.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label நிகழ்வுகள்!. Show all posts
Showing posts with label நிகழ்வுகள்!. Show all posts

Thursday, 16 January 2014

செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....

 பிபிஓ எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து அழைப்பு டெண்டரை கோரியுள்ளது. 200 ஏஜென்டுகளையும் ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும். இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50 பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும்...

Wednesday, 8 January 2014

லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது..?

இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள்.காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால திட்டம். இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட திட்டம் நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும்,  மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில்...

Monday, 6 January 2014

இந்தியாவில் இனி இரண்டு 'Time Zone': வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி "மணி நேரம்"!

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது.இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும்.அட்சரேகைகள்-தீர்க்க ரேகைகள்:பூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன.டெல்லியை விட 1 மணி நேரம்:இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால்...

நெ‌ட் பை‌த்‌தியமா..? ‌சி‌கி‌ச்சை தேவை..! - ''மனோதத்துவம்''

பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது. இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை. இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது...

Sunday, 5 January 2014

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம்பூவின் பயன்கள்:- மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும்,...

Saturday, 4 January 2014

சூரியின் பெயரில் போலி முகவரி..?

நகைச்சுவை நடிகர் சூரியின் பெயரில் ட்விட்டரில் தொடங்கப்பட்டிருப்பது போலி ஐடி என்று செய்திகள் பரவிவருகின்றன.பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை நேராகத் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் சேர்ப்பதற்கு சமீபகாலங்களில் சமூக வலைத்தளங்கள்பெருமளவில் உதவிபுரிகின்றன. பெரும்பாலான பிரபலங்கள் இச்சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பிரபலங்களுக்குத் தங்களின் கருத்துக்களைப் பகிர உதவுகின்றனவோ அதைப் போலவே அவர்களின் பெயரில் போலி உருவாக்கப்படும் போலி அக்கவுண்ட்களால் பிரச்னைகளாகவும் உருவெடுத்துவருகின்றன.ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் அனேக போலி ஐடிக்கள் தொடங்கப்படுகின்றன....

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..! ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே...

YouTube வழங்கவுள்ள புதிய வசதி..!

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.இவற்றின் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் குறைந்த இணைய வேகத்திலும் வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை...

ebay மூலம் மனித மூளையை விற்றவன் அமெரிக்காவில் கைது..!

அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் "ஈ பே" மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர். அங்குள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை அவன் திருடியுள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவன் அந்த அருங்காட்சியகத்தில் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு...

Tuesday, 31 December 2013

வெற்றிப் படிக்கட்டுகள் - இவ்வளவுதான்..?

வெற்றிப் படிக்கட்டுகள்:- சிறு வயதிலிருந்தே நாம் பழக்கப்பட்ட ஒரு விஷயம் நேர அட்டவணை போடுவது. இந்த நேரத்துல, இந்தப் பாடத்தைப் படிக்கணும் என ஒரு டைம் டேபிள் போட்டு வைத்திருப்போம். இந்த விஷயத்தை நம்மளோட நிறுத்தினமா..? ம்ஹூம்.. நம் தங்கை, தம்பி… குழந்தைகள்.. பேரக்குழந்தைகள் அப்படினு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கிறோம். இந்த நேரத்துல இதைத்தான் படிக்கணும், எழதணும்னு நாம பழகற சின்ன வயது பழக்கம், வளர்ந்து பெரியவங்களானதும், இந்த சமயத்துல இந்த வேலையைத்தான் செய்யணும், செய்தாகணும்னு நம்ம மனசுல பதிவாகி நம்மளை நாமளே கட்டாயப்படுத்திக்கிறோம். இல்ல, அடுத்தவங்களை வற்புறுத்தறோம். அதிக பட்சமா, அளவுக்கதிகமா சோம்பேறித்தனத்தோட இருக்கறப்போ அல்லது...

