.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 September 2013

3 நாளில் உச்சக்கட்ட காட்சி - அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ தீபாவளி விருந்தாக வருகிறது!



 


அஜீத்–நயன்தாரா, ஆர்யா–டாப்சி நடித்த ‘ஆரம்பம்’ படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது என்று பட அதிபர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.


‘ஆரம்பம்’

ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், ரகுராம் தயாரித்துள்ள படம், ‘ஆரம்பம்.’ இந்த படத்தில் அஜீத்–நயன்தாரா ஒரு ஜோடியாகவும், ஆர்யா–டாப்சி இன்னொரு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் டைரக்டு செய்து இருக்கிறார்.
படத்தின் உச்சக்கட்ட காட்சி துபாயில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றி பட அதிபர் ஏ.எம்.ரத்னம் கூறியதாவது:–


3 நாளில் உச்சக்கட்ட காட்சி


‘‘வில்லன் கும்பலை அஜீத் ஒரு படகில் துரத்தி செல்வது போன்ற காட்சியை நடுக்கடலில் படமாக்கினோம். இதற்காக அஜீத்துக்கு படகோட்டும் பயிற்சி அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 2 பயிற்சியாளர்களை வரவழைத்தோம்.


அஜீத் மற்றும் ஸ்டண்ட் நடிகர்களுடன் பயிற்சியாளர்கள் நடுக்கடலுக்குள் சென்றார்கள். அடுத்த 20 நிமிடங்களில் பயிற்சியாளர்கள் மட்டும் திரும்பி வந்து விட்டார்கள். ‘‘அஜீத் ஏற்கனவே பயிற்சி பெற்றவர் போல் மிக நன்றாக படகு ஓட்டுகிறார். எங்கள் உதவி தேவையில்லை’’ என்று கூறினார்கள்.
இதனால், 6 நாட்கள் எடுக்க வேண்டிய உச்சக்கட்ட காட்சியை மூன்றே நாட்களில் முடித்துவிட்டு திரும்பி விட்டோம்.’’
இவ்வாறு ஏ.எம்.ரத்னம் கூறினார்.

முயன்றால் முடியாததில்லை.........குட்டிக்கதை



மூன்று தவளைகள் ஒன்றுக்கொன்று நண்பர்களாக இருந்தன.

ஒரு தவளை...மிகவும் சோம்பேறியாகவும்..தன்னால் எந்த வேலையும் செய்யமுடியாது என்றும் தாழ்வு மனப்பாமையுடன் இருந்தது.

இரண்டாவது தவளை ..எந்த விஷயத்திலும் எந்த முயற்சியும் செய்யாமல் ..எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என வேதாந்தம் பேசி வந்தது.

மூன்றாவது தவளையோ ..எந்த காரியத்திலும் முயற்சியை விடாது..விடா முயற்சி செய்து..வெற்றி பெற்று வந்தது.

ஒரு நாள் அவை மூன்றும் இருட்டில் போனபோது கிணறு வெட்ட வெட்டியிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வீழ்ந்தன.

முதல் தவளை..'ஐயோ பள்ளத்தில் வீழ்ந்துவிட்டோமே..இனி வெளியே வரமுடியாதே' என அழுதவாறு இருந்தது.

இரண்டாவது தவளையோ...'நாம் பள்ளதில் விழ வேண்டும் என்பது விதி..நாம் வெளியே வரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் வெளியே வருவோம் என சும்மா இருந்தது.

மூன்றாவது தவளையோ..கண்டிப்பாக என் முயற்சியால் நான் வெளியேறுவேன் என்று கூறி தாவி..தாவி.. குதிக்க ஆரம்பித்தது...

ஒரு கட்டத்தில்..மண்ணின் பக்கவாட்டத்திலிருந்த ஒரு கிளையில் அது தாவி உட்கார்ந்தது...அடுத்த தாவில் வெளியே வந்து விழுந்தது.,,

பின் தன் நண்பர்கள் நிலை குறித்து மனம் வருந்தி தன் வழியே சென்றது.

'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்'

எந்த ஒரு காரியமும் முயன்றால் வெற்றி அடையலாம்.

36 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தை கடந்த வாயேஜர்–1 விண்கலம்!

36 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தை கடந்த வாயேஜர்–1 விண்கலம் 


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறிய ‘வாயேஜர்–1’ என்ற விண்கலத்தை வடிவமைத்தது. இது கடந்த 1977–ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.


அன்று முதல் அது விண்ணில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அது பூமியில் இருந்து புறப்பட்ட 36 வருடங்களுக்கு பிறகு சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து கடந்து சென்றுள்ளது.


விண்வெளி வரலாற்றில் மனிதனால் தயாரித்த ஒரு பொருள் சூரிய மண்டலத்துக்குள் புகுந்து பயணம் செய்து கடந்தது இதுவே முதல் முறையாகும். இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.


வாயேஜர் விண்கலம் கடும் வெப்பம், மற்றும் குளிர் உள்ளிட்ட தட்ப வெப்ப நிலைகளை தாங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் சாப்பிடுவது உணவா? விஷமா??



நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், ‘அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்’ என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது!

இத்தகைய சூழலில்… ‘சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று சமீப காலம் வரை பெரும்பாலான டாக்டர்கள் (சர்க்கரை நோய் நிபுணர்கள் உட்பட) உறுதியாக சொல்லிக் கொண்டிருந்த வாதம்… தற்போது முற்றாக உடைபட்டு போயிருக்கிறது.


sep 15 - meals. MINI

 


ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு ‘கிளைசீமிக் இண்டெக்ஸ்’ (Glycemic Index)என்று பெயர். சுருக்கமாக ‘ஜிஐ’ (GI). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் ‘ஜிஐ’ 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள்.


100-70 வரை ‘ஜிஐ’ உள்ள உணவுகளை, ‘அதிக ஜிஐ’ என்றும், 70-55 வரையிலான உணவுகளை ‘நடுத்தர ஜிஐ’ என்றும், 55-க்கு கீழே உள்ள உணவுகளை, ‘குறைந்த ஜிஐ’ என்றும் அழைக்கிறோம்.அதிக ‘ஜிஐ’ உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த ‘ஜிஐ’ உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகின்றன. ஆகவே, 70-க்கும் மேல் ‘ஜிஐ’ உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55-க்குக் கீழ் உள்ள உணவுகளே பாதுகாப்பானவை.அப்படியானால், நாம் உண்ணும் உணவின் ‘ஜிஐ’ எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதானே!


