இபபோதெல்லாம் யூ டியூப்-பில் குறும்படம் எடுத்தவர்கள் டாப் டைரக்டர்களாக வருவது அதிகரித்துக் கொண்டே போவது தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் ‘யூடியூபில்’ வெளியானதைத் தொடர்ந்து பிசியான சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளாராம்.இப்படி ‘யூடியூபால்,’ பிரபலமடைந்துள்ள அம்மணிக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை என்பதுடன் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்பது விசேஷ தகவல்.
கேரளாவைச் சேர்ந்தவ சந்திரலேகா.இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக உயர் கல்வி எல்லாம் கற்க முடியவில்லை. ஆயினும் இவருக்கு இளம் வயதிலேயே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு இவருக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் மடடும் பங்கேற்று பல முறை பரிசுகளை பெற்றார்.
இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு தன் கைக் குழந்தையை தூங்க வைப்பதற்காக பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். அப்படி குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி அவர் பாடியதை குடும்ப நண்பர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோ கடந்த மாதம் ‘யூடியூபில்’ வெளியானது.
ஒரே மாதத்தில் ஏழு லட்சம் பேர் பாக்கும் அளவுக்கு இந்த வீடியோ பிரபலமானது. இப்படி சந்திரலேகா இனிமையான குரலில் பாடுவதை பார்த்த- கேட்ட மலையாள சினிமா இயக்குனர்கள் இப்போது தங்கள் படத்தில் அவரை பாட வைப்பதற்கு அவரின் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றார்களாம்.
பிரபல் மலையாள இசையமைப்பாளர் டேவிட் ஜான் தான் இசையமைக்கும் புதிய படத்துக்கு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் சந்திரலேகாவின் பாடலை ‘யூடியூபில்’ பார்த்த பின் தன் முடிவை மாற்றி அவரையே தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று பார்த்துக் கொள்ளுங்களேன். மேலும் சில இசையமைப்பாளர்களும், சந்திரலேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கிடையே பிரபல பின்னணி பாடகி சித்ரா போனில் தொடர்பு கொண்டு சந்திரலேகாவை பாராட்டியுள்ளார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பாராட்டியுள்ளார். இத்தனைக்கும் ‘யூடியூபால்,’ இவ்வளவு பிரபலமடைந்துள்ள சந்திரலேகாவுக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை; மின்னஞ்சல் முகவரியும் இல்லை என்பது விசேஷ தகவலாக்கும்!.
Kerala homemaker turns playback singer after viral YouTube video
**************************************************
Till the other day, Chandralekha was just another housewife living in a tiny, unplastered house in Pathanamtitta, taking care of her three-year-old son Sreehari and her husband Raghunath, a temporary staffer with LIC. A song that she casually sang, carrying Sreehari on her hip, was recorded by her husband’s brother Darshan and shared on YouTube. Since then, the song Rajahamsame, originally sung by K.S. Chitra, has gone viral, attracting Malayalis far and wide, be it Australia, Middle East or Britain. The video carried her mobile phone number and since then, it hasn’t stopped ringing.
0 comments: