.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 23 September 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!


                                                          

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்ட தொடக்க விழாவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னார்.


வந்தாரை வாழவைக்கும் பூமி...


வந்தாரை வாழவைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப்பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த்திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். தானும் வாழவேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமாத்துறை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டும் அல்லாமல், தனக்கு போட்டியாக இருப்பவர் என கருதப்படுபவரையும் அழித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.


குட்டிக்கதை


ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப்படுகுழி என்கிற கிணற்றில் விழுந்துவிட்டார். அந்த கிணற்றில், ஏற்கனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.


அந்த கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப்பார்த்தார் அந்த மகான்.
மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், ‘‘சுவாமி! என்னைக்காப்பாற்றுங்கள்’’ என்று கத்தினார்.


அந்த மனிதரைப்பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரை காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார். ஏதாவது ஒரு நல்லகாரியத்தை அந்த மனிதர், தனது வாழ்நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார்.


ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரியவந்தது. இந்த செயலுக்காக, அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று.


உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப்பார்த்து, ‘‘இந்த நூலை பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா’’ என்றார்.


சிலந்தி நூல்


இதற்கு அந்த மனிதர், ‘‘சிலந்தி நூல், என்னைத்தாங்குமா?’’ என்று கேட்டார்.
‘‘எல்லாம் தாங்கும். அதைப்பிடித்து வா’’ என்றார் மகான்.


சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப்பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது.


எனவே, அதைப்பிடித்துக்கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.


உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.


ஆனால் நடந்தது என்ன தெரியுமா?


மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியை கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்க செய்துவிட்டது.


அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர்.


அரசு உதவும்


திரைப்படத்துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள். திரைப்படம் என்பது, பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும், நல்ல கருத்துகளையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும், இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச்செல்லும் வகையிலும்;
சாதி மற்றும் மத ரீதியிலான வகையில், பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும்; வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்கவேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களை இந்த தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதுடன், திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை கூறினார்.


தலைமைச்செயலாளர்


முன்னதாக தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:–


திரைப்படங்கள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமல்ல சமுதாயத்தை மாற்றும் சக்தியாகவும் உள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. திரைப்பட உலகம் பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறும்போது, ‘திரையுலகம் எனது தாய்வீடு’ என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். எனவேதான் இந்திய திரையுலகத்தின் இந்த கோலாகல நூற்றாண்டு விழாவுக்காக தானே முன்வந்து பல உதவிகளை வழங்கியுள்ளார்.


அவர் தனது அயராத உழைப்பால், அனைத்துத்துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக திகழும் நிலையை உருவாக்கி வருகிறார். சிறந்த திரைப்படங்களுக்கான மானியம் வழங்குதல், புதிய விருதுகளை உருவாக்குதல், சினிமாவின் திருட்டு சி.டி. குற்றத்தை ஒழித்தல் போன்ற பல எண்ணற்ற திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.


திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அவர் இருப்பதால், சினிமா துறையினர் அவருக்கு நன்றிகடன் பட்டவர்களாக இருக்கிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர் என்பதால், அந்தத்துறையை சேர்ந்தவர்கள் மீது தனி அன்பும், பாசமும் கொண்டுள்ளார்.


என்றென்றும் புகழ்ந்து பேசப்படும் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்குவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

‘‘சினிமா ஒரு அபூர்வ உலகம்’’ நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!





‘‘சினிமாவில் ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். சினிமா ஒரு அபூர்வமான உலகம்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


ரஜினிகாந்த் பேச்சு


சென்னையில் நேற்று இரவு நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–


‘‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்–அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.


நடிப்பை தவிர...


சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.
சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.


ஜாம்பவான்கள்


இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். ‘டாப்’பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.
சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மகான்கள்

சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.
அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

அபூர்வ உலகம்

சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.

நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.’’

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

கமல்ஹாசன் பேச்சு

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:–

‘‘சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர்.

இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும்.’’

மேற்கண்டவாறு கமல்ஹாசன் பேசினார்.

முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக மாறியது எப்படி?



 கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது பகுதிகளை ஆறு ராஜ்ஜியங்களாக பிரித்து அந்த பகுதிகளை ஆட்சி செய்ய 6 பிரதிநிதிகளை நியமித்தார். மதுரை ராஜ்ஜியத்திற்கு நாகமநாயக்கரை நியமித்தார். நாகமநாயக்கர் விஜய நகர பேரரசிற்கு உரிய வரிப்பணத்தை செலுத்தாமலும், ஆணைக்கு கட்டுப்படாமலும் இருந்துள்ளார்.


இதையடுத்து நாகமநாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மதுரைக்கு படை எடுத்து சென்று தனது தந்தையை வென்று அவரை விஜய நகரத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விசுவநாத நாயக்கரை மதுரை நகர பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். 1529ம்ஆண்டு முதல் 1682ம் ஆண்டு வரை 8 நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகள் நாயக்கர்களின் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது.



நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஈரோடு, விஜயமங்கலம், நாயக்கன்கோட்டை, சத்தியமங்கலம், அந்தியூர், குன்னத்தூர், பெருந்துறை, கோசனம், கொளாநல்லி, பாலத்தொழுவு போன்ற இடங்களில் கோட்டைகள் இருந்தது. நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் 1609ம்ஆண்டு முதல் 1659ம்ஆண்டு வரை முதலாம் முத்துவீரப்பநாயக்கர் ஆட்சி செய்து வந்தார்.



இவரது ஆட்சி காலத்தில் நிறைய சத்திரங்களை கட்டி வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி வந்தார். இவர்கள் தங்கி செல்ல சத்திரமும், குளங்களையும் அமைத்து கொடுத்தார். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது படைகள் தங்குவதற்கும், வழிபோக்கர்களுக்காகவும் சத்திரங்களை கட்டினார். மேலும் ஒரு குளத்தையும் அமைத்து கொடுத்தார்.



