.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 11 December 2013

உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…




உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.

இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும் அவளுடைய வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் உருவாக்க கொடுக்க வேண்டும். மகளை வளர்தெடுப்பது பொதுவாகவே கடினமான விஷயமாக இருந்தாலும், அது ஒரு உன்னதமான வேலையாகும். பெண் குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், அவளுடன் பழகுவதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வாழ்க்கை தங்களிடம் முன்வைக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அளித்து, பின்நாளில் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தவே குழந்தைகளின் சுய மதிப்பு உதவுகிறது. தங்களை சூழ்ந்துள்ளவர்கள் தங்களை மதிப்பவர்களாகவும், தங்களுடைய மதிப்பை உணர்ந்தவர்களகாவும் இருக்கும் இடங்களில் பெண்களை இருக்கச் செய்ய வேண்டும். குறைவான சுய மதிப்புடைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் தவறான பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும். குழந்தைகளை நல்ல வழியில் வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. ஒரு தயானவள் தன்னுடைய குழந்தையின் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்யக் கூடியவள் மற்றும் பெண்களை அவள் வளர்ப்பது ஒன்றும் குறைவான கவனம் கொண்டு செய்யும் விஷயமும் அல்ல. உங்கள் மகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. பாராட்டுங்கள்!


அவளுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்! அவள் அதற்கு தகுதியானவள் தான். அவள் சிறிய வேலையை செய்தால் கூட, நீங்கள் அவளை பாராட்டலாம். அவள் மிகச்சிறந்த பணியை செய்துள்ளதாக சொல்லுங்கள். அவளுக்கு மேலும் சில பணிகளை கொடுத்து, அவளால் அவற்றை செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அவளால் அவளுடைய வழிமுறையில் எந்த விஷயத்தையும் கையாள முடியும் என்று சொல்லுங்கள். பெண் குழந்தையை வளர்ப்பது சில நேரங்களில் அதிக தேவையுள்ளதாக இருக்கும், அதனால் உங்களுடைய அன்பை முழுமையாக அவளுக்கு கொடுங்கள்.

2. தேவை கல்வி


 நல்ல தரமான கல்வி இயற்கையாகவே சுய மதிப்பை அதிகரிக்கும் கருவியாகும். அவளுக்கு எல்லா வகையிலும் கல்வியை புகட்டுங்கள். அவளை செய்திகளை அறியச் செய்யுங்கள். உங்களுடைய பிஸியான வேலைகளிலிருந்து சிறிது நேரத்தை அவளுடன் கழிப்பதற்காக ஒதுக்குங்கள். அவள் என்ன கற்றுக் கொண்டாள் என்பதை கேளுங்கள், அவளுடன் சேர்ந்து டிவி பாருங்கள்! டிவியில் பார்த்த விஷயங்கள் பற்றியும், அவளைப் பற்றியும் மற்றும் உங்களைப் பற்றியுமான விஷயங்களை அவளுடைய பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவள் எவற்றை பார்க்கக் கூடாது என்பதையும் குறிப்பிடுங்கள். ஊடகங்களின் தகவல்களை சரியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அவளுக்கு உதவி செய்யுங்கள். இந்த வகையில் உங்கள் மகளின் சுய மதிப்பினை நீங்கள் உயர்த்தலாம்.

3. திறன்களை வளர்த்தல்

 குழந்தைகளை திறன் மிக்கவர்களாக வளர்ப்பதன் மூலம் அவர்களை சுய மதிப்பு மிக்கவர்களாக்க முடியும் என்பது முக்கியமான கருத்தாகும். பெண் குழந்தைகளை அவர்களுக்கான திறன்களை அவர்களாகவே வளர்க்கச் செய்வதும் கூட, பெண்களை வளர்ப்பதன் ஒரு பகுதியாக உள்ளது. அவள் தன்னுடைய கனவுகளை செயல்படுத்த ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுங்கள். பெண்களை வளர்ப்பது எளிதான விஷயம் கிடையாது, அதற்கு நிறை அன்பும், நேரமும் தேவைப்படும்.

4. வீட்டில் உள்ள இதழ்களை கவனிக்கவும்

 நீங்கள் எப்பொழுதும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கும் இதழ்களையும் மற்றும் உங்கள் மகள் அவற்றில் எதை படிக்கிறார் என்பதையும் சற்றே கவனிக்க வேண்டும். அவள் சரியான இதழ்களையும், நூல்களையும் படிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும். இதுவும் பெண்களை வளர்க்கும் முறை தான்.

5. அன்பை வெளிப்படுத்துங்கள்

 உங்களுடைய அன்பை உங்கள் மகள் உணர வேண்டும். கடினமான நாட்களிலும் கூட அவளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் மற்றும் அவள் துன்பத்தில் இருக்கும் நாட்களில் தனிமையில் அவளை விட்டு விடக் கூடாது. உங்களுடைய அன்பை அவளுக்கு காட்டுங்கள், அவளை உணரச் செய்யுங்கள். இதன் மூலம் குழந்தைகளின் சுய மதிப்பு உயரும். சில குழந்தைகளிடம் சுய மதிப்பு குறைவாகவே இருக்கும். எனினும், உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குழந்தைகளை தயார் செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அவளை இவ்வகையில் சுய மதிப்புடன் தயார் செய்வதன் மூலமாக ஒரு நல்ல வாழ்க்கையை நீங்கள் அவளுக்கு அமைத்துக் கொடுக்கிறீர்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top