இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் இன்டர்நெட்டில் பயனர்களுக்கு(users) செய்திகள், தகவல்கள் மற்றும் படங்களை தேட ஒரு புதிய Worldfloat தேடல் என்ஜின் அறிமுகப்படுத்தியுள்ளது. Worldfloat.com நிறுவனரான புஷ்கர் மஹடா இந்த புதிய அம்சமானது நிறுவனத்தின் பயனர் தளத்தை(user base) விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு சமூக நெட்வொர்க்கிங் தளத்தின் புதிய வசதி, கூகுள் மற்றும் யாகூ போன்ற உலக தேடல் என்ஜின்கள் போன்று பணிபுரியும் என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார். மேலும், இது இன்னும் பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த புதிய தேடல் என்ஜின் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. மற்றும், ஆட்டோமேட்டிக் அல்காரிதம் (automatic algorithm) மூலம் உண்மையான நேரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் இருந்து செய்திகளை அளிக்கும் சமூக நெட்வொர்க்கிங் வசதி அத்துடன் தேடல் என்ஜின் வேறு எந்த தளத்திலும் இல்லை என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.
Worldfloat செய்திகள் மற்றும் தகவல்களை மற்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பொதுவான விருப்பத்தை மக்களுடன் தொடர்பு கொள்ளவும் 'Sharing' அம்சம் கொண்ட புதிய தேடல் என்ஜின் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 'தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட நபர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மற்ற நபர்களை சந்திக்க முடியும்; இதேபோல் மருத்துவர்கள் மருத்துவர்களை சந்திக்க முடியும், கட்டிட கலைஞர்கள் கட்டிட கலைஞர்களை சந்திக்க முடியும்,' என்றும் அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் நீண்ட கால திட்டம் ஒரு தேடல் என்ஜின் உருவாக்குவது மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து பொதுவான விருப்பத்தை மக்களுடன் இணைக்க உதவும் ஒரு 'சமூக தேடல் என்ஜின்' உருவாக்கவதே ஆகும் என்று புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.
Worldfloat பட தேடல் வசதிகளை உருவாக்கியுள்ளது. இது கூகிள் படங்களை போல செயல்படுகிறது, ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து உண்மையான நேர வரிசைப்படி புகைப்பட ஆதாரங்கள் கொண்ட செய்திகள் போன்ற பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
0 comments: