
கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது!
வரும் 24.11.2015-க்கு பிறகு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது என்பதால்அவற்றை புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு உலக நாடுகள் விசாக்கள்...