அதற்கான பட்டியலை கீழே கொடுத்திருக்கிறோம… பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் கவரிலும் ‘ஜிஐ’ அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது.இதில் நாம் கவனிக்க வேண்டியது – கைக்குத்தல் அரிசியின் ஜிஐ, 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் ‘ஜிஐ’ அளவு மிகவும் அதிகம் – 75.



sep 15 - health rice chart

 


நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) ‘ஜிஐ’ இடைப்பட்ட ரகம்: 56 – 58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும் நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்! இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் ‘பொன்னி அரிசிதான் வேண்டும்’ என்கிற உங்களின் பிடிவாதம் சரியா… இல்லையா… என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.


‘சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் ‘ஜிஐ’ மட்டுமல்லாமல்… சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity)கூட கணக்கிடப்படுவது முக்கியம்’ என்கிற கருத்தும் உண்டு. இதை ‘கிளைசீமிக் லோடு’ (Glycemic Load)என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக ‘ஜிஎல்’ (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில் மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய ‘குளுக்கோஸ் சுமை’ அதிகம்தானே? அதிக ‘ஜிஐ’ இருக்கும்போது, அதிக ‘ஜிஎல்’லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?


மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான ‘அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகம்’ (American Diabetes Association)’எந்த மாவுப்பொருளைச் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமில்லை – எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதுதான் உலகெங்கும் உள்ள டாக்டர்கள், ‘அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடி சம்பந்தமில்லை’ என்று சமீப காலம் வரை அடித்துச் சொன்னதற்குக் காரணம்.


இதை உடைத்துப் போட்டிருப்பது… அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் கடந்த 22 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி முடிவு.

மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணனும்! – பி ஜே பி ஒப்பன் டாக்!



நாட்டில் நல்லாட்சி மலர திறமையான நரேந்திர மோடி பிரதமராக நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “விலைவாசி உயர்வு, தீவிரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற மக்கள் ஆவேசத்துடன் இருக்கிறார்கள்.நாட்டை ஆளும் தகுதியும், திறமையும் படைத்த நரேந்திர மோடி மக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராவது உறுதியாகிவிட்டது.


sep 14 rajini

 


தமிழ்நாட்டிலும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கணிசமான ஆதரவு கிடைக்கும். 26ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். நடிகர்களில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் வெறும் நடிகர் மட்டுமல்ல. நாட்டு மக்களை நேசிக்கும் நல்ல மனிதர். தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்தவர். நல்லவர்கள், திறமையானவர்கள் நாட்டை ஆள வேண்டும். மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை படைத்தவர்.இது தேர்தல் நேரம். நாட்டில் நல்லாட்சி மலர திறமையான மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

அச்சம் தவிர்- (நீதிக்கதைகள்)



ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன...இவை..தினம்..தினம்.,சிங்கம்..புலி ஆகியவை தாக்குமோ என பயந்து பயந்து வாழ்ந்தன.

ஒரு நாள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ..'நாம் கோழைகளாக தினம்..தினம் ..பயந்து சாவதை விட ஒட்டு மொத்தமாக குளத்தில் விழுந்து சாகலாம்'என முடிவெடுத்து..ஒரு குளத்தை நோக்கிச் சென்றன..

அந்த குளத்தில்.. பல தவளைகள் வாழ்ந்து வந்தன..குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டிருந்த தவளைகள்...எல்லா முயல்களும் அவற்றை நோக்கி வருவதைப் பார்த்து ..குளத்தில் குதித்து மறைந்தன.

இதைப் பார்த்த முயல்களின் தலைவன் மற்ற முயல்களைப்பர்த்து ..'நாம் கோழைகள் தான்..ஆனால் நம்மை விட கோழையானவர்களும் உலகில் உள்ளனர்.அவர்களே பயமில்லாமல் வாழும்போது நாம் ஏன் பயப்படவேண்டும்' என்று கூற .. அனைத்தும் திரும்பின.

நாம் பிறரைக் கண்டு பயப்படாமல் இருக்கவேண்டும்.நம்மைக் கண்டு பயப்படுபவர்களும் உலகில் இருப்பார்கள்.

பயம்..மனிதனை சிறிது சிறிதாக கொன்றுவிடும்.ஆகவே எதற்கும் எப்போதும் பயப்படக்கூடாது

வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்?


அண்மையில், பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் மிகுவல் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வர் குழு, “வளிமண்டல வெப்பநிலை உயர்வு, மனிதர்களின் நரம்பு சார்ந்த உடற்செயலியல் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் போர் நிகழும் வாய்ப்புகளை அதிகமாக்கும்’ என்று கூறுகிறது.ஆம், வளி மண்டலத்தில் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்கள் நிறைவதால் உலகளாவிய சூழல் வெப்பநிலை அதிகரித்து பல வகையான விபரீத விளைவுகளை உருவாக்கும்.


சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறபோது அல்லது அலுவலக அறையில் குளிரூட்டும் கருவி பழுதாகி புழுக்கம் வதைக்கிறபோது அல்லது பயணிகள் நிரம்பி வழிகிற பஸ் அல்லது ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சு விடக்கூட முடியாமல் திணறுகிறபோது அல்லது சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு காரை நகர்த்த முடியாமல் தவிக்கிறபோது – இதுபோன்ற நேரங்களில், எல்லாருக்குமே நிதானம் தவறி மனதில் எரிச்சலும் கோபமும் பொங்கியெழும். சம்பந்தாசம்பந்தமில்லாமல் எரிந்து விழுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, சின்ன விஷயத்துக்குக்கூட வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பது, காது கிழியும்படி லாரி அல்லது காரின் ஊதுகுழலை அலற விடுவது போன்றவை அத்தகைய மனநிலையின் வெளிப்பாடுகள்.


sep 14 - climate and violence

 



மிகுவல் குழுவினரின் ஆய்வு முடிவு, பருவநிலை மாறுபாடுகளால் உலகளாவிய வளிமண்டல வெப்பநிலை உயர்வதற்கும் மனிதர்களின் உடல் நலம் மற்றும் மனநலக் குலைவுகளுக்குமிடையில் ஒரு நேரான இணைப்பு இருப்பதாகக் கூறுகிறது. சூழல் வெப்பநிலை உயரும்போது மனித மனங்களில் வன்முறை எண்ணங்கள் தோன்றுவதும் அதிகமாகிறது. அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை அந்த ஆய்வர்களால் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட முடியவில்லை.சூழல் வெப்பநிலை உயரும்போது தனி நபர்களின் நரம்பு மண்டலம் சார்ந்த உடலியக்கவியல் நடவடிக்கைகளில் தாக்கமுண்டாவதாக மிகுவல் ஊகிக்கிறார்.


மிகுவலின் ஆய்வர் குழு கி.மு. 8000 முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சண்டை சச்சரவுகளையும் வன்முறைகளையும் ஆராய்ந்து, முக்கியமான பல நூறு வன்முறை சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்து, பல்லாயிரம் தரவுகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றுக்கும் பருவ நிலை மாற்றங்களுக்குமிடையில் ஏதாவது நேர்கோட்டுப் பொருத்தம் தென்படுகிறதா என புள்ளியியல் தத்துவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார்கள். சில ஆயிரம் வாக்காளர்களிடம் விசாரணை செய்து அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அறிவிப்பதைப் போன்ற செயல்முறைதான் இது. எனினும் இதை அறிவியல் அங்கீகரிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அத்தகைய ஜோசியங்கள் பலித்தும் விடுகின்றன.


2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வளிமண்டல வெப்ப நிலையில் இரண்டு செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படக்கூடும் என அனுமானம் செய்கிற விஞ்ஞானிகள், அது கோடை கால சராசரி வெப்ப நிலை உயர்வு, காலமில்லாத காலத்தில் பெரு மழைப் பொழிவு போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஊகிக்கிறார்கள். அது மட்டுமின்றி தற்காலத்தில் இனம், மதம், சாதி, கட்சி சார்ந்த சச்சரவுகள் பரவலாக நிகழ்ந்து கொண்டிருக்கிற நாடுகளில், குறிப்பாக வெப்ப மண்டல நாடுகளில், உள்நாட்டுக் கலகம், புரட்சி போன்ற சச்சரவுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



எனினும் பருவ நிலை மாற்றத்துக்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் ஓர் இணைப்பு உள்ளதாக அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்த போதிலும், எந்த நாட்டில், எந்தப் பகுதியில், எந்தவிதமான சச்சரவு எப்போது வெடிக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு விதி அல்லது கோட்பாட்டை அவர்களால் உருவாக்க முடியவில்லை. ஆனால், பாதகமான பருவ நிலை மாற்றத்துக்கும் வன்முறை உணர்வுகள் தூண்டப்படுவதற்குமிடையில் ஒரு காரண காரிய இணைப்புள்ளது என்பதை அனுபவம் சார்ந்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.



வன்முறை என்பதில் கொலை, களவு, கற்பழிப்பு போன்ற தனி நபர் குற்றங்களும் குழுக்களுக்கிடையிலான சச்சரவுகளும் அடங்கும். மிகுவல் ஆய்வுக்குழு உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த 27 வன்முறைச் சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர், அதிகரித்த வறட்சி, சராசரியைவிட கூடுதலான ஆண்டு வெப்பநிலை போன்ற பாதகமான பருவநிலை மாற்றங்கள் அந்தச் சச்சரவுகளுக்கு ஒரே மாதிரியான தூண்டு விசையாக அமைந்தன என்று முடிவு செய்தது. மனிதர்களின் நரம்பு சார்ந்த உடலியக்கவியல் செயல்பாடுகளில் ஏற்பட்ட தாக்கம் மட்டுமின்றி, விவசாயம் பொய்த்தது போன்ற பொருளாதார சீர்குலைவுகளும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுச் சச்சரவுகளுக்கு வித்திட்டிருக்கக்கூடும். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் உணவுக்கும் வருவாய்க்கும் உள்நாட்டு விவசாய உற்பத்தியையே நம்பியிருக்கின்றனர். அதீதமான வறட்சி அல்லது பெருமழைப் பொழிவு விவசாய உற்பத்தியை பாதித்து வருவாயைக் குறைக்கும். அதன் காரணமாக மக்களிடம் விரக்தியும் ஏமாற்றமும் தோன்றி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிகோலும் என மிகுவல் கருதுகிறார்.



பண்டைய காலத்தில் மாயன் மற்றும் சீன சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி முதல், அண்மைக்காலத்தில் இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்த குடும்பச் சண்டைகள், அமெரிக்காவிலும் தான்சானியாவிலும் அதிகரித்த கொலைகளும் குற்றங்களும் ஐரோப்பாவிலும் தெற்காசியாவிலும் அதிகரித்த இனக்கலகங்கள், பிரேசிலில் மக்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்தது, வெப்ப மண்டல நாடுகள் எல்லாவற்றிலுமே குடும்ப மற்றும் சொத்துத் தகராறுகள் அதிகரித்தது என்பன வரையான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் மிகுவல் குழுவினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே பருவ நிலை பாதிப்புகளுக்கும் மனித சமூகச் சச்சரவுகளுக்குமிடையில் ஒரு தொடர்பு இருப்பதாக மிகுவல் ஆய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். 



அந்தத் தொடர்பு எத்தன்மையது என்பதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்பு இருப்பதை யாரும் மறுதலிக்கவில்லை. அவருடைய ஆய்வர் குழுவில் தொல்லியல், குற்ற ஆய்வியல், பொருளியல், புவியியல், வரலாற்றியல், அரசியல், உளவியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தாங்கள் சேகரித்த தரவுகளை, புள்ளியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப நெளிவு சுளிவுகளை அனுமதித்து பகுப்பாய்வு செய்த பின்னரே முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.



எதிர்காலத்தில் வெப்பநிலை உயர்வு காரணமாக வேறு பல பாதக விளைவுகளுடன் உள்நாட்டுக் கலகங்களும் இனப்படுகொலைகளும், ஏன் மூன்றாவது உலகப் போரும்கூட மூளலாம் என்ற சாத்தியக் கூறும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. உலகளாவிய வெப்பநிலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயமும் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை!



சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது:இது வரை முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில்அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவு பொருள் விஞ்ஞானிகள் முழுக்க தாவரப் பொருள்களை கொண்டு நவீன செயற்கை முட்டையை உருவாக்கி சாதனைப் படைத்து விட்டார்கள். இதை பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த 11 சத்துமிக்க பொருள் மற்றும் புளிக்கரைசல் கொண்டு தயாரிக்கிறார்கள்.


sep 14 - artificial  Eggs -

 



தற்போது இந்த செயற்கை தாவர முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. கோழி முட்டையை விட இதன் விலை 19 சதவீதம் குறைவு என்றும், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் கூறுகிறார்.மேலும்”சைவ பிரியர்கள் முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்றான பொருட்களை எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் முயன்று வருகிறோம். தற்போது தூள் வடிவில் முட்டை தயாரித்துள்ளோம். அவை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை கோழி முட்டை தரத்தில் அதேபோன்று வழங்க தீவிர முயற்சி செய்துள்ளோம்” எனவும் தெரிவித்தார்.


‘Artificial egg’ made from plants on sale


A radical ‘artificial egg’ backed by Paypal billionaire Peter Thiel and Bill Gates goes on sale in US supermarkets for the first time today.Made from plants, it can replace eggs in everything from cakes to mayonnaise – without a chicken ever coming close to the production process.

அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் அண்ணா : ஜெயலலிதா புகழாரம்!




ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா புகழாரம் செய்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மடலில், எண்ணற்ற தமிழர்களின் எண்ணங்களில் நீக்கமற வீற்றிருப்பவரும்; தாய்மொழியாம்  தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவரும்; தனது நாவன்மையாலும், எழுத்துத் திறமையாலும், ஜனநாயகப் பண்பினாலும் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்கியவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 105-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும், இந்த நன்னாளில் அவருடைய சிந்தனைகளை, பன்முக ஆற்றலை நினைவு கூர்ந்து அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அளவில்லா ஆனந்தமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன்.


இணையற்ற பேச்சாளர்; எழுச்சி மிகு எழுத்தாளர்; திறமையான நிர்வாகி; சிறந்த கவிஞர்; கண்ணியம் மிக்க அரசியல் தலைவர்; மாற்றாரையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர்; ஏழைகளின் ஏந்தல் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்று சொன்னால் அது மிகையாகாது.

 
சுயமரியாதைச்  சிந்தனைகளை, முற்போக்கு கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை தன்னுடைய நாடகங்களின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவர் பேரறிஞர் அண்ணா.


பாமர மக்களும்  புரிந்து கொள்ளும் விதத்தில் பாடல்களை இயற்றியவர் மகாகவி பாரதி என்றால்,  பாமரரையும், படித்தவரையும் ஈர்க்கும் வகையில் மேடைப் பேச்சினை ஒரு கலையாக மேன்மைப்படுத்திவர் நம் பேரறிஞர் அண்ணா.


தமிழில் மட்டுமல்லாமல், அனைவரும் வியக்கும் வகையில் ஆங்கிலத்திலும் திறம்பட பேசக் கூடியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவிடம் சென்று because என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வரும் வகையில் வாக்கியம் அமைக்க முடியுமா? என்று கேட்டனர். 

 “No sentence can begin with because, because, because is a conjunction”


என்று உடனடியாக பதில் அளித்தார் பேரறிஞர் அண்ணா.


நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும், திருக்குறளையும் இடம் பெறச் செய்தவர் பேரறிஞர் அண்ணா, ஒரு முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுந்து, 


“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

என்று பேருந்தில் எழுதப்பட்டுள்ள குரல் யாருக்காக? ஓட்டுனருக்காகவா? அல்லது நடத்துனருக்காகவா? அல்லது பயணிகளுக்காகவா? என்று கேட்டார்.  இக்கட்டான சூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா சிக்கித் தவிக்க வேண்டும் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி இது.


ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்காக அந்தக் குரல் எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால் தொழிலாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.  பயணிகளுக்காக என்று சொன்னால் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டும்.  இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா?

 "நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதப்பட்டுள்ளது" 

என்று மிக நுணுக்கமாக பதில் அளித்தார்.  இந்த பதிலைக் கேட்டவுடன் அனைவரும் வியந்தனர். பேரறிஞர் அண்ணாவின் வாதத் திறமைக்கும், சமயோசித தன்மைக்கும், கூர்த்த மதியுடன் பதில் கூறும் அறிவாற்றலுக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பேரறிஞர் அண்ணாவின் வாதத் திறமைக்கு இது போன்ற பல சான்றுகளை கூறிக் கொண்டே போகலாம்.


பேரறிஞர் அண்ணா அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, நடிப்புத் திறமை என பன்முகங்களைக் கொண்டு ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர்.  அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக, அதாவது தலைவர்-தொண்டர் என்ற நிலையை மாற்றி அண்ணன்-தம்பி என்ற உறவை நிலை நாட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, அவர் தோற்றுவித்த அரசியல் இயக்கம் குடும்ப இயக்கமாக மாறிவிட்ட நிலையில், பேரறிஞர் அண்ணாவால் நிலைநாட்டப்பட்ட உறவு முறையை கடைபிடித்துக் கொண்டு வரும் ஒரே இயக்கம் அண்ணாவின் இதயக்கனியாம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" தான் என்பதை இந்தத் தருணத்தில் பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


பேரறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல் என அனைத்திலும் மனித நேயம் குடிகொண்டு இருக்கும்.  பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தடவை, அமெரிக்க நாட்டு அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். அங்கு போய்விட்டு வரும் வழியில் வாடிகன் நகரத்திற்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்தார்.


போப் ஆண்டவரைச் சந்திக்கின்ற எல்லோரும் அவரிடம் ஏதாவது வரம் கேட்பது வழக்கம்.  அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவும் வரம் கேட்டார்.  என்ன வரம் கேட்டார் தெரியுமா?


“கோவா நாட்டு விடுதலைக்காகப் போராடிய காரணத்தால் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் நாட்டுச் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ரானடே என்கிற சுதந்திரப் போராட்ட வீரரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த வேண்டுகோள் போப் ஆண்டவரை வியப்படையச் செய்துவிட்டது.  இதுவரை யாரும் இப்படிப்பட்ட ஒரு வரத்தை கேட்கவில்லையே! எங்கோ இருக்கிற ஒருத்தருக்காக சம்பந்தமே இல்லாத இன்னொருவர் வாதாடுகிறாரே! என்ற ஆச்சரியம்  போப் ஆண்டவருக்கு.
பேரறிஞர் அண்ணா கேட்ட அந்த வரம் அளிக்கப்பட்டது.  போர்ச்சுக்கல் சிறையிலே வாடிக் கொண்டிருந்த ரானடே விடுதலையானார். தன்னுடைய விடுதலைக்கு காரணமான பேரறிஞர் அண்ணாவுக்கு நன்றி தெரிவிக்க ரானடே சென்னைக்கு வந்தார். 


ஆனால், அவர் சென்னை வந்து சேருவதற்குள், பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த  உலக வாழ்க்கையில் இருந்தே விடுதலை ஆகிவிட்டார். அண்ணாவை ரானடேவால் பார்க்க முடியவில்லை. அவர் பிறந்த மண்ணைத் தொட்டு முத்தமிட்டு கண்ணீரைக் காணிக்கையாக்கி விட்டுச் சென்றார் ரானடே.
இப்படிப்பட்ட மனித நேயம் மிக்க பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி, தீய சக்தியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. 



மாநில சுயாட்சி, சுயமரியாதைக் கொள்கை ஆகியவற்றுடன் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் உணர்வு ஏற்படவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவும், மூடப் பழக்கவழக்கங்கள் அகலவும், தமிழக அரசியலில்  தனிப் பாதையில் நடைபோட்டு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


எந்தக்  கொள்கைகளை முன்வைத்து பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளை புறந்தள்ளி விட்டு, தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, தன்னலத்திற்காகவும், அரசியலில் தனக்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்காகவும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி அடைந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.


தமிழினத் துரோகி, தமிழக மக்கள் நலனை அடகு வைத்து தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனிதநேயமற்ற சுயநலவாதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மக்கள் விரோதப் போக்கை பட்டிதொட்டியெங்கும் பட்டியலிட்டு பரப்புவதோடு, அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவற்றை வாக்குகளாக மாற்றி, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வும் வகையில் களப் பணியாற்ற வேண்டும் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – திரை விமர்சனம்



தமிழ் சினிமாவின் தரம் இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. முன்பெல்லாம் பிரமாண்ட செட் போட்டு படமெடுத்தார்கள்… அதன்பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்… இப்போது ஒரே வீட்டுக்குள் மொத்த படத்தையும் முடித்துக் கொள்கிறார்கள்… இதில் கடைசியாக சொன்ன ரகத்தில்தான் ‘மூடர் கூடம்’ உருவாகியிருக்கிறது.


படத்திற்கு ஏன் அப்படி பெயர் வைத்தார்கள் என்று யோசிப்பவர்கள் படம் பார்த்தால் அட… சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள்… ‘மூடர் கூடம்’ என பேர் வைத்து விட்டு அதற்கு கீழே ‘பூஃல்ஸ் கேதரிங்’ என அடைமொழி போட்டிருக்கிறார்கள்.


படமும் முட்டாள்களைப் பற்றியது… என்ன ஒரு கொடுமை என்றால் படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாகவே பாவிக்கிறது..’நாளைய இயக்குனர்’ மூலம் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தவர் என்பதை மறக்காமல் படம் முழுக்க குறும்பட பாதிப்பு… ஒரு சினிமாவுக்கான இலக்கணம் எதுவும் மூடர்கூடத்தில் இல்லை.

sep 14 - cine moodar kottam
 


இந்த படத்தை தனது கம்பெனி சார்பில் ‘பசங்க’பாண்டியராஜ் வாங்கி வெளியிடுகிறார்… தனது முதல் படைப்பில் பேசப்பட்ட இயக்குனர் முதல் படைப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் என பல அடைமொழிகளை சுமக்கிற பாண்டியராஜ் ‘மூடர்கூடம்’ படத்தை வெளியிடுவதன் மூலம் அவரும் சாதாரண சினிமா வியாபாரிதான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்…


கதை என பார்த்தால் பிழைப்பு தேடி சென்னை வரும் ஒரு இளைஞர்… விபத்தில் தங்கையை காப்பாற்ற மறுக்கும் டாக்டர் மீது ஆசீட் வீசி ஜெயிலுக்கு போய் திரும்பும் ஒரு இளைஞர்… வீட்டிலும், படிக்கிற இடத்திலும் முட்டாள் ஒன்றுக்கும் உதவாதவன் என சொல்வதால் வீட்டை விட்டு ஓடிவரும் ஒரு இளைஞனும்… சூழ்நிலையால் அனாதையான ஒரு இளைஞர் என நால்வரும் ஒரு சூழலில் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள்…


அங்கிருந்து வெளியே வரும்போது ஏற்படும் நட்பு எங்கே கொண்டுபோய் விடுகிறது என்பதுதான் கதை.


பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் இளைஞரின் மாமா வீட்டில் கொள்ளையடிக்க இந்த நால்வர் அணி திட்டமிடுகிறது… அதே மாமா வீட்டில் ஒரு சிடியை தேடி ஒரு திருடன் உள்ளே புகுந்து கொள்கிறான்… இது தெரியாமல் நால்வர் அணி வீட்டுக்குள் புகுந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிறை பிடித்து ஒரு அறைக்குள் அடைக்கிறது…

அங்கே நடக்கும் கலாட்டாக்கள்தான் மொத்த படமும்…

நால்வர் அணிக்கு தனித்தனியாக ஒரு பாட்டும்… ஒரு பிளாஷ்பேக் கதையும் வைத்திருக்கிறார் இயக்குனர் நவீன்… தமிழ் சினிமாவின் சாபக்கேடு படத்தில் நடிக்கிற நாய்க்கு கூட ஒரு பிளாஷ்பேக் கதை சொல்கிறார் இந்த இயக்குனர்… (இது புது டிரண்டு என இதைப்போல பலர் கிளம்புவார்கள் பாருங்கள்)


உச்சபட்ச கொடுமை என்றால் படத்தில் இடம் பெரும் ஒரு பொம்மைக்கு கூட ஒரு பிளாஷ்பேக் வைத்தது இயக்குனரின் ‘டச்’…


ஹீரோயின் ஓவியாவுக்கு பாடல் காட்சியைத்தவிர படம் முழுக்க ஒரே ஒரு கையில்லாத பனியன்… பேன்ட்…தான் காஸ்டியூம்… அதிக பட்சம் ஒரு குளியல் சீனில் பெரிய டர்க்கி டவல் கட்டியிருக்கிறார் ஓவியா… இதை தவிர அவருக்கு பெருசாக எதுவும் சிரமபடவில்லை… அவரும் நடிப்பதற்கு பெருசாக சிரமபடவில்லை…


பரட்டை தலையுடன் சென்ட்ராயன் அலம்பல்கள் ரசனை… இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிற நவீன் படம் முழுக்க ரொம்ப பேசுகிறார்…


பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை… நடராஜ் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பல இடங்களில் பலம் சேர்க்கிறது…


படத்தை பார்த்தவர்களுக்கு இப்படியும் போட்டிகள் நடத்தலாம்…


1.படத்தில் மொத்தம் எத்தனை பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன?

2.படத்தில் எத்தனை முறை முட்டாள் என சொல்கிறார்கள்?

3.படத்தில் ஹீரோயின் ஓவியா எத்தனை காஸ்டியூம் பயன்படுத்துகிறார்..?

4.நாய் பாடலில் எத்தனை நாய் குட்டிகள் இருந்தன..?

இப்படி பல கேள்விகளை தயாரித்து பரிசுபோட்டிகள் கூட நடத்தினாலும் ஆச்சர்யமில்லை…

மொத்தத்தில் ‘மூடர்கூடம்’ படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாக்கி தன்னிலை மறக்கச் செய்யும்… தமிழ் சினிமாவின் தரத்தை மறந்து பார்த்தால் இதுபோன்ற படங்களையும் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதுதான் வேதனையான உண்மை..!

மோடி கடந்து வந்த பாதை...






உள்கட்சி பூசல், கடும் நெருக்கடிக்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு பாஜக கட்சிக்கு பிரவேசித்த மோடி, குஜராத் மாநில பாஜக ஒருங்கிணைப்புச் செயலர், பாஜக நிர்வாகி, பொதுச் செயலர் உள்ளிட்ட பதவி வகித்து தற்போது பிரதமர் வேட்பாளர் வரை உயர்ந்துள்ளார்.


1990 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையை நரேந்திர மோடி முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.


முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானியின் ஆதரவுடன் மோடியை முதல்வர் வேட்பாளராக 2001 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பு குஜராத் முதல்வராக கேஷூபாய் பட்டேல் பதவி விகித்தார்.


2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் கரசேவர்கள் 59 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டார் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் நரேந்திர மோடி குற்றம்சாட்டப்பட்ட காரணத்தால் அவர் சர்ச்சையில் சிக்கினார். இந்த சம்பவத்துக்கு நரேந்தர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கருத்து தெரிவித்தார்.


ஆனாலும், அத்வானியும், மறைந்த முன்னாள் அமைச்சர் பிரமோத் மஹாஜன் ஆகியோரின் ஆதரவால் நரேந்திர மோடி முதல்வர் பதவியில் நீடித்தார்.


அதன் பின்னர் சொராபுதின் ஷேக் என்கவுன்டர் சம்பவத்திலும் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது போன்ற காரணங்களால் நரேந்திர மோடி நாட்டை இரு துருவங்களாக்கும் தலைவர் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், மூன்று முறை குஜராத் முதல்வராக மக்களால் மோடி தேர்வு செய்யப்பட்டதால் கட்சியில் அவருக்கு ஆதரவு பெருகியது. 


கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்தார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலையிட்டு சமாதானப்படுத்திய பின்பு தனது ராஜிநாமாவை வாபஸ் பெற்றார்.


தேர்தல் பொறுப்பாளர் பதவி மோடிக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் பிரிந்து சென்றது. இது போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 63 வது பிறந்த நாளை நரேந்திர மோடி கொண்டாட உள்ளார்.

15-ல் அக்னி ஏவுகணை சோதனை!



கண்டம் விட்டு கண்டம் பாயும் "அக்னி-5' ஏவுகணை, இம்மாதம் 15-ம் தேதி ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் கூறியது:


2012 ஏப்ரல் 19-ம் தேதி அக்னி-5 ஏவுகணை முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது வெற்றிகரமாக அமைந்தது. 


அதைத் தொடர்ந்து, 5000 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த இரண்டாவது ஏவுகணை, 1000 கிலோ அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்தது. 


இந்த ஏவுகணை, 15-ம் தேதி வீலர் தீவில் இருந்து 2-ம் கட்டமாக சோதனை செய்யப்பட உள்ளது. 


வானிலை சீராக இருக்கும்பட்சத்தில் 15-ம் தேதி ஏவுகணை சோதிக்கப்பட்டுவிடும். 


முதல்கட்ட சோதனையில் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. 2-வது கட்ட ஏவுகணை சோதனையும் வெற்றி பெறும் என்றனர்.

அழகை தரும் இயற்கை பொடிகள்!

A natural beauty powders

அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை  வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர்  பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி  கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன  பொருட்களை.  எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்

கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்
உலர்ந்த மகிழம் பூ-200கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்
கோரைக்கிழங்கு பொடி-100கிராம்
உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்


இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சுத்தமான பன்னீர் சேர்த்து அடித்து சிறிய உருண்டைகளாக சேகரித்து நிழலில் உலர்த்தி  வைத்துக்கொள்ளவும். தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பால் கலந்து முகத்தில் தடவி அரைமணிநேரம் ஊறிய பின் குளிர்ந்த  தண்ணீரால் முகத்தை கழுவலாம். கழுவிய பின் சோப்பு எதுவும் போடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் முகத்திற்கு மென்மையும் பளபளப்பும்  கூடும். 

