.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 3 January 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

   மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி,...

நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.....!?

திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம்கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை கேட்டார்.அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி.அது… வந்து…அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா பேசறது அம்மாவுக்கும் புரியலையாம்.அதான் பாப்பா..அவங்க பிரியறாங்க… என சமாளித்தார்.அங்கிள் ரெண்டு...

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்... காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது. மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை...

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன. நம்மில் பலரும், இந்த...

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும்,...

இந்தியாவுக்கு பெரிய சவாலான‌ – ஜி எஸ் எல் வி 5 – சக்ஸஸ் ஆகுமா?

இந்தியன் ஸ்பேஸ் ரிஸர்ச் ஆர்கனைசேஷனுக்கு ஒரு பெரிய சவால் நாளை மறு நாள் காத்து கொண்டு இருக்கிறது அது என்ன? ஏற்கனவே மூன்று முறை தோற்று போன ஜி எஸ் எல் வி ராக்கெட் இம்முறையாவது சக்ஸஸ் ஆக விண்ணில் பாய வேண்டும் என்பதே? இந்தியா தான் அடிக்கடி ராக்கெட் அனுப்புதே அப்புறம் என்ன கதைன்னு கேக்குறவங்களுக்கு – அது பி எஸ் எல் வி ரக ராக்கெட்கள் அதில் இந்தியா சூப்பர் பெர்ஃபார்மென்ஸ்.ஜி எஸ் எல் வி என்றால் – ஜியோசின்கரனஸ் சாட்டிலைட் லான்ச் வெகிக்கிள் (geosynchronous satellite launch vehicle) என்னும் இந்த வகை ராக்கெட்கள் மூலம் சாட்டிலைட்டை நினைத்த இடத்தில் நிலை நிறுத்த முடியும். இது புவியீர்ப்பு சக்த்திக்கு அப்பார்பட்ட இடமாக இருக்கும் இடமாகும். இது வரை இந்தியா...

தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!

இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட்...

சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்..!!

சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பவுள்ளார்.ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.திருமணம் மூலம் பிரச்னையை சந்தித்த பிரசாந்த் அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு இடைவெளி விட்டு மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் சரியாக போகாததால் எந்த இயக்குனரும் அவரை கண்டுகொள்ளவில்லை. சிறிது காலம் பொறுத்து பார்த்த பிரசாந்த்,...

அம்மாவாக அமலாபால்....?

இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் அமலாபால்.தமிழ் சினிமாவில்தான் கதாநாயகிகள் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தயங்குகிறார்கள்.ஆனால், மலையாள சினிமாவில் அப்படியல்ல. எத்தனை வயது குழந்தைகளுக்கும் தாயாக நடிக்கிறார்கள்.அந்த வகையில், தமிழில் யூத்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையாளத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.அப்படமும் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறதாம். அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக்கிறாராம்.மேலும் இதற்கு முன்பு...

‘ஜில்லா’வுக்கு 3 இடத்தில் கத்தரி..?

விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது.படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ள இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போடப்பட்டுள்ளது.மேலும் மதுரை பக்கத்து கெட்ட வார்த்தை வரும் ஒரு காட்சிக்கும் கத்தரி போடப்பட்டுள்ளது.ஜில்லா தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கத...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top