பழமொழிகள்
பழமொழி = பழமை+மொழி. பழமையான மொழி, நம் பண்டைய மக்கள் ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், புறிதலுமாய் விளங்க பழமொழிகளை பேசி பயன்படுத்தி வந்தனர். பழமொழிகள் நம் மக்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. பழமொழிகள் "ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள்" என்று கூறுகின்றனர். இவை "நாட்டுப்புறவியலின்" ஒரு கூறாகவும் அமைகின்றன.நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின....
Monday, 11 November 2013
விஜயகாந்த் - வாழ்க்கை வரலாறு (Biography)
புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்,...
மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது?
மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.
செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.
செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமியின் சுற்றுபாதையை அடைந்திருந்தது, உடனடியாக அதை செவ்வாய்க்கு செலுத்த முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக விண்கலத்தின் உயரத்தையும் வேகத்தையும் அதிகரிப்பார்கள், மூன்று முறை இவ்வாறு அதிகரித்து 75,000 கிமீ உயரத்தில் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மங்கள்யாணின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. ஆனால் இதில் சிக்கல் ஏற்பட்டதால் மங்கள்யான் விண்கலம் திட்டமிட்ட படி 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.
ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் தீர்ந்துவிடவில்லை என்பதால் அந்த சிறிய ராக்கெட்டுகளை...
கல்லா மனிதன் மனம்?
கல்லா மனிதன் மனம்?ஏதோ நினைவுடன்தனியே நடக்கையில் ஒரு கல்லில் கண்டேன்,ஒற்றை இதழுடன் மஞசள் மலர்குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்யார் ஒப்பிட்டதுமனிதர் மனத்தைக் கல்லோடு……… ********...
கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!
கிரெடிட் கார்டு என்றாலே அது ஒரு சூனியத் தகடு என்று நினைத்து பயந்து ஓடுகிறார்கள் நம்மவர்கள். அதை வைத்திருந்தாலே நாம் ஊதாரியாக மாறிவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். உள்ளபடி பார்த்தால், கிரெடிட் கார்டு என்பது நம்மை வஞ்சிக்கும் சூனியத்தகடும் அல்ல; நமக்கு நல்லதே செய்யும் அட்சய பாத்திரமும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அது நமக்கு நல்லதா, கெட்டதா என்று முடிவு செய்ய முடியும். கிரெடிட் கார்டை சரியாக, லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். கிரேஸ் பிரீயட்!''கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு சுமார் 45 முதல் 51 நாட்கள் வட்டி கட்ட வேண்டாம் என்பது முக்கிய விஷயம். உதாரணமாக, ஒருவர் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் தயார் செய்வதற்கான கட் ஆஃப் தேதியான ஜூலை 5-ம் தேதி ஒரு பொருளை வாங்குகிறார். அதற்கு...
லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு...
கார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள்...
உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...
செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.
இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில...
மயில் தேசியப்பறவையானது எப்படி?
டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.
அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில் மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.
ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும்...
கூச்சத்தை விரட்ட....
நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள்.
1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.
2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்
.
5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.
6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்' என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக...
INDIA தேசிய கீதத்தின் பொருள்....
ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.பஞ்சாப சிந்து குஜராத் மராத்தாதிராவிட உத்கல பங்காஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.குஜராத் மாநிலம் உன்னுடையது .வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது .பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற...
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்துக்கு தங்கம்!
உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.
நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 புள்ளிகள் பெற்றிருந்த விக்டோரியா சாய்கா (பெலாரஸ்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதன்மூலம், உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களில் அஞ்சலி பகவத்...
உடல் சூட்டை குறைக்க அல்லது கூட்ட உதவும் பிரேஸ்லெட் !
இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக்...
அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்!
இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 600 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட விட்டு அவர்கள் திரட்டியது போக மிச்சமுள்ளதை எரித்துவிட மறைமுக ஆதரவளிப்பதைப்போலத் தோன்றுகிறது....
‘ஷோலே’ – 3 டி எபெக்டில் வரப் போகுதில்லே!
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து கலக்கிய .‘ஷோலே’ படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக தற்போது இந்தப்படத்தை ‘3டி’யில் உருவாக்கியுள்ளார்கள்.இதையடுத்து மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் – நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார்...
அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது!
அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை ‘விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்’ என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும்...
பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!
தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.
இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
...
குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி!
குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம். சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள். டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட...
குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!
சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம். இருமல்குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின்...
குறட்டையை விரட்டும் சிகிச்சை!
குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும். அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை. குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு...
குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்என்னென்ன தேவை?
நிலவேம்பு – 15 கிராம்
சீந்தில் தண்டு – 15 கிராம்
சிற்றரத்தை – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்
பூனைக்காஞ்சொறி – 15 கிராம்
கடுகு ரோகிணி – 15 கிராம்
பற்பாடகம் - 15 கிராம்
கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
சுக்கு – 15...
முதுகு வலியை போக்கும் பயிற்சி!
சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும். கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும். அதனால்...