.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 8 November 2013

வடிவேலு - வாழ்க்கை வரலாறு!

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக்...

சுற்றினால் .........கவிதை!

புவி சுற்றினால்காலத்தின் ஓட்டம்!-சூரியன் சுற்றினால்பகலிரவு மாற்றம்!-காற்று சுற்றினால்சூறாவளித் தோற்றம்!-தலை சுற்றினால்மனிதருக்கு மயக்கம்!-பூக்களைச் சுற்றினால்மணத்தின் ஈர்ப்பு!-பேட்டையைச் சுற்றினால்பயங்கரப் பேர்வழி!-நாட்டைசு சுற்றினால்நாளைய தலைவன்!-எண்களைச் சுற்றினால்பேசலாம் தொலைபேசி!-வீணாகச் சுற்றினால்உயர்வேது நீ யோச...

சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு!

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது.இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் நடந்து வந்தாலும் இவை தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. சாமான்யர்களின் கைகளில் ஊடகத்தை இந்த வலைப்பின்னல் தளங்கள் கொண்டு வந்திருக்கின்றன. இவை எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்று வியப்புடனும் கவலையுடனும் விவாதிக்கப்பட்டு...

வாழ்வை மாற்றும் 10 வாக்கியங்கள்

அடுத்து வரும் வாக்கியங்கள் வாசிக்க மட்டுமல்ல. யோசிப்பதற்காகவும் கூட. அவற்றைப் புரிந்து கொண்டால் பார்வை விரியும். பார்வை விரிந்தால் பாதை தெரியும்.1.பணிவுபணிவு எப்போதும் தோற்றதில்லை; பயம் ஒருபோதும் வென்றதில்லை2.கல்விதோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்; வெற்றியின் போது அதை நினைவில் வைத்துக் கொள்3.படைப்புகாற்றால் நிரம்பிய வானத்திலும் கல்லாய் இறுகிய பாறையிலும் எதுவும் விளைவதில்லை4.படிப்புயோசிக்க வைக்காத புத்தகம் உபயோகமில்லாத காகிதம்5.தேடல்:பேணி வளர்க்க வேண்டிய உறவுகள் மூன்றுஉங்களுக்கும் மனதிற்குமான உறவு;உங்களுக்கும் உலகிற்குமான உறவு;உங்களுக்கும் கடவுளுக்குமான உறவு6..இலக்குநட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நிலவை ரசிக்கத் தவறிவிடுகிறார்கள்7.முயற்சிபனி பெய்து குடம் நிரம்பாது. கோஷங்கள் மட்டுமே லட்சியங்களை வென்றெடுக்காது8.சாதனைமைல் கற்கள் பயணிப்பதில்லை சாதனைகளைக் கடப்பதுவே சாதனை9. எதிர்காலம்எதிர்காலத்தை...

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?

நீங்கள் தொலைத்தொடர்பு  (BSNL / AIRTEL / AIRCEL and Etc) வாடிக்கையாளரா? உங்கள் செல்பேசிக்கு வரும் வேண்டாத குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் நிறுத்த வேண்டுமா? அப்படியெனில் இது உங்களுக்கான தகவல்தான். எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும். வேண்டாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் என்பது என்ன? நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள். நிறுத்துவதற்கான வழிமுறைகள்: உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. 1.முற்றிலுமாக...

காமன்வெல்த் மாநாடு மறுபடியும் அவமானம்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா  பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.  ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்.  இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. முன்னர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்கள்.  ஆனால், இத்தனைக்கும் பிறகும் இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அவமதிப்பதாகவும் ஆகும்.அது என்ன காமன்வெல்த்?இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின் பிரிட்டிஷ் அரசு...

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் கண்டுபிடிப்பு!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி, கோலின் இயாடி கூறியதாவது: சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம் தான் கண்ணீரை வரவழைக்கிறது. எனவே, கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம். இந்த புது வெங்காயம், கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும் என கோலின் மேலும் தெரிவித்தார். இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்பதை, அவர் குறிப்பிடவில்ல...

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன. நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி ரூபாயில் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சி தேவைதானா என்ற கேள்வி...

சீன வானில்மூன்று ஆதவன்கள்!!

    சீனாவின் வடக்குபகுதியில் உள்ள உள்மங்கோலியா சுயாட்சி பகுதி மக்கள் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வை காண்பதற்காக வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். வானில் ஒரே நேரத்தில் தெரிந்த மூன்று சூரியன்கள்தான் அவர்களது வியப்புக்கு காரணாமாகும்.  காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனும் அதன் இரட்டை உடன்பிறப்புகளான சிறிய சூரியன்களும் திடீரென்று முளைத்தன.  இவை மூன்றும் வானவில் போன்ற ஒளிவட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன. சீபெங் நகரில் தோன்றிய இந்த அற்புத நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த அற்புத விண்வெளி நிகழ்வை ஏராளமானவர்கள் தங்கள் புகைப்படக்கருவி அல்லது வீடியோ கருவிகளில் பதிவு செய்து கொண்டனர்....

பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது இளைஞர்களின் லேட்டஸ்ட் பேஷனாகவே மாறி விட்டது பஸ் புக்கை ஒரு நாள் அதை பயன்படுத்தாவிட்டாலும் அவர்கள் நிலை தடுமாறிதான் போய் விடுகிறார்கள் அந்த அளவுக்க மக்களை இந்த பேஸ்புக் தனக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில் பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (Facebook for every phone) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

உங்கள் நட்பை உரசிப் பார்க்க…

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் – ஆங்கிலப் பழமொழி.அன்பாக இருஅனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். ‘உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும்...

காணாமற்போன அடையாளங்கள்!

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை கிராமங்களின் அடையாளங்கள் மாறிவருவதைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். கிராமங்களின் தனித்துவமான அடையாளங்களாக விளங்கிய இடங்கள், பொருட்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் இன்று மாறியும், காணாமலும் போய்விட்டன. இதனால் பலவகையான அடையாளங்களைக் கிராமங்கள் இழந்தாலும் சில பழக்கவழக்கங்களால் தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. கிராமங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த பொருட்கள், இடங்கள்கூட கால ஓட்டத்தில் காணாமற்போய்விட்டன. ஒருகாலத்தில் புழக்கத்தில் மக்களோடு ஒன்றியிருந்த பொருட்கள்கூட இன்று நினைவுப் பொருட்களாக மாறிவிட்டன. வீட்டின் முன்பு கால்நடைகள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், வீட்டுத் திண்ணையில் முதியவர்கள், தாவணி போட்ட கன்னிப் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயும் குடும்பப் பெண்கள் என்றிருந்த கிராமம்தான் இன்று எப்படியெல்லாமோ...

ஒவ்வொரு நாட்டினருடன் எப்படிப் பேசுவது?

இங்கிலாந்து- நாட்டினருடன் பேசும்போது நெருக்கமாக நிற்காதீர்கள். எவரையும் திருவாளர், திருமதி, டாக்டர் என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும். முறையாக உடை அணிய வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள். குடும்ப விஷயத்திலிருந்து பேச்சைத் தொடங்காதீர்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை.சீன- நாட்டினருடன் எடுத்த எடுப்பில் வியாபார சமாச்சாரங்களைப் பேச வேண்டாம். உடலோடு ஒட்டி நிற்காதீர்கள். தொட்டுப் பேசாதீர்கள். தேநீரை ரசித்துக் குடியுங்கள். வியாபாரப் பேச்சு வார்த்தைகளின்போது அடிக்கடி தேநீர் தரப்படும். மரபு வழியிலான உடையை அணியுங்கள். வெள்ளை உடை அணிந்து பொது விழாக்களுக்குச் செல்லாதீர்கள். அங்கே வெள்ளை துக்கத்திற்கு அடையாளம்.அரபு- நாட்டினருடன் உரையாடும்பொழுது உங்களுக்கு மிக அருகில் நெருக்கமாக நிற்பார்கள். அது அவர்கள் பழக்கம். அதைத் தவிர்க்க நீங்கள் பின்னே தள்ளி நிற்க முயற்சி செய்யாதீர்கள்....

சில பழைய வார்த்தைகளும், அதற்கான புதிய அர்த்தங்களும்!

பொதுவாக சொல் அகராதி எனப்படும் டிக்ஸ்னரியில், வார்த்தைகளும், அதற்கு ஏற்ற அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கும் அதுபோன்ற ஒரு அகராதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை கொடுத்துள்ளது.என்னவென்று பார்ப்போம்.சமரசம் – ஒவ்வொருவரும், தனக்குத்தான் மிகப்பெரிய கேக் துண்டு வந்ததாக எண்ணும் வகையில் ஒரு கேக்கை வெட்டும் கலை.கருத்தரங்கு – ஒருவருக்கு வந்துள்ள குழப்பத்தை, பலர் சேர்ந்து அதிகமாக்குவது.கருத்தருங்கு அறை – இங்கு அனைவருமே பேசுவார்கள், ஒருவரும் கேட்கமாட்டார்கள், சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அனைவருமே நிராகரிக்கும் இடம்.மருத்துவர் – எவர் ஒருவர் மாத்திரையால் உங்களது நோயைக் கொன்று, மருத்துவக் கட்டணத்தால் உங்களைக் கொல்பவரோ அவரே.புன்னகை – பல சொல்ல முடியாத வார்த்தைகளின் மறைமுக சமிக்ஞை.கண்ணீர் – ஆண்களின் சக்தியை வெல்லும் பெண்களின் சக்தி.மேலதிகாரி –...

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்!

கர்நாடகாவில் கத்திரிக்காய் மரத்தில் காய்க்கும் அதிசயம் நடக்கிறது.கத்திரிக்காய் செடிகள் 2 அடி முதல் 3 அடி வரை செடியாக வளர்ந்து காய்கள் காய்க்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கத்திரிக்காய் பறிக்கப்பட்டு பின்னர், செடிகளை வேரோடு அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால், வடகர்நாடகா மாவட்டம், சிரசி தாலுகாவில் வழக்கத்துக்கு மாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முண்டகூடா கிராமத்தை சேர்ந்தவர் சசி. இவர் தனது நண்பரின் நிலத்தில் விதைத்திருந்த கத்திரிக்காய் செடிகளை 8 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தனது வீட்டு தோட்டத்தில் பயிரிட்டார். வழக்கமான உயரம் வளர்ந்த இந்த செடிகளில் எப்போதும் போல் கத்திரிக்காய் காய்த்தது. பின்னர், இந்த செடிகள் மரம் போல் வளர்ந்தன....

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும்.பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.முடி உதிர்தலை தடுத்தல்செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.அது முடியின் நிறத்தை கருமையாக...

காப்பி அருந்துவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

நோய் நொடிகளற்ற மனித வாழ்வை நோக்கி செல்ல இன்று பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.இதன் ஒரு அங்கமாக உடலுக்கு உற்சாகத்தை வழங்கும் காப்பி குடிப்பதற்கு சிறந்த நேரம் காலை 9.30 இருந்து காலை 11.30 வரையான காலப்பகுதி என நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நேரத்திலேயே காப்பியில் காணப்படும் காபைன் (caffeine) எனும் பதார்த்தம் உடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் கோட்டிசோல் (cortisol) ஓமோனுடன் சிறந்த முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.கோட்டிசோல் ஆனது தூக்கத்திலிருந்து எழும்பும்போது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது எனவும், 8 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் மேலும் மந்தமான நிலையை அடைகின்றது எனவும் ஸ்டீபன் மில்லர் எனும் நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார...

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும்.அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்கு பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாஸ்தாஇத்தாலியன் உணவுப் பொருட்களில் ஒன்றான பாஸ்தாவை பிரசவத்திற்கு பின் சாப்பிட பெண்கள் பயப்படுவார்கள்.ஆனால் அப்படி பயப்படத் தேவையில்லை. இதில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவியாக இருக்கும். இருப்பினும் அளவாக சாப்பிடுவதே நல்லது.சீஸ்பிரசவத்திற்கு பின்...

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்!

கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அவசரமான ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு சரி செய்தது. இருப்பினும் அடுத்த ஹேக்கர் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். எனவே தான், எப்போதும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை உடனுடக்குடன் இன்ஸ்டால் செய்வதுடன், தொடர்ந்து இன்னல்களை வரவழைக்கும் வழிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தாக்கும் வழிகளாக எவை இருந்தன என்பதனையும், எதிர்காலத்தில் எப்படி இவற்றை எதிர்கொள்ளலாம் என்பதனையும்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top