.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சுயத்தொழில். Show all posts
Showing posts with label சுயத்தொழில். Show all posts

Saturday, 14 December 2013

இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்!




இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.

மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த ஆண்டு, கடம் தயாரிக்கும் கலைஞரான மானா மதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது.

கலக்கும் கடம் 

மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் மீனாட்சி அம்மாளின் குடும்பம் தான். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களின் கைப்பக்குவத்தில் உரு வான ‘கடம்’கள் இந்தியாவில் மட்டு மின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஜப்பான், மலேசியா என சர்வதேச இசைக் கலைஞர்களின் கைகளிலும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது.

‘‘எங்களுக்கு இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இசைக்கருவி தயாரிக் கிறவங்களுக்கு விருது குடுத்திருப்பது இதுபோன்ற தொழிலில் இருக்கறவங் களை ஊக்கப்படுத்தும்’’ என்று தங்களின் மகிழ்ச்சியை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி அம்மாளின் மகன் ரமேஷ்.

“எங்க பாட்டனார் உலகநாத வேளார், தாத்தா வெள்ளைச்சாமி வேளார், அப்பா கேசவன் வேளார்.. அவங்களுக்கு அப்புறம் நானும் எங்கம்மாவும் இப்ப இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றோம். எங்க முன்னோர் கள் இசையிலும் நாடகத்திலும் நாட்டம் உள்ளவங்க. அதனால்தான் எங்களுக்கும் அந்த ஞானம் கொஞ்சம் தொத்திக்கிச்சு.

மூவாயிரம் தடவை தட்டணும் 

கடம் செய்யுறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைங்க. தட்டுனா ஸ்ருதி சுத்தமா வரணும். இதுக்காக கிராபைட், ஈய செந்தூரம் மாதிரியான பவுடர் களைப் போட்டு மண்ணைப் பக்குவப் படுத்தணும். ஒரு தடவ தட்டுனா சுமாரா 15, 20 நொடிகளாச்சும் அதிர்வு இருக் கணும். அப்படி இருந்தாத்தான் ஸ்ருதி சுத்தமா இருக்கும். அந்தளவுக்கு வரணும்னா, கொறைஞ்சது மூவாயிரம் தடவையாச்சும் மரப் பலகையால தட்டித் தட்டி கடத்தை உருவாக்கணும்.

மண்பாண்டம் செய்யுறது எங்க ளுக்கு குலத்தொழில். அப்பப்ப இடை யிலதான் கடம் செய்யுறோம். மூணு நாள் மெனக்கெட்டோம்னா இருபது கடம் வரைக்கும் செஞ்சு முடிச்சிரு வோம். அந்த இருபதும் சேல்ஸ் ஆன பின்னாடித்தான் அடுத்ததா கடம் செய் வோம். பெங்களூரில் இருக்கிற உ.வே. சாமிநாத அய்யரின் பேத்தி சுகன்யா ராம்கோபால்தான் முதல் பெண் கடம் வித்வான். ஜலதரங்கம் மாதிரி இப்ப அவங்க கடதரங்கம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க வாசிக்கிற கடம் அத்தனையுமே எங்க தயாரிப்புத்தான்.

டிரம்ஸ் சிவமணிக்கு… 

பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வெளிநாட்டுக்கு போயிருந் தப்ப உதூ, உத்தாங்கோ என்ற ரெண்டு இசைக் கருவிகளை வாங்கிட்டு வந்திருக்காரு. ஃபைபர்ல செஞ்சிருந்த அந்தக் கருவிகள் எப்படியோ உடைஞ்சி போச்சு. ‘இதே மாதிரி களிமண்ல செஞ்சுத் தரமுடியுமா?’ன்னு கேட்டாரு. பத்து பீஸ் செஞ்சுக் குடுத்தேன். அதை வெச்சு இப்பப் பட்டையை கெளப்பிக் கிட்டு இருக்காரு…” என்றார் ரமேஷ்.

புரஸ்கார் விருதுடன் ஒரு லட்சத்துக் கான பணமுடிப்பும் பாராட்டுப் பொன் னாடையும் மீனாட்சி அம்மாளுக்கு வழங்கப்படுகிறது. விருது கிடைத் திருப்பது குறித்து கேட்டபோது, ‘‘எங்க மாமனார், வீட்டுக்காரர் இவங்கெல் லாம் சொல்லிக் குடுத்துட்டுப் போன தைத்தான் நாங்க செஞ்சுட்டு இருக் கோம். அவங்களுக்கு கிடைக்காத பெருமை எனக்குக் கிடைச்சிருக்கு. மொத்தத்துல சந்தோஷம்யா’’ என்று சிரித்தார் மீனாட்சி அம்மாள்.

