யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர்
சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று
கூறுகிறது.
ஜிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம்,
யானைகள், முழுமையாக நிரப்பப்பட்ட உணவு வாளிகளை, மனிதர்கள் சுட்டிக்காட்டும்போது,
காலியான உணவு வாளிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவையாக இருப்பதை
ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
சுட்டிக்காட்டும் சைகை, மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு,
உயிர்வாழ மிகவும் முக்கியமாக உள்ள சிக்கலான சமூகங்களில் , மிகவும் பயனுள்ள ஒரு
தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ந்திருக்கின்றன
என்பதை இது...
Friday, 11 October 2013
அமைதிக்கான நோபல் பரிசு!
2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான...
தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!
தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உலக அழகி ஒலிவியா கல்போ. 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.நேற்று உலக அழகி...
“ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட்!
சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம்...
ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள்...
வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!
“மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும் நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதையாகின்றன. குறிப்பாக உணவு உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க வேண்டிய - உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, இர வுப்பணி, ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற்பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தா மல் இருப்பது, ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு போன்றவை பிரச்னைகளின் காரணிகள். சில சாதாரண விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினாலே பல நோய்களை தவிர்க்க முடியும். இக்கவனம் இல்லாமல் போனதால் எதிர்ப்பு சக்தியை இழந்து, பல நோய்களை நாமே வரவழைக்கிறோம். சில நோய்களை எளிமையாக மூலிகைகள்...
நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?
நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட கோட்டிங் பாழாகிவிடும்.
நான்ஸடிக் பொருட்களை துடைக்கும் போது மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தால் போதுமானது. உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் போது சோப்புத்தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக்கூடாது.
கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை நான்ஸ்டிக் பாத்திரத்தில்...
சூரியன் இல்லாத புதிய கோள் கண்டுபிடிப்பு!
பூமியில் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியன் போன்ற நட்சத்திரம் எதுமின்றி தன்னந்தனியே சுற்றி வரும் இளைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த இளைய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது, வியாழன் கோளை விட ஆறு மடங்கு பெரிதாக உள்ளது. சுமார் 1 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தக் கோளுக்கு "பிஎஸ்ஓ ஜே318.5-22' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரையில் சூரியன் இல்லாமல் தனியாகச் சுற்றும் கோள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Astronomers say they've spotted lonesome planet without a sun
Eighty light-years from Earth,...
பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
கனடா நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், ரசாயனம், பொருளாதாரம், அமைதிக்கான சமூக சேவை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், ரசாயனத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா நாட்டை சேர்ந்த அலைஸ் முன்ரோவுக்கு(வயது 82) அறிவிக்கப்பட்டது.
சிறுகதை எழுத்தாளரான முன்ரோ சிறு நகரங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஏழைகளின் துயரங்களை மையமாக வைத்து ஏராளமான கதைகளை எழுதியுள்ளார்.
இவரது படைப்புகளுக்கு ஏற்கனவே புக்கர் விருது,...
“லைப் ஆப் பை” - உணர்வை ஏற்படுத்துமாம் “ராவண தேசம்”!
திரு.கே.ஜெகதீஸ்வரரெட்டி அவர்கள் நல்லாசியுடன், நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படம் ராவண தேசம்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்குபவர் அஜெய்.
கதாநாயகியாக ஜெனிபர் நடிக்கிறார், இவர்களுடன் அல்லலுரமேஷ், சந்தோஷ் கௌடில்யா, பாரதிராவ், சிரீஷா, பிரபாகர், மைனர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனரும் நடிகருமான அஜெய் நூத்தகி கூறுகையில், இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தங்களை காத்துக் கொள்ள வேண்டி நடக்கும் போராட்டக்களமே கதை கரு.
கடல் வழியாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சி மிகு போராட்டம் தான் ராவண...
ஜில்லாவின் கதை - "மோகன்லால் தாதா - விஜய் போலிஸ்"!
ஜில்லா படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாகவும், மோகன்லால் தாதாவாகவும் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா.
துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.
படத்தில் மோகன்லால் தாதாவாக நடிக்கிறார், அவரது மகனாக வரும் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.
படத்தின் முதல்பாதி காதல், கொமடி என்று கலகலவென இருக்க இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும்...
இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இதைப் படிங்க!
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன் முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி பல வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன
இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை தருவோரிடம் தங்கள் உறவினர் பெயரில் டிபாசிட் செய்ய சொல்கின்றனர்.
பின்னர் சி.பி.ஐ.,அல்லது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது பணம் செலுத்திய நபரின் விவரங்களை வங்கிகளிடம் கேட்கின்றனர். எனவே தான் வங்கி வாடிக்கையாளராக இல்லாதோர் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்தும் போது அடையாள ஆவணங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் முறைகேடான பண பரிமாற்றம்...
சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்!
“வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவிகள் செல்போனில் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.”என்று நம்பிக்கை தெரிவிக்கின்ற்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சர்வதேச கடல் எல்லையில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், பின்னர் தமிழகத்தில் இருந்து அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு...
சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!
இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.
தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின்...
சேலம் மாவட்டத்தின் வரலாறு"!
தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம். மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும்...
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
சகலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு...
பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-1- வரலாறு!
உலகில் முதன் முதலாக வரையப்பட்ட வரைபடத்திலிருந்து நவீன காலம் வரை
உள்ள வரைபடங்களை ஒரு பதிவாக இடலாம் என்று இந்த பதிவை ஆரம்பித்துள்ளேன்.
உலக வரைபடங்கள் பண்டைய காலங்களில் வரையப்பட்டதில் பல்வேறு நிலைபாடுகள்
காணப்பட்டன. மனித நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் ஆப்ரிகா, பாரசீகம்,
பாபிலோனியா சுற்றிய பகுதி தான் உலகம் என நினைத்துக்கொண்டிருந்தனர் உலகின்
முதல் வரைபடமும் அப்படி தான் வரையப்பட்டுள்ளது
பின்பு உலகம் தட்டையானது என்ற நினைத்தனர். பின்பு உலகம் உருண்டை என
பின்னால் வந்த அறிவியலாளர்கள் கூறினார். இருப்பினும் ஆதி காலத்திலேயே பூமி
உருண்டையானது போன்ற வரைபடம் துல்லியமாக வரையப்பட்டுள்ளது. எந்த ஒரு
தொழில்நுட்பமும்...
வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)

ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது.
அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச்
சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன
அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ வெயிலில் விளையாடலாமே' என்றது.
அதற்கு எறும்பு...மழைக்காலத்தில் வெளியே எவரும் செல்லமுடியாது...அதனால்
அந்நேரம் தேவையான உணவை இப்போதே நான் என் புற்றில் சேகரித்து
வைத்துக்கொள்கிறேன்' என்றது.
'மழைக்காலம் வர இன்னும் நாள் இருக்கிறது'என்று கூறிக்கொண்டே...வெட்டுக்கிளி நடனமாட ஆரம்பித்தது.
மழைக்காலமும் வந்தது.
'தான் சேகரித்த உணவை உண்டு ..தன் புற்றுக்குள்ளேயே இருந்தது எறும்பு....
அப்போது...