ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல்,...
Thursday, 7 November 2013
தெரிந்து கொள்ளுங்கள்!
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Contained Underwater Breathing Apparatus]
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை...
இணைய தளங்களின் வகைகள்!
.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர். .net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.... .gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம். .edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல). .mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம். .biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது. .info -- தகவல்மையங்களுக்கு உரியது. .name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது. .pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது. .aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்...
அரைகுறை காமெடியன்கள் கவுண்டரின் கால் தூசிக்குக் கூட நிகரானவர்கள் கிடையாது!
கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதிலும் வேரூன்றிப் போயிருக்கும் அம்சங்கள், ஆனால் இவை அனைத்தையும் கடந்து கவுண்டமணி என்பவர் மற்ற சராசரி நகைச்சுவை நடிகர்களைப் போல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்ட...ுக் கொள்ளாதவர். அவர் சில காட்சிகளில் யாரும் சொல்லத் துணியாத சமூக, அரசியல் அவலங்களை வெகு இயல்பாக சொல்லிவிட்டுச் செல்பவர். ஆனால், அவரை வெறும் நக்கல் மன்னன் என்ற அளவில் மட்டும் மக்கள் அவரை உருவகம் செய்துவிட்டனர். அப்படி நாம் கவனிக்கத் தவறிய கவுண்டமணியின் படங்களில் ஒன்றுதான் "ஒன்னா இருக்க கத்துக்கனும்". இந்தப் படத்தில் அவர் ஊர் வெட்டியான் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இதை சாதாரணமாக எந்த நகைச்சுவை நடிகரும் ஏற்றி நடிக்காத ஒரு பாத்திரம். வடிவேலு ஒரு படத்தில் நடித்திருப்பதாக ஞாபகம், ஆனால் அதில் வடிவேலுவின் வசனங்கள் எல்லாம் மேம்போக்கானவை மட்டுமே....
பல பயனுள்ள இணையத்தளங்கள்!
கம்பியூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
அதனால்,
எளிய முறையில் குறிப்பு களைத் தரும் தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக்
கருவிகள் குறித்த சில தளங்களைத் தற்போது பார்க்கலாம்.
www.quotedb.com:
நீங்கள்
சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய
அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட
வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை
பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.
www.photonhead.com:
டிஜிட்டல்
கெமரா வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம்.
எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு...
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு...
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?
மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி...
சிக்கன் பற்றிய சீரீயஸ் ரிப்போர்ட்!
காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்...பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.
அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும்...
மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக்!
பலகாலமாகவே பிறந்த நாள் முதல் திருமண விழா வரை தனி மனித வாழ்வின் அனைத்து முக்கிய வைபவங்களிலும் கேக் இடம் பிடித்து விடுகிறது.இது 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சிற்றுண்டி உணவாம். இங்கிலாந்தில் அப்போது நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப இத்தகைய கேக் தயாரிக்கப்பட்டு வந்தது. அதை அடிப்படையாக வைத்தே தற்போதும் கேக்கில் மதுபானங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு சிறப்பு கலவையாக உருவாக்கப்படுகிறது.
அத்துடன் ஆங்கிலேயர் தொடக்க காலத்தில் கேக் தயாரித்தபோது அதில் மாமிச வகைகளையும் பயன்படுத்துவார்களாம். மதுபானங்களில் உள்ள ஆல்கஹாலில் அந்த மாமிசங்கள் கரைந்து புதியதொரு சுவையை ஏற்படுத்தித் தந்துள்ளதாம்.
பேக்கிங் முறையில் தயாரித்தால் அதற்கு பெயர்...
அதிக கோடீசுவரர்களை கொண்ட நாடுகளில் 6-வது இடத்தைப் பிடித்தது இநதியா!
பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை மீறி பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 170 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.அதே சமயம் இந்திய கோடீஸ்வரர்களில் 3 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிக குறைவு என்று வெல்த் எக்ஸ் மற்றும் யுபிஎஸ் என்ற பன்னாட்டு நிதி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரை 18 புதிய மெகா பணக்காரர்களை உருவாக்கி, புதிய கோடீஸ்வரர்களை ஏற்படுத்துவதில் ஆசியா முதலிடம் பிடித்துள்ளது.உலக பண்க்காரர்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா 6-வது இடத்தில் உள்ளது..
ஆசியாவில் மட்டும் மொத்தம் 44...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?
தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்…..இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது.(அந்த சயின்களிடம் என்ன கருத்து கேட்க வேண்டியுள்ளது)
இந்த நிலையில் மத்திய உளவு நிறுவன உயர் அதிகாரிகள், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், தலைமை செயலக அதிகாரிகளுக்கும் நெருக்கடி...
“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல்!
நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது ஒப்புக்கொண்டு எங்கள் கேள்விகளை சச்சின் போல எதிர்கொண்டார். அப்பேட்டியிலிருந்து சில பகுதிகள் கமல் பிறந்தநாளை ஒட்டி இங்கே வெளியிடப்படுகின்றன.பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் கமல்!
எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள்?...
சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!
முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர்....
வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.
சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போம்மெட்டல் பொருட்கள்:
சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால்,...
வீட்டிலேயே நகைகளை சுத்தம் செய்ய சில குறிப்புகள்!
அம்மோனியாவைரங்கள் தான் ஒரு பெண்ணின் உற்ற நண்பன். ஆனால் அவை அழுக்காக இருக்கும் போது அல்ல. ஆகவே ஒரு கப் வெந்நீருடன், 1/4 கப் அமோனியாவை கலந்து வைர நகைகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மென்மையான டூத் பிரஷால் மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும். குறிப்பாக, அமைப்புகளின் பிளவுகளிலும், வைரத்தின் அடிப்பகுதிகளிலும் நன்றாக தேய்க்கவும்.வினிகர்வெள்ளை வினிகர் கொண்டு தங்கம் மற்றும் கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்வது சுலபமானது அல்ல. ஆகவே ஒரு ஜார் வினிகரில் நகைகளை 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அதுமட்டுமின்றி அவ்வப்பொழுது கலக்க வேண்டும். பின் மென்மையான பிரஷால் தேய்த்து மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும்.ஆன்டாசிட்ஆன்டாசிட் மாத்திரை வயிற்றை தணிப்பது மட்டுமல்லாது, நகைகளையும் சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு வெந்நீரில் 2 ஆன்டாசிட் மாத்திரைகளை போட்டு, அதில் நகைகளை போட்டு, 2 நிமிடங்களுக்கு...
பாசிட்டிவ் & நெகடிவ் எண்ணங்கள் நல்லதுதான் ( எல்லாம் நன்மைக்கே )
பொதுவா ஏதாவதொரு விசயம் நடக்கணும்னு நெனச்சு, ரொம்ப நம்பிக்கையா அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கும்போது, அந்த விசயம் நடக்காதுங்குற மாதிரி யாராவது பேசினா நமக்கு எவ்ளோ கோவம் வரும்Huh?
“ஏய்.. அபசகுனமாப் பேசாதே“னு அவங்கள திட்டுவோம். சகுனம் பாக்குற பழக்கம் தவறுங்குறது பலருடைய கருத்து. ஆனா அப்டி நெனைக்கிறவங்க கூட, அபசகுனமா பேசுறத விரும்புறதில்லை. ஆனா நா இங்க சொல்ல வர்றது என்னனா.. அபசகுனமான எண்ணங்களும் நமக்குள்ள வேணும்குறது தான்.
நமக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் இருப்பது நல்லதுதான், ஆனா எப்போதும் அதுவே பழக்கமாகிவிடும் பட்சத்துல, நெகடிவ்வாக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பது கிடையாது. “ஓவர் கான்ஃபிடன்ட், உடம்புக்கு ஆகாது“னு சொல்வாங்க.. அது கிண்டலுக்கு சொல்றதுனு தோணலாம். ஆனா அதுதான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு வைக்கும்போது, ஒருவேளை...
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள் ( 30+ )
30 வயதானவர்களுக்கான முதலீடு!சுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு...
மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!
மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு...
மிகவும்...
*மிகவும் கசப்பானது தனிமையே! *மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே! *மிகவும் துயரமானது மரணமே! *மிகவும் அழகானது அன்புணர்வே! *மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே! *மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே! *மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே! *மிகவும் வெறுமையானது இல்லையென்பதே! *மிகவும் ரம்மியமானது நம்பிக்கைய...
தேவையான மூன்றுகள்!
இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை. ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை. பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை. கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு. அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு. தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை. பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம். நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை. &nbs...
அன்பின் மூன்று வகைகள்!
அன்பு என்ற வார்த்தை எல்லோருக்கும் பிடித்த ஒன்று ஆகும். இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல் என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது. இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் இந்த அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம். 1. மிருக அன்பு : மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல்...