.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 3 January 2014

தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!




இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட் ஆம்லெட், பிரெட் மசாலா என்று செய்து சாப்பிடுவதால் பெரிய ஆபத்தும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.


உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் பி.பி. உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வரும் என்பது எல்லோரக்கும் தெரிந்த விஷயம். வேறு எந்த தொந்தரவுக்காகவும், நீங்கள் டாக்டரிடம் போனால் முதலில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லித்தான் டாக்டர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.


தினசரி 0.5 மில்லி கிராம் அளவக்குத்தான் உடலில் உப்பு சேர்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம் சாப்பிடும் சிலைஸ் பிரெட்டில் 230 மில்லி கிராம் உப்பு உள்ளது. இவ்வளவு உப்புள்ள பிரெட்டை அடிக்கடி சாப்பிடும்போதுதான் உடலில் உப்பின் அளவு கூடுகிறது என்கிறார்கள். அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள்.


இந்த மையம் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து விரிவான கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அதில் பரிசோதனை செய்தவர்களில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின் அளவு மிக திகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு முக்கியக் காரணம் தினமும் சிற்றுண்டியாக பிரெட், பிரெட் ஆம்லெட் போன்றவற்றை அவர்கள் உண்டு வந்திருக்கிறார்கள்.


“பிரெட்டைத் தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே இதை தொடர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.


ஏன் பிரெட் கூடாது?



எப்போதாவது சாப்பிடுவதால் பிரெட்டால் தீமை இல்லை. மாறாக நன்மைதான். குழந்தைகளுக்கு பிரெட் ஆம்லெட் என்பது நல்ல ஊட்டச்சத்துதான். ஆனால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதற்காகவும், பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எப்படியோ எதையாவது சாப்பிட்டுக் கொண்டு போனால் போதும் என்றோ நினைத்து பிரெட் ஐட்டங்களை அடிக்கடி கொடுப்பதுதான் ஆபத்து.


குழந்தைகள் முதலே பிரெட் வகைகளாக சாப்பிட, அதில் உள்ள உப்பானது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். அது அப்படியே துளித்துளியாக சேர்ந்து பெரியவர்கள் ஆனதும், ரத்த அழுத்த நோய்க்கு இட்டுச் செல்லும்.


“எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் என்கு பி.பி என்கிறார் டாக்டர்’ என்று சொல்வதெல்லாம் இந்த ரகம்தான். ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணமும் இதுதான்.


தீர்வு என்ன?



1. பிரெட் வகைகளை உண்ணக் கூடாது என்று சொல்லவில்லை. தினந்தோறும் அல்லது அடிக்கடி சாப்பாடாக இதையே எடுத்துக் கொள்ளக் கூடாது.


2. வெறும் பிரெட் ஜாம், பிரெட் மசாலா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரெட் சாப்பிட்டவுடன் கூடவே இரண்டு துண்டு பழங்கள் சாப்பிட பழக்க வேண்டும்.


3. பிரெட் சுவையாக இருக்க முழு முதற்காரணம் அதில் உள்ள உப்பு சுவைதான். அதனால் சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உப்பு அதிகம் கலக்காத பிரெட் கேட்டு வாங்கி உண்ணலாம்.


4. பிரெட் ஆம்லெட் நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் தினந்தோறும் சாப்பிட்டால், பிரெட்டில் உள்ள உப்பும், ஆம்லெட்டில் உள்ள மஞ்சள் கருவும் சேர்ந்து கூடுதல் கொழுப்பை உருவாக்கும். ரத்தக்குழாய்கள் அடைபட இதைவிட காரணம் தேவையில்லை. வாரம் ஒருநாள் ஒரு பிரெட் ஆம்லெட் நல்லது.


5. பிரெட் உப்புமா செய்யும்போது, மேலும் கொஞ்சம் உப்பைச் சேர்ப்பது வழக்கம். அது எவ்வளவு கெடுதல் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.


6. நாகரிக மோகத்தில் சிலர் பிரெட், சிப்ஸ், பீசா என்று அடிக்கடி சாப்பிடுவது கவனத்திற்கு உரியது. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் தேவையான உப்பை உடல் எடுத்துக் கொண்டதுபோக, மீதமுள்ளவற்றில் ஒரு சிறிதாவது உடலில், ரத்தத்தில் கலக்க வாய்ப்பு உண்டு. அப்படி சேமித்து சேமித்து வைப்பதால்தான் பிற்காலத்தில் அது நோயாக உருவெடுக்கிறது.


7. அவசர காலம் என்றாலும், வேக வைத்த உணவுகள், காய்கறிகள் போன்வற்றை கொஞ்சம் சுவையாக தயாரித்து உண்ணப் பழகுங்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top