.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 6 December 2013

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??

கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான்...

அன்றுபோல் இன்று இல்லையே!

  அன்று போல் இன்று இல்லையே…நீ உண்மை மட்டுமே பேசிக் கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…நீ நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…நீ சொந்தங்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…நீ உள்ளூரிலே உல்லாசமாய் உலா வந்து கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…எதிலும் நீ போட்டிகளின்றி எளிதில் வெற்றிகள் பெற்று கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…நீ கல்வியறிவின்றி கலைகள் பல கற்றுக் கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…எதையும் நீ முழுமையாக நம்பி ஏற்றுக் கொண்டிருக்க!அன்று போல் இன்று இல்லையே…நீ நல்லவனாக மட்டுமேயிருந்து வழிகாட்டி...

குளிர்கால ஆலோசனைகள்!

* காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது குளிர் காலத்திற்கு பொருத்தமானது.* வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால நோய்கள் ஏற்படாது.* ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும். * குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும்.சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம்.கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.* குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.*...

பாண்டவர்கள் வெட்டிய குளம்!

ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள “கோலியாக்’ என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.அந்தக் கோயில் அந்த மேடு “நிஷ்களங்க மகாதேவர்’ எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில்...

"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில்!

யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது. ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி....

குழந்தை!

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள...

ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது!

    நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துகிaர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு, ஒரு தொடர்பு ஆகும். அதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக அடங்கி இருக்கின்றன.1. டிரான்ஸ் மிட்டர்2. சிக்னல்3. ரிசீவர்தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோல் அமைப்பை பொறுத்த வரை, நீங்கள் டிரான்ஸ் மிட்டர் என்று சிறு உபகரணத்தைக் கொண்டு டிவியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்கிறீர்கள். டிரான்ஸ்மிட்டரின் ஒவ்வொரு பட்டனையும் நீங்கள் அழுத்தும் போது அதிலிருந்து ஒரு சிக்னல் டிவியை நோக்கிச் செலுத்தப்படுகிறது. அந்த சிக்னல் டி.வி. பெட்டியில் பெறப்படுகிறது. பின்னர் உங்களின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.சிக்னல்...

தமிழில் சைக்கிள் பாகங்களின் பெயர்கள்!

Tube - மென் சக்கரம்Tyre - வன் சக்கரம்Front wheel - முன் சக்கரம்ear wheel (or) Back wheel - பின் சக்கரம்Free wheel - வழங்கு சக்கரம்Sprocket - இயக்குச் சக்கரம்Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்Hub - சக்கரக் குடம்Front wheel axle - முன் அச்சுக் குடம்Rear wheel axle - பின் அச்சுக் குடம்Rim - சக்கரச் சட்டகம்Gear - பல்சக்கரம்Teeth - பல்Wheel bearing - சக்கர உராய்விBall bearing - பந்து உராய்விBottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சுCone cup - கூம்புக் கிண்ணம்Mouth valve - மடிப்பு வாய்Mouth valve cover - மடிப்பு வாய் மூடிChain - சங்கிலிChain link - சங்கிலி இணைப்பிChain pin - இணைப்பி ஒட்டிAdjustable...

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி!

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி ஒற்றுமைகள்அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக...

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !

தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?உங்களுக்கான எச்சரிக்கை இது...நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...முதலில் உள்ளது லிட்டர் அளவு...அதற்குக் கீழே உள்ளது தொகை...பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்பெட்ரோல்...

என் சவ அடக்கத்தில் ... - மார்ட்டின் லூதர்!

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.அந்த நாளில்...

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.* கல்யாணம் என்பது பழைய வண்டியில்...

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!

அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே."ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும்,...

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!

நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில்...

கார் டிரைவர்கள் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!

ஜனவரி 15ஆம் தேதிக்குள் சென்னையில் இயங்கும் வாடகை கார் டிரைவர்கள், புகைப்படம் மற்றும் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.வாடகை கார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அதற்காக வாடகை கார் மற்றும் கால் டாக்சி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமிஷனர் ஜார்ஜ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில், ''வாடகைகார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் போலீஸ் நிலையங்களில் தங்களது புகைப்படம் மற்றும் விவரங்களை தாக்கல்...

உலகின் கவர்ச்சியான ஆசியப் பெண் நடிகை கத்ரினா கைஃப்: 4–வது முறையாக தேர்வு!

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃப். இவரை உலகிலேயே கவர்ச்சியான ஆசிய பெண் என லண்டனில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ளது.நடிகை பிரியங்கா சோப்ரா, டி.வி. நடிகை திரஷ்டிதாமி, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் மாடல் அழகிகள் என 50 பேர் பெயர் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் கத்ரினா கைஃப் அதிக வாசகர்கள் ஆதரவுடன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 4–வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். கத்ரினா கைஃப் கடந்த ஒரு ஆண்டாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.சமீப காலமாக பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும்...

மரணத்துக்கு முன் வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது!

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் ரூ.2 கோடியே 60 லட்சம் (4 லட்சத்து 23 ஆயிரம்...

பூமி எப்போது தோன்றியது?

  வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது...

பிரபுதேவாவின் சம்பளம்?

  பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயனுக்கு மிகவும் முக்கியமான ரோலாம். சிம்பு-நயன் இணைவதால் படத்தின் வியாபாரம் 30 கோடியாம்.போகப் போக இன்னும் பல கோடி எகிறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பாண்டிராஜ். ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ஜோத்பூரில் இந்தி 'துப்பாக்கி’ படத்தை இயக்கிவருகிறார்.அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 90% முடிந்துவிட்டது. ஜனவரியில் விஜய்யுடன் இணைந்து படம்  பண்ண வர்றாராம்.பிரபுதேவா 2015 வரை பாலிவுட்டில் பிஸி. சாருக்கு சம்பளம் 20 கோடி.மும்பை பாந்த்ரா பகுதியில் சொந்த வீடு வாங்கி இருக்கிறார் தேவா. சல்மான்கான், அக்ஷய்குமார், சாகித் கபூர், அஜய்தேவ்கன் என எல்லோரும் பிரபுதேவாவின் ரசிகர்கள்.இங்கேயே இருந்துவிடுங்கள்...

சூரியனைப்பற்றிய அறிய தகவல்!

  சூரிய நமஸ்காரம்:  தினமும் காலையில் நீராடிய பின் கிழக்கு திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, அதனைத் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரியனின் ஆற்றலை அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். காலை, மாலை வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் நீரை எடுத்து அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகாரமாகும். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய துதிகளைச் சொல்வதால் நம் உடலும், மனமும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்கின்றன. கிரகணம் பற்றிசுவாமி சிவானந்தர்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப் பட்டது.பகவான் விஷ்ணு ஓர் அழகான...

இரவும் பகலும் ஒரே நேரத்தில் அறிய புகைப்படம்!

இந்த புகைப்படம் கொலம்பிய விண்வெளி ஓடத்தின் கடைசி பயணத்தின் போது மேகமூட்டம் இல்லாத ஒரு நாளில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். சூரியன் மறையும் நேரத்தில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மேல் இருந்து எடுக்கப் பட்டது.பாதி இரவையும் பாதி பகலையும் மிகத் தெளிவாக இப்படம் பிரதிபலிக்கிறது. ஒரு பாதியில் சூரிய வெளிச்சத்தையும் மறுபாதியில் இரவு விளக்குகளின் ஒளியில் நகரங்கள் மின்னுவதையும் காணலாம். இதில் சூரிய ஒளி படும் ஆப்பிரிக்காவின் மேல் பகுதி சஹாரா பாலைவனமாகும். லண்டன்,லிஸ்பன்,மேட்ரிட் போன்ற பகுதிகள் பகலாக இருக்கும் அதே நேரத்தில் ஹொலண்ட், பாரிஸ், பார்சிலோனா போன்ற பகுதிகளில் இரவு விளக்குகள் மின்ன தொடங்கி விட்டன. அதற்கு மேலே இடது பக்கம் உறைந்து...

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

  1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்குகளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும். 2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்: பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது...

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்!

* காற்றை நீங்கள் கண்ணால் காண முடியவில்லை என்பதால் காற்றே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இறைவனை நேரில் காண முடியாவிட்டால் இறைவனே இல்லை என்றாகிவிடுமா? * சூரிய ஒளியின் சக்தியை ஒரு பூதக்கண்ணாடி வழியே ஒளிக்கிரணத்தை செலுத்துவதன் மூலம் அறியலாம். மனதை ஒருமுகப்படுத்தினால் தியானத்தில் இறைவனின் ஆற்றல் வெளிப்படும். * உங்களுடைய ஆத்மாவைக் காண விரும்பினால் வெளியே தேடக்கூடாது. உள்ளேதான் பார்வையைத் திருப்ப வேண்டும். இறைவனைத் தேடி எத்தனை தூரம் போவீர்கள், அவன் உங்களுக்குள் ஒளிவிடுவதைக் கண்டு கொள்ளாமல். * மூன்றாவது மாடியிலுள்ள அலுவலகத்தை அடைவது உங்கள் நோக்கம். அதற்கு லிப்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்கள். அதுபோல, அரூபமான இறைவனை அடைய உருவங்களையும், பெயரில்லாதவனை அடைய பெயர்களையும் பயன்படுத்துகிறோம். * ஒருவர் சரசரவென்று நேரடியாக மரத்தில் ஏறி மாங்காய் பறித்து விடுகிறார். இன்னொருவருக்கு துறட்டு தேவைப்படுகிறது....

நடுவே நதி!

காகிதப் பூவில் வாசனை…காதல் கடிதங்கள்! மழைக்குத்தான் ஒதுங்கினேன்…ஆனாலும் மழையைத் தான் ரசித்தேன்! பூக்கள் சிரிக்கின்றன…மலர்வளையத்திலும்! கூரையில் கரைகிறது காகம்…அடுபபில் உறங்குகிறது பூனை!கூரையில் கரைகிறது காகம்…அடுபபில் உறங்குகிறது பூனை!அக்கரையில் நான் இக்கரையில் நீ நடுவே நதி காதலாய்… கரையில் கால்களை கழுவச் சொன்னது யார்?அலைகளே… நிலாவையே குழந்தைக்கு சோறாய் ஊட்டினாள்….வாழ்க்கை அமாவாசை? ஒருவேளை சம்மதித்திருப்பாயோ?சொல்லியிருந்தால்… எனக்கு விசிறியதில் உனக்கு வியர்க்கும் அம்மா...

விஜய் படத்தில் சம்பளம் வாங்காத மோகன்லால்!

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது பிற வேலைகள் நடைபெற்று வருகின்றன. 'ஜில்லா' படத்தில் நடித்தற்காக நடிகர் மோகன்லாலுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம். ஆனால்,  இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டாராம்.கேரளா விநியோக உரிமை ரூ.4 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அப்படிப் பார்த்தால் 'ஜில்லா' படத்திற்காக மோகன்லால் வாங்குகிற சம்பளம் ரூ.4...

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப்...

தந்தை பெரியார் - பொன்மொழிகள்!

                                           தந்தை பெரியார் - பொன்மொழிகள்  மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி  மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்  விதியை நம்பி மதியை இழக்காதே. மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி. பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top