கம்பியூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
அதனால், எளிய முறையில் குறிப்பு களைத் தரும் தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் தற்போது பார்க்கலாம்.
www.quotedb.com:
நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.
www.photonhead.com:
டிஜிட்டல் கெமரா வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால்,...
Thursday, 19 September 2013
இணையத்தில் நாம் காணும் ஒரு பக்கத்தை pdf ஆக மாற்ற வேண்டுமா?
இன்று நாம் இணையத்தில் ஒரு தளத்தின் பக்கத்தை(page) எவ்வாறு pdf ஆக மாற்றுவது என்பதை பற்றி பாப்போம் ...
நாம் சில நேரங்களில் ஒரு தளத்தை படித்துக்கொண்டிருக்கும்போது அந்த பக்கத்தில் தகவல்கள் நிறைய இருந்தால் நாம் உடனடியாக அதை பூக்மார்க் செய்துகொள்வோம் எத்தனை நாள் இப்படி பூக்மார்க் செய்வது ?அப்படி செய்துகொண்டே போனால் நம்முடைய பூக்மார்க் அதிகமாக மாறி நம்மால் குறிப்பிட்ட பக்கத்தை அல்லது ஒரு தளத்தை கண்டுபிடிக்க கஷ்டமாக போய்விடும் ...இக்குறையை தீர்க்க நாம் அந்த பக்கத்தையோ அல்லது ஒரு தளத்தையோ pdf ஆக மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவே பிறகு தேவைப்படும்போதெல்லாம் அதை பார்த்துக்கொள்ளலாம் இணைய இணைப்பும் தேவை இல்லை...
வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?
முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம். சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும்.
அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும் கூட தானே செய்து கொள்ளக் கூடாது. இனி வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முகத்தினை நரம்புகள் தெரியாமல் மசாஜ் செய்யக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி விட்டு சில வகை பேக்குகளை மட்டுமே போடலாம்.
- உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் வாசலீன் அல்லது கிளிசரின் தடவவும், பால், ஓட்ஸ், பாதம் எண்ணெய்...
மாசு மருவற்ற சருமத்திற்கு தேன்!
கத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள்.
பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.
அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும். சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு...
“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!
ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல்கள் எழிலரசு, சூரியபகவான்தாஸ், வினோத், சட்டக்கல்லூரி மாணவர் திசைஎந்திரன் ஆகியோர் கடந்த 16-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
இதனால் அவர்களது உடல்நிலை மோசமானது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரி...
கண்களை கவனமாக பராமரிக்க சில டிப்ஸ்!
பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. கண்களின் பார்வையில் பல அர்த்தங்களும் உண்டு. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவையே. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இவ்வளவு முக்கியமான கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவு, எமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும்...
ஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ!
2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.
இதன் பயன்கள் பல இருப்பதால் – முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.
1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிற்து.
2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.
3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.
4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று...
யாசகன்: திரை முன்னோட்டம்!
இது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைச் சூழல் வெவ்வேறானது என்றாலும் எல்லோரும் தன் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவரின் பாசப் பிணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் நமக்கு நம் பிரச்னைகள்தான் கண் முன் தெரியும். இது ஒரு சராசரி மனிதனின் இயல்பு. இதிலிருந்து மாறுபட்டு வாழ்பவன்தான் எல்லோராலும் கொஞ்சம் கவனிக்கப்படுகிறான் அப்படி வாழும் இளைஞன்தான் கதையின் நாயகன் சூர்யா.
மதுரை மாநகரில் நடுத்தரவாசிகள் வசிக்கும் ஓர் பகுதியில் தன் வாழ்க்கையை...
வேலூர் கோட்டை - சுற்றுலாத்தலம்!
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழித்தடத்தில் 145 கிலோமீட்டர் தொலைவிலும் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை.
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். பிரமிக்கவைக்கும் பரந்த சுற்றளவு....ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.... பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக வானுயர்ந்து நிற்கும் உறுதி.... வரலாற்றுப் பக்கங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு சாந்த சொரூபி போல் வீற்றிருக்கும் அழகு.... இந்த அடையாளங்களின் பெயர் தான் வேலூர் கோட்டை
பதினைந்தாம் நூற்றாண்டின்...
சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின!
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்த்தில் வெளிவந்த படம் 'சிங்கம் II'. இந்தப் படம் 50 நாட்களையும் தாண்டி ஓடி வருகிறது. அதன்பின் சூர்யா சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்பட வேலைகள் துவங்கியுள்ளன. இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஆக்சன் கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்துக்கு 'ரவுடி' என பெயர் வைத்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.இன்னொரு புறம் சூர்யாவை வைத்து கவுதம்மேனன் இயக்கும் படவேலைகளும் ஆரம்பித்துள்ளன. இதில் ஜோடியாக நடிக்க திரிஷாவை பரிசீலிக்கின்றனர். இரண்டிலும் மாறிமாறி நடிக்க உள்ளார்.சூர்யா ஏற்கனவே...
சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது? ஹன்சிகாவின் தாய் பதில்
ஹன்சிகாவுக்கு இப்போதைக்கு திருமணம் கிடையாது என்று அவருடைய தாய் மோனா மோத்வானி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், இருவரும் தங்களது காதலை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அடுத்தது இப்போதைக்கு கேள்வி இவர்களது திருமணத்தை பற்றியதுதான். ஆனால் இந்த கேள்விக்கும் அவ்வளவு சீக்கிரம் விடை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற சிமா திரைப்பட விழாவிற்கு ஹன்சிகா அவருடைய தாய் மோன மோத்வானியுடன் வந்திருந்தார். அப்போது சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என ஹன்சிகாவின் தாயிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு...
எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. (நீதிக்கதை)