‘‘உங்களுக்குப் பின்னாடி உங்கள் வாரிசுகள் கடம் பண்ணுவார்களா?’’ என்று ரமேஷிடம் கேட்டபோது, ‘‘குலத் தொழில் என்பதால் எங்க குடும்பத்துல வர்ற எல்லாரும் கட்டாயம் மண்பாண் டம் செய்வாங்க. என்னோட மகளுக் கும் மண்பாண்டத் தொழில் தெரியும். கடம் செய்யுறதுக்கு என்னோட தங்கச்சி மகன் ஹரிஹரனை தயார்படுத் திட்டு இருக்கேன். அதுக்காகவே அவன் சங்கீதம் படிச்சிட்டு இருக்கான்’’ என உற்சாகமாகச் சொன்னார்.

Sunday, 27 October 2013

‘யூ டியூபால் பிசியான பாடகி யாகி விட்ட இல்லத்தரசி!





இபபோதெல்லாம் யூ டியூப்-பில் குறும்படம் எடுத்தவர்கள் டாப் டைரக்டர்களாக வருவது அதிகரித்துக் கொண்டே போவது தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் ‘யூடியூபில்’ வெளியானதைத் தொடர்ந்து பிசியான சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளாராம்.இப்படி ‘யூடியூபால்,’ பிரபலமடைந்துள்ள அம்மணிக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை என்பதுடன் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்பது விசேஷ தகவல்.


கேரளாவைச் சேர்ந்தவ சந்திரலேகா.இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக உயர் கல்வி எல்லாம் கற்க முடியவில்லை. ஆயினும் இவருக்கு இளம் வயதிலேயே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு இவருக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் மடடும் பங்கேற்று பல முறை பரிசுகளை பெற்றார்.


இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு தன் கைக் குழந்தையை தூங்க வைப்பதற்காக பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். அப்படி குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி அவர் பாடியதை குடும்ப நண்பர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோ கடந்த மாதம் ‘யூடியூபில்’ வெளியானது.

 
ஒரே மாதத்தில் ஏழு லட்சம் பேர் பாக்கும் அளவுக்கு இந்த வீடியோ பிரபலமானது. இப்படி சந்திரலேகா இனிமையான குரலில் பாடுவதை பார்த்த- கேட்ட மலையாள சினிமா இயக்குனர்கள் இப்போது தங்கள் படத்தில் அவரை பாட வைப்பதற்கு அவரின் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றார்களாம்.


பிரபல் மலையாள இசையமைப்பாளர் டேவிட் ஜான் தான் இசையமைக்கும் புதிய படத்துக்கு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் சந்திரலேகாவின் பாடலை ‘யூடியூபில்’ பார்த்த பின் தன் முடிவை மாற்றி அவரையே தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று பார்த்துக் கொள்ளுங்களேன். மேலும் சில இசையமைப்பாளர்களும், சந்திரலேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


இதற்கிடையே பிரபல பின்னணி பாடகி சித்ரா போனில் தொடர்பு கொண்டு சந்திரலேகாவை பாராட்டியுள்ளார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பாராட்டியுள்ளார். இத்தனைக்கும் ‘யூடியூபால்,’ இவ்வளவு பிரபலமடைந்துள்ள சந்திரலேகாவுக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை; மின்னஞ்சல் முகவரியும் இல்லை என்பது விசேஷ தகவலாக்கும்!.

Kerala homemaker turns playback singer after viral YouTube video



 26 - lady singer Chandralekha-


**************************************************

 Till the other day, Chandralekha was just another housewife living in a tiny, unplastered house in Pathanamtitta, taking care of her three-year-old son Sreehari and her husband Raghunath, a temporary staffer with LIC. A song that she casually sang, carrying Sreehari on her hip, was recorded by her husband’s brother Darshan and shared on YouTube. Since then, the song Rajahamsame, originally sung by K.S. Chitra, has gone viral, attracting Mala­yalis far and wide, be it Australia, Middle East or Britain. The video carried her mobile phone number and since then, it hasn’t stopped ringing.

Friday, 11 October 2013

வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!


A herb garden at home!



“மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும் நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதையாகின்றன. குறிப்பாக உணவு   உற்பத்தி  முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க வேண்டிய - உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு,  இர வுப்பணி, ஒரே இடத்தில்  அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற்பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தா மல் இருப்பது, ரசாயன பூச்சிக்கொல்லிகளின்  பயன்பாடு போன்றவை பிரச்னைகளின் காரணிகள்.

சில சாதாரண விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினாலே பல நோய்களை தவிர்க்க முடியும். இக்கவனம் இல்லாமல் போனதால்  எதிர்ப்பு சக்தியை  இழந்து, பல நோய்களை நாமே வரவழைக்கிறோம். சில நோய்களை எளிமையாக மூலிகைகள் கொண்டு குணப்ப டுத்த முடியும்... தவிர்க்கவும்  முடியும்” என்கிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். இதோ... வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க சில  அபூர்வ மூலிகைகள்!பி.கு: தீவிர நிலை  நோயாளிகளுக்கு இவை பலன் தராது. மருத்துவர் ஆலோசனையைப் புறக்கணிக்க வேண்டாம்.

நீரிழிவு

இன்சுலின் செடி: இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

கள்ளிமுடையான்: கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற் றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

சர்க்கரைக்கொல்லி: கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

சிறியாநங்கை: கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி: தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.

அஜீரணம்

அருவதா: இதனை ‘பிள்ளை வளர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள். இளம் குழந்தைகளின் அஜீரண கோளாறுகளுக்கு நல்லது.

புற்றுநோய்

கோதுமைப்புல் சாறு:
கோதுமைப்புல் சாறு சிறந்த நிவாரணி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை ‘பச்சை ரத்தம்’ என அழைக்கிறார்கள். வீட்டிலேயே எளி தாக வளர்த்து  தயாரிக்க முடியும். 10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி  வீதம் விதைக்க, பத்தாவது  நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும். இதனை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண் டும். அறுவடை செய்த தொட்டியில் திரும்ப  விதைக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும். இப்போது பெருநகர அங்காடிகளில்  பாக்கெட்டுகளில் கோதுமைப்புல் கிடைக்கிறது.

எலுமிச்சம் புல்: எலுமிச்சம் புல் சாறிலுள்ள ‘சிட்ரால்’ வேதிப்பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (கிஜீஷீஜீtஷீsவீs) செய்து கொள்வதாக  கூறியுள்ளனர்  இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். அதே வேளையில் நல்ல செல்களுக்கு ஒன்றும்  ஆவதில்லை என்றும்  கண்டறிந்தனர். 2006ல் நடைபெற்ற ஆய்வு இது.

முள்ளு சீதா: ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படுவது முள்ளு சீதா. இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம். அங்குள்ள பழங்குடியினர்  பல்வேறு  நோய்களைக் குணப்படுத்த இப்பழத்தை உபயோகிக்கின்றனர். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் நோய்களை  குணமாக்க  பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால்  இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்றும்  அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. தமிழகத்தில் நன்கு  வளர்கிறது.

வெண்தேமல்: காலையில் வெறும் வயிற்றில், கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு  கைப்பிடி  சேர்த்து மிக மெதுவாக மென்று விழுங்க வேண்டும். பத்தியம் உண்டு. வெள்ளை சர்க்கரையை ( கீலீவீtமீ ஷிuரீணீக்ஷீ)  கண்டிப்பாக தவிர்க்க  வேண்டும்.

சிறுநீர் கோளாறுகள்

சிறுபீளை : சிறுநீரைப் பெருக்கி, சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது.

வாழைத்தண்டு:
பொரியல் செய்து உட்கொண்டால் சிறுநீர் கோளாறுகள் குறையும்

மூலநோய்:
மெக்சிகோ நாட்டுத் தாவரமான ‘ஐயப்பனா’ (Ayapana triplinervis) அறுவை சிகிச்சை நிலையில் இருக்கும்  மூல  நோயாளியைக்கூட மிக எளிதாக குணப்படுத்தும் என்கிறார்கள்.  காலையில் பல் சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சுமார் 5  இலைகளை உட்கொண்டு  சிறிது சுடுநீர் அருந்த வேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையைப்  பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகக்  கூடும்.

சளி, இருமல்

துளசி: துளசிமாடம் இன்றைய வாழ்வியல் முறையில் மறைந்து வருவது வருந்தத்தக்கதே. துளசியில் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப் பிடலாம்.  இருமல், சளி, ஜலதோஷம், தொற்று நீக்கும். சிறந்த கிருமிநாசினியும் கூட.

தூதுவளை:
இதன் இலை கோழையை அகற்றும். தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். சுவாசக் கோளாறுகளுக்கும் நல்லது.

ஆடாதொடை
: மிளகுடன் இலையை உண்ண கபத்தை அகற்றும்.

கற்பூரவல்லி:
குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஏற்பட்டால் கொடுக்கலாம்.

அழகு
மஞ்சள் கரிசலாங்கண்ணி:
உடல் வனப்பு பெறவும், கூந்தல் கருமையாக இருக்கவும் இதனை உபயோகிக்கின்றனர். வள்ளலார் விரும்பிய மூலிகை இது.

ரோஸ்மேரி:
மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து இறக்குமதியானது. தேநீருடன் சேர்த்து அருந்த புத்துணர்ச்சி ஏற்படும். அசைவ உணவுக்கு  மணமூட்டி  சுவையையும் அதிகரிக்கிறது. கூந்தல் பராமரிப்பிலும் அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுகிறது.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top