இன்றைய காலத்தில் அழகுக்காக மக்களை கவர்ந்திருக்கும் பல விதமான சோப்புகள், பவுடர்கள் வாசனை திரவியங்கள் போன்றவற்றை  பயன்படுத்துவதால் முகம், கை, கால்களில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிப்படையும்.. மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் போதிய அளவு  சத்துகள் இல்லாததாலும் தேவையான அளவு தண்ணீர் பருகாததாலும் மிகசிறிய வயதில் முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. பல வித சோப்புகளை  பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலே இயற்கை குளியல் பொடிகளை தயார் செய்து பயன்படுத்தினால் பாதுகாப்பும் அழகும் நம் வசமே இருக்கும்.  

சோம்பு-100கிராம்
கஸ்தூரி மஞ்சள்-100கிராம்
வெட்டி வேர்-200கிராம்
அகில் கட்டை-200கிராம்
சந்தனத்தூள்-300கிராம்
கார்போக அரிசி-200கிராம்
தும்மராஷ்டம்-200கிராம்
விலாமிச்சை-200கிராம்
கோரைக்கிழங்கு-200கிராம்
கோஷ்டம்-200கிராம்
ஏலரிசி-200கிராம்
பாசிபயறு-500கிராம்


இவை அனைத்தையும் தனி தனியாக காயவைத்து அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்து தினமும் குளிக்கும் போது உங்களுக்கு தேவையான  அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து குழைத்து உடல் முழுவதும் பூசி 15 நிமிடத்திற்கு பின் குளித்தால் உடல்  தூற்நாற்றம் நீங்கி உடல் நறுமணம் வீசும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தேமல், படர்தாமரை,சொறி, சிரங்கு, கரும்புள்ளி, முதலியவை  மறையும். இதை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இதுவரை விலங்கினங்கள் மீது 3,20,000 வைரஸ்கள் கண்டறியப்பட்டது!



விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று சுறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடிய வௌவால் இனத்தை அமெரிக்க மற்றும் வங்கதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மற்ற விலங்கினங்களிலும் 3,25,000 வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் கண்டுக்கொண்டு சரி செய்தால் எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய ரூ-.600 கோடி டாலர்கள் செலவாகும் என்று ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது. ஆனால் ஒரு தொற்றுநோய் மனிதர்களிடம் பரவிவிட்டால் அதனைக் கட்டுப்படுத்த இதனைவிட பல மடங்கு அதிகமான தொகை செலவாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பிரெடிக்ட் என்ற அமெரிக்க ஆய்வுத் திட்டம் நடத்திய இந்த ஆராய்ச்சியில், உலகில் மனிதர்களும் விலங்குகளும் சேர்ந்து வாழும் இடங்களில் இருந்து 240 புதிய வகை கிருமிகளை இதுவரை கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உன்னோடு ஒருநாள் - திரை விமர்சனம்!



தனியார் எப்.எம். ஒன்றில் அர்ஜுனும், ஜிப்ரானும் நண்பர்களாக பணிபுரிகின்றனர். அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் நாயகி நீலம். ஜிப்ரான் பெண்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இருப்பினும் நாயகி மீது தனி பிரியம் கொள்கிறார். அதேவேளையில், அர்ஜுனுடனும், ஜிப்ரானுடனும் நாயகி நெருங்கி பழகுகிறார்.

ஜிப்ரான் ஒரு கட்டத்தில் நாயகியிடம் தன் காதலை சொல்ல, அவள் மறுக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். ஒருநாள் ஜிப்ரான் எதார்த்தமாக ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை தவறாக புரிந்துகொண்ட நாயகி, அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன், நாயகியிடம் தன் காதலை கூறுகிறான். காதலில் தோல்வியடைந்த நாயகிக்கு, அர்ஜுனின் ஆறுதல் வார்த்தைகள் பிடித்துப் போய்விட, அவனை காதலித்து, திருமணமும் செய்து கொள்கிறாள்.

இதனால் மனவேதனையடைந்த ஜிப்ரான் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விடுகிறான். நீலம் மீதான காதலை மறக்கமுடியாத ஜிப்ரான் மறுபடியும் சொந்த ஊருக்கு திரும்புகிறான். நீலமை சந்தித்து தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். இதனை புரிந்துகொண்ட நாயகி அவனிடம் நெருக்கம் காட்டுகிறாள். தான் திருமணமானவள் என்று அறிந்திருந்தும், அவனுடன் கள்ள உறவிலும் ஈடுபடுகிறாள்.

இது ஒருநாள் அர்ஜுனுக்கு தெரிந்துவிடுகிறது. இதன்பிறகு அர்ஜூன் என்ன முடிவெடுத்தான்? ஜிப்ரான்-நீலம் ஆகியோருக்கு என்ன முடிவு கிடைத்தது? என்பதை சஸ்பென்ஸ்-திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகர்களாக அர்ஜுன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அர்ஜுனின் கண்கள்தான் அவருக்கு பிளஸ். இவருக்கு நண்பனாக வரும் ஜிப்ரான் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்துள்ள நீலம் மும்பை மாடல் அழகி. தமிழ், தெலுங்கில் சில படங்களில் தலைகாட்டியுள்ளார். இந்த படத்தில் இவர் அழகாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பும் நேர்த்தியாக உள்ளது.

இயக்குனர் துரை காத்திகேயன், ரொமாண்டிக், சஸ்பென்ஸ், திரில்லர் படமாக எடுத்துள்ளார். படத்தில் அடுத்து என்ன  நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் விபத்து ஒன்றில் இவர் இறந்துவிட்டாராம். நல்ல இயக்குனரை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது என்றே சொல்லலாம்.

அறிமுக இசையமைப்பாளர் சிவப்பிரகாசம் இசையில் பாடல்கள் கேட்கலாம் என்ற ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜயராஜ் ஒளிப்பதிவில் பாடல்களும், காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘உன்னோடு ஒருநாள்’ ஜாலியான பயணம்.

முதல் உதவி – ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை முறைகள்!


பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் ஆலோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.


விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத் தனிப்பட எந்தக் கருவிகளும் தேவையில்லை. தேவையானதெல்லாம் நிதானமும் சமயோசித புத்தியும்தான். ஆபத்தின் பொழுது பீதியடையாமல் இருப்பது மிக முக்கியம். அது கடினம்தான் என்றாலும், பயமும் பதட்டமும் நம்மைச் செயல்பட விடாமல் தடுத்துவிடும். ‘ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்ட பின் அதில் தப்பித்தவர்களுக்கும் தப்பிக்காமல் இறந்தவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில் தப்பிப்பவர்கள் தமது பயத்தை வெற்றிகொண்டு, நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து இறுதிவரை போராடுவதுதான்’ என்கிறார் முதலுதவிகள் குறித்து வகுப்புகள் நடத்தும் ஒரு பிரபல நிபுணர்.

