சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.சுனிதா நாராயணன்:
உலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து நிற்பவர் இவர் என்பதால், அந்த நிறுவனங்கள் இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்.உதாரணமாக, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்ற, அளவுக்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், குளிர்பானங்கள், உயிர்கொல்லி பானங்களாக மாறி விடுகின்றன என, நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் இவர்.அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில், இவர் சொன்னது சரி தான் என்பது,...
Saturday, 2 November 2013
தீபாவளி லேகியம் செய்வது எப்படி?
தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.
இனி தீபாவளி லேகியம் எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையானவை:
தணியா : 4 கப்
இஞ்சி : 200 கிராம்
ஓமம் : 100...
கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!
.
இலங்கையில் நவம்பர் 15-17-ல் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.அந்த பயணத்தை ரத்து செய்யுமாறு அவரை மத்திய வெளியுறவுத் துறை ‘நட்புரீதியில்’ கேட்டுக்கொண்டதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்மாதம் இடைப்பட்ட வாரத்தில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த வாரம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை...
அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இணைதள ஹோக்கர்கள் அத்துமீறி நுழைந்து தங்களது ஹேக் தகவலை பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ இணையதளமான www.aiadmkallindia.org – க்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில், இஸ்லாம் ஜிந்தாபாத், இஸ்லாமியர்கள் வாழ்க, பாகிஸ்தான்...
பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு!
நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
01. Sales Manager
02. Credit Manager
03. Location manager
04. Retail Assets
05. Asset Desk Manager
06. Collection Manager
07. Relationship Manager
08. Cross Sell Manager
09. Sales Quality Manager
10. Risk Analyst
கல்வித்தகுதி:
பி.காம் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hdfcbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க...
ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!
ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது. தீபாவளி சர வெடியாக, ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யப் பணித்தது. இதை அடுத்து இந்திய அணியில் துவக்க வீரராகக் களம் இறங்கினர் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர். இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. ஷிகர் தவான் 57 பந்துகளில் 60 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில்...
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”
அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது.
அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இதை ஆங்கிலத்தில் God’s particle அல்லது Higgs Boson என்று அழைக்கிறார்கள்.
இதைப் பற்றி விரிவாகப் படித்த போது வார்த்தைகளில் சொல்லொணாத பேரின்பம் இதயத்தில் எழுந்தது. அந்தச் செய்தியைப் படிக்கும் போதே என் மனம் திருமூலர் எழுதிய திருமந்திரத்திற்குத் தாவி விட்டது.ஏன் ? அதற்கு ஒரு பெரிய கதை இருக்கிறது.
இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அல்லது எல்லாத் தனிமங்களிலும் (Elements) இருக்கும் அடிப்படைப் பொருள் அணு. இந்த அணுக்கள் ப்ரோடான், நியுட்ரான், எலேக்ட்ரோன் ஆகியவற்றால் ஆனவை. அவை எதனால் ஆனவை என்று...
நாசாவிற்குச் செல்லும் தமிழக கிராமத்துமாணவர்!
மாறிவரும் பருவநிலை குறித்து இளம் விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்பதற்கான கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழ்நாட்டின் கம்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சலீம்கான்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் மாணவரான இவர், உயர்ந்து வரும் புவியின் வெப்பத்தால், மாறிவரும் பருவநிலை மாறுபாடு குறித்தும், இதனால் தமிழகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில், வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான கடற்கரைப் பகுதியில் இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.
2100 ஆம் ஆண்டிற்குள் 50 செ.மீ அளவிற்கு கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான பகுதியில் உள்ள கிராமங்கள் கடலுக்குள்...
அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!
திரைப்படம்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள். சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு...
உயிர் காக்கும் ஆயுர்வேதம்!
திரைப்படம்
நான்கு வகையான குடலமைப்பை மனிதர்கள் கொண்டவர்களாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தாயின் கருப்பையின் ஒரு அங்கமாக விளங்கும் முட்டையினுள்ளும், தந்தையின் விந்தணுக்களிலும் பொதிந்துள்ள வாத-பித்த-கப தோஷங்களின் ஆதிக்கத்தால், பிறக்கும் குழந்தையின் குடலமைப்பு தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் வாத தோஷத்தின் ஆதிக்கமிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் குடலில்வாதத்தின் அளவு அதிகமிருக்கும். பிறந்து வளர்ந்தாலும் நீடித்த மலச்சிக்கலாலும், பசியின் தன்மையானது சில நேரத்தில் சீராகவும், சில நேரத்தில் ஏற்றக் குறைவாகவும் காணும். வாயுவின்...
சத்துப்பட்டியல்: தேங்காய் எண்ணெய்!
திரைப்படம்
உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்... தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான நார்ப்பகுதியால் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும். அதன் உள்ளே கடின ஓடுடன் விதைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. விதையைச் சுற்றிய உறைப்பகுதியே நாம் தேங்காய் என்று அழைக்கிறோம். உலர்தேங்காய் கொப்பரைக் காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி, எண்ணெய் எடுக்கப்படுகிறது....
கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!
மார்பு, தொண்டை, தலை, உணவுக்குழாய், மூட்டுகள், இரைப்பை, ரசம் எனும் தாது, கொழுப்பு, மூக்கு, நாக்கு போன்ற உடல் பகுதிகளை கபம் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடல் உறுதி, எண்ணெய்ப்பசை, எலும்பு மூட்டுகளின் இணைப்பு, ஆண்மை, பொறுமை, அறிவு, தைரியம், வலிவு, சபலம் (புலப் பொருள்களை நுகர அதிக ஆசை) இவை போன்றவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் கபம் உடலுக்கு நலனைத் தருகிறது. தன் நிலையிலிருந்து கபம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால்-வெண்மை நிறத்தைத் தோலில் ஏற்படுத்துதல், குளிர்ச்சி, உடற்பருமன், சோம்பல், உடல் பளு, உடல் தளர்ச்சி, ஓட்டைகள் அடைப்பட்டுப் போதல், மூர்ச்சை, சுறுசுறுப்பின்மை, உறக்கம், சுவாச நோய், இருமல், வாயில் நீர் ஊறுதல், இதய வேதனை, பசி குறைதல், பூட்டுகளில் தளர்ச்சி இவற்றை ஏற்படுத்தி வளர்ச்சியடைந்த கபம் உடலுக்குத் துன்பம் தருகிறது. தன் நிலையிலிருந்து கபம் குறைந்துவிட்டால் தலைச்சுற்றல், உடலைத்...
சூப்பர் ஸ்டார் பட டைட்டிலில் விஷால்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கிறார் விஷால்.
யுடிவி தயாரிக்கும் புது படத்தின் பெயர் நான் சிகப்பு மனிதன்.
விஷால் கதாநாயகனாக நடிப்பதுடன் தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியையும் யூடிவி-யுடன் இணைத்துக் கொண்டு தயாரிப்பிலும் பங்கேற்கிறார்.
விஷாலுடன் லட்சுமி மேனன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் திரு, இவர் விஷாலை வைத்து ஏற்கெனவே சமர் என்ற படத்தை இயக்கியவர்.
இப்படம் ஒரு முழுநீள ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.
நவம்பர் 3வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை...
படத்தை பார்த்த பின்னர் இசை அமைத்த இளையராஜா!
படத்தை முழுமையாக பார்த்த பிறகு இளையராஜா இசை
அமைத்திருக்கும் படம் ஒரு ஊர்ல. இதுபற்றி இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார்
கூறியதாவது: கடந்த 1980-90 களில் இளையராஜாவின் இசை, தமிழ் திரையுலகை
புரட்டி போட்டது. அந்த கால கட்டத்தை மீண்டும் கொண்டு வரும் வகையில்
இப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.
உதிரி பூக்கள், என்
ராசாவின் மனசிலே, சேது போன்ற படங்கள் முதலில் இசை இல்லாமல்
படமாக்கப்பட்டது. பிறகு முழு படத்தையும் இளையராஜாவுக்கு திரையிட்டு
காட்டினார்கள். அதன்பிறகே அவர் இசை அமைத்தார். அந்த பாடல்கள் இன்றளவும்
பேசப்படுகின்றன.
அதே போல் ஒரு ஊர்ல படமும் முதலில் முழுமையாக
ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு...
கூகுள் நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
கூகுள் இன்று மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 4.4 (கிட்கேட்) கொண்ட நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. நெக்ஸஸ் 5 தற்போது ப்ளே ஸ்டோர் மூலம் பெரிய சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் விரைவில் வருகிறது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தையில் நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் 16ஜிபி வகை ரூ.28.999 மற்றும் 32ஜிபி வகை ரூ.32.999 விலையில் கிடைக்கும். நெக்ஸஸ் 5 இப்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கூகுள் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கும்.நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன்: முழு எச்டி (1080) தீர்மானம் கொண்ட 4.95-இன்ச்...
லினோவா P780 பேப்லட் அறிமுகம்!
லினோவா நிறுவனம் தற்போது P780 ஸ்மார்ட்போன் என்ற பெயர் கொண்ட புதிதாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 4GB க்கு இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது.மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது.இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைலில் மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரிகளை விட வலுவான 4000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது இது அதிக பேடட்டரி திறனை உங்களுக்கு தருகிறது. இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக...
வாழ்க்கையில் விளையாடும் மது!
வேலைக்குப்பின் என்று தொடங்கி வேலைக்குமுன் என்றாகும் மது !-————————- -திறமையை அழித்து தீமையைத் தரும் மது !-———————–-விளையாட்டாக ஆரம்பித்து வாழ்க்கையில் விளையாடும் மது !-—————————-இலவசம் என்று குடித்தால் தன் வசம் ஆக்கிவிடும் மது !-———————-ஊடகங்களில் கற்பிக்கப்படும் தீங்கு மது !-————————-நல்லவர்கள் தொடுவதில்லை தொட்டவர்களை விடுவதில்லை மது !-————————-இன்பம் என்று தொடங்கி பெருந்துன்பத்தில் முடியும் மது !-——————–-துஷ்டனைக் கண்டால் தூர விலகு மது !...
5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐடியா அல்ட்ரா ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!
ஐடியா அதன் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோ விரிவடைந்து ரூ.10,500 விலையில் அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிகாம் ஆபரேட்டர், ஐடியா அல்ட்ரா ஸ்மார்ட்ஃபோன் உடன் 3 மாதங்களுக்கு 3GB மொபைல் டேடா தொகுப்பு சலுகை (3G) மற்றும் ஐடியா டிவி சந்தாவை இலவசமாக வழங்கி வருகின்றது. ஐடியா நிறுவனத்திலிருந்து அல்ட்ரா 12 வது ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் இது 5 அங்குல டிஸ்பிளே கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோன் ஆகும். மற்ற ஐடியா ஸ்மார்ட்போன்கள் ஐடியா Aurus II, ஐடியா Aurus III, ஐடியா பிளேட், ஐடியா ID280 மற்றும் ஐடியா ID918 உள்ளிட்டவை அடங்கும். ஐடியா அல்ட்ரா அம்சங்கள்: 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்ட 480x854 பிக்சல்கள் தீர்மானம். இது...
தீபாவளி எத்தனை தீபாவளி!
தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர்.* வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.
* வடநாட்டினர் தீபாவளியைக் குபேர பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.
* இராஜபுதனர்கள் இந்த நாளை ராமபிரானுக்குரிய நாளாக வழிபடுகின்றனர்.
* ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஒரு தீபாவளிநாளில்தான் நிறுவினார்.
* ஜைனர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
* சீக்கியர்கள் மதகுருவான குருநாணக் பிறந்தநாள் தீபாவளியாகும்
* மேற்கு வங்கத்தில் தீபாவளியன்று இளம்பெண்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.
* தீபாவளியின்போது நாம் பட்டாசு வெடிப்பது போல் ஜெர்மனி நாட்டில் வசந்த கால விழாவில் பட்டாசு...
அஜீத் வாழ்த்து - தீபாவளியை சந்தோஷத்துடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்!
தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் அஜீத் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது. இத்திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.
இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்களின் ஆர்வத்தால் சில பாதிப்புகள் வந்தாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனை அடுத்து ‘வீரம்’ படப்பிடிப்பில் இருக்கும் அஜீத் தனது உதவியாளர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி பின்வருமாரு: திரைப்படம் என்பது அனைவரும் பார்த்து மகிழவே எடுக்கப்பட்டது.எனது ரசிகர்களின் அன்பை நான் அறிவேன்....
தீபாவளி சிந்தனைகள்!
தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் "தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக "தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களின் புத்தாண்டுப் பிறப்பை நாம் ஏற்றுக்கொண்டு, கொண்டாடத் தயங்காதபோது, ஆறு நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தில் கலந்துவிட்ட பண்டிகையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? காதலர் தினம் கொண்டாடுவதைவிட, தீபாவளி கொண்டாடுவது எந்தவிதத்தில் தேவையற்றதாகிவிட்டது?
பணக்காரர்களுக்குத் தங்கள் வசதி வாய்ப்புகளை வெளிச்சம்போட இதுபோன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ,...
நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)

கந்தனும், முருகனும் நண்பர்கள்.
கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.
ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.
உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.
அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான் என்று சொல்லாதே...நாம் புதையலைக் கண்டோம்..என்று சொல்' என்றான்.
தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.
அவர்கள் சிறிது தூரம் சென்றதும்...அந்த மூட்டைக்கு உரியவன்
...கந்தனும்,முருகனும் தனக்கு சொந்தமான மூட்டையை எடுத்து செல்வதைப்
பார்த்து அவர்களை நோக்கி
'திருடன்..திருடன்' என ஓடி வந்தான்.
உடன் கந்தன் முருகனிடம்...