தமிழ் சினிமா 2013 : நெஞ்சுக்குள்ள குடியேறிய ரஹ்மான்

 2013ம் ஆண்டை பொருத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களே ஜொலித்திருக்கிறார்கள். மற்றவர்கள் மக்களின் மனதை வருடும் இசையை அளிக்கவில்லை. மிகவும் குறைவான படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 2013ல் 'கடல்', 'மரியான்' ஆகிய இரண்டு படங்களின் பாடல்கள் மூலம் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அப்பாடல்கள் மக்களால் இப்போதும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது. அதிலும், 'மரியான்' படத்தின் பாடல்கள் 'சிறந்த தமிழ் ஆல்பம்' என்று ஐ-டியூன்ஸ் தளத்தில் தேர்வாகி இருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து...

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்!!!

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆன்லைன் மூலமாக பொருள்களை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இது மிக சௌகர்யமாக உள்ளதாகக் கருதுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.  மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெற்ற மொத்த...

Monday, 30 December 2013

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வைரம்வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.வௌவால்வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும்...

Saturday, 28 December 2013

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14?

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14 உயிரினங்கள்!!! இந்த பெரிய உலகில் வாழும் நாம், பெரியது முதல் சிறியது வரை நிறைய உயிரினங்களைப் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சாதாரண அளவில் இருக்க வேண்டிய உயிரினமானது அளவுக்கு அதிகமாக பெரிய உருவத்தில் காணப்பட்டால், உலகில் உள்ளோரால் அதிசயமாக பார்க்கப்படுகின்றனவோ, அதேப் போல் மிகவும் சிறிய அளவில் காணப்பட்டாலும் அதிசயிக்கத்தக்கவையே. ஆனால் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்படி சிறியதாக இருக்கும் உயிரினங்களின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இப்படி ஒரு சாதாரண உயிரினமானது மிகச்சிறிய அளவில் இருப்பதற்கு காரணம் பிறப்பு குறைப்பாடுகள் தான்.இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, வளர்ச்சி குறைபாடு மற்றும் பிறப்பு...

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...! உங்களுக்கு சரக்கு அடிக்க ரொம்ப பிடிக்குமா? அப்படி சரக்கு அடித்த பின்னர் நீங்கள் செய்த அட்டகாசங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லையா.. அப்படியெனில் இந்த கட்டுரையைப் படித்து பாருங்கள். பொதுவாக சரக்கு அடித்தவர்களுக்கு, சரக்கு அடித்தப் பின்பு செய்யும் லூட்டிகள் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் உங்களுக்கு சரக்கு அடித்த பின்னர் ஆண்கள் செய்யும் லூட்டிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சரக்கு அடித்தப் பின்னர், ஆண்கள் செய்யும் சில லூட்டிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பாருங்கள். நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...! * சில ஆண்கள் சரக்கு அடித்தப் பின்னர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள்....

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்.. 1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. 3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது. 4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான். 5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது. 6.மனைவியை...

Wednesday, 18 December 2013

அற்புதமான விளக்கம் மனைவிக்கு.....?

ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக...

Sunday, 15 December 2013

களவும் கற்று மற - அறிந்த விளக்கமும் அறியாத விளக்கமும்!

களவும் கற்று மற. அறிந்த விளக்கம் :திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவு காதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.அறியாத விளக்கம் :மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டத...

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும் கடுமையான, பாலியல் தொடர்பான பழமொழிகளையும், படிப்பதற்கு நாராசமாக உள்ள பழமொழிகளையும் கூடுமான அளவுக்கு தவிர்த்துவிட்டேன்.பெண் பல ரூபங்களில் இருப்பவள். தாயாகவும் மனைவியாகவும், மகளாகவும்,மருமகளாகவும்,...

Tuesday, 26 November 2013

மாணவர்களும் மன ஆற்றலும்!

இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த குரங்கு கட்கும் உள்ளுணர்வாய் சென்றடைந்ததை நாம் அறிவோம். அதுபோல் பெரும்பாலும் பெற்றோர் விருப்பப்படி எதிர்கால படிப்பைத் தேர்வு செய்கிறோம்.விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தை விரும்பு என்பதற்கேற்ப, தேர்வு செய்த பாடத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு,...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top