.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 23 September 2013

ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)





சிலபேர் வீட்டுச் சமையல் மிகவும் மணமாகவும் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். சில ஓட்டல்களிலும் இதே போன்ற உணர்வினை அங்கே கிடைக்கும் உணவுப் பொருட்கள் தரும். ஆனால், ஓட்டல்களில் அவை வியாபார நோக்கத்தோடு தயாரிக்கப்படுபவை. வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் பெண்களின் உள்ளன்போடு உருவானவை. தான் சமைக்கும் இந்தப் பொருட்கள் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் இதைச் சாப்பிட வரும் விருந்தினருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் அமையவேண்டுமே என்ற அக்கறை மணம் நிறைந்திருக்கும்.


இதைத்தான் ‘கை மணம்’ என்கிறார்கள். சில வீடுகளில் சில சமயங்களில் பாராட்டும்படியாகவும் சில சமயங்களில் முகம் சுளிக்கவைக்கும்படியாகவும் உணவுப் பொருட்கள் அமைவது அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் உள் உணர்வுகளைப் பொறுத்திருக்கிறது என்றே சொல்லலாம். சமைக்கும்போது நம் நினைவுகள் பலவாறாக அலைமோதும். அப்படி விடாமல், ஆன்மிக நெறியோடு தயாரிப்போமானால், என்றென்றுமே அவை மணம், நிறம், குணம், சுவை ஆகியவற்றை நிறைவாகக் கொண்டிருக்கும். ஏதேனும் ஸ்லோகத்தை உச்சரித்துக்கொண்டே அல்லது மனதில் பாடிக்கொண்டே சில பெண்கள் இப்படித் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் இந்த உயர்வான வித்தியாசத்தைக் காணலாம்.

சந்திரலேகா ராமமூர்த்தி

இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப், ரவை - அரை கப்,  உளுந்து மாவு - அரை கப், வெல்லத்தூள் - 1 ஒரு கப், ஏலக்காய் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப, கெட்டியான தேங்காய்ப்பால் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

உளுந்தை சிவக்க வறுத்து பொடித்து நன்கு சலித்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லத்தை உருக்கி வடித்து, தேங்காய்ப்பால் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இப்போது வெல்லத்துடன் வறுத்த ரவை, அரிசிமாவு, உளுத்தம் மாவு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொண்டு, ஒரு துணி கொண்டு சிறிது நேரம் மூடி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் எண்ணெய் தடவி பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top