ஸ்ட்ரெஸ் எனும் சீரியஸ் பிரச்னை!வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கும் எல்லாப் பெண்களுமே அஷ்டாவதானிகள்தான். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த அவர்களுக்கு, தம்மையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் ஏனோ மறந்து விடுகிறது. ‘முடியலியே...’ எனப் புலம்பிக் கொண்டாவது முடியாத காரியங்களையும் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிற அவர்களுக்குத் தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. அதை அப்படியே விட்டால் அடுத்தடுத்து தொடரப் போகிற அவதிகளையும் அறியாத அவர்களை எச்சரிக்கிறார் மனநல...
Wednesday, 2 October 2013
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!
எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.
சந்தேகத்துக்கான விதை:
அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய்த் தடுப்புக்கு பல்வேறு வகைகளை சுட்டிக்காட்டினாலும் குழந்தை பருவத்திலிருந்து...
அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது.
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா இராணுவத்தலைமையகமான பெண்டகன் அதன் 10 பாதுகாப்பு...
கைகளால் பலன்...(நீதிக்கதை)!

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....
" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.
ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.
மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.
மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.
நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.
புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.
தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...
"நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.
ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம்...
ஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு!
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது.
அக்கால கட்டத்தில் சென்னை மகாண வைசிராயாக இருப்பவர்கள் கோடை காலத்தில் ஊட்டிக்கு வந்து தங்கி ஒய்வு எடுப்பதற்காகவும், அரசு பணிகளை கவனிக்க இந்த மாளிகை கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 633 மதிப்பில் இம்மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு கூடுதல் அறை கட்டப்பட்டது....
மிஷ்கினுடன் இணையும் கமல்!
இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்க்கும் திட்டத்தில் உள்ளாராம் உலக நாயகன்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
முகமூடி தோல்வியால் வருத்தப்பட்ட மிஷ்கினை, இந்தப் படத்தின் வெற்றியானது மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
பாடல்களே இல்லை, முக்கியமாக மிஷ்கினின் குத்துப்பாட்டு இல்லை, கதாநாயகி இல்லை. என பல இல்லை'கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய முத்திரையைப் பதித்திருக்கிறது.
சமீபத்தில் கமல்ஹாசனை பிரசாத் ஸ்டுடியோவுக்கு பிரத்யேகமாக அழைத்த இளையராஜா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.
முழு படத்தையும் பார்த்து மிரண்டுபோன கமல் நெகிழ்ந்துபோய்...
போலிஸ் அவதாரம்! சிவகார்த்திகேயன்!
கொமடி கதாபாத்திரத்தில் இருந்து பொலிஸ் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கொமடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன்.
அப்படியே ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். நடிப்பவருக்கும் சலிப்பு தட்டிவிடும்.
இதனை நன்கு புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் இப்போது ஓசைப்படாமல் தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படி அவர் தடாலடியாக ஆக்ஷன் ரூட்டில் இறங்க, சினிமாவில் அவரது குருநாதரான தனுஷ் தான் காரணம்.
எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷே...
மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!
தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.
ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, நிகழ்வுகளைப் பார்க்கும்போதோ அவை உள்ளது உள்ளவாறே மனதில் பதிந்துவிடும்.
நாளிதழ்களில் மேம்போக்காக...
கர்ப்ப கால டயட்டும் உடற்பயிற்சியும்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி என்பார்கள். காரணம் குழந்தையை கருவில் சுமக்கும் போது பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம்.
கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என்று ஆரம்பித்தார் உணவு ஆலாசகர் அம்பிகா சேகர். "முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது". எனவே மாதுளம் பழசாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
நான்கு முதல் ஆறு மாதம் வரையிலான காலத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள்...
பிரசவத்துக்கு பின் அழகாக எளிய உடற்பயிற்சிகள்!
பத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந் தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.
குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். எனவே பிரசவம் முடிந்த பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த அளவு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால் வேலை செய்பவர்களுக்கு...
உயிர் தியாகத்தில் உருவான அமராவதி அணை!
திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை...
திகார் ஜெயிலில் முன்னாள் உலக அழகி ஒலிவியா!
அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார்.இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு...
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடி அறிமுகம்!
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.கூகுள் கிளாஸ் அம்சங்கள்: 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது,
16 ஜிபி சேமிப்பு வசதி,
கூகிள் கிளவுட் சேமிப்பு வசதி,
5 மெகாபிக்ஸல் கேமெரா,
வீடியோ பதிவுக் கருவிகள்,
Wi-Fi,
புளூடூத்,
24 மணி நேர பேட்டரி சேமிப்பு,
42 கிராம் எடை.
இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, 'ஒகே. கிளாஸ்' என்று சொன்னதும்...
இந்திய அஞ்சல் துறை – க்ம்பளிட ரிப்போர்ட்!
நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது.
இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது பைசா செலவில் ஒரு கடிதத்தை அனுப்பிவிட முடியும் என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு எத்தனை சந்தோஷம் தருகின்ற விஷயம்...
மனிதனை போன்றே ரோபோட்டுக்கும் மூளை! இந்திய விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு!
ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.
மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர்.
இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார்.
எல்லா...
எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
எல்ஜி நிறுவனம் ஜி2 வரிசையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 16ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.41,500, 32ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.43,500 என்றும் இற்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும்.
எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
5.2 இன்ச் டிஸ்பிளே,
423 அடர்த்தி பிக்சல்கள்,
2.26GHz குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
13 மெகாபிக்சல் முன் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்
3ஜி,
2ஜி,
Wi-Fi,
புளுடூத்,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்.
3000 mAh பேட்டரி...
கணனியில் செய்யப்பட்ட மிகப் பெரிய தவறு! பில்கேட்ஸ் விளக்கம்!
கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர்.
இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார் பில்ஹேட்ஸ்.
இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.
Windows' CTRL-ALT-DEL was a good 'mistake'
Microsoft founder Bill Gates told a group of students at a Harvard fundraiser that making the CTRL-ALT-DEL key combination the centerpiece of Windows was a mistake. The entire interview was posted on YouTube, and it has a lot of people talking.
For many people, those three keys were the first actual computer commands they ever used....
இவர் யார்? உனக்குத் தெரியுமா?
மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் வயதில்...