அவர் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வீரப்பன்சத்திரம் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக பெயர் மாறியது. நாயக்கர்கள் அமைத்து கொடுத்த சத்திரங்கள் நாளடைவில் அழிந்து போனது. நாயக்கர்கள் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக இன்றும் வீரப்பன்சத்திரத்தில் தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் குளம் சாட்சியாக உள்ளது.

வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி!



இந்த சரணாலயத்துக்கு சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியும் உண்டு. இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், 1936ம் ஆண்டு உள்ளூர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ப்ளேஸ், வேடந்தாங்கலை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 1962ல் இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம்.


கிராம மக்களின் தியாகம்



இங்கு பறவைகள் வந்து செல்வதால் அவற்றின் எச்சம் நீர்பரப்பு முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதாலும், வயல்வெயிலில் பறவைகள் எச்சமிடுவதாலும் விளைச்சல் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர் இக்கிராமத்து விவசாயிகள். இதற்காக பறவைகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் வாழ்ந்து வருகின்றனர். பறவைகள் வெடி சத்தத்துக்கு பயப்படும் என்பதால் இந்த கிராமத்தினர் தீபாவளியன்று கூட பட்டாசு வெடிக்காமல் அந்த சந்தோஷத்தையும் தியாகம் செய்திருக்கிறார்கள். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்!




 தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து  பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் உதவியுடன் பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பள்ளிகளையும் இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து (கொலாபரேட்டிவ் சிஸ்டம்) பயிலும் திட்டம் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய் வது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வலைதளத்தின் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த செயல்பாட்டினை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் நன்கு படிப்பதற்கான புதிய வழிகளை கண்டறிந்து தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடவடிக்கையும் திட்டங்களையும் வெளிக்கொண்டு வர முடியும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்குபவர்களாகவும் திகழ்வார்கள்.



இத்திட்டத்தின் முதற் கட்டமாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகள் என 32 மாவட்டங்களில் 128 பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்



தமிழகத்தில் 44 ஆயிரத்து 986 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 52 லட்சத்து 4 ஆயிரத்து 61 மாணவர்கள்
படிக்கின்றனர்.



மைக்ரோசாப்ட் Surface 2 டேப்லெட் இன்று வெளியீடு!





மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெடின் அடுத்த படைப்பான Surface 2 மற்றும் Surface Pro 2 இன்று நியூயார்க் நகரத்தில் வெளியிடப்படுகிறது. Surface 2 பார்க்கவும் மற்றும் பணிபுரிவதும் கிட்டத்தட்ட அதன் முந்தைய படைப்புகளை போலவே இருக்கும், ஆனால் இதில் வேகமான TEGRO 4 செயலி(processor) மற்றும் 1080p திரை அம்சங்களை கொண்டுள்ளது.


மைக்ரோசாப்ட் Surface RT மற்றும் Surface Pro tablets புதுப்பிக்கப்பட்டு Surface 2 மற்றும் Surface Pro 2 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த இரண்டு புதிய சாதனங்களையும் அனுசரிக்கக்கூடிய இரண்டு-கட்ட கிக்ஸ்டேன்ட்(two-stage kickstand), மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்கூற்றுகள் (updated specifications) இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள Surface சாதனங்கள் பணிபுரிவது போலவே இருக்கும், மேலும் அது கூட புதிய அக்சசரி பாகங்கள்(accessories) உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு புதிய பவர் கவர்(Power Cover) கொண்டு பேட்டரி ஆயுளை அதிகரிக்க முடியும், மற்றும் மைக்ரோசாப்ட் இறுதியாக Surface Docking Station வெளியிடும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் 'Worldfloat' புதிய தேடல் என்ஜின் அறிமுகம்!



இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் இன்டர்நெட்டில் பயனர்களுக்கு(users) செய்திகள், தகவல்கள் மற்றும் படங்களை தேட ஒரு புதிய Worldfloat தேடல் என்ஜின் அறிமுகப்படுத்தியுள்ளது. Worldfloat.com நிறுவனரான புஷ்கர் மஹடா இந்த புதிய அம்சமானது நிறுவனத்தின் பயனர் தளத்தை(user base) விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு சமூக நெட்வொர்க்கிங் தளத்தின் புதிய வசதி, கூகுள் மற்றும் யாகூ போன்ற உலக தேடல் என்ஜின்கள் போன்று பணிபுரியும் என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார். மேலும், இது இன்னும் பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த புதிய தேடல் என்ஜின் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. மற்றும், ஆட்டோமேட்டிக் அல்காரிதம் (automatic algorithm) மூலம் உண்மையான நேரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் இருந்து செய்திகளை அளிக்கும் சமூக நெட்வொர்க்கிங் வசதி அத்துடன் தேடல் என்ஜின் வேறு எந்த தளத்திலும் இல்லை என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.

Worldfloat செய்திகள் மற்றும் தகவல்களை மற்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பொதுவான விருப்பத்தை மக்களுடன் தொடர்பு கொள்ளவும் 'Sharing' அம்சம் கொண்ட புதிய தேடல் என்ஜின் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 'தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட நபர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மற்ற நபர்களை சந்திக்க முடியும்; இதேபோல் மருத்துவர்கள் மருத்துவர்களை சந்திக்க முடியும், கட்டிட கலைஞர்கள் கட்டிட கலைஞர்களை சந்திக்க முடியும்,' என்றும் அவர் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நீண்ட கால திட்டம் ஒரு தேடல் என்ஜின் உருவாக்குவது மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து பொதுவான விருப்பத்தை மக்களுடன் இணைக்க உதவும் ஒரு 'சமூக தேடல் என்ஜின்' உருவாக்கவதே ஆகும் என்று புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.