Medical assistance concept

அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி, கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். அவை – ஒரு பட்டை ஆஸ்பிரின் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்திரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்திரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை. எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம். பின் அவசரத்தின்பொழுது இதற்கு சாவியைத் தேடி அலையவேண்டி வந்துவிடும். அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.


நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்:

எந்த அவசர நிலையிலும் பதட்டமின்றி இருப்பது முக்கியம். முதலுதவி தேவைப்படுபவருக்கு காற்று கிடைக்கவும், அவர் எளிதில் மூச்சு விடவும் ஏற்பாடு செய்தல் வேண்டும். கழுத்திலோ, முதுகுப்புறமோ அடிபட்டிருப்பின் கூடியமட்டும் அவரைத் தூக்கி இடம் மாற்றுவதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசி அவரைத் திடப்படுத்தவேண்டும். பாதிக்கப் பட்டவர் மயக்க நிலையில் இருக்கும்பொழுது வாய்மூலம் எதுவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.


மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.

மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும்.


இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.

அந்நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?

குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.


பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.
பாதிக்கப்பெற்றவருடன் உரையாடுவது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.
மயக்கம் ஏற்படுதல


அறிகுறிகள்

மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
 

2. சோர்வு
 

3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
 

4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.

முதலுதவி

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது


1. முன்புறமாக சாய வேண்டும்
2. தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.



பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது


1. பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
 

2. இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
 

3. குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.


வலிப்பு

வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது “எபிலப்சி” என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.


அறிகுறிகள்

1. உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
 

2. நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
 


3. முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
 

4. சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.


முதலுதவி


1. பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
 

2. நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
 

3. எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
 

4. மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
 

5. மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
 

6. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.

முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

வெப்ப நோய்கள்

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு

1. வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
 

2. முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
 

3. உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்ந்திருக்கச் செய்யவும்
 

4. உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 

5. எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
 

6. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

உயிர் காக்கும் முதலுதவி

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration – நினைவிழந்தவர் வாயில் முதலுதவியாளர் வாயை வைத்து ஊதும், மற்றும் Chest compressions – நெஞ்சை அமத்தி மூச்செடுக்கச் செய்யும் CPR-Cardio Pulmonary Resuscitation – செயற்கச் சுவாச முதலுதவிச் சிகிச்சை மிக மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது

2. உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது

3. விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது

4. தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது

5. அதிர்ச்சியின் போது ( in a state of shock)

6. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)

இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் ) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல் உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்

சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion),
மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்

உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.
சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது;
( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)
ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.

இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.

CPR என்பது ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.
மூச்சுக்குழல் பாதையை சீர்செய்தல்:நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும்.

இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாக்கு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)

இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊதி உள்செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக-Circulation.

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதன்னிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.


மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.

நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது:

 விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.

1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.

இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
 

2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 

3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
 

4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
 

2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி

பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

தீக்காயங்களுக்கான முதலுதவி

1. ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
 

2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
 

3. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
 

4. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
 

5. குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்

மின்சாரபாதிப்புக்கான முதலுதவி

1. ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
 

2. குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

sep 14 - health first aid various

 


மூச்சுத்திணறலுக்கான முதலுதவி

பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.
அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,

பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு

தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் வைத்தியரிடம் எடுத்துச் செல்லவும்.


பெரிய குழந்தைகளுக்கு

உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.

தண்ணீரில் முழ்கினால்…

ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும். அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்: கமல் பேச்சு

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்: கமல் பேச்சு

நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். அதுபோல், நான் வரமுடியாத நிகழ்ச்சிகளுக்கு என் சார்பாக அவர் கலந்து கொள்வார். இப்படித்தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’ என்ற பாடல் சத்யா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பு இடைவேளையின்போது ஸ்டுடியோவின் வெளியே வந்து ரஜினியிடம், நாம் ஒரு சம்பளத்தை இருவரும் பங்கிட்டு வாங்கிக் கொள்கிறோம். நீ ஒரு திரை நட்சத்திரம், நான் ஒரு நடிகன். நாம் சந்திக்கும்போது சந்திக்கலாம். நாம் இருவரும் தனித்தனியாக நடித்தால் நன்றாக இருக்கும். இதை அனுபவிக்கணும் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

தனித்தனியாக நடித்ததால் இன்று அதிக சம்பளம் வாங்குகிறோம். ஒன்றாக நடித்திருந்தால் ஆட்டோ ரிக்ஷாவில்தான் வந்துகொண்டிருப்போம். சினிமாவில் இந்த வியூகத்தை புரிந்து கொண்டு செயல்பட்ட இரண்டு சகோதரர்களின் கதைதான் என்னுடைய கதையும், ரஜினியின் கதையும். இந்த வெற்றிக்கு பலபேர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அதில் முதலாவது நபர் பாலச்சந்தர் என்று சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாலச்சந்தரை பார்த்து இயக்குனராக வேண்டும் என்று வந்தவன்தான் நான். இன்று என்னை இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று சொல்கிறார்கள். அதற்கு வித்திட்டவர், பாலபாடம் போல் கற்றுக்கொண்டது எல்லாம் பாலச்சந்தரிடம்தான். இந்த அதிர்ஷ்டம் இங்குள்ள பல இயக்குனர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த தற்பெருமை.

அவரிடம் நான் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னால் என்னைவிட மடையன் யாருமில்லை. கொஞ்சம் கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் நான் சோம்பேறி என்று அர்த்தம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று என்னிடம் இருக்கும் பல விஷயங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான்.

அவர் ஒரு அபாரமான நடிகர். நல்லவேளை அவர் நடிக்க வரவில்லை. தற்போது அந்த திறமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நேரமும் வந்துவிட்டதாக எண்ணுகிறேன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். அவருடைய சம்மதத்துக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top