அசோக் என்பவன் தான் இருக்கும் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது.
நான்கு மைல் நடந்துதான் அவ்வூருக்கு செல்ல முடியும்,
அவன் காலை கிளம்பினான்.
செல்லும் வழியில் வயலில் பூசணிக்கொடிகள் பரவியிருந்தன.ஒவ்வொன்றிலும்
அவற்றில் பல பூசணிக்காய்கள் காய்த்திருந்தன..அதைப் பார்த்தவாறு நடந்தான்.
சிறிது நேரத்தில்..வெயிலின் கொடுமை அதிகமாயிற்று.அசோக்கிற்கு வேர்வை
வழிந்தோடியது..அவன் களைப்பானான்.சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு செல்ல
தீர்மானித்தான்.
அப்போது..சற்றுத் தொலைவில் அரசமரம் ஒன்றிருப்பதைக் கண்டான்.அம்மரத்தின் அடியில் சென்று அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.
மரத்தில் சிறு சிறு காய்கள் நிறைய இருந்தன.
உடனே ..'கடவுள்...
'ஆலப்புழா' - சுற்றுலாத்தலம்
'ஆலப்புழா'
ஆலப்புழா
'ஆலப்புழா' என்றதும் பெரிய பெரிய படகு வீடுகளும் அலைஇல்லாத கடலும்,முகத்துவாரம் என்னும் கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்ப்பரப்பும் தமிழ் மற்றும் கேரள சினிமாக்களின் கனவு பாடல் காட்சிகளும் நினைவுக்கு வரும் சுற்றிலும் நீலநிறத்தில் தண்ணீரும்.. பச்சை நிறத்தில் மரங்களும் சூழ்ந்த அந்த அற்புத பூமியை இப்போது அறிவோம்
ஆலப்புழா இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு இணையான அமைப்பை உடையது. வெனிஸ் நகர மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதென்றால் கூட படு வழியாகத்தான் பயணம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஆலப்புழாவும் அப்படிப்பட்டதுதான். அனைத்து பொருட்களும் படகு வழியாகத்தான் வீடுகளுக்கு...
'தல' அஜித்தின் தனிமனிதப் போராட்டம்!
”கதைக்கு ஏற்ற தலைப்பு 'ஆரம்பம்'. இந்த தலைப்பு வைத்ததே படத்திற்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது” என்று அடக்கமாக பேசுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதிகட்ட பணிகள், இசை வெளியீடு என மும்முரமாக பணியாற்றி கொண்டிருந்தவரிடம் பேசினோம்.
'ஆரம்பம்' ஏன் இவ்வளவு லேட்?
“படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால் 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று கேட்க மாட்டீர்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா (கெஸ்ட் ரோல்), சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர் மட்டுமன்றி, அக்ஷ்ரா கெளடா என்ற பெண்ணையும் இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன். இவ்வளவு நடிகர்களின் கால்ஷீட்...
காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)

ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும்...
சாம்சங் நோட் 3 ஸ்மார்ட் போன் அறிமுகம்!
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,900 ஆகும். வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.
இந்நிறுவனம்...
கடலில் பாய்ந்து தோழர்களை மீட்ட தைரிய சிறுவன்!

கண்ணெதிரே ஒருவர் அடிபட்டுக் கிடந்தாலும், 'ஓரமா படுக்க வையுங்க சார்' என்று சொல்லிவிட்டு ஒதுங்கிப் போகும் இரக்க சிந்தனையாளர்களின் உலகம் இது. அவர்களுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமான காரியம் ஒன்றை செய்திருக்கிறான் சிறுவன் ரிஷி.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் இருக்கிறது திருமுல்லைவாசல் கிராமம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் ரிஷி. பள்ளிக்குள் நுழைந்து ரிஷி என்று சொன்னதுமே நம் கைபிடித்து அழைத்துச் சென்று தலைமையாசிரியர் தமிழ்ச் செல்வனுக்கு முன் நிறுத்தி, 'சார் நம்ம ரிஷியைப் பார்க்க வந்திருக்காங்க' என்று அறிமுகப்படுத்துகிறார்கள் சக மாணவர்கள். திடீர் பிரபலமாயிருக்கும் அந்த...