மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே, பயன் படுத்த வேண்டும். மின் பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், எடுப்பதற்கு முன்னும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் ப்ரிட்ஜ் , கிரைண்டர் போன்றவற்றிற்கு நிலைஇணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ளமின், ’ப்ளக்’குகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும். ஈ.எல்.சி.பி.,யை வீடுகளில், மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது. ‘டிவி’ ஆண்டனாக்களை மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகே கட்டக் கூடாது. ‘டிவி’ ஆண்டனாவின்...