காமெடி அதிரடி!
நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படம் கமல் படத்தில் இதுவரை வந்திராத புதிய கதைக்களம் என்கிறார்கள். நல்லதுக்காக வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் கமல் நடிக்கிறாராம்.
அப்படியானால் படம் முழுக்க வில்லத்தனம் தான் பிரதானம் என்று எண்ணி விடாதீர்கள். இது காமெடிக்களத்தில் பயணிக்கும் படம்
என்பதால் சிரிக்கவும் வைக்கப் போகிறார், கமல்.
***
அது தான் காரணமா?
தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படம் இந்தியில் ‘கப்பார்’ என்ற பெயரில் ‘ரீமேக்’காக இருக்கிறது. விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க, சிம்ரன் கேரக்டரில் அமலாபாலும், ஆஷிதா கேரக்டரில் ஸ்ருதி ஹாசனும் நடிக்க தேர்வானார்கள்.
ஆனால் இப்போது படத்தில்...
Sunday, 27 October 2013
கடலூர் மாவட்டத்தின் வரலாறு!
கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் ,செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது... சிதம்பரம் :சிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது.சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்....
அஜித்துக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!- விஷ்ணுவர்தன் சிறப்புப் பேட்டி!
இயக்குனர் விஷ்ணுவர்தன்
ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்
ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்
நடிகர் அஜித் உடன் விஷ்ணுவர்தன்
31ம் தேதி பட வெளியீடு, மாயாஜாலில் மட்டும் 91 ஷோ, எங்கு பார்த்தாலும் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சரி, 'ஆரம்பம்' பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தனிடமே பேசலாம் என்று தொடர்பு கொண்டேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பைனல் மிக்ஸ் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வாங்க என்றவுடன் அவசர அவசரமாக சென்று காத்திருந்து எடுத்த மினி பேட்டி...
'ஆரம்பம்' படத்தை அஜித் பாத்துட்டு என்ன சொன்னார்?
ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னார். இது என்னோட சிறந்த படங்கள்ல ஒண்ணு. ரொம்ப...
ஷாருக்கானுக்கு 1,800 கோடி சொத்து!
1,800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான்.
இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருப்போர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இப்பட்டியலில் இணைந்திருக்கிறார் ஷாருக்கான்.
அவரது பெயரில் மட்டும் 400 மில்லியன் டாலர் சொத்து இருக்கிறது. 400 மில்லியன் டாலர், அதாவது 2460 கோடி ரூபாய்க்கு மேல் அவரது பெயரில் சொத்து இருக்கிறது. அவரது ‘ரெட் சில்லீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சொத்துக்கள் இந்த கணக்கில் வராது.
இப்பட்டியலில் 114வது இடத்தில் இருக்கிறார் ஷாருக்கான். கடந்தாண்டைப் போலவே முகேஷ் அம்பானி...
ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.
கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.
இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் படங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம்....
உங்கள் ‘பி.சி’ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!
மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாமல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம்.
இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் பணியில் மூழகலாம்.இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியோடு எளிமையாக காட்சி தரும் இந்த தளத்தில் கொஞ்சம் கவனமாக பார்த்தால் கூடுதலாக பல வசதிகள் இருப்பதை தெரிந்து...
இது பேஸ்புக் உலகம:வியக்க வைக்கும் இணையதளம்
பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேசஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே சொச்சத்து உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது.
இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை தோன்றும்.அது அந்த புள்ளிக்கான பேஸ்புக் பயனாளியின் எண்ணிக்கை. மேலும் கிளிக் செய்தால் அந்த பேஸ்புக் பயனாளியின் புகைப்பட மற்றும் பேஸ்புக்...
இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!
கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே...
பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!
பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.
மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக...
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீரம் படத்துக்குப் பிறகு, நடிகர் அஜித் நடிக்கும் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது, வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
வீரம் படத்திற்கு பிறகு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி...
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்!
இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச முடியும் என கூறியுள்ளார். பிரதமர் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் நான் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், சூடான், குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 53 நாடுகள் இடம் பெற்றுள்ளன.இதன் தலைமையகம் லண்டனில்...
எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்துதான் ரிலீஸ் செய்வார்கள்.இந்நிலையில் தீபாவளியையொட்டி ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இதற்கு முந்தைய சாதனை எந்திரன்...
BMW 2 Series Coupe கார்கள் விற்பனைக்கு தயாராகின!
கார் பாவனையாளர்களின் மனங்களை வென்ற BMW நிறுவனத்தின் புதிய அறிமுகமாக BMW 2 Series Coupe கார்கள் சந்தைக்கு வரவுள்ளன.
அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக்கார்கள் 228i, M235i மொடல்களை கொண்டுள்ளன.
இதில் BMW 228i கார் ஆனது 240 குதிரை வலு உடையதாகவும் 5.4 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை BMW M235i கார் 322 குதிரை வலு உடையதாகக் காணப்படுவதுடன் 4.8 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
BMW 228i காரின் விலையானது 33,025 டொலர்கள் எனவும், BMW M235i காரின் விலையானது 44,025 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது.
இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி...
' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)

வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.
அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.
அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.
அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.
அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.
வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.
' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை...
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-06
குருஷேத்ர போரில் பாண்டவர்களின் படை தளபதிகளுள் ஒருவரான திருஷ்டகேது சேதி நாட்டை சேர்ந்தவன். மேலும் இவன் சிசுபாலனின் மகன் ஆவான்.
வத்ஷம்:
இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் கோசம் என்ற சிறிய நகரமே அன்றைய வத்ச நாடு ஆகும். குசம்பி இதன் தலைநகரம்.
மகாபாரதத்தில் பல இடங்களில் வத்ச பூமி என்று வத்ச நாடு பற்றி பல
குறிப்புகள் வருகின்றன. மகாபாரதம் (I:188) திருச்டதும்ணன் பாஞ்சாலியை
பார்த்து அவளை மணக்க காத்திருக்கும் மன்னர்களின் பெயரை வாசிக்கும் பொழுது
ஸ்ருடயு, உலுக, கிட்டவ, சிற்றங்கட மற்றும் சுவங்கட , வத்சராஜா(King of
Vatsa Kingdom) என்று குறிப்பிடுகிறான்.
குரு:
...
படு பிஸியாகி விட்டார் 1000 டன் தங்க சாமியார்!
பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
65 வயதான இந்த சாமியாரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில்...
பட்டமளிப்பு விழாக்களில் கவுன் அணியும் வழக்கத்திற்கு ஜனாதிபதி முடிவு !
இமெயில்
திரைப்படம்
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா ஐ.ஐ.டி.யின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றுது.
இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநில கவர்னர் டி.ஒய். பாட்டீல், முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் பட்டமளிப்பு விழா மரபுகளின் படி கவுன் (அங்கி) மற்றும் தொப்பிகளை அணிந்திருந்தனர்.
அப்போது விழா மேடையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நோக்கியவாறு, 'இந்தியாவின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்ற பிறகு தேவையற்ற பல சம்பிரதாய செயல்களுக்கு முடிவு கட்டியுள்ளீர்கள்.
இதைப் போன்ற பட்டமளிப்பு...
மிஸ் நியூஜெர்சி பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இந்திய பெண் !
சமீபத்தில் அமெரிக்க அழகிப்பட்டத்துக்கு நீனா தவ்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும் இந்நிலையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரன எமிலி ஷா மிஸ் நியூஜெர்சியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனால் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியி லும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் இவர் கலந்து கொள்ள முடியும் என்பதையடுத்து இவர் மீதும் பழிச சொற்கள் பாய ஆரம்பித்துள்ளதாம்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி அழகிப் போட்டி நடைபெற்றது. அதில் 130 இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அதில் இந்திய வம்சாவளியான...
வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!
நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.jsp)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்
இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.
கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி...
‘யூ டியூபால் பிசியான பாடகி யாகி விட்ட இல்லத்தரசி!
இபபோதெல்லாம் யூ டியூப்-பில் குறும்படம் எடுத்தவர்கள் டாப் டைரக்டர்களாக வருவது அதிகரித்துக் கொண்டே போவது தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் ‘யூடியூபில்’ வெளியானதைத் தொடர்ந்து பிசியான சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளாராம்.இப்படி ‘யூடியூபால்,’ பிரபலமடைந்துள்ள அம்மணிக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை என்பதுடன் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்பது விசேஷ தகவல்.
கேரளாவைச் சேர்ந்தவ சந்திரலேகா.இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக உயர் கல்வி எல்லாம் கற்க முடியவில்லை. ஆயினும் இவருக்கு இளம் வயதிலேயே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும்...
கருணாநிதியின் மூத்த மகன் நடிகர் மு.க. முத்து ஆஸ்பத்திரியில் அனுமதி!
தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (65). மேடைகளில் மெல்லிசை கச்சேரிகள் மற்றம் தி.மு.க. கொள்கை விளக்கப் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தி வந்த இவர் 1970-ம் ஆண்டு 'பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதனை தொடர்ந்து, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூக்காரி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து, சொந்த குரலில் பாடியும் உள்ளார். கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு பவித்ரன் இயக்கிய 'மாட்டுத்...
உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் !
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.
இன்றைய நவநாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் பல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து...
நாம் சொல்லும் எட்டு விதப் பொய்கள்!
பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.“பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்”என்ற குறள் மூலம் “குற்ற மில்லாத நன்மை விளை விக்கும் எனில், பொய் யான சொல்லும் உண்மை என்றே கருதப்படும்” என் று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். இதைச் சொ ன்னபின், எந்தக் குறிப்பி ட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லப்படலாம் என்ப தற்குரிய நியாயங்களையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படு கிறது.ஹிப்போ அகஸ்டின் பொய்களை எட்டு விதமாக வகைப்படுத்து கிறார். 1. மதபோதனையின் போது சொல்...
ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.Page3b * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி...