் அதிகளவில் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி வருவதனால் அன்ரோய்ட் இயங்குதளத்தினைக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தப்படும் யூ டியூப் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. அதாவது எப்போதும் ஒன்லைன் மூலம் பாடல்களை கேட்டு மகிழ்வதற்காக பின்னணியில் பாடல்கள் ஒலிக்கும் வண்ணம் (Background Music) புதிய யூ டியூப் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.  Background Audio என அழைக்கப்படும் இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஸ்மார்ட் கைப்பேசி அல்லது டேப்லட்களினை நிறுத்தும் வரைக்கும் (Off) இயங்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top