Worldfloat பட தேடல் வசதிகளை உருவாக்கியுள்ளது. இது கூகிள் படங்களை போல செயல்படுகிறது, ஆனால்  உலகம் முழுவதிலும் இருந்து உண்மையான நேர வரிசைப்படி புகைப்பட ஆதாரங்கள் கொண்ட செய்திகள் போன்ற பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)





சிலபேர் வீட்டுச் சமையல் மிகவும் மணமாகவும் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். சில ஓட்டல்களிலும் இதே போன்ற உணர்வினை அங்கே கிடைக்கும் உணவுப் பொருட்கள் தரும். ஆனால், ஓட்டல்களில் அவை வியாபார நோக்கத்தோடு தயாரிக்கப்படுபவை. வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் பெண்களின் உள்ளன்போடு உருவானவை. தான் சமைக்கும் இந்தப் பொருட்கள் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் இதைச் சாப்பிட வரும் விருந்தினருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் அமையவேண்டுமே என்ற அக்கறை மணம் நிறைந்திருக்கும்.


இதைத்தான் ‘கை மணம்’ என்கிறார்கள். சில வீடுகளில் சில சமயங்களில் பாராட்டும்படியாகவும் சில சமயங்களில் முகம் சுளிக்கவைக்கும்படியாகவும் உணவுப் பொருட்கள் அமைவது அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் உள் உணர்வுகளைப் பொறுத்திருக்கிறது என்றே சொல்லலாம். சமைக்கும்போது நம் நினைவுகள் பலவாறாக அலைமோதும். அப்படி விடாமல், ஆன்மிக நெறியோடு தயாரிப்போமானால், என்றென்றுமே அவை மணம், நிறம், குணம், சுவை ஆகியவற்றை நிறைவாகக் கொண்டிருக்கும். ஏதேனும் ஸ்லோகத்தை உச்சரித்துக்கொண்டே அல்லது மனதில் பாடிக்கொண்டே சில பெண்கள் இப்படித் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் இந்த உயர்வான வித்தியாசத்தைக் காணலாம்.

சந்திரலேகா ராமமூர்த்தி

இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப், ரவை - அரை கப்,  உளுந்து மாவு - அரை கப், வெல்லத்தூள் - 1 ஒரு கப், ஏலக்காய் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப, கெட்டியான தேங்காய்ப்பால் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

உளுந்தை சிவக்க வறுத்து பொடித்து நன்கு சலித்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லத்தை உருக்கி வடித்து, தேங்காய்ப்பால் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இப்போது வெல்லத்துடன் வறுத்த ரவை, அரிசிமாவு, உளுத்தம் மாவு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொண்டு, ஒரு துணி கொண்டு சிறிது நேரம் மூடி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் எண்ணெய் தடவி பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?




திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட  வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. 


நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். 



இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. 


பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

இறைவனை வழிபட என்ன வழிகள்?



ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும். 


உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும். 


எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். 


இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான். 

ஆஸ்கார் விருதை இழந்த விஸ்வரூபம்!


உலகின் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருதினை இழந்துள்ளது விஸ்வரூபம். 



அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படத்தின் தேர்வு நடந்தது. 


இதில் தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், இங்கிலீஸ் விங்கிலீஸ், லஞ்ச் பாக்ஸ், பிருத்விராஜ் நடித்த மலையாள படமான செல்லுலாயிட், கமலின் விஸ்வரூபம் உள்பட 22 படங்கள் போட்டியிட்டது. 


இறுதி சுற்றுக்கு தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், விஸ்வரூபம் ஆகிய மூன்று படங்கள் வந்தது. 


19 பேரைக் கொண்ட தேர்வு குழு 5 மணிநேரம் தீவிரமாக விவாதித்து, ஆலோசித்து தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட் படத்தை தேர்வு செய்து அறிவித்தனர். 


இதனால் கடைசி வரை நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் ஆஸ்கர் போட்டி வாய்ப்பை இழந்தது.

கார்த்திக்கு வில்லனாகும் சூர்யா!


சென்னையில் நடந்து வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக சூர்யாவை பேட்டி கண்டுள்ளார் லிங்குசாமி.



சிங்கம் 2 வெற்றியை தொடர்ந்து சூர்யா, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் லிங்குசாமி, சூர்யாவை பேட்டி கண்டுள்ளார். 


லிங்குசாமி: நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா? 


சூர்யா: வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா. 


லிங்குசாமி: கார்த்தியும், நீங்களும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் யார் வில்லன், யார் ஹீரோ? 


சூர்யா: அப்படி ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கோம். சினிமால நான் ஹீரோவா நடிச்சாலும் வீட்டுல நான் ஒரு சைலண்ட் வில்லன். 

கார்த்தி ரொம்ப நல்ல பையன். அதனால இரண்டு பேரும் நடிக்கிற படத்தில் கார்த்தி தான் ஹீரோ. நான் வில்லன். அதற்காக கிளைமாக்சுல அடியெல்லாம் வாங்க மாட்டேன். 


லிங்குசாமி: ரஜினி, கமல் ரெண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் பற்றி உங்கள் கருத்து? 

சூர்யா: ரஜினிசாரும், கமல்சாரும் இருக்கிற சினிமால அவுங்களோட நானும் இருக்கிறேங்கறதே ரொம்ப பெருமையான விஷயம். சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே அவுங்கதான் பென்ஞ் மார்க்.


அவர்கள் சாதனைகளை அவுங்களே உடைச்சாத்தான் உண்டு. வேற யாரும் பிரேக் பண்ண முடியாது. தலைக்கு ஏறாத வெற்றி, தளராத உழைப்பு இந்த இரண்டும் தான் அவர்களை உயரத்தில் வச்சிருக்கு. 


லிங்குசாமி: ஜோவை நீங்கள் சந்திக்காமல் இருந்திருந்தால்? 


சூர்யா: வாழ்க்கை இவ்வளவு அழகானதுன்னு தெரியாமலே போயிருக்கும். 


லிங்குசாமி: உங்கள் பார்வையில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாவில் டாப் டென் எது? 


சூர்யா: நான் சொல்றத ஒண்ணு ரெண்டு வரிசைப்படுத்த வேண்டாம். பராசக்தி, ஆயிரத்தில் ஒருவன், முள்ளும் மலரும், .தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, நாயகன், பாட்ஷா, மறுபக்கம், சேது, பருத்தி வீரன். 


லிங்குசாமி: உங்க நேர்மை பிடிச்சிருக்கு பத்துல உங்க படம் ஒன்றுகூட இல்லையே? 


சூர்யா: கொடுக்க முயற்சி பண்றேன். 


லிங்குசாமி: உங்களை பற்றி வந்த விமர்சனங்களில் உங்களுக்கு பிடிச்சது எது? 


சூர்யா: நேருக்கு நேர் படம் ரிலீசானப்போ உதயம் தியேட்டர்ல போயி படம் பார்த்தேன். அப்போ என்னை நிறைய பேருக்கு தெரியாது. படம் முடிந்து வெளியே வந்த சில ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு படம் சூப்பர். நல்லா நடிச்சிருக்கீங்கன்னு கை கொடுத்து பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. 


திடீர்னு ஒரு ரசிகர் வேகமாக வந்து என் இரண்டு கையையும் பிடிச்சு சூப்பரா சொதப்பி இருக்கீங்க. அடுத்த படத்துலயாவது நடிக்க ட்ரை பண்ணுங்க பாஸ்னு சொல்லிட்டுப் போனார். 


நூறுபேர் பாராட்டினதை விட அந்த விமர்சனம் பிடிச்சிருந்தது. அவரு இந்த விழாவுக்குகூட வந்திருக்கலாம். பாஸ் நான் இப்போ நல்லா நடிக்கிறேனா?

நீங்கள் வேகத்தை விரும்புபவரா?


கார் பந்தயத்தை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். கார்கள் சென்று கொண்டிருக்கும் வேகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதனை விட ஒரு சில சுற்றுகளுக்குப்பிறகு கார் பழுது பார்க்கும் மையத்திற்கு வந்து சில நொடிகளில் அனைத்து வேலைகளையும் முடித்து, மீண்டும் பந்தய பாதையில் அதி வேகத்துடன் செல்ல ஆரம்பிக்கும்.


 


அப்படிப்பட்ட கார் பந்தயத்தில் ஒரு சில நொடிகளில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் காரில் பழுது நீக்கும் வேகம் அனைவரையும், இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியப்பட வைக்கும். வேகத்துடனும், விவேகத்துடனும் பொறியாளர்கள் காரை சரி செய்தால் தான்  பந்தய வீரர் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக செல்ல முடியும். என்பதை இதன் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.


விறு விறுப்பு நிறைந்த கார் பந்தய பொறியாளர் என்பவர் பந்தய வீரரின் வலது கையை போன்றவர். கார் பந்தய களத்தில் இயங்கும் தன்மை, வீரரின் காரை இயக்கும்  திறன் போன்றவற்றை எல்லாம் நொடிப் பொழுதில் கணித்து, வாகனத்தின் இயங்கு திறன், எரிபொருள் தேவைகளை சிறப்பான முறையில் சீர் செய்ய வேண்டும்.


வேலை வாய்ப்புகள்


தற்பொழுது இந்தியாவில் வாகனப் பந்தயத் துறை வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. வாகனப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.


இவை தவிர உலகம் முழுவதும் அதிகமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. திறன் மிக்க பொறியாளர்களை தங்களோடு இணைத்துக்கொள்ள பெரிய பந்தய குழுக்கள் ஆர்வம் செலுத்துகின்றன.


யார் தேர்ந்தெடுக்கலாம்?


உங்கள் பொழுதுபோக்காக இருக்க வேண்டும்.
கார்களை விரும்புபவராக இருக்க வேண்டும்.
சவால்களை சந்திப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் பயணிக்க தயாராக இருக்க வேண்டும்.
இறுக்கமான சூழ்நிலைகளை எளிதாகக் கையாளும் மன நிலை வேண்டும்.


தேவையான கல்வித் தகுதி


பொறியியல் இளநிலையில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

முதுநிலை பொறியியலில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.


சிறந்த கல்வி நிறுவனங்களில் சில

ஐ.ஐ.டி., (டில்லி, ரூர்கே, கான்பூர், காரக்பூர்)இந்தியா.
யூனிவர்சிட்டி ஆஃப் ஹம்பர்க், ஜெர்மனி.
யூனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகன், அமெரிக்கா.
கெட்டரிங் யூனிவர்சிட்டி, அமெரிக்கா.

காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.


 
 
பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.


ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.


இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.


வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.


தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன் கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச் சென்றான்.


காலம் ஓடியது..


அந்த மூதாட்டி நோய் வாய் பட்டாள்.ஒரு மருத்துவமனையில் அண்டை வீட்டார் அவளைச் சேர்த்தனர்.அவளுக்கு நல்ல சிகிச்சைக் கொடுக்கப் பட்டது.உடல் நன்கு தேறியது..பின்னரே அவளுக்கு மருத்துவ மனைக்கான செலவை எப்படிக் கொடுப்பது என்ற எண்ணம் வந்தது.


அவளை வீட்டிற்குப் போகலாம் என்ற மருத்துவர் ஒருவர் கட்டணத்திற்கான பில்லைக் கொடுத்தார்.அதில் கட்டணம் ஒரு தம்ளர் பால்..அதுவும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு விட்டது என்றிருந்தது.


புரியாத மூதாட்டி..அந்த மருத்துவரைப் பார்த்தாள்.அவர் "அம்மா..நான் யார் என்று தெரியவில்லையா...நான் தான் அன்று ஒருநாள் பரீட்சைக்குப் போனபோது மயங்கி விழுந்து..உங்களால் பாலை வாங்கி அருந்தி புத்துயிர் பெற்று பரீட்சைக்கு சென்ற மாணவன்.அன்று உங்கள் உதவி எனக்கு மிகவும் பெரிதாய் இருந்தது' என்றார்.


காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருந்தாலும்..அதைப் பெரிதாக நினைத்து மறக்கக் கூடாது.
 

வியக்க வைக்கும் விருதுநகர்! - சுற்றுலாத்தலங்கள்!


   வியக்க வைக்கும் விருதுநகர்
உழைப்புக்கும், வர்த்தகத்திற்கும் பெயர் பெற்றது விருதுநகர் மாவட்டம். சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய், நறுமணப்பொருட்கள் என பல்வேறு நுகர்பொருட்கள் இந்த மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு மிக்க விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.

சிவகாசி:
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் உலக அளவில் பிரபலமானவை. தீப்பெட்டி உற்பத்தியும், நவீன அச்சுத் தொழிலும் இங்கு பிரசித்தம். வானத்தில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் தயாராகும் முறைகளை இங்கு நேரில் பார்க்கலாம்.

ரமண மகரிஷி ஆசிரமம்:
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த திருச்சுழி இங்குதான் உள்ளது. ரமணர் பெயரால் இங்குள்ள குண்டாற்றங்கரையில் ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுழியில் ரமணர் வாழ்ந்த வீடு ‘சுந்தர மந்திரம்’ என்றழைக்கப்படுகிறது. ரமணரின் கருத்துக்களால் கவரப்பட்டவர்கள் கண்டிப்பாக வந்து செல்லவேண்டிய இடம் இது.

திருத்தங்கல்:
வரலாற்று சிறப்பு மிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம் பெற்ற புலவர்களான முடக்கூரனார், போர்க்கோலன், வெண்ணாகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடம்.

அணில்கள் சரணாலயம்:

செண்பகத்தோப்பு காட்டு அணில் சரணாலயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். சாம்பல் நிற காட்டு அணில்களை இங்கு பார்க்கலாம். புலி, சிறுத்தை, நீலகிரி நீண்ட வால் குரங்கு, புள்ளிமான், தேவாங்கு போன்ற உயிரினங்களும் உண்டு.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்:

பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சாத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் அம்மை உள்பட பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது காலந்தொட்டு வரும் நம்பிக்கை.

சவேரியார் தேவாலயம்:

புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் அசோசியேஷனால் கட்டப்பட்ட தேவாலயம். இதன் சுவர்களில் ஏழு குதிரை பூட்டப்பட்ட தேரில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வருவது போலவும், இஸ்லாமை குறிக்கும் பிறை நிலவும் பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்தை உணர்த்துகிறது.

ஆண்டாள் கோவில்:

பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. திருப்பாவை பாடிய ஆண்டாளின் பெருமையை உணர்த்தும் திருத்தலம். இந்த கோவிலின் கோபுரம்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் இலச்சினையாக அமைந்துள்ளது.

இவை தவிர அய்யனார் அருவி, திருமேனிநாத சுவாமி கோவில், கல்விக்கண் திறந்த காமராஜர் நினைவு இல்லம் என பார்க்கத் தகுந்த பல இடங்கள் விருதுநகர் மற்றம் சுற்றுப் பகுதிகளில் உள்ளன.

தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது.


இந்த கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.


சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 22,990 ஆகும்.


5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.


13 மெகாபிக்சல் கமெரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.


கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.




IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன.


கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.




கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.


800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.


கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9 மெகாபிக்சல் கமெரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.


உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்.


இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.


சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப் ( IE 11 )!


                                            
                                                     

இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும்.


உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Microsoft Internet Explorer 11 எனும் இப்பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் 30 சதவிகிதம் வேகம் கூடியதாகக் காணப்படுகின்றது.
எனினும் இந்த உலாவியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!



கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது. 


Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது.
இவற்றின் விலையானது 999.99 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை!


வயது : அந்தந்த வகுப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு


கல்வித் தகுதி
 
1. 10ம் வகுப்பு/மெட்ரிக்குலேஷன்/உயர்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி

2. பிளஸ் 2 அடிப்படையிலான 12ம் வகுப்பு/இன்டர்மீடியேட்/ பல்கலைக்கழகத்துக்கு முந்தைய/பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி

3. பி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.காம்( தேர்ச்சி அல்லது ஹானர்ஸ்) அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி

4. எம்.ஏ., இந்தி/எம்.லிட்.,(இந்தி)/ பி.எச்.டி.,க்கு முந்தைய/ பி.எச்டி., (இந்தி) டிகிரி படிப்பில் சேருவதற்கான தகுதி

மற்றவை

இந்தியை தாய்மொழியாக கொண்டிராத, இந்தி மொழி பேசாத மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்(ஆந்திரா, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, பஞ்சாப், சிக்கம், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சட்டீஷ்கார், தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவுகள், மிசோரம் மற்றும் புதுச்சேரி). அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து இருக்க வேண்டும். தகுதி தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கீழ் வரும் மாணவர்கள் தகுதி பெறாதவர்கள். இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்தவராக இருந்து, இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பராக இருந்தால், முழு நேர/ பகுதி நேர வேலையில் இருந்தபடி, தொலைதூர கல்வி திட்டத்தில் இளம்நிலை படிப்பு படித்து வந்தால்.
ஸ்காலர்ஷிப்கள் எண்ணிக்கை : 2500 ( பிற்சேர்க்கை 1ன் பட்டியல்படி)
காலம் : படிக்கும் காலம்
விண்ணப்ப நடைமுறை

1. வரையறுக்கப்பட்ட படிவத்தில், ஒரு விண்ணப்பம், சம்பந்தப்பட்ட ஆண்டுக்கு, சமீபத்திய போட்டோ மற்றும் கையெழுத்துடன்.
2. சான்றிதழ்கள், டிப்ளமாக்கள், டிகிரிக்கள், மார்க்ஷீட்களின் அத்தாட்சி பெறப்பட்ட நகல்கள்.
3. எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ அந்த மாநிலம் மாநிலம் மூலமாக( இந்திய அரசு/எம்.எச்.ஆர்.டி., மூலம் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது)
அறிவிப்பு மற்றும் கடைசி தேதி

சம்பந்தப்பட்ட மாநில அரசு/ யூனியன் பிரதேசம், இந்திய அரசின் ஒப்புதலை பெற்று ஆண்டு தோறும், திட்டத்தை அறிவிக்கும்.
ஒவ்வொரு இந்தி பேசாத மாநிலங்கள் மூலம் நாளிதழ்களில் வெளியிடப்பபடும் அறிவிப்பின்படி.

Scholarship : இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை
Course : 
Provider Address : Direct Inspector of School / Director of Education, State / UT Government
Description : 

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்...


சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சேர்க்கை நடக்க இருக்கிறது. 


டிசம்பரில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளில், தங்கும் வசதியுடன் 200 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியும், தங்கும் வசதியின்றி 100 மாணவர்களுக்கு பகுதி நேரப் பயிற்சியும் வழங்கப்படும்.

எத்தனை இடங்கள்?

300 இடங்கள் கொண்ட இம்மையத்தில், ஆதிதிராவிடர்  123, அருந்ததியர்  24, பழங்குடியினர்  3, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  54, பிற்படுத்தப்பட்டோர்  72, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)  9, மாற்றுத் திறனாளிகள்  9, இதர வகுப்பினர்களுக்கு 6, இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதிகள்

பட்டப்படிப்பு படித்த 21 வயது பூர்த்தியடைந்த, 30 வயதுக்கு மேற்படாத இதர பிரிவினர் விண்ணப்பிக்க தகுதியுடையோர். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு. விடுதியில் தங்கிப் பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி செய்துதரப்படும்.

கட்டணம்

முழுநேரப் பயிற்சியில் பயிற்சி பெற இதர பிரிவினர் மட்டும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். பகுதிநேர பயிற்சிக்கு இதர பிரிவினர் ரூ.3000 கட்டணமாக செலுத்தவேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய நபர்கள், அலுவலக வேலைநாட்களில் ஜாதி, வயது, பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நகல்களை, சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்க வேண்டும். 

சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் மையத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே ஒப்படைக்க வேண்டும்.

சென்னை, திருச்சி, மதுரை கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சை, தர்மபுரி, சிவகங்கை போன்ற இடங்களில் நடக்கும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இம்மையங்களில் 10.11. 2013 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். 

நுழைவுத் தேர்வில் இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய,  உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள், அடிப்படை எண் அறிவு, புத்திக் கூர்மை, பகுத்தறியும் திறன், புரிந்து கொள்ளும் திறன் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும். 

நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு, சென்னை மையத்தில் வகுப்புகள் நடக்கும். 

நுழைவுத் தேர்வு, மாதிரி வினாத்தாள் 

http://www.civilservicecoaching.com 

என்ற இணையதளத்தில் உள்ளன. 

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2013. 

விவரங்களுக்கு 044 - 2462 1475 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். 

ஐ படத்திற்காக 3வது பாடல் ரெடி!


ஷங்கரின் ஐ படத்தில் தனது மூன்றாவது பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.   

அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் - விக்ரம் கூட்டணயில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. 

இப்படத்தில் விக்ரமுடன், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். 

தற்போது இளைஞர்களின் தனது புதுபுது டெக்னாலாஜி வரிகளால் கவனம் ஈர்த்த மதன் கார்க்கி இதில் பாடல் எழுதி வருகிறார். 

தற்போது இப்படத்திற்காக இவர் எழுதிய மூன்றாவது பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது ஷங்கர் மற்றும் ரஹ்மான் மதன் கார்க்கியை வெகுவாக பாராட்டினார்களாம். 

அதுமட்டுமின்றி இவர் எழுதி சமீபத்தில் வெளியான 'ப்ரேயர் சாங்'கையும் தாங்கள் ரொம்ப ரசித்தோம் என்று தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். 

இது பற்றி தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கார்க்கி, கடந்த மாதம் விஜய் சேதுபதி நடித்துள்ள இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்திற்காக நான் எழுதிய 'ப்ரேயர் சாங்க்' பாடல் யூடியுபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது இந்த பாடலுக்கு, ரஹ்மான் சாரிடமும், ஷங்கர் சாரிடமும் இருந்து பாராட்டு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என கூறியிருந்தார்.

அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!



தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.


இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.


ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.


ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.


* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.


போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.


* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.


* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.


* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.


* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.


* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.


* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!



உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.


இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.


அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.


இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.


ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.


அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.


* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.


* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.


* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது.


எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது.

எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.


* தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும்.


அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.


* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

டோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’





 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி நேற்றைய போட்டியின் போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர் இந்திய அணியில் இடம்பெறும் போது நீண்ட தலைமுடியுடன் இருந்தார். இந்த நீண்ட ஹேர் ஸ்டைல் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பையும் கவர்ந்தது. இந்தியா உலக கோப்பையை வென்ற பிறகு டோனி மொட்டை தலையுடன் காட்சி அளித்தார். தற்போது அவர் வெளிநாட்டு பாணியில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். காதுக்கு மேல் இருபக்கமும் மழித்துவிட்டு நடுவில் மட்டும் கொத்தாக முடி வைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றும்போது இந்த புதிய ஹேர் ஸ்டைல் தென்பட்டது.

10ம் வகுப்பு எக்சாம்! இனி நோ டென்சன்.......




பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.


மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின் கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக் கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மூன்று பருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாக கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் சார்ந்த விஷயங்களை செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன் மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.


இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமை குறைகிறது. இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார் பள்ளிகளின் நிலை மாறும். டியூஷன்களுக்கு என தனியாக செலவளிக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு என்றாலே சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறை படுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும்.


பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமா? மதிப்பீட்டின் போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படுமா? பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை நடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்து நிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில் பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.


கற்றல் முடித்த பின்னர் பாடங்களை முழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வை எழுதுகின்றனர்.  பத்தாம் வகுப்பிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா? மத்திய பாடத்திட்டத்தில் மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில் படிப்பை தொடருகின்றனர்.


அந்த வகுப்பிலும் இம்முறை அமல்படுத்தப்படுமா? ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்த பருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல் மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் ஆசிரியர் மாணவர், இருவருக்குள்ளும் உள்ளது. விரைவில் பள்ளிக் கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.


மாணவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்க வேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பான தகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்ட அறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்து அறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்த விஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறு படிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.


மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள், உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள், தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில் ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காத குழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.

'ஜில்லா'விற்காக பதித்த வைர வரிகள்!




விஜய்யின் ஜில்லா படத்திற்காக ஒரு பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.


முருகா படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர்.டி.நேசன், விஜய்யை வைத்து இயக்கும் படம் ஜில்லா.


இப்படத்தில் இளைய தளபதியுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், மஹத், சூரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.


டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி, ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.
தற்போது இவர்களோடு தனது வைர வரிகளைப் பதிக்க களமிறங்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.


சமீபத்தில் இந்த படத்திற்காக, கவிப்பேரரசு செதுக்கிய 'சானு நிகம்' எனும் மெலோடிப் பாடலை பதிவு செய்த இமான் தனது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.


சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!


 தெய்வீக திருவண்ணாமலை
திருவண்ணாமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.  இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.  திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.  இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது.  அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.  இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம்.
இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது.  முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.  மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.  மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி,  வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.
இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.  இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.  குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள்.  குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.
ஸ்தல வரலாறு  
ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று.  இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள்.  ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார்.  யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.  தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார்.  அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார்.  இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.  இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார்.  அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இந்திரலிங்கம்

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
அக்னிலிங்கம்
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
யமலிங்கம்.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
நிருதி லிங்கம்
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
வருண லிங்கம்
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
வாயு லிங்கம்
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

குபேர லிங்கம்
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

திருவிழாக்கள்
திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர்  மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[4] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
மகான்கள்
இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்-வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.மற்றும் விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார்  ,சேஷாத்திரி மகரிஷி, குகை நமசிவாயர் சுவாமிகள் போன்ற எண்ணற்ற மகான்கள் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை.

6 மெழுகுவர்த்திகள்! திரைவிமர்சனம்!


நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.
ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.

தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.
காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர்.
அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது.

இதற்கு பொலிஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.

குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.
கடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா? என்பது மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம்.
இந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். இதற்காக இவர் கடினமாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை தன் நடிப்பால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஷாம்.

மகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம்.
குறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.

கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. வித்தியாசமான கதைக் களத்தோடு ஷாமோடு இணைந்திருக்கிறார்.
இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது தெரிகிறது. தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!
நடிகர் : ஷாம்
நடிகை : பூனம்
இயக்குனர் : வி.இசட்.துரை
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு : கிருஷ்ணசாமி

கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!



ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விடயமல்ல.


கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவைகளை எல்லாம் ஒரே பட்டியலில் வகைப்படுத்தி விட முடியாது.  


அவைகளை தெரிந்து கொண்டால், கர்ப்ப காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு உங்களுக்கே வியப்பு ஏற்படும்.


ஆனால் அவைகளை கண்டு பயப்பட தேவையில்லை. அவைகளில் பலவகைகள் சாதாரண மாற்றங்களே. இதனைப் பற்றி மேலும் அறிய விலாவரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். 


கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க அதிகமாக தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்படி அதிக அளவில் நீரைக் குடிப்பதனால், தண்ணீரை பார்த்தாலே அலுப்புத் தட்டிவிடும். இது கர்ப்ப காலத்தில் நடக்கும் மாற்றங்களில் பொதுவானது.


மேலும் ஓரிரு மாதங்கள் சென்ற பின் தண்ணீரை பார்த்தாலே வெறுப்பு ஏற்படும். அதனால் இங்கு கொடுத்திருப்பதை முயற்சி செய்து பாருங்கள். அது என்னவென்றால், உங்களுக்கு பிடித்த பானத்தை குளிர் சாதனப் பெட்டியில் உறைய வைத்து, ஐஸ் கட்டிகளாக மாற்றுங்கள்.


பின் அதனை குடிக்கும் தண்ணீரில் கலந்து பின் பருகுங்கள். இது உங்களுக்கு தண்ணீரைக் கண்டால் ஏற்படுத்தும் புரட்டலை கூட தடுத்து நிறுத்தும். மேலும் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கூட இதனை முயற்சி செய்து பாருங்கள்.


அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல், இயற்கை முறையில் பிரசவிக்க ஆசைப்பட்டால், அதற்கு தயார்படுத்திக் கொள்ள சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதுமானது.


கர்ப்பம் தரித்து 32 வாரங்கள் அடைந்ததும், குழந்தை வெளியேறும் இடத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பாதாம் எண்ணெயை தடவுங்கள்.


பிரசவத்திற்கு முன் இப்படி செய்வதால், அதிக வலி இல்லாமல், தசைகள் அதிகமாக கிழியாமல் சுகப்பிரசவம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
கர்ப்ப காலம், குறட்டை விடச் செய்யும் என்பதை கேட்க ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், உடல் மென்மையாக மாறி வீக்கம் அடையும்; அதில் பாதங்களும் அடங்கும்.
அதனால் உங்கள் சுவாச குழாய்கள் குறட்டை வருவதை தடுத்து நிறுத்தாது. ஆகவே உங்கள் கணவருக்கு முன்னதாகவே இதற்கான எச்சரிக்கையை விடுங்கள்.


உங்களுக்கே உங்கள் குறட்டையை தாங்க முடியவில்லை என்றால், உங்கள் மருத்துவரை அணுகி அதை தடுக்க முடியுமா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


கர்ப்ப காலத்தில் முதுகு வலி மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளுக்கு, தண்டெலும்பு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவரை சீரான முறையில் சந்தியுங்கள்.


ஒட்டுமொத்த உடல் நலத்தை காக்கவும், வலியை நீக்கவும், முதுகு தண்டை எப்படி சீர்படுத்துவது என்பது அவ்வகை மருத்துவர்களுக்கு தெரியும். மேலும் அவர்களை சந்திக்கும் செலவுகளை மருத்துவ காப்பீடு மூலமாக திரும்பி பெற்றுக் கொள்ளலாம்.


தாய்மை அடைய போகும் பெண்களே, தலைமுடி பராமரிப்பு பற்றி உங்களுக்கு சொல்லப் போகும் அறிவுரை முக்கியமான ஒன்றாகும்.
குழந்தை பிறக்கப் போகும் சில வாரங்களுக்கு முன், குறைந்த அளவில் தலைமுடியை வெட்டுங்கள். இதனால் குழந்தை பிறந்த பின், கூந்தலைப் பராமரிக்க உங்களுக்கு போதிய நேரமும் சக்தியும் கிடைக்கும்.


கர்ப்பமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது என்றில்லை. செய்ய வேண்டிய உடற்பயிற்சியை செய்து, சுறுசுறுப்பாக இருந்தால், பிரசவ காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.


பிரசவம் நடக்கும் கடைசி சில வாரங்களுக்கு முன், உங்களால் நடக்க மட்டுமே முடியும். ஆனால் நடைகொடுத்தால் சுகப்பிரசவம் நடப்பதால் அதில் ஒன்றும் தவறில்லை.


பிரச்சனை இல்லாமல் தாய்ப்பால் சுரக்க இதோ ஒரு டிப்ஸ்.
குழந்தை பிறந்த பின்பு கர்ப்ப காலத்தில் நீங்கள் உண்ட அதே உணவுகளை, பிரசவத்திற்கு பின்னும் தொடருங்கள்.


அது கஷ்டமாக தான் இருக்கும். முக்கியமாக உங்களுக்கு பிடிக்காத உணவுகளை உண்ணும் போது, இந்த கஷ்டங்களை அனுபவிக்கலாம்.
அதிலும் உடல் வெப்பம் அடையாமல் இருக்க, உங்களுக்கு பிடித்த உணவை எல்லாம் உண்ணாமல் இருந்திருக்கலாம். இவ்வகை உணவுகளை மெதுவாக சேர்க்க ஆரம்பியுங்கள்.


குறிப்பாக, குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இல்லை என்றால் மட்டும் அதனை தொடரலாம். ஒவ்வொரு பிரசவமும் மாறுபடும்.
மேலும் ஒவ்வொரு தாயும் ஒருவருக்கொருவர் வேறுபடுவர். உங்கள் கர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல்?



 1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல். அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.
                          


ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல். இந்த பாகத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது. அதனால் இந்த சூட்டோடு மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் அபிமானிகள் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். சிலர் பைனான்ஸ் உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன். - ரஜினி!



இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என திரையுலகங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியினை அமர்களப்படுத்தினர்.

மேலும் தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜா, சிவக்குமார், விஜய், அஜித், விக்ரம் மற்றும் பல திரையுலக பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல் அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு அதிபர்களுக்கு நன்றி. சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை.

38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால் கமல் அப்படி அல்ல. நிறைய விடயங்கள் தெரிந்தவர்.

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை கொமடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர்.

ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் என்னை சோகமாக நடிக்க வைத்தவர் எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன்.

பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.

இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன்.

டாப்பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும் சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள்.

அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.

அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது. சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள்.

இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம். நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல்.

இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என திரையுலகங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியினை அமர்களப்படுத்தினர்.
மேலும் தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜா, சிவக்குமார், விஜய், அஜித், விக்ரம் மற்றும் பல திரையுலக பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல் அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு அதிபர்களுக்கு நன்றி. சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை.
38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை.
ஆனால் கமல் அப்படி அல்ல. நிறைய விடயங்கள் தெரிந்தவர்.
சினிமாவில் வில்லனாக இருந்த என்னை கொமடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர்.
ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் என்னை சோகமாக நடிக்க வைத்தவர் எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன்.
பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.
இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன்.
டாப்பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.
சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும் சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள்.
அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.
அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது. சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள்.
இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம். நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல்.
இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
- See more at: http://www.yarlminnal.com/?p=55253#sthash.nyfu0bd8.dpuf

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top