.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலக சாதனை. Show all posts
Showing posts with label உலக சாதனை. Show all posts

Wednesday, 15 January 2014

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை..!

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை: புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி


மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், .....

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

Friday, 3 January 2014

இந்தியாவுக்கு பெரிய சவாலான‌ – ஜி எஸ் எல் வி 5 – சக்ஸஸ் ஆகுமா?




இந்தியன் ஸ்பேஸ் ரிஸர்ச் ஆர்கனைசேஷனுக்கு ஒரு பெரிய சவால் நாளை மறு நாள் காத்து கொண்டு இருக்கிறது அது என்ன? ஏற்கனவே மூன்று முறை தோற்று போன ஜி எஸ் எல் வி ராக்கெட் இம்முறையாவது சக்ஸஸ் ஆக விண்ணில் பாய வேண்டும் என்பதே? இந்தியா தான் அடிக்கடி ராக்கெட் அனுப்புதே அப்புறம் என்ன கதைன்னு கேக்குறவங்களுக்கு – அது பி எஸ் எல் வி ரக ராக்கெட்கள் அதில் இந்தியா சூப்பர் பெர்ஃபார்மென்ஸ்.


ஜி எஸ் எல் வி என்றால் – ஜியோசின்கரனஸ் சாட்டிலைட் லான்ச் வெகிக்கிள் (geosynchronous satellite launch vehicle) என்னும் இந்த வகை ராக்கெட்கள் மூலம் சாட்டிலைட்டை நினைத்த இடத்தில் நிலை நிறுத்த முடியும். இது புவியீர்ப்பு சக்த்திக்கு அப்பார்பட்ட இடமாக இருக்கும் இடமாகும். இது வரை இந்தியா இதை பிரன்ச் கயானா என்னும் இடத்தில் இருந்து மூன்றாம் கம்பெனி ராக்கெட் மூலம் நமது சாட்டிலைட்டை லாஞ்ச் செய்தது. இதற்க்கு தேவையான பவர்ஃபுல் கிரைஜினிக் எஞ்சினை இந்தியா இன்னும் மாஸ்டர் செய்ய முடியவில்லை. இதில் எக்ஸ்பர்ட்டான யு எஸ் எ ஆர் என்னும் பழைய சோவியத் யூனியன் இதை இந்தியாவுக்கு தர ஒப்பு கொண்டது பழைய கதை.


ஆனால் USSR துண்டு துண்டாய் உடைந்து போனதால் ரஷியா இதை தர் ஒப்பு கொண்டாலும் அமெரிக்கா இதற்க்கு தடை விதித்து வெறும் ஏழு எஞ்சின்களை மட்டும் கொடுக்கலாம் என்று கண்டிஷன் போட்டது பழைய கதையாகும். இதை வைத்து முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு லாஞ்ச் செய்தது செயல்பாடு சரியில்லாமல் ஃபெயிலாகி போனது. அடுத்து 2003 – 2004 இரண்டு முறையும் சக்ஸஸ் ஆகினாலும் கொடுத்த 7 எஞ்சின்களில் 6 முடிந்து போனது. கையில் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு 2010 ஆம் ஆண்டு செலுத்த முயலுகையில் சில நொடிகளிலே ஃபெயில் ஆகி போனது. கொஞ்சம் சரி செய்து அதே வருடத்தில் டிசம்பர் மாதம் அட்டம்ப்ட் செய்த போதும் ஃபெயில் ஆகியது. சரியென்று கடைசியாக கவனமாக ஆராய்ந்து 2013ல் ஆகஸ்ட் மாதம் லாஞ்ச் செய்யும் கடைசி நேரத்தில் பியூல் லீக் அகி அதுவும் ஃபெயில் ஆகி போனது.


இந்த என்சின் திரவ் ஆக்ஸிஜனையும், ஹைட்ரஜனையும் கொண்ட கலப்பு எரிபொருள். இது நேற்று திருச்சியில் இருந்து ஹரிகோட்டா வரை பலத்த போலீஸ் ராணுவம் உதவியோடு தரைவழியாக ஸ்பெஷல் கன்டெயினர் மூலம் எடுத்து வரபட்டது – அதை நிறைய பேர் பார்த்திருக்க வாய்ப்புண்டு இப்போது எல்லாவற்றிக்கும் ரெடி ஆகி நாளை கவுன்ட் டவுன் ஆரம்பித்து 5 ஆம் தேதில் லாஞ்ச் செய்ய ஏற்பாடு ஆகி இருக்கிறது. இது மேலே போய் ஜிஸாட் 4 ( 2004ல் லான்ச் செய்யபட்டது) பல தமிழ் இந்திய சேனல்களின் உயிர் நாடியான இந்த சாட்டிலைட்டுக்கு பதில் போய் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். இந்தியா இதில் சாதிக்கும் என நம்புவோமாக..!

Sunday, 29 December 2013

1610 கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்…..!!…அதிசிய கார் தயார்!!!




உலகத்தின் அதி வேக கார் தயார்!

சென்னை டு டெல்லி – ஒன்னேகால் மணி நேர கார் பயணம்? – இது சாத்தியமா என்றால் – ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதி வேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம்.


உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன்ட் தன் பிளாக்கில் இதை எழுதியிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் ஒருவரே இது வரை அதி வேக தரை கார் சாதனையாளர். இவர் தற்போது உலகின் அதி வேக கார் ரெடியாகிறது என்று அதன் சில படங்களை வெளியிட்டு இதை தானே 2015 ல் ஓட்ட போவதாய் தெரிவித்திருக்கிறார்.


இந்த காருக்கு யூரோஃபைட்டரின் டைஃபூன் எஞ்சின் ரகம் பொருத்த படுகிறதாம். இந்த அதிவேக கார் பயணம் சவூத் ஆஃப்ரிக்காவில் நடக்க இருக்கிறது. ஆடி கியூ 7 இருந்தாலும் டாட்டா நானோ இருந்தாலும் என்ன பயன்? இருக்கிற டிராஃபிக்கில 30 போகவே மூச்சு முட்டுது இதுல 1610 கிலோமீட்டர் வேகாமான்னு நீங்க சலிச்சிகிறது எனக்கு கேட்கும் – யெஸ் நான் உங்க மைன்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்…………..


இன்னொரு ஆச்சர்யம் இந்த 1610 கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்…..!!!…

உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்!




ஜனாதிபதி என்றாலே…நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.இவர் தன மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவை சமாளித்து வருகிறாராக்கும்!

உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77). ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் வாழ்ந்து வருகின்றார்.அத்துடன் இவரது வீட்டுக்கு இரண்டே இரண்டு போலீசார் தான் காவல் காக்கின்றனர். வீட்டுக்கு பின்புறம் உள்ள பண்ணையில் மனைவியுடன் சேர்ந்து இவர் மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார். மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவினங்களை ஜோஸ் முஜிகா சமாளித்து வருகின்றார்.

2010-ம் ஆண்டு தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த இவர், 1987-ம் ஆண்டில் வாங்கிய ‘வோக்ஸ் வேகன் – பீட்டில்’ காரை மட்டுமே தனது சொத்தாக காட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.

2009-ம் ஆண்டு உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸ் முஜிகா, 1960-70களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1971-ம் ஆண்டு முதல் 1985 வரை பலமுறை தனிமைச்சிறை உள்பட அடக்குமுறை சட்டங்களின் மூலம் பல்வேறு கடுமையான தண்டனைகளை இவர் அனுபவித்துள்ளார்.

சிறை வாழ்க்கைதான், தன்னை பக்குவப்படுத்தியது என்னும் ஜோஸ் முஜிகா, தன்னைப் பற்றி கூரும் போது,”விசித்திரமான முதியவராக நான் தோன்றலாம். ஆனால், இது எனது விருப்பமான தேர்வு. இதேபோல் தான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் கழித்துள்ளேன். இருப்பதைக் கொண்டு என்னால் சிறப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள் தான் ஏழைகள்.”என்று அவர் கூறுகின்றார்.

Wednesday, 25 December 2013

மார்கரட் விட்மேன் - இவரைத் தெரியுமா?




$ ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ இதற்கு முன்பு ஆன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.

$ இவர் பணியில் சேரும்போது 4 மில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருமானம், 2008-ம் ஆண்டில் வெளியேறும் போது 8 பில்லியன் டாலராக உயர்ந்தது.

$ இ-பே தவிர, புராக்டர் அண்ட் கேம்பிள், பெய்ன் அண்ட் கம்பெனி, வால்ட் டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

$ இவருக்கு அரசியல் ஆசையும் இருக்கிறது. 2009-ம் ஆண்டில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.

$ ஹார்வேர்ட் பிஸினஸ் ரெவ்யூ, ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளின் சிறந்த சி.இ.ஓ. பட்டியலில் இடம் பெற்றவர்.

$ பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டமும், ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகப் பட்டமும் பெற்றவர்.

Monday, 16 December 2013

உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’!




உடலிலுள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்.


தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.


இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.


டாக்டரின் வயிற்றின் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 14 December 2013

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..




சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.


சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.


செஞ் ஞாயிற்றுச் செலவும்
 அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
 பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
 வளி திரிதரு திசையும்
 வறிது நிலைஇய காயமும்
 என்றிவை
 சென்று அளந்து அறிந்தார் போல
 என்றும் இனைத்து என்போரும் உளரே



 இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.


இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.


புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
 வலவன் ஏவா வான ஊர்தி எய்துப



 இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.


 "எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.


கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.


மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
 விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
 புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
 எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.



விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.


இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

Friday, 13 December 2013

உலக கோப்பை கபடி : இந்தியா பெண்கள் அணி கோப்பையை வென்றது!




உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.


விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்திற்கான போட்டியில் டென்மார்க் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித் தது குறிப்பிடத்தக்கது .

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்!




செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.


அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.


இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.


இத்தனை இலட்சததில் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு முதல்கட்டமாக தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர் என்றும் அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் என்றும் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.


மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன்..


 பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Wednesday, 11 December 2013

செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!




 செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது.



இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற பல தனிமங்கள் இந்த ஏரியில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் உள்ள ஏரிகளைப் போன்றே இந்த ஏரியிலும் பல்வேறு அம்சங்கள் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏரியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tuesday, 10 December 2013

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!




உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்


10). மெக்ஸிக்கோ:


பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும்.

9). ஸ்பெயின்

 இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும்.

8). கனடா:


கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் 2.3% ஆகும்.

7). இத்தாலி:

இந்த நாட்டின் $ 1.120.000.000.000 GNI அளவு மற்றும் 3.7% என்ற GNI தொகை சதவீத $ 1.844.749.000.000 கொண்டிருக்கிறது.

6). சீனா:

GNI தொகை $ 1.130.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI அளவு விகிதம் சதவீதம் 3.8% ஆக $ 2.668.071.000.000 உள்ளது.

5). பிரான்ஸ்:

பிரான்ஸ் GNI தொகை $ 1.380.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4.6% ஆக GNI தொகை சதவீத $ 2.230.721.000.000 உள்ளது.

4). ஐக்கிய ராஜ்யம்


 நான்காவது பணக்கார நாடு $ 1.480.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 2.345.015.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பிரிட்டன் உள்ளது மற்றும் GNI தொகை சதவீதம் 4.9% ஆகும்.

3). ஜெர்மனி:


GNI தொகை வீதம் $ 1.940.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு விகிதம் ஜெர்மனி $ 2.906.681.000.000 மற்றும் GNI சதவீதத்தில் 6.5% ஆகும்.

2). ஜப்பான்:

இந்த $ 4.520.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 4.340.133.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு இரண்டாவது பணக்கார நாடு உள்ளது மற்றும் GNI சதவீதம் 15.1% ஆகும்

1). ஐக்கிய அமெரிக்கா


GNI தொகை $ 9.780.000.000.000 மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 13.201.820.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் கூட மற்ற நாடுகளில், அதாவது, 32,7% ஆகும் அனைத்து பிற நாடுகளில் பணக்கார நாடாக உள்ளது.

Monday, 9 December 2013

எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்!



கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.



இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும்  இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.



தங்கம் மட்டுமே ஆப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண். இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.

Thursday, 5 December 2013

இது நிஜமல்ல .. ஆனால் ?

உலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை. 
 
 
ஓவியக்கலைகளிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இதில் 2டி பெயிண்டிங், 3டி பெயிண்டிங் என பல புதுமைகள் உருவாகியுள்ளன.
 
 
 சிங்கபூரை சேர்ந்த கெங் லியி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் மேஜிக் நிபுணரும் கூட. இவரது 3டி பெயிண்டிங் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 
 
 
இவர் வரைந்த 3டி பெயிண்டிங் ஓவியங்கள் நிஜமா இல்லை ஓவியமா? என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.
 


















Monday, 2 December 2013

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!


எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.

1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். ஆறு பிள்ளைகளில் அவரே மூத்தவர். ஃபோர்ட் குடும்பத்திற்கு பெரிய பண்ணை ஒன்று இருந்தது. மற்ற 19ஆம் நூற்றாண்டு சிறுவர்களைப்போல ஃபோர்டும் தனது இளமைக்காலத்தில் அவரது பண்ணையில் பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆனால் அவருக்கு பண்ணை வேலை சலிப்பைத் தந்தது. நகரும் பாகங்களைக் கொண்ட பொருட்களின்மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலேயே கடிகாரங்களை பழுது பார்க்க கற்றுக்கொண்டார். ஒருமுறை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீராவியால் இயங்கிய ஒரு ட்ராக்டர் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்வதை கவனித்தார். அந்தக் கணம்தான் போக்குவரவு வரலாற்றை மாற்றப்போகும் கணமாக அமைந்தது. ஏனெனில் அப்போதே ஃபோர்டின் மனதில் பயணிகள் வாகனம் உதித்தது.

