.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 1 October 2013

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம் ஜெர்மனி தோட்டக்காரர் சாதனை!

ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில்  உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன. இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் தோட்டக்காரனாக பணி புரிந்தேன். அந்த நர்சரி பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும். அதில் ஒரு வரிசையில் சுமார் 90 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும்....

அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம்!

சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய ஆராம்பித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிரகங்களின் எண்ணிக்கை பற்றி சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ தெரியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 900க்கும் மேற்பட்ட அன்னிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள் பற்றிய  அட்டவணை கண்டுபிடிப்புகளை ஐந்து முக்கிய தரவுத்தளங்களாக பிரித்து, அதில் 900க்கும் மேற்பட்ட புதிய உலகங்கள் நமது உலகுக்கு வெளியே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் அதில்...

சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உட்பட 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு!

 சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உட்பட தமிழகதத்தில் மேலும் 7 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வக்கீலுமான சஞ்சய் காந்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடை யாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண் டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில்...

ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!! அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21 நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கிடு , கிடுவென உயரும். இதனையடுத்து பொருளாதாரம் பல கட்டங்களாக பாதிக்கப்படும் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது. உலகின் வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் ஒபாமா அரசு 2 வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு பார்லி.,யில் கடும் எதிர்ப்பு...

தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.   மேலும் இன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பட்டியலை வாக்காளர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top