.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 7 December 2013

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...


கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.


அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.


அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"


கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"


அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"



கதிர் சொன்னான். "இல்லை"


அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."


கதிருக்கு வியப்பாக இருந்தது.


முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?"


கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....."


முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்....."


முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.


"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.


சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.


அவர் சொன்னார். "27"


இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.


திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.


(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)



நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.

(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)



பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ•தே துணை.

(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)



இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.


ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.


ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?


மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.


நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?


சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

நட்பு ?

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.


பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.


என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.


இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.


அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.


பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.


வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.


"புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
ந‌ட்பாங் கிழமை தரும்".

திருமணம் - கட்டுரை!



திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.


திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.


புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.


சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள். 'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.


வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.


தாரை வார்த்தல்:


பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.


அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.


மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.


தாலி கட்டுதல் :


தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.


'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'

ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.


'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.


இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள்.


தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.


மெட்டி அணிவித்தல் :


திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.


வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.


ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.


அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.


அம்மி மிதித்தல் :



உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.


அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.


கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.


'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'



அருந்ததி காட்டல் :


அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.


எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.


இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


'அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'


தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்.

தமிழ்ச்சொல் - வடமொழிச்சொல்!

அகம்பாவம் - தற்பெருமை.

அக்கிரமம் - முறைகேடு

அசுத்தம் - துப்புரவின்மை

அதிகம் - மிகுதி

அனுக்கிரகம் - அருள்

அபிவிருத்தி - வளர்ச்சி

அவசரம் - விரைவு

ஆகாரம் - உணவு

ஆசை - விருப்பம்

ஆதாரம் - அடிப்படை

ஆரம்பம் - தொடக்கம்

இந்திரியங்கள் - ஐம்பொறிகள்

இரசிகன் - சுவைஞன்

இருதயம் - உள்ளம்

இலட்சியம் - குறிக்கோள்

உஷ்ணம் - வெப்பம்

உதாரணம் - எடுத்துக்காட்டு

உபயோகம் - பயன்

ஏகாந்தம் - தனிமை

கருணை - இரக்கம்

கல்யாணம் - திருமணம்

கிரயம் - விலை

கும்பம் - குடம்

சகோதரன் - உடன் பிறந்தான்

சங்கீதம் - இசை


சமாதானம் - அமைதி

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

சீக்கிரம் - விரைவு

சீலம் - ஒழுக்கம்

சுகந்தம் - நறுமணம்

சொப்பனம் - கனவு

ஞாபகம் - நினைவு

தருமம் - அறம்

தூரம் - தொலைவு

தேசம் - நாடு

நவீனம் - புதுமை/புதினம்

நாமம் - பெயர்

நிபந்தனை - கட்டுப்பாடு

பயம் - அச்சம்

பரம்பரை - தலைமுறை

பிரசுரம் - வெளியீடு

பிரபஞ்சம் - உலகம்

பிரயாணம் - பயணம்

பேதம் - வேற்றுமை

மகிமை - பெருமை

முத்தி/முக்தி - வீடுபேறு

வயோதிகம் - முதுமை

வாலிபம் - இளமை

விவசாயம் - வேளாண்மை

வேதம் - மறை.

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்!

 ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.


Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே



- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.


நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்

- காய்கறி கேரி பேக்குகள்

- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்

- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்

- வீட்டு குப்பை பைகள்

- வணிக குப்பை பைகள்

- தொழிற்சாலை லைனர்கள்

- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்

காகிதம் - 2-5 மாதங்கள்

கயிறு - 3-14 மாதங்கள்

ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்

தோல் காலணி - 25-40 ஆண்டுகள்

நைலான் துணி - 30-40 ஆண்டுகள்

தகர கேன் - 50-100 ஆண்டுகள்

அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது


எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.


பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?


சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை


அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

புறக்கணிக்கப்பட்ட கவிதை!

'

இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.


1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.


ஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.


அவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

சீதனம்!

சீதனம். இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக் குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை. இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்.


இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப், பொருளாக, நகையாக மாற்ற மடைந்து தற்போது எதுவுமே வேண்டாமெனக் கூறி (அவசரப்படவேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது காணி, நிலம் இப்படி ஏதாவது இருந்தால் போதும் என்ற பவ்வியமான பேச்சு நம் மத்தியில் உள்ள எத்தனை கன்னிகளின் வாழ்க்கைக்குக் கல்லறை கட்டுவிக்கின்றன.


ஏனிந்த அவலம்? காலாகாலம் எழுத்துக்கள் எழுப்பும் வினாதான் இது. இந்நிலை மாறவே மாறாதா? மாறலாம். சீதனம் கேட்கும் பெண் இனமே வாயை மூடவேண்டும். மனமாற்றத் துக்கு உள்ளாக வேண்டும். பெண் எடுப்ப வர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள். பெண் ணைப் பெற்றவர்கள் பெண்ணை ஏலம் போட்டு ஆணுக்கு விற்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய வியாபாரம். மிச்ச சொச்சம் எல்லாவற்றையும் விற்று மகளுக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால், வருவாய் தான் இல்லை. சீதனத்தின் ஆளுமை பெரும் பாலான குடும்பங்களை கண்ணீர் விடவைக் கிறது. இளம் கன்னியர்களின் வயது முது மையை நோக்கி அரங்கேறுகிறது.


வசதிபடைத்தவர்களின் சீதனம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல்கள் அவர்களின் "டீல்' வேறுவிதமாக இருக்கும். அந்தஸ்தை உயர்த் திக் காட்டும் விதத்திலும் வியாபார நோக்கி லும் இப்படிப் பல பரிமாற்றங்கள் நடைபெற லாம். ஆனால், நடுத்தர வர்க்கத்தின் நிலை மிகவும் அபாயகரமானது. மதில்மேல் பூனையாக அவர் களின் வாழ்க்கைத்தரம். அழகிருந்தால் கல்வித் தரம் கேட்கிறார்கள். கல்வித்தரம் இருந்தால் நல்ல அழகான மூக்கும் முழியுமான பெண்ணைக் கேட்கிறார்கள். இரண்டும் இருந்தால் சொந்த வீடு அல்லது காணி.... இப்படிக் கேட்கிறார்கள். ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலான வர்கள் தங்கள் பிள்ளையின் படிப்பு உயர் அந்தஸ்துக்கு ஏற்றமாதிரி சீதனத்தை நிர்ணயிக்கி றார்கள்.


ஆனால், ஆண் குட்டையோ நெட்டையோ கறுப்போ சிவப்போ கல்வி அறிவு குறைந்த வனாக இருந்தாலும் அங்கேயும் ஆண்மகன் என்ற அதிகாரமும் ஆதிக்கமும் தலைதூக்கி நிற்கிறது. ஆனால், பெண் மாத்திரம் அத்தனை அவதாரங்களையும் எடுத்திருக்க வேண்டும். இதனால்தான் மணமாகாத பல பெண்கள் மணமுடிக்கவே வெளிநாட்டுக்கு உழைக்கப் போகிறார்கள்.


சிலரின் வாதம் இதுதான்.. வாழ்நாள் முழுவதும் வைத்து உழைத்துக் குடும்பத்தைச் சுமப்பவர்களுக்கு சீதனம் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். குடும்ப பாரத்தை ஆண் மட்டுமல்ல. அதைவிடப் பலமடங்கு பெண்ணும் சுமக்கிறாள். அதனால்தான் பாரபட்ச மின்றி அவளை ஒரு தியாகத்தின் மறுவடிவாகப் பார்க்கின்றனர். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமாகப் படைக்கப்பட்டுள்ள இந்த வையகத்தில் எந்தக் காலக்கட்டத்திலும் இவர்கள் தனித்து வாழ்ந்திட முடியாது. இறைவனின் நாட்டப்படி ஒருவரை ஒருவர் சார்ந்தே பல தேவைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனித்து நின்று செயற்பட முடியுமென்ற கர்வம் ஆண்களைப் பிடித்தாட்டுவது அறியாமையும் அறிவீனமுமாகும். தற்போதுள்ள சீதனப் பிரச்சினையில் ஓரளவு இளைஞர்கள் திருந்தினாலும் பெற்றோரும் உற்றாரும் விடுவதாக இல்லை. திருமணப் பதிவுக்கு முன்பே வீட்டையோ காணியையோ அவர்களது பெயருக்கு எழுதிக் கையெழுத் திட்டால் மாத்திரமே தலையெழுத்து இல்லறத் தில் அழகாக அமையும். ஆனால், ஆண் வயது கடந்து சென்றாலும் இளம்பெண்களை மணம் முடிக்கலாம்.


பொருளாதார பிரச்சினை காரணமாக வயது கடந்த முதிர்கன்னிகள் வீடு வாசல் களை வைத்துக் கொண்டு மணமகனைத் தேடினாலும் நரை விழுந்த மணமகன் கூட வரம் கொடுப்பது அரிது. என்றாலும் எல்லா ஆண்களையும் குறைசொல்ல முடியாது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்ட வர்களும் உண்டு. சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்போம் என்ற பெயரில் பெண் வர்க்கத்தைச் சுரண்டி யவர்களும் உண்டு.


சீதனப் பிரச்சினையால் ஒரு குடும்பத்தில் எத்தனை விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன வாயையும் வயிற்றையும் கட்டி சேமிப்பில் ஈடுபட்டு அல்லது கடன் வாங்கி மூத்தவளுக் குச் செய்த மாதிரியே இரண்டாம் மகளுக்கும் செய்ய வேண்டிய கடமை அல்லது கட்டாய நிர்ப்பந்தத்தால் அந்தக் குடும்பத்தின் பொரு ளாதாரம், கல்வி, ஆரோக்கியம் என்பன பாதிப் படைகிறது.


கடன்சுமை தாங்காமல் நோயில் விழுந்தவர் களுமுண்டு. தற்கொலை செய்தவர்களும் உண்டு. அவரவர் வசதிக்கு ஏற்ப எதையென் றாலும் கொடுக்கட்டும் கடைசி வரை நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று சொல்லும் நல்ல மனம்படைத்த பெற்றோரும் உள்ளனர். நான் சம்பாதித்து வீடு வாசல் வாங்கி நல்லபடியாக வாழவைக்கிறேன் என்று சொல்லும் ஆண்மகன்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் உண்மையில் வாழ்த்துக்கும் போற் றுதலுக்கும் கௌரவத்துக்கும் உரியவர்கள். சமுதாயத்தில் சீதனத்துக்கு எதிரான மறுமலர்ச்சி பத்து சத வீதம் என் றாலும் சீர்கேடுகளும் பிடுங்கித் தின்னும் வர்க்கமுமே 90 சதவீதம் இருக்கின்றன என்பது மட்டும் தான் நிஜத்திலும் நிஜம்.

மனப் போராட்டத்தை தவிர்ப்பது எப்படி?





பயனற்ற, தேவையற்ற, நம்பிக்கை இல்லாத, மோசமான எண்ண உணர்வுகளை; நாம் பயனுள்ள, தேவையான, நம்பிக்கையான, மேன்மையான உணர்வுகளாக மாற்ற வேண்டும். இதை நம் அறிவால் ஆற்றலால் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும்.


இது முடியுமா? என்ற எண்ணம் நமக்கு வரும், ஆனால் நம் மனது இடம் கொடுத்தால் நிச்சயம் முடியும். தியானம், சுவாசப்பயிற்சி, மகிழ்ச்சி தரும் இயற்கை சூழல்களுக்கு செல்லுதல்.


வழிபடும் ஆலயங்களுக்கு செல்லுதல், இசை கேட்பது, இசை கருவிகளை மீட்டுவது, நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தும் காட்சிகளை பார்ப்பது, புத்தகங்களை படிப்பது. சிறு வயதில் நாம் அனுபவித்த மகிழ்ச்சியான அனுபவங்களை நினைத்துப் பார்ப்பது, சிறிது நேரம் தூங்குவது போன்றவை போராடும் மனதை அமைதிப்படுத்த உதவும்.


வெறுங்கையை காட்டி ஒன்றும் இல்லை என்று சொல்லாமல், என்னிடம் 10 விரல்கள் உள்ளன, இதைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அமைதியான மனதில் மகிழ்ச்சி என்னும் நல்லுணர்வு தோன்றும் போது நகைச்சுவையை ரசித்து வாய் விட்டு சிரிக்க முடியும்.


இது போன்று சிரிப்பதால் ஒருவரது முகத்தில் 26 தசைகள் இயங்குகின்றன. எனவே, வாய்விட்டு சிரித்தால் நோயின்றி வாழமுடியும். இப்படி வாய்விட்டு கைதட்டி, வயிறு குலுங்க சிரிக்கும் போது ஏற்படும் ரசாயன மாற்றங்களால் என்டார்பீன்ஸ் மெலடோனின், செரடோனின் போன்ற நல்ல ஹார்மோன்கள் சுரப்பதால் இதயம், மூளை உள்ளிட்ட எல்லா உறுப்புகளும் இயல்பாக இயங்க வழி ஏற்படும்.


இரு உள்ளங்கைகளோடும் உடம்பிலுள்ள எல்லா உறுப்புகளும் தொடர்பில் உள்ளன. இரண்டு கைகளையும் தட்டி நாம் சிரித்து மகிழும் போது, `அக்குப்பிரஷர்' முறையில் அந்த உணர்வு, நரம்புகள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் தொடர்பால் எல்லா உறுப்புகளும் இயல்பாக இயங்க அது காரணமாகிறது.


நாம் அமைதியுடன், மகிழ்ச்சி நிறைந்த மனதை வெளிப்படுத்த கைகூப்பி வணங்கும் போதும் `அக்குடச்' முறையில் இந்த பயன்களை அடைகிறோம். வயிறு குலுங்க சிரிக்கும் போது வயிறு, குடல் தசைகள் அதிகமாக இயக்கப்படுகிறது.


இதனால் ஜீரணசக்தி அதிமாகிறது தொப்பையும் குறைகிறது. இவற்றை தொடர்ந்து கடைபிடித்தால் மனப் போராட்டம் மறையும். மனது சமநிலை பெறும், உடல் நலமுடன் வாழலாம்.

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?




"தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?"

 என்று கேட்டிருந்தார்.


 நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன்.


ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது.


அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப  செய்ய முடியும்.


   கையாள்வதற்கு  மிக எளிமையான இதை  பயன்படுத்த Excel மேக்ரோ Enable  செய்யப்பட்டிருக்க வேண்டும்

இதோ  விளக்கம்


கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.


Cheque Print  DOWNLOAD

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !



 * இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.?



கிரெடிட் கார்டு புழக்கம் அதிகமாக இருக்கற காலம் இது.. பெரும்பாலும் ஐ.டி துறையினர்தான் கிரெடிட் கார்டுக்கு அடிமையாய் இருக்காங்க.. ஒருமுறை கிரெடிட்கார்டை யூஸ் பண்ணிப் பழக்கப்படுத்திட்டோம்னா.. எந்தக் கடைக்குப் போனோம்னாலும் சரி.. நமக்கு எவ்வளவு சம்பளம்.. எவ்வளவுக்கு சாப்பிட வைச்சிருக்கோம் எதுவும் நினைப்பு இருக்காது.. எடுத்து சரக்.. முடிஞ்சது.. அடுத்து பில் வந்ததுக்குப் அப்புறம்தான் மண்டையில ஏறும்.. இதுக்கெல்லாம் பணம் கட்டனுமான்னு..

பொருட்கள் வாங்கினது என்னமோ நாமதான்.. வாங்கின பொருளை யூஸ் பண்ண மட்டும் நல்லா இருக்கும்... பணம் கட்டதாங்க அவ்ளோ கஷ்டமாயிருக்கு.. :-)

பில் வந்துடுச்சா.. நமக்கு என்னதான் வேற பிரச்சினை இருந்தாலும் சரி.. வேற தலை போற கமிட்மெண்ட் இருந்தாலும் சரி.. கார்டுக்குப் பில் கட்டிட்டா தப்பிச்சோம்.. இல்ல அடுத்த பில்லிங்ல கிரெடிட் லிமிட்டை விட ரெண்டு மடங்கு பில் வரும்..

நம்முடைய பில் 500.26 ரூபாய் அப்படின்னு வந்திருக்குனு வைச்சிக்குவோம்.. சரி ஒரு ரெளண்டா இருக்கட்டுமே அப்படின்னு 500 ரூபாய் மட்டும் கட்டினாலும் அடுத்த பில்லுல நமக்கு அதிர்ச்சி இருக்கு.. கட்டாம விட்ட .26 பைசாக்கு வட்டி போடறது மட்டுமில்லாம புதிய பில்லிங்ல இருக்கற அனைத்து பொருட்களுக்கும் சேர்த்துதான் வட்டி போட்டு அனுப்பியிருப்பாங்க..

டேய் என்னடா பண்ணியிருக்கீங்க.. நான் போனமாசம் கரெக்டா பில் கட்டியிருக்கண்டா.. எதுக்கு வட்டி அப்படின்னு கேட்டா.. கன்சர்ன் டிபார்ட்மென்ட்டுக்கு உங்க காலை டிரான்ஸ்ஃபர் பண்றேன் சார் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு.. மியூசிக்கைப் போட்டு விட்டுட்டுப் போயிடுவாங்க கஸ்டமர்கேர்ல.. கொஞ்ச நேரத்துல யாராவது ஒருத்தன் காலை எடுத்து திரும்பவும் கதை கேட்டுட்டு.. சார் நீங்க .26 பைசாவைக் கட்டாம விட்டு இருக்கீங்க.. இது சிஸ்டமேட்டிக் இல்லையா.. அதனால ஏற்கனவே உங்க பில்லிங்ல .1 பைசா பெண்டிங் இருந்தாலும் அதுக்கும் இந்த மாச பில்லிங்கும் சேர்ந்துதான் வட்டி போடுவோம் சார்.. நீங்க எங்களோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை திரும்பவும் படிச்சுப் பாருங்க தெரியும்னு சொல்லுவான்.. அப்ப வரும் பாருங்க கோவம்.. என்னாங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க.. .26 பைசா கட்டாம மிஸ் பண்ணினதுக்கு இவ்வளவு வட்டி போடுவீங்களான்னு ரொம்பக் கத்தினோம்னா.. சரிங்க சார்.. கம்ப்ளைண்ட் நம்பர் நோட் பண்ணிக்கங்க.. வித்தின் 48 அவர்ஸ்ல உங்க பிரச்சினையை சால்வ் பண்றோம்னு சொல்லிட்டு வைச்சிடுவான்..

இதெல்லாம் தேவையா.. தேவையா.. ஒழுக்கமா அந்த .26 பைசாவையும் சேர்த்து கட்டியிருந்தா இவ்வளவு கத்த வேண்டியிருந்திருக்குமா.. அப்படின்னு நொந்துக்கிட்டு.. புது பில்லை அவங்க பிராசஸ் பண்ற வரைக்கும் அவங்களைத் திரும்பத் திரும்ப ஃபாலோ பண்ண வேண்டியிருக்கும்..

திரும்பவும் பில்லை ப்ராசஸ் பண்றதுக்கு.. இன்னும் நாலு முறை தொங்கி.. நானு.. அப்படின்னு ஆரம்பிச்சு.. திரும்பவும் பில்லை பிராசஸ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க.. என்னப்பா சொல்றீங்கன்னு அழுதவுடனே.. அப்புறம் பில்மாறி வரும்..

மக்களே இது என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் இல்ல.. நான் கிரெடிட் கார்டு வாங்கின அன்னைக்கு என்னோட பிரண்ட் ஒருத்தன் இப்படி ஒரு அனுபவத்தை சொன்னான்.. அதுல இருந்து பில் வந்ததுன்னா 5 ரூபாய் அதிகமாவே கட்டிடறது.. எதுக்கு வம்புன்னு..

இருந்தாலும் கிரெடிட் கார்டு வாங்கின புதுசுல அதை ஆன்லைன்ல அக்சஸ் பண்றதுக்கு பின் நம்பர் வேனும் இல்லையா.. அதை கார்டு அனுப்பி பின்னாடியே ஒரு 15 நாள்ல அனுப்புவானுங்க.. அது எனக்குத் தெரியாதே.. சரி கஸ்டமர் கேருக்குப் போன் பண்ணிக் கேப்பமே அப்படின்னு போன் பண்ணினேன்.. விசயத்தைக் கேட்டுட்டு.. சார் நாங்க வைச்சிருக்கற மெடிக்கிளைம் கார்டை சப்ஸ்கிரைப் பண்ணினாத்தான் புதுக் கஸ்டமருக்கு பின் நம்பர் அனுப்புவோம்.. உங்களுக்கு மெடிக்கிளைம் ஆக்டிவேட் பண்ணி விடட்டுங்களான்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு..

அப்படியா... சரி இருங்க நான் திரும்ப போன் பண்றேன்னு.. எனக்கு அட்வைஸ் பண்ணின பிரண்டுக்குப் போன் பண்ணிக் கேட்டேன்... டேய் நல்லா மிளகாய் அரைச்சிருப்பாங்க உன் தலையில.. உனக்கு பின் நம்பர் வீடு தேடி வரும் வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு வைச்சிட்டான்.. எனக்கு அடப்பாவிகளான்னு ஆயிடுச்சு.. சரி இனி இந்தப் பயிலுககிட்ட கொஞ்சம் கவனமாகவே இருக்கனும்னு மனசுக்குள்ள உறுதி மொழியெடுத்துக்கிட்டேன்..

ஒரு மாசம் முடிஞ்சது.. முதல் முறையா கிரெடிட் கார்டு வாங்கியிருந்தனா.. அதனால தினமும் கார்டை ஒருமுறை பெருமையாக எடுத்துப் பார்த்துட்டு பர்ஸ்குள்ள வைச்சுப்பேன்.. ஒரு நாள் திரும்பவும் ஒரு கால் வந்தது.. சார் மெடிக்கல் இன்சூரன்ஸ் ஒன்னு உங்க பேர்ல 4 லட்சத்துக்கு ஆக்டிவேட் ஆயிருக்கு சார்.. நீங்க ஓகேன்னு சொன்னா.. இந்தக் போன் காலவே கன்பர்மேசனா எடுத்துக்கிட்டு உங்களுக்கு கொரியர் பண்ணிடுவேன்.. நீங்க மாசம் அதுக்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டனும்.. அதையும் உங்க கார்டுல இருந்தே லவட்டிக்குவோம்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னம்மா சொல்ற.. நான் எந்த மெடிக்கல் இன்சூரன்ஸுக்கும் அப்ளை பண்ணவே இல்லையே அப்படின்னேன்.. இல்லங்க சார் நீங்க கார்டு அப்ளை பண்றதுக்கு ஃபாம் ஃபில் பண்ணிங்க இல்லையா.. அதுல இருந்த ஒரு செக் பாக்சை டிக் பண்ணிட்டீங்க.. அதனால உங்க பேர்ல அப்பவே ஆக்டிவேட் ஆயி இன்னும் டெலிவரி பண்ணாம இருக்கு அப்படின்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. இல்ல வேணாம் கேன்சல் பண்ணிடுங்கன்னேன்.. ஃபார் டி ஆக்டிவேசன்.. யூ நீட் டூ பே 25000 ருபீஸ் சார் அப்படின்னு சொல்லுது..

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு.. இது என்னடா வம்பாப் போச்சுன்னு நான் இதே நம்பருக்கு உங்களைக் கூப்பிடறேன்னு சொல்லிட்டு.. கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி விசயத்தை சொல்லி விவரம் கேட்டேன்.. அதுக்கு அங்கே இருந்த பொண்ணு.. சார் நீங்க சொல்ற மாதிரி எதுவும் கிடையாது.. பொய் சொல்லியிருக்காங்க.. ஆனால் உங்களுக்காக நான் ஒரு ஸ்பெசல் ஆஃபர் வைச்சிருக்கேன்.. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா சார் அப்படின்னு கேட்டுச்சு.. எனக்கு வந்தது பாருங்க கோவம்.. வாய் வரைக்கும் வந்திடுச்சு.. அடக்கிக்கிட்டு "நாட் இன்ட்ரஸ்டடு" அப்படின்னு சொல்லி வைச்சிட்டு.. எனக்கு ஃபோன் பண்ணி அன்னைக்கு நைட் தூக்கத்தைக் கெடுத்த பொண்ணுக்கு கால் பண்ணித் திட்டினேன் பாருங்க.. இதுவரைக்கும் தெரியாத பொண்ணுங்களை எல்லாம் திட்டினதே இல்ல.. அப்படி ஒரு திட்டு..

ஆனால் திட்டிட்டு வைச்சுட்டு கோவம்லாம் அடங்கினதுக்கு அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்.. பாவம் அந்தப் பொண்ணு.. என்ன பண்ணும்.. அதோட பிழைப்பு அது.. இப்படி எல்லாம் பொய் சொல்லித்தான் ஒவ்வொருத்தரையா பிடிக்க வேண்டியிருக்குன்னு நினைச்சிக்கிட்டேன்..

சோ.. கிரெடிட் கார்டு யூஸ் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டோம்னா.. இதெல்லாம் நாம பாஸிட்டிவா எடுத்துக்கிட்டு.. நாம கவனமா இருந்துக்கனும்.. கஸ்டமர் கேர்ல இருந்து கால் பண்ணி எது வேனும்னு கேட்டாலும் சரி.. கண்ணை மூடிக்கிட்டு "நோ" சொல்லிடுங்க.. ரைட்டா..

வெட்கப்படும் பிராணி மனிதன்தான்…(பொன்மொழிகள்)

1.  சந்தோஷத்தைவிட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய,
நல்ல படிப்பினைகளை சொல்லிக் கொடுக்கின்றன.

-விவேகானந்தர்

2.  மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத்தான் கேடு வரும்.

-எமவ்ரென்

3.  கடைசிவரை அமைதியாக இருப்பது

மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

-வில்லியம் ஜேம்ஸ்

4. அரைகுறை படிப்புக்கு அகந்தை அதிகம்.

-மாத்யூ

5. உயர வேண்டுமானால் பணிவு வேண்டும்.

-சாப்மன்

6.  எல்லாவிதத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அகங்காரம்.

-கிப்ஸன்

7.  இடையூறுகளும் துன்பங்களுமே

மனிதனை மனிதனாக்குபவை.

-மாத்யூஸ்

8.  அறிவு என்பது மேஜை விளக்கு. அன்பு என்பது கலங்கரை விளக்கு.

-லால்ரிட்ஜ்

9.  கண்ணியமும் நேர்மையும் நம் இரு கண்கள்.

-இங்கர்சால்

10.  வெட்கப்படும் பிராணி மனிதன்தான்.

-மார்க் ட்வைன்

ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு...?

கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.


இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்.இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.


அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all language options இனை தெரிவு செய்யவும்.


அதன் பின்னர் Input Tools விண்டோ ஒன்று தென்படும், தொடர்ந்து மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.


(குறிப்பு – கையெழுத்து மூலமான மொழிகளை தேர்வு செய்யும் ஒப்சன் பென்சில் ஐகானுடன் காணப்படும்)

இதன் பின்னர் சேமிக்கவும், இப்போது ஜிமெயில் விண்டோவானது Refresh ஆகும்.


தொடர்ந்து Handwriting  ஆப்சனை பயன்படுத்துவதற்கு ஆப்பிள் கணினிகளில் Cmd + Shift + K என்ற கீக்களையும், ஏனைய கணினிகளில் Ctrl + Shift + K ஆகிய கீக்களையும் பயன்படுத்த முடியும்.

கணனி பராமரிப்பு பற்றி சூப்பர் டிப்ஸ்!

கணனிகள் இன்றைய கால கட்டத்தில் மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது எனலாம்.

இருப்பினும் நாம் அந்த கணனியின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில் அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.

சி.பி.யு (CPU)

உங்கள் கணனியை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கணனியை சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கணனி சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும்.

உள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும்.

இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும்.

கீ போர்ட் (Keyboard)

இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம் வெளியேறும்.

இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் நனைத்து கீகளின் மேலாகவும், பக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும்.

மவுஸ் (Mouse)

இதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.

டேட்டா பேக் அப் (Data Backup)


கணனி உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய கோப்புகளை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய்விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கணனியின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும்.

என்ன செய்தாலும் அதில் உள்ள கோப்புகள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே கோப்புகளை உருவாக்கி உடனேயே அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும்.

மால்வேர் பாதுகாப்பு (Malware Protection)

நான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை, தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை, எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கணனி இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கணனிக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

இதற்கென இலவச புரோகிராம்கள் மட்டுமின்றி கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களும் கிடைக்கின்றன. இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து இயக்கி வந்தாலும், அவற்றை அவ்வப்போது இணைய இணைப்பு கொடுத்து அப்டேட் செய்திட வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.

சாப்ட்வேர் அப்டேட் (Software Update)

நீங்கள் எப்போதுமே சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என அந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.

ஹாலிவுட் ஹீரோவுக்கு பயந்து டைட்டில் மாற்றிய பிரபுதேவா!



ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோனுக்கு பயந்து தான் இயக்கும் பட டைட்டிலை மாற்றினார் பிரபுதேவா.

தமிழில் போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது பாலிவுட் படங்களை இயக்குகிறார்.

 ஷாஹித் கபூர் நடிக்கும் ஆர் ராஜ்குமார் படத்தை தற்போது இயக்கியுள்ளார்.

முன்னதாக இப்படத்துக்கு ராம்போ ராஜ்குமார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

திடீரென்று அதை ஆர் ராஜ்குமார் என்று சுருக்கினார்.

ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோன் ஏற்கனவே ராம்போ பெயர்கொண்ட படங்களில் 2 பாகம் நடித்திருக்கிறார்.

 அந்த டைட்டிலுக்கு சர்வதேச அளவில் படம் ரிலீஸ் ஆகும்போது பிரச்னை ஏற்படும் என்பதால் தனது பட டைட்டிலை சுருக்கிகொண்டார் பிரபுதேவா.

இது பற்றி அவர் கூறும்போது, ஒருநாள் நானும் ஷாஹித்தும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஸ்டேலோன் நடித்த ராக்கி 5 படம் ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது ஸ்டேலோன் நடித்த ராம்போ பட டைட்டில் வைத்தால் அதற்கு ஆட்சேபம் வரலாம் என்று எண்ணினேன்.

ஸ்டேலோன் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரலாம். அதனால் ராம்போ ராஜ்குமார் என்ற பெயரை ஆர் ராஜ்குமார் என்று மாற்றிவிட்டேன்.

கவுதம் மேனனின் சட்டென்று மாறுது வானிலை!



வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என்று சினிமா பாடல் வரிகளை தனது படங்களுக்கு டைட்டிலாக வைக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்,


 அடுத்தப்படத்துக்கும் பாடல் வரியை டைட்டிலாக வைத்துள்ளார். அவர் இப்போது இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என்ற சினிமா பாடல் வரி டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கவுதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டபோது கூறியதாவது:


இந்தப் படம் காதல், ஆக்ஷன் என்று செல்லும். கவித்துவமான தலைப்பு வைக்க நினைத்தேன். சட்டென்று என் மனதில் தோன்றிய வரி, சட்டென்று மாறுது வானிலை.


என் படத்தின் பாடல் வரியே டைட்டிலாக கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயாவின் இரண்டாவது பாகமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. இது வேறொரு தளத்தில் செல்லும் கதை.


முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியா முழுவதும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.இவ்வாறு அவர் சொன்னார்.

இறுதிக்கட்டத்தில் ‘ஐ’



இறுதிகட்டத்தை எட்டியுள்ளது ஷங்கரின் 'ஐ'.பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிக்கும் திரைப்படம் ஐ.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.


படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளதால் அதன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ஷங்கர்.


'ஐ' படத்திற்காகத் தன்னுடைய உடலமைப்பை மிகவும் மாற்றியுள்ள விக்ரம் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற்ற பின்னர் இயக்குனர் தரணியின் படத்தைத் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டலில் ரீ – ரிலீஸாகிறது!



கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வந்து சக்கை போடு போட்ட கர்ணன், பாசமலர், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை தற்போது டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் இப்படங்களையும் ஆர்வமாக பார்த்தார்கள். இதில் கர்ணன் படம் கணிசமாக வசூல் ஈட்டியது. இந்நிலையில் அந்த டிஜிட்டல் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் படமும் மறுபடியும் ரிலீஸாகிறது.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் முக்கியமான படமாகும். 1965–ல் இப்படம் ரிலீசானது. எம்.ஜி.ஆருடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரும் நடித்து இருந்தனர். பி.ஆர். பந்துலு இயக்கினார். எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்.


கொடுங்கோல் மன்னனை எதிர்த்து போராடும் ஒரு வீரமிக்க மருத்துவரின் கதை. கடலிலும் தீவுகளிலும் பிரமாண்டமாக படமாக்கி இருந்த. இந்த படத்தில் இடம் பெற்ற ஆடாமல் ஆடுகிறேன், அதோ அந்த பறவை போல, நாணமோ இன்னும் நாணமோ, ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஏன் என்ற கேள்வி போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து இன்றைக்கும் விரும்பி கேட்கப் பட்டு வருகிறது.


இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரீரிக்கார்டிங், ஒலி ஒளியும் மெருகேற்றப்பட்டு.அடுத்த மாதம் (ஜனவரி) இப்படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் சிவாஜியின் சவாலே சமாளி படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது

ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி!



டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர்.


இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும்.


எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 சேனலை செலக்ட் செய்து அப்புறம் ஆளுக்கு ஒரு கண்ணடியை போட்டால் அந்த அந்த கண்ணாடிக்கு அந்த அந்த சேனல் மட்டும் தெரியும்.


இதன் திரை சினிமா திரை போன்று சற்று சாய்ந்து இருப்பதால் இதன் குவாலிட்டி சூப்ப்ர்ங்கோ….


வழக்கம் போல நீங்கள் கில்மா சேனலும் / உங்க வீட்டமா உப்புமா சீரியலும் பார்த்து கலக்குங்க…….

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

 

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை.


 இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர்.


இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும்.


தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது யூ எஸ் பின் உடைந்து விடும். அல்லது சில டிவைசை மாட்டவே முடியாது என்பதுடன் அதற்க்கு மேல் ஃபீமேல் எக்ஸ்டென்ஷன் வேண்டும்.


 இந்த கருமத்தை அனேக டேட்டா கார்டுகளில் / யூ எஸ் பி டாங்கிளில் நீங்கள் பார்த்தீருப்பீர்கள்.


இனிமேல் அந்த கவலை தேவையில்லை எப்படி சொருகினாலும் அது வேலை செய்யும்.


 இதன் மூலம் யூ எஸ்பியில் சார்ஜ் ஆகும் டிவஸ்களின் சார்ஜ் நேரம் குறையும் 1/3 ஆப்பிள் 5 எஸ் சார்ஜர் PIN இந்த வகையில் தான் வடிவமைப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா???

கிருபானந்தவாரியார்-சொற்பொழிவிலிருந்து....


 கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!


ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.

“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.”

“என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.”

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”

“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

“ஆம்! தெரிகின்றன.”

“முழுவதும் தெரிகின்றதா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.

“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”

“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”

“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”

“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.

“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”

“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”

“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?”

“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”

நிமிடங்களில் மாற்றம் !


ஏழு நிமிடங்களில் நம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? முடியும் என்கிறார் 'தி 7 மினிட் சொல்யூஷன்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அலிசன் லூயிஸ். ஏழு நிமிடங்களில் மாற்றம் என்பது இரண்டு அடிப்படை நம்பிக்கைகளை மனதில் கொண்டு சொல்லப்படுவது என்கிறார் அவர். முதலாவது, நீங்கள் மாற வேண்டும் என்று நினைத்த நேரத்திலேயே மாறுதல் வந்துவிடுகிறது. இரண்டாவது, மாற வேண்டும் என்று நினைத்த நிமிடத்தில் இருந்து அன்றாடம் சிறுசிறு அடிகளாக முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆக, மாற வேண்டும் என்கிற எண்ணம்தான் மாற்றத்துக்கான வித்து. 


அதெப்படி மாறவேண்டும் என்று நினைத்தவுடன் மாறிவிட முடியுமா? என்று கேட்கிறவர்களுக்கு மனித இதயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் ஆசிரியர். இதயம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? நம் உடலுக்குத் தேவையான ரத்தத்தைத் தேவையான அளவில் சீராக பம்ப் செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆனால், உடலின் தேவையோ ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. படுத்துறங்கும்போது குறைந்தபட்ச தேவையும், உடற்பயிற்சி செய்யும்போது அதிகபட்ச தேவையும் உண்டாகிறது. இதயமோ தேவைக்கேற்ப மாறுபட்டு செயல்படுவதில் சளைப்பதே இல்லை. அதுமாதிரி நீங்கள் என்ன கேட்கிறீர்களோ, அதைத் தரும் குணத்தைக் கொண்டுள்ளது வாழ்க்கை. திருப்தியான வாழ்க்கையைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கு  நிச்சயம் கிடைக்கும். 


ஒவ்வொரு நாளும் ஏழு நிமிடங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை கொஞ்சம் சீரியஸாக உற்றுநோக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என்கிறார் ஆசிரியர்.


ஏன் ஏழு நிமிடம்? ஏழு நிமிடத்துக்குமேல் மனிதனின் முழுக்கவனம் ஒன்றின்மேல் ஈடுபாட்டுடன் இருப்பதில்லை என்கிறது உளவியல் ஆய்வுகள்.  இதயம் சரியாக செயல்பட ஆக்ஸிஜன் தேவைப்படுகிற மாதிரி நம் வாழ்க்கை சிறக்க இந்த ஏழு நிமிட தீர்வுகள் உதவும். இந்தத் தீர்வில் ஆசிரியர் நம்மை நாமே அன்றாடம் கேட்டுக்கொள்ளச் சொல்வது ஏழே ஏழு கேள்விகளைத்தான். அந்தக் கேள்விகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


உங்கள் வாழ்வை அறிவீர்களா?


உலகத்தில் இருக்கும் பிரச்னைகளுடனான இரைச்சல்களில் நம் மூளை எது முக்கியம் என்பதை உணரத் தவறுகிறது. பெருநகரங்களில் அலுவலகத்துக்குச் செல்வதே பெரிய வேலையாகிறது, அலுவலகத்தில் செய்யும் வேலையைவிட! நிஜமான கேள்வியே உங்களுக்கு உங்கள் வாழ்க்கை என்ன தரவேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்களோ, அதைத் தர வாழ்க்கை தயாராக இருக்கிறது. உங்கள் தேவை  என்ன? அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.


முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறீர்களா?


நீங்கள் உங்கள் வாழ்க்கையிடம் அதிகமாக திட்டவட்டமாக இது வேண்டும் என்று கேட்கும்போது, நாம் இதற்கு தகுதியானவராக இருக்கிறோமா அல்லது நம்மை இந்தத் தகுதிக்கு உயர்த்திக்கொள்ளும் செயல்களைச் செய்கிறோமா என்கிற கேள்வி உங்களுக்கே தோன்றிவிடும் என்கிறார்
ஆசிரியர்.

அடுத்த 90 நாட்களில் இதைச் செய்து முடிக்கவேண்டும் என்ற தீர்மானமான முடிவை எடுத்து செயலாக்க முயன்றீர்கள் என்றால், உங்களினுள் பிறக்கும் உத்வேகத்துக்கு அளவேயிருக்காது என்கிறார் அவர்.


நீங்கள் வளர்கிறீர்களா?


நம் மூளைக்கு அபரிமிதமான சக்தி இருந்தபோதிலும், ஒரேயரு பிரச்னை அதில் இருக்கிறது. உபயோகியுங்கள் அல்லது இழந்துவிடுங்கள் என்ற நிலையில்தான் மூளையின் பவர் அனைவருக்கும் இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தாதபட்சத்தில் மூளை தன் சக்தியை இழக்கிறது என்கிறார் ஆசிரியர். வளர்ந்துகொண்டே கற்றுக்கொள்வது மிக மிக முக்கியமானது என்று இங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார்.


நீங்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறீர்களா?


எப்போது பார்த்தாலும் பிஸியாக இருக்கும் நீங்கள் ஈடுபாடில்லாமல் பிஸியாக மட்டும் இருந்தீர்கள் என்றால் வாழ்க்கை உங்களுக்கு சுலபத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடும். மிகவும் பிடித்த மற்றும் ஈடுபாடுடைய விஷயங்களைப் பட்டியலிட்டு அதைத் தொடர்ந்து செய்யும்போது மட்டுமே புதிய முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்.


நீங்கள் விடாமுயற்சியுடன் கொண்ட ஊக்கம் மிகுந்தவரா?


வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாறுதலைக் கொண்டுவர நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி என்பது மிக மிக அதிகமாக வேண்டியிருக்கும். ஏனென்றால், கெட்ட பழக்கங்களை (இணையத்தில் மூழ்கியிருப்பது) விட்டொழிப்பதற்கு விடாமுயற்சி மிக மிக அவசியம். சௌகரியமான தினசரி வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கும் விடாமுயற்சி அதிகமாக இருக்க வேண்டும். இவற்றைவிட்டு வெளியே வந்தால்தான் வளர்ச்சி என்ற ஒப்பற்ற விஷயத்தை நாம் அனுபவிக்க முடியும் என்கிறார் அவர்.


நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறீர்களா?


மனித மூச்சைப்போல நம்பிக்கையும் மிக மிக முக்கியமான ஒன்று. நம்பிக்கைதான் உங்களை இன்றைய நிலையிலிருந்து முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்வது. நம்மாலும் மாற முடியும் என்ற நினைப்பைத் தருவது. நம்பிக்கையில்லாத வாழ்க்கை ஓர் அவநம்பிக்கை நிறைந்ததாக இருக்கும், எந்த ஒரு மூடநம்பிக்கையிலும் (பில்லி, சூனியம், சாமியார் என) நம்பிக்கைகொண்டதாக மாறிவிடவும் கூடும்.


இந்த ஏழு நிமிட முறையினை எப்படி கடைப்பிடிப்பது என்று புத்தகம் முழுவதுமே விவரித்து இருக்கிறார்.

''உங்கள் கனவுகளை பேப்பரில் கொண்டு வாருங்கள். எழுதாத கனவுதனை சாதிப்பது என்பது சாத்தியமில்லை. உங்களை ஊக்கப்படுத்தும் ஒரு நபரிடமாவது அன்றாடம் உரையாடுங்கள். நீங்கள் சரியென்று நினைக்கும் விஷயங்களைத் தவறென்று சொல்லும் புத்தகங்களைப் படியுங்கள். உங்கள் நண்பர் ஒருவரையும் அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லுங்கள். இருவரும் அந்தப் புத்தகத்தைப் பற்றி உரையாடுங்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு பாசிட்டிவ் சபதத்துடன் ஆரம்பியுங்கள். உங்கள் சபதத்தை உறக்கச் சொல்லுங்கள். அது உங்கள் மனதில் வலுசேர்க்கும்.


கஷ்டம் வரும்போது நீங்கள் எதையெல்லாம் நினைத்துப் பெருமைப்படவேண்டும், எதற்கெல்லாம் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும் என்ற ஒரு லிஸ்ட்டைப் போடுங்கள். அவை உங்கள் மனதின் போக்கை மாற்றிவிடும். உங்களுடைய தனித்திறமை ஒன்றை கண்டுபிடியுங்கள். அதை வளர்ப்பதற்கு தினம்தினம் முயற்சிகளை இடைவிடாது செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நம்புங்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து செயல்படாதீர்கள்'' என்று சொல்கிறார் ஆசிரியர்.


புத்தகத்தின் கருத்துகளும், அவை சொல்லப்பட்ட விதமும் தன்னை மாற்றவேண்டும் என்ற உத்வேகம் கொண்ட வர்கள் படித்தேயாகவேண்டும் என்று பறைசாற்றுபவையாக இருக்கின்றன. அனைவரும் ஒருமுறையாவது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் சந்தேகமே இல்லை!

எதிரிகளை வெல்ல ஸ்லோகம்



ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

மன்னன் யுவனாச்வன் எடுத்திருக்கும் முடிவை அறிந்த மந்திரிகள் திகைத்தார்கள். அவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடிக் கூடி விவாதித்தார்கள். இஷ்வாகு மன்னனான யுவனாச்வனுக்கு வாரிசு இல்லை என்று நாடே கவலைப்படுகிறது. அரசியும் அளவற்ற வேதனையில் ஆழ்ந்திருக்கிறாள். இதனிடையில் மன்னன் கானகம் சென்று தவமியற்ற முடிவெடுத்து விட்டானே? மன்னன் முடிவை எப்படி மாற்றுவது? ‘‘மன்னா! இன்னும் சிறிதுகாலம் பொறுங்கள். நாங்கள் சில முனிவர்களை அணுகி வருகிறோம். தங்கள் ஜாதகத்தைக் காட்டி, யாகத்தாலோ மந்திரங்களாலோ தங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்ட வழியுண்டா என்று விசாரித்து வருகிறோம்.


அதற்குள் கானகம் சென்று தவமியற்ற அவசரப்பட வேண்டாம்!’’ வயதில் மூத்த தலைமை மந்திரி யுவனாச்வனிடம் வேண்டினார். ஆனால், மன்னன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். எத்தனை காலம் இப்படி வேதனையைச் சுமந்து வாழ்வது? மந்திரிகளிடம் அவர்கள் சிறந்த புத்திசாலிகள் என்றும் மன்னன் இல்லாவிட்டாலும் அவர்களே நாட்டைச் சிறப்பாக நிர்வகித்து ஆளமுடியும் என்றும் சொல்லிவிட்டான். நிலைமை இவ்வளவு நெருக்கடியாக, இத்தனை சீக்கிரம் உருவாகும் என்று மந்திரிகள் எண்ணியிருக்கவில்லை. மன்னன் இல்லாவிட்டால் பகை நாட்டினர் தைரியமாகப் போரிடத் துணிவார்களே! தாங்கள் நாட்டை ஆள்வதாவது?


நாட்டுக்கு ஆசைப்பட்டு மந்திரிகள் மன்னனைக் காட்டுக்குத் துரத்திவிட்டார்கள் என்றல்லவோ மக்கள் பேசுவார்கள்? நமக்கெதற்கு அந்தப் பழி? மேலும் இந்த மன்னனுக்குப் புத்திரனில்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு என்ன குறை இருக்கிறது? இவனைப் போன்ற சிறந்த மனிதனை எங்கு தேடினாலும் காணக் கிடைக்காது. மந்திரிகள் ஒரு முடிவு செய்தார்கள். காட்டில் கடும் தவம் இயற்றிவரும் பார்க்கவ முனிவரை அணுகுவதென்றும் இந்தப் பிரச்னைக்கு அவர் காட்டும் வழியைப் பின்பற்றுவதென்றும் தீர்மானித்தார்கள். அன்றே அவசரமாகக் கானகத்திற்குப் புறப்பட்டார்கள். தவம் செய்ய முடிவு செய்திருக்கும் மன்னன் தங்கள் முயற்சியைத் தடுத்துவிடக் கூடும் என்றெண்ணி மந்திரிகள் மன்னனிடம் தாங்கள் பார்க்கவ முனிவரைப் பார்க்கப் போவதைத் தெரிவிக்கவில்லை.


அப்படித் தெரிவிக்காதது எத்தனை பெரிய சிக்கலை உருவாக்கப் போகிறது என்பதையும் அவர்கள் அப்போது அறியவில்லை. ஏற்கெனவே அரசிக்கு மன்னன் கானகம் செல்ல முடிவெடுத்திருப்பது உள்பட அனைத்தும் தெரியும். தன் விதியை நொந்துகொண்டு அவள் அன்றிரவு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் எழுந்த மன்னன் சாளரத்தின் வழியே நிலவொளியில் தெரிந்த மனைவியின் முகத்தைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை மெல்லக் காதோரமாக ஒதுக்கிவிட்டான். போர்வையை எடுத்துப் பரிவோடு போர்த்தி விட்டான். உத்தமமான மனைவி.


அழகில் மட்டுமல்ல, பண்பிலும் சிறந்தவள். தன்னால் இவளுக்குப் புத்திர பாக்கியம் தர இயலவில்லையே! தன்னையே குழந்தைபோல் எண்ணித் தன்மேல் தாளாத பாசம் செலுத்துபவள். தன்னைப் பிரிய நிச்சயம் உடன்பட மாட்டாள். இவளிடம் சொல்லாமலே தான் கானகம் செல்ல வேண்டும். பூனைபோல் மெல்லப் பதுங்கி எழுந்த மன்னன், அரண்மனையை விட்டு வெளியேறி யாருமறியாமல் நாட்டை அடுத்திருந்த ஒரு கானகத்தை நோக்கி நடந்தான்.