16 வயதானபோது ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற பிறகு மீண்டும் மிச்சிகன் திரும்பினார். அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின்மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவே அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதனை கழற்றி பழுது பார்ப்பதிலும் நேரம் செலவிட்டார். அதேநேரம் பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய எரிவாயுவில் இயங்கும் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கினார். ஃபோர்ட்க்கு 30 வயதானபோது சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கிய தண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டார். அதை ஏன் ஒரு வண்டியில் பொருத்திப் பார்க்கக்கூடாது என்று சிந்தித்தார். அதே ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனின் நிறுவனத்தில் நூறு டாலர் சம்பளத்திற்கு தலமைப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் ஒரு காரை உருவாக்க அயராது உழைத்தார் ஃபோர்ட். 1896 ஆம் ஆண்டு மே மாதம் பல்வேறு உதிரிப் பாகங்களையும், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார். ஆனால் அந்த வாகனத்திற்குப் பிரேக் கிடையாது. அதனைப் பின்னோக்கியும் செலுத்த முடியாது. அதற்கு 'Quadricycle' என்று பெயரிட்டார். பார்ப்பதற்கு சைக்கிள்போன்று இருக்கும் ஆனால் நான்கு சக்கரங்களும் ஓர் இருக்கையும் கொண்டிருக்கும். ஆர்வமாக அதை ஓட்டிப்பார்க்கலாம் என்று முற்பட்டபோதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்ததை ஃபோர்ட் அப்போதுதான் உணர்ந்தார்.

தன் கண்டுபிடிப்பை உடனே சோதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து செங்கல் சுவற்றை இடித்துவிட்டு அந்த வாகனத்தை வெளியே கொண்டு வந்தார். அவரது வாகனம் சாலையில் வலம் வந்தது. ஃபோர்ட் அகமகிழ்ந்து போனார். தொழிலியல் உலகில் அது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு அவர் மிச்சிகனில் ‘Ford Motor Company’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க பரந்து விரிந்து கிடப்பதால் ஒரு காலத்தில் கார்களின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பிய ஃபோர்ட் கடுமையாக உழைத்து 1908 ஆம் ஆண்டு Model T என்ற காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமல்ல. சாமானியர்களும்கூட காரை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஃபோர்டின் அடிப்படை விருப்பமாக இருந்தது. அதனால் காரின் விலையை மிகக் குறைவாக வைத்திருக்க தயாரிப்புச் செலவுகளை கவனமாக பார்த்துக்கொண்டார். அப்போது அந்தக் காரின் விலை என்னத் தெரியுமா? வெறும் 500 டாலர்தான்.

தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான அந்த Model T வாகனம் ஆயிரக் கணக்கில் விற்பனையாகத் தொடங்கியது. பதினெட்டே ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது ஃபோர்ட் நிறுவனம். ஃபோர்டின் தொலைநோக்கு மிக்க தலமையின் கீழ் அந்த நிறுவனம் அபரிதமான வளர்ச்சிகண்டு உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலபதிராக அவரை உயர்த்தியது. ஃபோர்ட் புரட்சிகரமான இன்னொரு காரியத்தையும் செய்தார். ஊழியர்களின் நலனை பெரிதாக மதித்ததால் அவர் சம்பளங்களைக் கூட்டி வேலை நேரத்தைக் குறைத்தார். அப்போது 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம். ஃபோர்ட் என்ன செய்தார் தெரியுமா? இருந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலர் என்று அறிவித்தார். மேலும் வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைத்து 8 மணிநேர வேலையாக்கினார்.

பல பொருளியல் நிபுனர்கள் அவரது அந்த நடவடிக்கையை எள்ளி நகையாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததால் உற்பத்தித் திறன் பெருகி நிறுவனம் அபரித வளர்ச்சி கண்டது. வாழ்வில் செல்வம் கொழித்த அளவுக்கு அவரது மனதில் கருனையும் ஊற்றெடுத்தது. 'டிசன் இன்ஸ்டட்டியூட்’ என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன் சொத்தில் பெரும்பங்கை செலவழித்தார் அந்த தொழில் மேதை. போரை அறவே வெறுத்த அவர் முதலாம் உலக்போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பி ஐரோப்பாவுக்கு பயணமும் மேற்கொண்டார். 1936 ஆம் ஆண்டு தனது மகன் எட்சல் ஃபோர்டின் தலமையில் 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ என்ற உன்னத அறநிறுவனத்தை தோற்றுவித்தார் ஹென்றி ஃபோர்ட். அந்த அறநிறுவனம் உலகம் போற்றும் பல உன்னத அறப்பணிகளை மேற்கொண்டது.

