.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 20 September 2013

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்!

சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக் ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி இது போல் மேஜிக் ட்ரிக்ஸ்  செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில் பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப் பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில் ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://easybartricks.com இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர் இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ அதற்கான...

உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.04.03.1981= 0+4+0+3+1+9+8+1=26 (2+6)=88 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு,...

தென்னையும் நாணலும் - நீதிக்கதை!

    ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன. தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.   'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...     எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.....   சில நாட்கள் கழிந்தன....   மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...   புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..     தென்னையோ புயலை எதிர்த்தது..   தென்னை வேரோடு சாய்ந்தது.... நாணல் எந்த சேதமும் அடையவில்லை....   நாமும்...

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!

  காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது.  இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில்...

பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்!

உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கலாம். கிராம்பு பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. கிராம்பு பல் வலியை போக்க கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது....

வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

   வீரமிகு செஞ்சிக்கோட்டை     வீரமிகு செஞ்சிக்கோட்டை.   தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்கள் பாதுஷாபாத் என்றார்கள்  ,சோழர்கள் சிங்கபுர நாடு...

பிரபுதேவா வேகத்தைக் கண்டு வியக்கும் பாலிவுட்!

'ராம்போ ராஜ்குமார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. 'ராமையா வஸ்தாவையா' படத்தைத் தொடர்ந்து ஷாகித் கபூர் - சோனாக்ஷி சின்கா நடிக்கும் 'ராம்போ ராஜ்குமார்' படத்தினை இயக்கி வந்தார் பிரபுதேவா. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடித்து வருகிறார். படத்தில் மொத்தம் 3 நாயகிகள். சோனாக்ஷி சின்கா, யாமி கெளதம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மூன்றாவது நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. அஜய் தேவ்கான் நடிக்கும் படத்திற்கு 'ஆக்ஷன் ஜாக்சன்' என்று தலைப்பிட்டு...

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி: தனுஷ்!

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி வெளியாகலாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர் ”களவாணி”, ”வாகை சூட வா” ஆகிய படங்களில் சற்குனத்துடன் இணைந்து பணியாற்றியவர். இந்தப் படத்துக்கு முதலில் சொட்ட வாளக்குடி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். படத்தின் பெயரை உச்சரித்த பலரின் நாக்கு சுளுக்கிக் கொண்டதால்...

சினிமா நூற்றாண்டு விழா: கலை நிகழ்ச்சியில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன்!

                            சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சியில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். டைரக்டர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த்–கமல்ஹாசன் பதில் அளிக்கிறார்கள்.   நூற்றாண்டு விழா   இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விழாவை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.    அதைத்தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்று பேசுகிறார்.   50...

மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

விபத்து, இயற்கை பேரழிவு, தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் போர்க்காலங்களில் ஏராளமானவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர். சிலர் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.  இப்படிபட்ட சூழ்நிலைகளில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. இதனாலும் அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் ரத்த தானம் உயிர்தானத்துக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது.அப்பேர்பட்ட ரத்தம் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோமா? ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள...

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு!

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் மொத்த காலியிடங்கள்: 100 வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.12,500 – 28,500 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். மேலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும்...

தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன் விலை ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும்.   ‘மொக்கா ஆர்ட் கபே’யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். ‘தங்க டீ’ குறித்து அவரிடம் கேட்டபோது,”இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த ‘டீ’யை துபாயில் அறிமுகம் செய்தேன். இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு...

தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்கள்!

நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க வழி சொல்கிறார்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள்.வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை, பாதுகாத்து பத்திரப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை யார் எடுப்பது? சென்னை ஸ்ரீ சாராம் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். (சிவில்) படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் விக்னேஷ் சந்திரமௌலி, வி.வினோத், எஸ்.நவீன் குமார், ஜி.பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளனர். சென்னை நகர மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புராஜக்ட்டை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால், மாநிலம் முழுவதுமே நிலத்தடி நீர் வரத்து குறைந்தது. சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது....

குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!

தென்னையில், நெட்டை ரகம் தேங்காய்களுக்காகவும், குட்டை ரகம் இளநீருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, குட்டை தென்னை ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய காலத்திலேயே மகசூல், எளிய பராமரிப்பு, இளநீருக்கு ஏற்பட்டுள்ள மவுசு, நிலையான கொள்முதல் விலை போன்ற காரணங்களால், தமிழகத்தில் குட்டை தென்னந்தோப்புகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த அந்தோணிச்சாமி, 4 ஹெக்டேர் பரப்பளவில், குட்டை தென்னை மரங்களைப் பயிரிட்டு, நல்ல லாபமடைந்து வருகிறார். அவரது வழிகாட்டல்கள் இங்கே... சமீப காலமாக, கார்பானிக் அமில குளிர்பானங்களை விட, இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் விரும்பி அருந்தத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் காலத்தில் இளநீர் பானத்திற்கு உள்ள கிராக்கி மேலும் அதிகரிக்கும் என்பதால், வணிக ரீதியாக குட்டை ரக தென்னை மரங்களைப் பயிரிடத் தொடங்கினேன். பச்சை,...

கிணற்று நீரை இறைக்கும் சோலார்!

நான் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கத்திரி, வெண்டை, கீரை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை, மின்சாரத்தை நம்பியும் பயிர் செய்ய முடியாத சூழல். மின்சாரம் விட்டு விட்டு வருவதனால் தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி அழிந்தன. டீசல் மூலமாக என்ஜினை இயக்கினால் டீசல் விலை உயர்வால் முதலுக்கே மோசம் வரும் நிலை உருவானது.   விவசாயத்தை மட்டுமே நம்பி நான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே நித்தம் காவிரியையும், கரண்ட்டையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும், வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது கவனம் சோலார் மின்சாரத்தை நோக்கித் திரும்பியது. கருகிக்கொண்டிருந்த பயிர்களைக் கண்டு வருந்தினேன். கடன் வாங்கியாவது சோலார் மின்சாரம் அமைப்பது...

புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!

தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும். தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது கருந்தலைப்புழு தாக்குதலின் அறிகுறிகளாகும். கருந்தலைப் புழுக்கள், தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் நூலாம்படையினை உருவாக்கி, அதனுள் இருந்துகொண்டே, பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். மரத்தின் கொண்டை மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர, மற்ற ஓலைகள்...

குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள்! - கலக்கும் சுரேஷ் எம்.பி.!

ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம்மில் பணம் கிடைக்கும், தண்ணீர் கிடைக்குமா? கிடைக்கிறது. பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்மில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது. பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40 ரூபாய் முதல் 50 ருபாய் விற்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மெஷினில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால்  அடுத்த ஒரு நிமிஷத்தில் 10 லிட்டர் குடிநீர் கேனில் நிரம்பியிருக்கும். இங்கு ஒருவருக்கு தண்ணீர் கிடைத்தது, இன்னொருவருக்கு தண்ணீர்...

உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...

அக்டோபர் மாதத்திலிருந்து  உங்கள் சிலிண்டருக்கான  மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே... ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.  ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண். 2. வங்கிக் கணக்கு. இந்தத்...

பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)

ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது.. இலையுதிர் காலம் வந்தது... மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன. அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது... அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள் இல்லாவிடில்... அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது.. அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது. பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது. மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது.. உடனே...

கமலின் 'உத்தம வில்லன்'

’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.  ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படத்தினை யார் தயாரிக்கிறார், இயக்குநர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம் 2’ படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. 2 பாடல்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ’வாகை சூட வா’ கிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.  இந்நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல், லிங்குசாமி தயாரிக்கும்...

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் விதிமுறை..

பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.    ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு...

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!

நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .    ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி. ஒரு நதியின் நீர்...

பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கையின் கொடை வேம்பு!

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.                 இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்....

வியக்கவைக்கும் பூம்புகார்..! - சுற்றுலாத்தலம்!

வியக்கவைக்கும் பூம்புகார்..!   வியக்கவைக்கும் பூம்புகார்..!   பூம்புகார் சிலப்பதிகாரத்தின் நாயகன் - நாயகி வாழ்ந்த ஊர்சோழப்பேரரசின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயரும் உண்டு. சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. நம் தமிழ் மண்ணில் 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்க்கான சந்தையாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top