மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம்.
அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன?
மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக்...
Tuesday, 22 October 2013
கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?
திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?
அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும...
வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து டிப்ஸ்...
எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும்.
வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நம்...
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?
திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.ஒருவர் இன்னொருவரிடம்பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.அரிசி, நெல் முதலானவற்றைகொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.இது எதனாலென்றால்,கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்மேல்கீழாய் இருந்தாலும்அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால்,கொடுப்பவர்கை மேலும்வாங்குபவர்கை கீழுமிருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவேஎப்பொருளை கொடுத்தாலும்தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர்நம் முன்னோர்கள்.
இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போதுகூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள...
துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!
சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே. ஆயினும், துணியாலான சோஃபாக்களில் கிடைக்கக்கூடிய கதகதப்பு, அவற்றில் காணப்படும் விதவிதமான ரகங்கள் மற்றும் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதி போன்ற அம்சங்கள் துணிப் பிரியர்களின் மனதை வெகுவாக கவர்கின்றன.
கிங் ஃபர்னிச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த உள்நாட்டு நாகரீக கலாச்சார நிபுணரான ட்ரையானா ஓடோன் கூறுகையில், துணியாலான சோஃபாக்களின் தேர்வு பெரும்பாலும் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவர்தம் வாழ்க்கை முறையைப் பொறுத்தே அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோஃபாவிற்கு ஏற்ற துணியை தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை, அதன் பராமரிப்பிலும் காட்ட வேண்டியது அவசியம்.
1. துணியாலான...
நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்!
நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.புல எண் (Survey Number) :ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப்...
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...
* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..* இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது.. அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்.. மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் . (அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க ) * புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று...
குழந்தை வளர்ப்பு!

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்...
லெனோவா நிறுவனம் 10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட A10 லேப்டாப் அறிமுகம்!
லெனோவா நிறுவனம் தனது முதல் அண்ட்ராய்டில் இயங்கும், A10 லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் பிசி தயாரிப்பு நிறுவனமான லெனோவா லேப்டாப்-ன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை வெளிப்படுத்தப்படவில்லை. புதிய சாதனத்தில் டூயல் மோட் கன்வெர்டிபிள் லேப்டாப் உடன் 10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட 1366x768p தீர்மானம் கொண்டுள்ளது.
அதன் டிஸ்ப்ளேவை சாதனத்தில் இருந்து அகற்ற முடியாது ஆனால் அதை நிலைப்பாட்டு முறையில்(stand mode) சாதனத்தை 300 டிகிரி சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும். லேப்டாப்-ல் அக்யூடைப் கீபோர்ட் கொண்டு ஹோம், பேக், மல்டி டாஸ்கிங் மற்றும் அமைப்புகள் போன்றவற்றை அண்ட்ராய்டு கீபோர்ட்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. லெனோவா A10 லேப்டாப்...
மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனி: ஐபிஎம் நிறுவனம்!
மனிதனின் மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் அதிநவீன கணனியை ஐபிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.
மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும். தற்போதுள்ள கணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே...
iBall ஸ்லைடு 3G 8072 டேப்லெட் இப்போது ஆன்லைனில் ரூ.11.999 விலையில் கிடைக்கும்!
iBall அதன் சமீபத்திய ஸ்லைடான iBall ஸ்லைடு 3G 8072 டேப்லெட், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டேப்லெட் இப்போது e-காமர்ஸ் இணையதளமான Flipkart-ல் ரூ.11.999 விலையில் கிடைக்கின்றது. IBall ஸ்லைடு 3G 8072 டேப்லெட் குரல் அழைப்பு மற்றும் இரட்டை காத்திருப்பு கொண்ட இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) ஆதரவுடன் வருகிறது.
இது, 1024x768 பிக்சல் தீர்மானம் கொண்ட 8 இன்ச் காட்சி அம்சங்கள் கொண்டுள்ளது. மேலும், 1GHz டூயல் கோர் Cortex A9 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. டேப்லெடில் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குகிறது. இது ரேம் 1GB மற்றும் 4GB inbuilt சேமிப்பு கொண்டுள்ளது. microSD அட்டை உதவியுடன் 32GB வரை விரிவாக்க கூடியது. டேப்லெட்...
நரேந்திர மோடி போன் வாங்கியாச்சா?
இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். இது உருவாக்கப்பட்ட அலை என்றும் சொல்கிறார்கள். இந்த அலை முதலில் இணையத்தில் தான் வீசத்துவங்கியது. இப்போதும் இதன் மையம் இணையத்தில் தான் இருக்கிறது.எல்லாம் மோடியின் இணைய படை செய்த வேலை. மோடியின் ஆதர்வாளர்கள் இணையத்தை எப்படி பயன்படுத்துவது என்பதில் நிபுணர்களாக இருக்கின்றனர். இணையத்தில் அவர்கள் காட்டிவரும் உற்சாகம் மோடி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி பேச வைத்தது.
தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியும் தொழில்நுட்ப பயன்பாட்டை புரிந்தவராக இருப்பதால், அதிலும் குறிப்பாக பிரச்சார நோக்கில் அறிந்திருக்கிறார். அவர் பேஸ்புக் மற்றும் டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் இணையத்தில் அவருக்கு ஆதரவு...
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்!
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில்...
சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!
சென்னையில் 50 மினி பேருந்து, 610 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
சென்னையில் பஸ் செல்ல முடியாத பகுதிகளில் மினி பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக 50 மினி பஸ்கள் விடப்படுகின்றன.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று 50 மினி பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் 610 புதிய பஸ்களையும் தொடங்கி வைப்பதுடன்,...
பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 7....!