1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்ட் நிறுவனத்தின் தலமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹென்றி ஃபோர்ட். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி ஃபோர்ட் தனது 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். வாழ்வில் செல்வம் சேரும்போது சுயநலமும் சேர்ந்துகொள்வதை பலமுறை சந்தித்திருக்கிறது வரலாறு. ஆனால் போக்குவரவு துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து செல்வந்தரான ஃபோர்ட் மிகப்பெரிய சமூக கடப்பாட்டைக் காட்டினார். சமூக நலத்திற்காக தன் சொத்தை வாரி வழங்கினார்.

Sunday, 1 December 2013

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா!

 

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது. அண்மையில் சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதை அடுத்து இந்தியாவின் மங்கல்யான் பயணத்தை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்த நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனை பெருமைக்குரியதுதானே?

Friday, 29 November 2013

நாசா 2015 ஆம் ஆண்டில் சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம்!


மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பில், ஒரு கமர்ஷியல் லூனார் லேண்டர் போர்டில் தாவரங்களை அனுப்பி வளர்க்க உள்ளோம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முயற்சியை லூனார் பயிர் வளர்ச்சி வசிப்பிட அணி மூலம் இயக்கப்படுகிறது.

அவர்கள், காலநிலை கடுமையான சக்திகளுக்கெதிராக தாவரங்களை பாதுகாக்க கன்டெய்னர்களை வடிவமைத்து அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சந்திரனில் ஐந்து முதல் பத்து நாட்களுக்குட்பட்ட காலப்பகுதியில் தாவரங்கள் முளைப்பதற்காக ஒரு மிக எளிய அடைக்கப்பட்ட வளர்ச்சி அறை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த கன்டெய்னர் டர்னிப், துளசி மற்றும் அரபிடோப்சிஸ் வளர முயற்சிக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. அதாவது கன்டெய்னர்களில் இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்பட்டு சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த கன்டெய்னர்களில் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்குமாம்.

மேலும் தாவரங்கள் பற்றிய தகவல்களை கேமராக்கள், சென்சார்கள், மற்றும் மின்னணுவியல் ஆகியவை வழங்கும். சந்திரனில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுத்து, அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

nov 28 -malala_yousafzai_

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த
மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள், மலாலாவை பாராட்டி பல விருதுகள் வழங்கி வரும் நிலையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் .

Wednesday, 27 November 2013

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.

nov 27 -wikki _AWARD_photo

கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது.


விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம்.


 இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.

1. விக்சனரி:

நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம்.

நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.

இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை டைப் செய்து என்டர் கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது.

இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

2. விக்கியினங்கள்

இந்த தளத்திற்கு செல்ல

 -http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


விலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.
ஆனால் உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன.



3. விக்கி நூல்கள்

விக்கிபீடியாவில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆஸ்ரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது விக்கிபீடியா. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.

தேவை என்றால் புத்தகங்களை PDF கோப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D 

4. விக்கிமேற்கோள் (Quotes)

அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள். இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.

இதற்கான தளத்திற்கு செல்ல

:http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இதற்கிடையில்தான் “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டி ஒன்றையும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில், கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 26 November 2013

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து – கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1

nov 26 - ravi sea

ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் தான் ஹாட் டெஸ்டினேஷன். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலில் கீழ் பகுதி பெட்ரூம் எட்டு கண்ணாடிகள் கொண்டது அதனால் 24 மணி நேரமும் பெரிய சிறிய அத்தனை வகை மீன்களும் சுற்றி கொண்டே இருக்கும்.

அதுக்கு அடுத்த தளத்தில் வரவேற்ப்பறை அதுவும் தண்ணீரில் மூழ்கி இருக்கும். அதை தாண்டி மேலே வந்தால் தண்ணீருக்கு மேல் இருக்கும் மொட்டை மாடி உண்மையிலெ சூப்பர் ஹோட்டல் தாங்க. 17 ரூம்கள் மட்டும் கொண்ட இந்த ரெஸார்ட்டில் தங்க ஒரு நாளைக்கு சுமார் 95,000 ரூபாய்கள் தான்…………………..

Saturday, 23 November 2013

ஐநாவும் என்னை அழைத்தது... சுவர்ணலட்சுமி சாதனை!

 

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.


சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

 பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, சதுரங்கம் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
 இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.


ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.


இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விடயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன.

‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள்.

முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999.

(சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top