.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 21 May 2013

அரிய தகவல்களைத் தேடுபவரா நீங்கள்? உங்களுக்காக இது!





                         எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. 


                         நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பதும் நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும்.  இதனால், நம் அறிவும் விசாலமாகிறது.  இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும்.  இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது.  



அதன் முகவரி, 






                     இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன.  



                    ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது




                    மேலும் சில தலைப்புகள்  உங்களுக்காக இதோ....













அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய இணைய தளம் இது..

அவன திருப்பிக் கடி -1


பச்சபுள்ள ஜோக்ஸ்







" ஏன்டா சட்டை போடாம வாக்கிங் போற?"






" டாக்டர்தான் என்னை டெய்லி வெறும் வயித்தோட நடக்கணும்னு சொன்னாரு! "





வியக்கவைக்கும் இணைய தளம் - கல்லூரி மாணவர்களுக்கு......







                 கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


                    இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள்.


                      இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி






                       இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 






                       உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 






                        கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது.



           கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.



Note:-

  { மிக அருமையாக உள்ளது இத்தளம் }


 

இனிமேல் Windows 8 இல்லை, Windows Blue -தான்





                         விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகையில், உலகில் 67 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுவதாகவும், இவை யாவும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிவிடுவார்கள்' என்று நம்பிக்கையுடன் கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பால்மெர்



                       ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. பல மூலைகளிலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு எதிர்ப்பு வந்தது. குறிப்பாக, ஸ்டார்ட் மெனு இல்லாதது குறையாகச் சொல்லப்பட்டது. 



                       பொது ஜன தொடர்பு நிறுவனங்கள் மூலம், மைக்ரோசாப்ட் மக்களிடம் தன் புதிய சிஸ்டத்தினைக் கொண்டு செல்லப் பார்த்தது. எந்த முயற்சியும் பலனளிக்காததால், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை  விண்டோஸ் புளு ( Windows Blue )  என்ற பெயரில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்தன. 

 


தற்போது  விண்டோஸ் 8.1( Windows 8.1) என அது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




                   ஸ்டார்ட் பட்டனை நீக்கியது, அதற்குப் பதிலாகச்துர கட்டங்கள் வழி அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தந்தது, கம்ப்யூட்டர் இயக்கம் தெரிந்தவர்கள் கூட புதிய விஷயங்களைச் சிரமம் எடுத்து கற்க வேண்டிய நிலை ஆகியவற்றால், விண்டோஸ் 8 எதிர்பார்த்தபடி மக்களை அடையவில்லை. 






                       துரதிருஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உணர்ந்து கொள்ள ஆறு மாதம் பிடித்தது. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திலேயே இயங்க முடிவெடுத்தன. இன்னும் பல பிரிட்டன் நிறுவனங்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்கிக் கொண்டுள்ளனர்.

நாங்களும் பேசுவோம்! - 1







பாகிஸ்தானிடம் வீரம்,,,  


                    சீனாவிடம் பணிவு…!




15 கி.மீ இந்திய எல்லையைக் கடந்த சீனாவை ஒன்றும் செய்ய முடியாத நாம் வல்லரசாக ஆகபோகிறோமா…




பாகிஸ்தானிடம் வீரம்,,, சீனாவிடம் பணிவு...! 15 கி.மீ இந்திய எல்லையை கடந்த சீனாவை ஒன்றும் செய்ய முடியாத நாம் வல்லரசாக ஆகபோகிறோமா... !!


எவ்வளவு சதவீதம் அன்பைக் காட்ட வேண்டும். - குட்டிக்கதைகள் - 7


குட்டிக்கதைகள் - 7







                             ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.

                               அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

                            அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
 
                      அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
 
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும் ,நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்

Microsoft-ன் அற்புதமான சேவை - உங்களுக்காக......



                       கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 


                   நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது.  மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற  Cloud Computing  முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது.    இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும். 


                 இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது  (Online Storage).  இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது.



                   Microsoft-ன்  Skydrivஎன்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில்  7 Gb  இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது.



            இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது





                   இந்த சேவையில்  HTML5,  CSS3  போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.


             இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.







               Skydrive.live.com  தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Files, Recent docs, All photos, Shared, PCs  என்ற ஐந்து பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த  Hotmail  அல்லது  live.com  மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். 


           இல்லாவிட்டால் அங்கேயே  Signup  செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.




 

                    Files  என்பதில் உங்கள் கோப்புகளையும்  All photos  பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான  Word,  Excel,  Powerpoint,  Access  போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும்.  உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.


                Share  என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பாக Email, Facebook, Twitter, Linkedin, Flickr, Sina Weibo மூலம் பரிமாறிக்கொள்ளலாம்.  



Get a link-ல் View Only,  View and edit,  Public போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.


            பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.

இணையதளம் :





Note:-



{ The service offers 7 GB of free storage for new users.  

 Additional storage is available for purchase.

 Users who signed up to SkyDrive prior to April 22, 2012 could have opted-in for a limited time offer of  25 GB of free storage upgrade }



Storage : 7 GB தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னும் 4 மின்னஞ்சலை உருவாக்கி தரவேற்றுங்கள்!!!
சரிதானா? 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top