அவன் தவம் செய்ய எண்ணிச் சென்ற கானகமும் பார்க்கவ முனிவரைத் தேடி மந்திரிகள் சென்ற கானகமும் ஒன்று என்பதை இரு தரப்பினரும் அறியவில்லை. அதனால் ஒரு விபரீதம் நேரப் போவதையும் அவர்கள் யாரும் அப்போது உணரவில்லை. மன்னன் தவம் செய்ய இடம்தேடிக் கானகத்தில் ஒருபுறம் அலைந்து கொண்டிருந்த வேளையில், மந்திரிகள் அதே கானகத்தில் இன்னொரு புறம் இருந்த பார்க்கவ முனிவரின் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார்கள். முனிவர் அவர்கள் சொல்வதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.


ஒரு மன்னன் மேல் இத்தனை மந்திரிகள் இப்படியொரு பாசம் செலுத்துகிறார்கள் என்றால் அவன் மிக உயர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார். மாபெரும் தவசீலரான அவர் அந்த மன்னனின் பிரச்னையைத் தீர்க்கத் திருவுளம் கொண்டார். அந்தக் கானகத்தில் நீர்நிலைகள் அபூர்வம் என்றும் வடக்குப் பக்கமாக உள்ள ஒரே ஒரு குளம்தான் குடிக்கும் வகையில் தண்ணீர் தரக் கூடியது என்றும் சொல்லி, அங்குபோய் இறைவனைப் பிரார்த்தித்து, ஒரு சிறு செம்பில் தண்ணீர் எடுத்து வருமாறு மந்திரிகளைப் பணித்தார். மந்திரிகள் மிகுந்த நம்பிக்கையோடு செம்பில் நீர் கொணர்ந்தார்கள். நீர்ச்செம்பைக் கையில் வாங்கிக் கொண்ட பார்க்கவர் இறைவனைத் தியானம் செய்தார்.


பின் மந்திரிகளிடம் சொல்லலானார்: ‘‘அன்பர்களே! நான் இந் தக்கலச நீருக்கு வலிமையேற்றும் வகையில் முழு மன ஒருமைப்பாட்டோடு, புத்திர பாக்கியத்தைத் தரும் மந்திரத்தை ஜபம் செய்யப் போகிறேன். ஒரு லட்சத்து எட்டு முறை அந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். என் ஒருமைப்பாடு சிதறும் வகையில் நீங்கள் யாரும் எந்த சப்தமும் செய்யக் கூடாது. எந்தப் பேச்சும் பேசாமல் அமைதியாக இருங்கள். என் ஜப எண்ணிக்கை முடியும்வரை நான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். என் ஜபம் முடியும்வரை நீங்களும் இறைவனை மனத்தில் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.’’


மந்திரிகளில் ஒருவர் தயக்கத்தோடு கேட்டார்: ‘‘சுவாமி! அப்படி நீங்கள் ஜபித்த தண்ணீரை எங்கள் அரசி குடித்தால் அவள் கர்ப்பமடைவது உறுதி தானே?’’ பார்க்கவ முனிவர் நகைத்தார். ‘‘நான் ஜபித்த தண்ணீரை ஒரு விலங்கு அருந்துமானால் அது கர்ப்பமடைந்து ஒரு மனிதக் குழந்தையைப் பிரசவிக்கும். ஏன் ஒரு பாறையில் இந்தத் தண்ணீரைக் கொட்டினால் பாறை கர்ப்பமடையும்; பத்து மாதங்களில் பாறையைப் பிளந்துகொண்டு ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்!


அவ்வளவு அபூர்வமான மந்திரத்தை ஜபிக்கப் போகிறேன். உங்கள் நாட்டுக்கு ஒரு வாரிசு தோன்றப் போவது உறுதி.’’மலர்ச்சியோடு சொன்ன முனிவர், விழிகளை மூடி ஜபம் செய்யலானார். மந்திர உரு ஏற ஏற செம்பில் இருந்த நீரின் வலிமையும் ஏறிக் கொண்டே இருந்தது. ஆனால், லட்சத்து எட்டு முறை ஜபிப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்று மந்திரிகளால் ஊகிக்க இயலவில்லை. நேரம் கடந்துகொண்டே இருந்தது. முனிவரோ கண்ணைத் திறக்கவில்லை. ஜபத்தை நிறுத்தவும் இல்லை. அவர் தம் ஆழ்மனத்தில் லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை முடியும் வரை ஜபிப்பது என்று சங்கல்பம் செய்திருந்தார். லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை வந்ததும் தம் ஆழ்மனமே தமக்கு அறிவுறுத்தும் என அவர் அறிவார். மந்திரிகளின் கண்களைத் தூக்கம் தழுவியது. சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் ஆசிரமத்தின் உள்ளே இருள் படர்ந்தது. மந்திரிகள் ஒவ்வொருவராகத் தாங்கள் இருந்த இடத்திலேயே அப்படியே படுத்து உறங்கலானார்கள்.


மறுநாள் சூரியோதயம் ஆகும் தருணம். இருள் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை. முனிவர் தன் ஜபம் முடித்து கண் திறந்தார். கலசத்தில் இருந்த புனித நீரை நிறைவோடு பார்த்தார். இனி அது தன் வேலையைச் செய்யும் என்பதை அவர் அறிவார். கலசத்தைச் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக வைத்து, கலசத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மெல்ல எழுந்தார். மந்திரிகள் அனைவரும் களைப்பில் உறங்குவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். குழந்தை மனம் படைத்த நல்லவர்கள் இவர்கள். அந்த மன்ன னுக்கு இத்தகைய மந்திரிகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். காலைக் கடன் முடித்து குளித்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதன் பொருட்டு ஆசிரம வாயில் கதவைத் திறந்துகொண்டு கமண்டலத்தோடு நீர்நிலை நோக்கி நடந்தார்.


மன்னன் யுவனாச்வன், தவமியற்றத் தகுந்த இடம் தேடி அன்று முழுவதும் கானகமெங்கும் திரிந்தான். அடர்த்தி மிகுந்த அந்தக் கானகத்தில் அத்தகைய இடம் வாய்ப்பது அபூர்வமாக இருந்தது. நடந்து நடந்து அவன் கால்கள் கெஞ்சின. தாகத்தால் உயிரே போய்விடும்போல் இருந்தது. மழைநீரால் வளம் பெற்று மரங்கள் அடர்ந்துள்ள இந்தக் கானகத்தில் குடிக்கத் தண்ணீர் தரும் நீர்நிலையையே காணோமே? ஒரு பகல் முழுதும் சுற்றி இரவும் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.


ஆனால், ஒரு குளத்தையோ குட்டையையோ கண்டுபிடிக்க முடியவில்லையே? மன்னன் கால்வலியோடும், தாகத்தோடும், சலிப்போடு நடந்துவந்தபோதுதான் அதிகாலைக் கருக்கலின் மெல்லிய இருளில் அந்த ஆசிரமம் அவன் கண்ணில் பட்டது. வாயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். பசியாலும் தாகத்தாலும் அவன் விழிகள் மங்கியிருந்தன. ஆசிரமத்தினுள் யார் யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார் என இருள் காரணமாக அவனால் அடையாளம் காண இயலவில்லை. ஓர் ஓரத்தில் ஒரு செம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. தாகம் பொறுக்காத மன்னன் அந்தச் செம்பு நீரை எடுத்துக் கடகடவெனக் குடித்தான். பின் அப்படியே கீழே சாய்ந்து அவனும் உறக்கத்தில் ஆழ்ந்தான். வெளியே சென்ற பார்க்கவ முனிவர் திரும்புவதற்குள் சூரியன் நன்கு உதயமாகி விட்டான். ஆசிரமத்தின் உள்ளே வந்தவர் அனைவரும் இன்னும் உறங்குவதைப் பார்த்து நகைத்துக் கொண்டார்.


மிகுந்த நம்பிக்கையோடு செம்பைப் பார்த்தார். இதென்ன, செம்பில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணோமே? நாம் செய்த மந்திர ஜபம் எல்லாம் வீணாகி விட்டதே? அவர் மனம் திடுக்கிட்டுப் பதறியது. கூச்சலிட்டு அனைவரையும் எழுப்பினார். மன்னன் எழுந்து தன் மந்திரிகளெல்லாம் அங்கிருப்பதைப் பார்த்துத் திகைத்தான். பின் விசாரித்து விஷயங்களை அறிந்துகொண்டான். ‘‘நான் மந்திர ஜபம் செய்த இந்தச் செம்பு நீர் எங்கே போயிற்று?’’ என வினவினார் முனிவர். ‘‘கடும் தாகம் காரணமாக நான்தான் தெரியாமல் அருந்தி விட்டேன்! என்னை மன்னிக்க வேண்டும்!’’ என முனிவரைப் பணிந்தான் மன்னன். ‘‘மன்னனே! நீ தெரியாமல் செய்த செயலாலும் நன்மையே உண்டாயிற்று. உன் மனைவி கர்ப்பமடைவதற்கு பதிலாக இந்த நீரை அருந்திய நீ கர்ப்ப மடைவாய். இன்னும் பத்து மாதத்தில் உன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உன் வாரிசு பிறக்கும். இது உறுதி!’’


இதைக் கேட்டு மந்திரிகள் பதறினார்கள். ‘‘சுவாமி! வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாரிசு பிறந்தால் எங்கள் மன்னர் இறப்பாரே? எங்களுக்கு மன்னரும் வேண்டுமே? வாரிசு வளர்ந்து வாலிபனாகும்வரை நாட்டை யார் ஆள்வது?’’ மன்னன் மேல் மந்திரிகள் செலுத்திய பேரன்பைப் பார்த்து முனிவர் நெகிழ்ந்தார். ‘‘கவலைவேண்டாம். இந்த மந்திர ஜபத்தின்போதே சுகப்பிரசவம் நடக்கவேண்டும் என்ற உப மந்திரத்தையும் சேர்த்துத்தான் ஜபித்திருக்கிறேன். எனவே சுகப் பிரசவம்தான் நடக்கும். மன்னன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை பிறந்தாலும் உடனே வயிறு கூடிக் கொள்ளும். விரைவில் புண் ஆறி மன்னன் சரியாகி விடுவான்!’’


முனிவரின் பதிலால் நிறைவடைந்த மந்திரிகளும் மன்னனும் அவரை நமஸ்கரித்து விடைபெற்று அரண்மனை சென்றார்கள். ராணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், குழந்தை பிறந்தால் அது தாய்ப்பாலுக்கு என்ன செய்யும் என்பதை மட்டும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை! பத்து மாதம் கழித்துக் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் மந்திரிகளும் மக்களும் மனம் மகிழ்ந்தார்கள். ஓர் ஆண், பிள்ளை பெற்ற அதிசயத்தைப் பார்க்க வானில் தேவர்கள் குழுமினார்கள். இந்திரன் மற்ற தேவர்களிடம் சொன்னான்: ‘‘உலகில் எல்லோரும் பெண் பெற்ற பிள்ளைகள் என்ற வகையில் பெண் பிள்ளைகள் தான். இதோ இவன் ஒருவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!’’


மற்ற தேவர்கள் கலகலவென நகைத்தார்கள். இப்போது குழந்தை அழத்தொடங்கியது. தாய்ப்பாலுக்கு என்ன செய்வது? ‘‘தேவேந்திரா! இந்தப் பிரச்னையைத் தாங்கள் எவ்விதமாவது தீர்த்து வைக்கலாகாதா?’’ குழந்தை மேல் கொண்ட பாசத்தோடு மற்ற தேவர்கள் வேண்டினார்கள். ‘‘இந்தக் குழந்தை உயிர்வாழ எதைக் குடிக்கும்?’’ என்று கேட்டார்கள். ‘‘குழந்தையின் விரலை அதுவே தன் வாயில் வைத்துக் கொண்டு அதைக் குடிக்கும். குழந்தை உயிர்வாழத் தேவையான சக்தியை அதன் விரலே அதற்குக் கொடுக்கும். இந்த அபூர்வக் குழந்தையின் ஞாபகமாக இனி உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுமே பசி தோன்றும்போது, தன் விரலைத் தானே தன் வாயில் வைத்து உறிஞ்சி சமாதானம் அடையும்!’’ என வாழ்த்தினான் இந்திரன். அந்தக் குழந்தை இந்திரன் ஆசீர்வாதத்தோடு மாந்தாதா என்ற பெயர்பெற்று வளர்ந்தது. வாலிப வயதடைந்து அவன் அரசனானான். அதன்பின் மன்னன் யுவனாச்வன் தன் நெடுநாள் ஆசைப்படிக் கானகம் சென்று தவம் நிகழ்த்தி முக்தி அடைந்தான்.


(மகாபாரதம் ஆரண்ய பர்வம் பகுதியில் இடம்பெற்றுள்ள இக்கதை, சின்னஞ்சிறு குழந்தைகள் ஏன் விரலை உறிஞ்சுகிறார்கள் என்பதற்கான காரண த்தை சுவாரஸ்யமாக இவ்விதம் விளக்குகிறது.)

மழை காலங்களில் சிறந்த உணவு எது?




மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல்இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாகஇருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இதை தீர்க்க சில உணவு குறிப்புகள்

1.மழைக் காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம்சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பஜ்ஜி,போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லிசாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும்உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.


2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.


3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும்அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.


4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளைமழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.


6. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள்,பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.


7.நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரிபோன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதைதவிருங்கள்.


8. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகுபொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில்பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.


9. மழைக் காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க,பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டுவைக்கவும்.


10. மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாகஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிடவிருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்குபதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

இறந்த நிலையில் கடற்கன்னி - முத்துத்தீவில் மர்மம்!



 அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.


 இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது.


சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.










பெர்முடா முக்கோணம் - "மர்மங்கள்"




நிலவுல போய் பிளாட் வாங்கறேன்னு கிளம்பற அளவுக்கு இப்போ டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும்..சில விசயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.. அதுல பெர்முடா முக்கோணமும் ஒன்னு..


வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..


இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..


அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்..


உண்மையில.. கடல் பகுதியில ஏற்பட்ட பல விபத்துகள்.. பெர்முடா பகுதியில நடந்ததாக திரிச்சு சொல்லியிருக்காங்கன்னும் அதுக்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.. பல விசயங்கள் நடக்காமயே நடந்ததாகவும் கதை கட்டியிருக்காங்க.. உதாரணத்துக்கு.. 1937 ஆம் ஆண்டு புளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு பிளைட் விபத்துக்குள்ளானதை நிறையப் பேரு பார்த்ததாக சொல்லப்படுது.. ஆனால் லோக்கல் நியூஸ் பேப்பர்ல அந்த விபத்து பற்றின எந்த நியூஸுமே வெளியாகல..


இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..


விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..


மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு.. நீரோட அடர்த்தியைக் கம்மி பண்ணி.. கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.. ஆனால் பெர்முடா பகுதியில மீத்தேன் ஹைட்ராய்டோட எந்த தாக்கமும் எப்போதும் இருந்திருக்கல..


கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..


சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..


பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..


கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க..


பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..


1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..


2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..


3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..


இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. ..



பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?



புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.


ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன.


அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம்.


ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”



இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!

இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!



ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, “பென்ஸ்’ மோட்டார் தொழிற்சாலையில், “பிட்டர்’ ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.


பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது… ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, “டாட்டா’ கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது… நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! இதுக்கு காரணம் என்ன தெரியுமா?


ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்… இங்கே லேபர், “சீப்!’ அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, “அட்வான்டேஜ்’ ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, “சீப்’ என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…’ என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.


ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்… ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…


இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க! கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்…


ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,’ என்றார் அந்த நண்பர்.


புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.

திருமணப் பொருத்தங்கள்!

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.


2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.


3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.


4) ஸ்திரீ தீர்க்கம்: பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.


5) யோனி: நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.


குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.


6) ராசி: பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.


7) ராசி அதிபதி: பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.


8) வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.


9) ரஜ்ஜு (மாங்கல்யம்): நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.


10) நாடி: 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


|) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.


||) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.


|||) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.


பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.


எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.


1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.


2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.


3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.


4) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.


இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top