இன்றைய இளைஞர்கள்:
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம்...
Saturday, 24 August 2013
ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு:
இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட்...
'' அம்மா என்றால் அன்பு ''
மாதங்கள் பத்து சுமந்து உன் கற்பனைகளால் என்னை செதுக்கிய சிற்பியானாய்...கருவில் என் பசி தீர்க்க திகட்டும் பொழுதும் உணவை உண்டு என் உயிர் காத்தாய்... பிறந்தவுடன் மொழியில்லா என் ஆசைகளை சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு நிறைவேற்றி வைத்தாய்...விரைவில் நான் நடை பழக உன் ஐவிரல் கொண்டு என் ஒரு விரல் கோர்த்து பல மைல்கள் நீயும் நடந்திருப்பாய்...
தலை முடியில் விரல் வருடி வலக்கை நீட்டி என் தலையணை ஆக்கி வலிகள் தாங்கி நான் தூங்க விழித்திருப்பாய்...எனக்கு பசிக்கும் முன்னே நீ அறிவதால் பசியை நானோ அறிந்ததில்லை...குளநீரை கல்லெறிந்து கலைப்பது போல் என் தோல்விகளில் உன் குரல் எறிந்து என் சோகங்கள் கலைத்து நிற்ப்பாய்...எடைதட்டில் உனை அமர்த்தி உனக்கு சமம் பார்க்க இவ்வுலகில் ஏதுமில்லை...இங்கு உன்னைப்போல் எந்த தெய்வமும் இல்லை....
...
தமிழ் ஜோக்ஸ்_பகுதி 2
எனக்கு மொபைல்ல கிரெடிட் ரீசார்ஜ் பண்ணனும்...மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...கழுதை பேப்பரை சாப்பிடுது...மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.அறிவாளிகள் என்று யாரைச் சொல்லலாம்...யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு என்னாச்சு...ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ்...
~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~
ஈகை
உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று கண்ணாகக் காக்கும் காசு காக்காது போகும் ஓர்நாள் மண்ணாகப் போகும் அந்நாள் மதிக்காதே உலகம் உன்னை எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்!!!
கனியும் காலம்
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
கண்கவரும் சிலையாய் நிற்கும்!பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்
நகையாகிப் பொன்னாய் மின்னும்!
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
பொறுமையெனும் பெற்றி தன்னை!கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட
நீராகி கனியும் காலம்...
...
ஹைக்கூக்கள்
நட்சத்திரம்
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்
படைப்பு!
மேகக் கவிஞன்
மழையெனும் மையால்
எழுதிய கவிதைக்கு
இயற்கை...
~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~
குறள் :
1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி தாக்காதே தகவல் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.2:காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும் நாணாதே மெல்ல நகும்.பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.3:இனிதே மொழி இயம்பினும் நெடண்மை மெலிதே கொல்லும் செவி.இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை மெலிதே கொல்லும் செவி.பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?4:அன்புசால் மொழியே ஆயினு மோட்டலில் இன்மை யதுகைபேசி உரை.அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில் இன்மை அது கைபேசி உரை.பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான்,...
பயனுள்ள இணையதள முகவரிகள்...
1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.
http://www.cutmypic.com/
2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.
http://www.wordia.com/
3. தமிழில் கணினி செய்திகள்
http://tamilcomputertips.blogspot.com/
4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe
5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
http://yttm.tv/
6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.
http://classbites.com/
7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
http://www.helioid.com
8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.
http://www.8on.tv
9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க
http://video.kidzui.com
10. வீடியோ எடிட்டிங்...
கும்மிப்பாடல்களின் அமைப்பு:-
கும்மிப்பாடல்களின் அமைப்பு:-
ஆதிமனிதன் என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும் ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும். பாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது. பாடலுக்கேற்ப ஆடும் ஆட்டம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னே தன் உணர்ச்சிப் பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஓசையெழுப்பியிருப்பான். அதுவே காலப்போக்கில் வாய்மொழிப்பாடலான நாட்டுப் புறக்கலையாக உருவாகியுள்ளது எனலாம். மொழிச் சிந்தனை எதுவும் இன்றி உணர்ச்சிக் கோலமாக எழுந்த ஒலியமைப்புடைய பாடல்களே நாட்டுப்புறப் பாடல்களின் முதல்நிலை என்று கூறலாம். இவ்வகையான நாட்டுப்புறப் பாடல்களுக்கு...
கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!
கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!
பூக்கள் உதிர்ந்து விழும்என்பதற்காக மரங்கள் வருத்தப்படுவதில்லை.தென்றல் நின்று போகும்என்பதற்காக மலர்கள் வருத்தப்படுவதில்லை.நிலவு தேய்ந்து விடும்என்பதற்காக வானம் வருத்தப்படுவதில்லை.பிறகு ஏன் மனிதா!நீ மட்டும் தோல்வி கண்டுதுவண்டு போகிறாய்?காலம் இருக்கு கனிவது நிச்சயம் நேரம் இருக்கு நடப்பது நிச்சயம் உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!...
மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்!
முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம்.ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாம். சில மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும் பற்றி கீழே காண்போம்.
அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
முடக்கத்தான்...