பதினெட்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
World map published by Vasily Kipriynov at the begining of the 18th century
World map made by the French geographer Guillermo Delisle in 1707
Engraved world map by the German cartographer Leonhard Euler first published 1753 in his school atlas "Geographischer Atlas"
The so-called "Zheng He map" is a Chinese world map, probably produced in 1763 at the base of Zheng He's voyages
பத்தொன்பதாம் நூற்றாண்டு உலக வரைபடம்
World Map published by the Scottish engraver, printer and publisher Daniel Lizars in 1814
Japanese world map from a unknown author...
நரியும்..திராட்சையும்.. (நீதிக்கதை)

ஒரு காட்டில் ..நரி ஒன்று மிகவும் தாகத்துடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு கொடியில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்திருந்ததை அது பார்த்தது.
நம் தாகத்திற்கு ஏற்றது இந்த திராட்சைப் பழங்கள் என எண்ணியது.
ஆனால் பழங்கள் சற்று உயரத்தில் நரிக்கு எட்டாத இடத்தில் இருந்தது.
நரி சில அடிகள் பின்னுக்குச் சென்று வேகமாக ஓடி வந்து குதித்து பழங்களைப் பறிக்க எண்ணியது.ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
அதுபோல சிலமுறை செய்தும்..அதனால் பழங்களை பறிக்க முடியவில்லை.
தன்னால் எட்ட முடியாத...தனக்குக் கிடைக்காத அந்த திராட்சைப் பழங்கள்
புளிக்கும் என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு
நகர்ந்தது.
நமக்குக்...
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு!
தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி...
கறுப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க…

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கறுப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கறுப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கறுப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கறுப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின்...
ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்..

டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற...
ஓட ஓட.. ஓட ஓட தூரம் குறையலையா?
இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது. ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம்.
குறிப்பாக நட்பு, உறவு வட்டாரங்களைப் பெருமளவில் இழந்துள்ளோம். வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களில் எத்தனை பேர் நண்பர்கள் என்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. காரணம், அத்தனை சுலபத்தில் காலம் ஓடிவிடுவதும், தொடர்புகள் துண்டித்திருப்பதும்தான்.
சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தோமேயானால் நம்மோடு பழகியவர்கள், சந்தித்தவர்கள் என பெரிய பட்டியலே இருக்கும்....
“சூர்யா எல்லாம் எனக்கு அண்ணனா?” – கார்த்தி ஸ்பெஷல் பேட்டி!
இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளியாம்.காரணம்- இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான்.
எனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி.
இனி கார்த்தியின் நேர்காணல்…
இந்த தீபாவளி உங்களுக்கு ஸ்பெஷல் தானே?
“நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன்.இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக ஸ்பெஷல்தான். இப்போதுதான் இந்த ஆண்டு தான் எனக்கு தீபாவளி ரிலீஸ் படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
‘ இத்தனை ஆண்டுகளில் எட்டே படங்கள் போதுமா?
“ஒரு ஹீரோவாக பார்க்கும்...
1000 டன் தங்கவேட்டை தொல்பொருள் துறைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!
உத்தர பிரதேசத்தில் 19ம் நூற்றாண்டு மன்னரின் கோட்டையில் 1000 டன் தங்கம் உள்ளதா என்று தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் துறைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உ.பி. மாநிலம் உன்னவோ மாவட்டம் தான்டியா கேரா கிராமத்தில் 19ம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஷ் வாழ்ந்த அரண்மனை உள்ளது.
இக்கோட்டைக்குள் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத் திருப்பதாகவும், அதை தோண்டி எடுக்கும்படி தனது கனவில் வந்து ராஜா ராம் ராவ் பக்ஷ் கூறியதாகவும் சோபன் சர்கார் என்னும் சாமியார் கூறினார். இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கடந்த 18ம் தேதி முதல் கோட்டையில் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,...
தலைவலியா... காய்ச்சலா...? இலவச மருத்துவ ஆலோசனைக்கு ‘104’க்கு போன் செய்யுங்க!
பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலிமெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.குறிப்பிட்ட நோய் குறித்த தகவல்களை, முதலுதவி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை நோயாளியோ, உறவினரோ இந்த 104ல் தொடர்பு கொண்டு அறியலாம்....