
உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு 2 கோடி ரூபா சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் காஜல் அகர்வால். 2004இல் இந்தி திரைப்படமொன்றில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2008ஆம் ஆண்டு வரை அவருக்கு பேசிக்கொள்ளும்படி திரைப்படங்கள் அமையவில்லை. 2009இல் மகதீரா (தமிழில் 'மகாவீரன்') தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது. தமிழில் 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி', 'மாற்றான்', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக 'ஜில்லா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்....