பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
65 வயதான இந்த சாமியாரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில் உள்ள மற்றொரு ஆசிரமத்திற்கு மாறியுள்ளார். புலித்தோல் வடிவம் கொண்ட துணியால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மிக அமைதியாக பேசும் இவரது அறையில் மின்சார விளக்குகள் கூட கிடையாது.
ஏனென்றால், கிராமத்தில் மின்சாரம் கிடையாது. இவரது சீடர்களில் முக்கியமானவர் சுவாமி ஓம். தனது குரு சோபன் சர்க்கார் கூறியவை குறித்து கூறுகையில், ‘‘எனக்கு விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை. என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று யாரையும் அழைப்பதில்லை. எனக்கென்று வங்கி கணக்கோ, சொத்தோ இல்லை. ஆனால், என் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செய்யும் ஆற்றல் என்னிடம் உள்ளது’’ என்றார்.
இவர் சொல்வதைப்போலவே அக்கம், பக்கம் கிராம மக்களுக்கு இவர் மூலம் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை கிடைத்துள்ளது.இந்த சாமியார் அவ்வப்போது 2 சோள ரொட்டி மட்டும்தான் சாப்பிடுகிறார். அதுவும் உடல் பலத்துக்கு தேவை என்பதால், இதை சாப்பிடுகிறாராம். ஆனால் ஆசிரமத்தில் இவரைப் பார்க்க வருபவர்கள் தரும் பரிசு பொருள்கள் உணவுப்பொருள்களை ஏற்றுக் கொள்கிறார். 5 மாநில முதல்வர்கள் இவரின் சீடர்கள். முலாயம் சிங் யாதவ், உமா பாரதி, ராஜநாத் சிங், முதலிய பலர் இவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றுள்ளனர்.
0 comments: