.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 11 December 2013

வீட்டுக் குறிப்புகள்!

வீட்டுக் குறிப்புகள்: 1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து...

தமிழின் சிறப்பை பாருங்கள்!

 வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானைஎன்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள் :இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு...௧. கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர் ௨. போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம் ௩. துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம் ௪. களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம் ௫....

வளர்பிறையில் ஏன் விழாக்கள் கொண்டாடுகின்றனர் ஆராய்வோமா?

பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திருவிழா போன்ற பல விழாக்களை கொண்டாடினார்கள். அவ்விழாக்களை கொண்டாடுவதற்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை. மக்கள் ஒன்று கூட தொலை தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது, வாகன வசதிகள் பெருமளவில்லை. மாட்டு வண்டிகள் தான் இருந்திருக்கிறது, அதில் எப்படி தொலைதூரம் வேக பயணம் செய்ய முடியும்? ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அப்படியாயின் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதல்லவா. ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து மின்சாரம் வந்தது? ஒளிபரப்பி எல்லாம் எங்கிருந்து வந்தது? எல்லாம் தீப்பந்தம் தான் தீப்பந்தம் மூலம் எப்படி பெரிய விழாக்களை கொண்டாடமுடியும்? அதன் ஒளி போதுமானதாக இருக்குமா, இரவு பகல் அதிக தூரம்...

செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!

 செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது. இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற பல தனிமங்கள் இந்த ஏரியில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.• ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.• இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.• உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.• உங்கள்...

மைல்கல் கலரிலும் விஷயமிருக்கு, தெரிந்து கொள்வோம்..

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.  இதோ தெரிஞ்சுக்கோங்க... * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை* நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை* பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சால...

உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…

உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும் அவளுடைய வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் உருவாக்க கொடுக்க வேண்டும். மகளை வளர்தெடுப்பது பொதுவாகவே கடினமான விஷயமாக இருந்தாலும், அது ஒரு உன்னதமான வேலையாகும். பெண் குழந்தையை வளர்த்தெடுப்பதிலும்,...

மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!

 காக்கைச் சிறகினிலே நந்தலாலா  நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ நெருங்கின பொருள் கைபட வேண்டும் மனதில் உறுதி வேண்டும் வட்ட கரிய விழியில் கண்ணம்மா வானக் கருனைக் கொள் இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம்...

கோயிலில் ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி!

புதுமுகங்கள் மகி, சரவணன், திவ்யா, ஜான்விகா நடிக்கும் படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா கதை எழுதி தயாரிக்கிறார் ஜெயபால். தேவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது: பக்தி படம் என்பது இப்போது அரிதாகிவிட்டது. மேற்கு முகப்பேர் கனக துர்கை அம்மன் கோயிலில் நடந்த 2 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜாதகப்படி ஒரு பக்தர் விபத்தில் இறக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்தி செய்வதாக வேண்டிக் கொண்டார். அவர் விபத்தில் சிக்கியபோது கை எலும்பு மட்டும் முறிந்து உயிர் பிழைத்தார். மற்றொரு சம்பவத்தில் பெண்ணின் காதலனை பேய் ஒன்று அழிக்க முயல்கிறது. அதிலிருந்து காதலன் தப்புகிறானா என்பது கிளைமாக்ஸ்....

வாழ்க்கையில் வெற்றி!

புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவதுகுழந்தைகளின் பாசத்தைப் பெறுவதுநேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவதுநண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வதுஇயற்கையை ரசிப்பதுமற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவதுஓர் ஆரோக்யமான குழந்தைஒரு தோட்ட வெளியை உருவாக்கியதுசமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியதுஉங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வதுஇவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்க...

நான்காவது முறையாக தள்ளிப் போகிறது கோச்சடையான் ரிலீஸ்!

இந்த மாதம் வெளியாகவிருந்த கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள், மீண்டும் தள்ளிப் போகிறது. இதனால், படத்தின் வெளியீடும் தள்ளிப் போகிறது. ஏற்கனவே ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட கோச்சடையான் படத்தின் பாடல்கள், கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியாகலாம் என செய்தி வந்தது. இப்போது, மீண்டும் ஆடியோ ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது, ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாத நிலையில், அதுவும் சாத்தியமில்லை என ஆனது. இப்போது, ஆடியோவே ஜனவரி மாதம் தான் வெளியாகும் என்பதால், படத்தின் ரிலீஸும் தள்ளிப் போகிறது. இது ரசிகர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தின்...

மூக்குத்தி அணிவது ஏன்..?!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும்....

வாழ்க்கை எனும் அரிய பிரசாதம் ...

உன் சகோதரனின் கண்களில் இருக்கும் தூசியை பெரிது படுத்தும் நீ, உன் கண்களில் இருக்கும் பெரிய மரக்கட்டையை கவனிக்க ஏன் தவறுகிறாய்? என்று நம்மை  பார்த்து ஏசு கிறிஸ்து கேட்கிறார்.பிறரை மதிப்பிடு செய்யும் போது மற்றவரை  நேசிப்பதற்கும் அவர்களால் நேசிக்கபடுவதர்க்குமான தகுதியை நாம் இழக்கிறோம் என்கிறார் அன்னை திரேசா.பிறரை மதிப்பிடு செய்து குறை கண்டு கொண்டே இருக்கும் குணத்தால் நாம் இழப்பது, அரிதான மனிதா நேயத்தையும் அழகான உறவுகளையும் தான்.குறை காண்பதால் நம்மை அறியாமலேயே நாம் சுய பச்சாதாபத்தின் பிடியில் அகப்பட்டு விடுகின்றோம்.ஐயோ எனக்குதான் எவ்வளவு கஸ்ரம்! எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை!`, எல்லோரும் எவ்வளவு சுகமாக இருக்கிறார்கள்.நான் மட்டும் ஏன் இப்படி துன்பப்டுகிறேன் என்றெல்லாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து நம்மை பற்றி நாமே பெரிதாக குறை பட்டு கொள்வதே இதன் அடையாளம்.இளைஞர்களே! தட்டில் இருக்கும்...

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!

  கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.அந்த எண் 1800-425-247-247.தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில்...

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...* பிசிஜி - பிறப்பின் போது* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்* டிபிடி...

கவலை என்பது எதுவரை? உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.!

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.அகல உழுகிறதை விட ஆழ உழு.அகல் வட்டம் பகல் மழை.அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?அடக்கமே பெண்ணுக்கு அழகு.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.அடாது செய்தவன் படாது படுவான்.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.அந்தி மழை அழுதாலும் விடாது.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்...

வாரியாரின் வார்த்தை விருந்து!

கல்வியின் பயன் கற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயனும் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உணர்ந்து படிக்க வேண்டும் உண்பதன் நோக்கம் உண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால்தான் நற்குணங்கள் உருவாகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்பையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. தூய உணவை உண்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வளர்க்க வேண்டியவை நாம் நாளும் நாளும் உடம்பை வளர்க்கிறோம். தொழிலை வளர்க்கிறோம். வீடு நில புலன்களைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் நமது குணங்களை வளர்க்கிறோமா?...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top