வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக மைனாவில் நடித்த விதார்த்.நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் தனக்கு கூடப்பிறக்காத அண்ணன் அஜித் என்று விதார்த் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து விதார்த் கூறுகையில்: அஜீத் சார் படத்துல் நடிக்கவிரும்புகிறீர்காள என்று டைரக்டர் சிவா சார் என்னை கூப்பிட்டார். கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போய் நின்றேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அய்யோ… தல படத்துல நடிக்க முடியாமல் போயிடுமேன்னு கலங்கி நின்றேன். அப்போது அஜீத்சாரே நான் நடித்து வரும் படத்தின் டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.
பொதுவாக அஜீத் சார் நடிக்கிற படங்ககில் அவரோட ஓப்பனிங் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். ஆனா “என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு நிகரான ஓப்பனிங் சீன் வையுங்க”ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.
ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் “சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?” என்று கேட்டார்., இல்லைன்னு நான் சொன்னேன். “அப்ப கிளம்புங்க போகலாம்” என்றார் ஒரே நாளில் விசாவினை தயார் செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார்.. எனக்கு அங்கே ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் கொடுத்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.
ஒரு நாள் “பைக்லேயே டூர் போலாமா?”ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னால் உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. சாலையோர கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து… என்ன ஒரு அனுபவம் அது.
சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் இவ்வாறு உருக்கமாக பேசினார் மைனா விதார்த்.
0 comments: