.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 8 January 2014

90 அடி உயரத்தில் அஜித்!

அஜித் நடித்துள்ள வீரம் படத்தின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதால் உற்சாகத்தில் உள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வீரம் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.இதனால் தமிழகம் முழுக்க அஜித்தின் கட்-அவுட் வைத்து அசத்த நினைத்துள்ள ’தல’யின் ரசிகர்கள் ஆங்காங்கே பிரம்மாண்ட ‘கட்-அவுட்’களை வைத்து வருகிறார்கள்.இதில் ஹைலைட்டாக நெல்லையில் உள்ள பாம்பே திரையரங்கு முன்பு வெள்ளை வேட்டி சட்டையில் அஜித்தின் கிராமத்து கெட்-அப் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.இந்த கட்-அவுட் 90 அடி உயரம் கொண்டது,இந்த பிரம்மாண்ட கட்-அவுட் விடயம் தான் இப்போது டுவிட்டரில் அஜித் ரசிகர்களின் அசத்தல் டுவீட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறத...

இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த 'ஜில்லா'...!

 நேற்றிரவு 'ஜில்லா' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்ம் 'ஜில்லா' படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று டிரெய்லரை வெளியிடாமல், சிறு சிறு டீஸர்களாக வெளியிடப்பட்டன.படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டு YOUTUBE தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட வீடியோவாக முதல் இடத்தை பிடித்தது மட்டுமன்றி 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். தொடர்ச்சியாக 2வது, 3வது டீஸரும் வெளியிடப்பட்டன.இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 7) YOUTUBE தளத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவருமே ஆர்வமாக...

அமெரிக்கன் சொன்னான்..

அமெரிக்கன் சொன்னான்..எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!ரஷ்யன் சொன்னான்..எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?இந்தியன் சொன்னான்..பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க....

கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்...!

கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது.‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும்.இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் த்டையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை...

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்விலங்கிடலாமா?சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய...

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும்,...

இணைந்தனர் சிம்பு - நயன்தாரா.....

பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்க ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள்வெளியாகியுள்ளன.சிம்புவுடனான காதல் முறிவிற்குப் பின்னர் வீண் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்துவந்தனர்.சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று ஏற்கெனவேஅறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். பாண்டிராஜ் இயக்கிவரும் இப்புதிய படத்திற்கு நயன்தாராவை விடவும் பொருத்தமான ஹீரோயின்கிடைக்கமாட்டார் என்பதால் படக்குழு நயன்தாராவை அணுகியது. நயன்தாராவும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. காதல்...

தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?

நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.இதையடுத்து...

‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!

சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.அத்திட்டத்தின்படி, சென்னை,...

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா?

அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம். ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு...

ஜில்லா பஞ்ச்...!

இளைய தளபதி விஜய் படங்களில் பஞ்ச் வசனங்களுக்கு என்றுமே குறைவிருக்காது. அவரது படங்களில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுபவை சண்டைக்காட்சிகள், நடனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளாகும்.சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழில் அதிக பஞ்ச் வசனங்கள் இளைய தளபதியின் படங்களில் இருக்கும். விஜய் ரசிகர்களும் இந்தப் பஞ்ச்டயலாக்குகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.“ ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சவே நானே கேட்க மாட்டேன்” என்ற பஞ்ச் வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதைப் போலவே ஜில்லா படத்திலும் ஒரு பஞ்ச் வசனம் வெளியாகவுள்ளது.ஜில்லா படத்தில் “ ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல இந்த ஜில்லாவுலயே இருக்க மாட்டான்” என்ற பஞ்ச் வசனம் இப்படத்தில்இடம்பெறுகிறது....

லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது..?

இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள்.காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால திட்டம். இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட திட்டம் நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும்,  மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top