2013ம் ஆண்டு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆண்டாகவே அமைந்தது. சீனியர்கள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் 2013 ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்
மணிரத்னம்: இந்தியாவின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய கடல் பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்தது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்த கார்த்திக்கின் மகன் கவுதமும், அதே படத்தில் நடித்த ராதாவின் மகள் துளசியும் அறிமுகமானர்கள். இப்படியான ஒரு சூழ்நிலை உலக சினிமாவிலேயே நடந்ததில்லை. அரவிந்தசாமி ரீ எண்ட்ரி ஆனார். அர்ஜுன் முதன் முறையாக வில்லனாக நடித்தார். முன்னணி கேமராமேன் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அப்படி இருந்தும் கடல் மக்களால் நிராகரிக்கப்பட்டது மணிரத்தினத்திற்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மணிரத்தினம் இப்போது தன்னை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அடுத்த படத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற தயக்கம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
மணிரத்தினத்தின் மாணவர்தான் பிஜோய் நம்பியார். சைத்தான் என்ற ஹிட் இந்திப் படம் கொடுத்தவர். அவர் இயக்கிய படம் டேவிட். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளிந்தது. தமிழில் விக்ரமும், ஜீவாவும் நடித்தார்கள். 7 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தார்கள். தமிழ் மக்களுக்கு அந்நியமான திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.
0 comments: