.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மங்கள்யான்!. Show all posts
Showing posts with label மங்கள்யான்!. Show all posts

Sunday, 1 December 2013

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா!

 

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது. அண்மையில் சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதை அடுத்து இந்தியாவின் மங்கல்யான் பயணத்தை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்த நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனை பெருமைக்குரியதுதானே?

Friday, 22 November 2013

மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம்!


மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் 'ஹெலன் புயல்'


ஸ்ரீஹரிக்கோட்டா; செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம் தேதி மங்கல்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


 தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் மங்கல்யான், தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

தற்போது ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் ஹெலன் புயலின் நிலையைதான் மங்கல்யான் தனது முதல் புகைப்படமாக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 12 November 2013

மங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்...


செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக  1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான்  விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.

இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 11 November 2013

மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது?

 மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.
செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.

செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமியின் சுற்றுபாதையை அடைந்திருந்தது, உடனடியாக அதை செவ்வாய்க்கு செலுத்த முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக விண்கலத்தின் உயரத்தையும் வேகத்தையும் அதிகரிப்பார்கள், மூன்று முறை இவ்வாறு அதிகரித்து 75,000 கிமீ உயரத்தில் இருந்தது.


இந்நிலையில் நேற்று இரவு மங்கள்யாணின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. ஆனால் இதில் சிக்கல் ஏற்பட்டதால் மங்கள்யான் விண்கலம் திட்டமிட்ட படி 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.

ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் தீர்ந்துவிடவில்லை என்பதால் அந்த சிறிய ராக்கெட்டுகளை மீண்டும் இயக்க முடியும் என்றும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது என்றும் அப்போது வெற்றிகரமாக  உயர்த்த முடியும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Saturday, 9 November 2013

மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!


 



செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.

40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top